புதியன புகுதலும் பழையன கழிதலும்
பழையன கழிதலும் புதியன புகுதலும் போகியாம்- தானே பழையன எல்லாத்தையும் கழித்துவிட்டது புதியன புகுத்துவது யார் என தெரியவில்லை.போகின்னாலே எதையாவது கொளுத்தனுமாம்.காலையில வீட்டுல இருந்து கம்பெனிக்கு போறத்துக்குள்ள மூச்சு முட்ட வைச்சுட்டாங்க,எதுவும் கிடைக்கலன்னா பழைய டயர் குப்பை கொட்டுற இடம் எல்லாத்துலயும் நெருப்பு வைச்சுடறாங்க.கொஞ்சம் புதிய எண்ணங்கள் புகுத்தி இது போன்ற பழைய எண்ணங்கள் களைவோம்.புதுவை முதல்வர் தன் பங்குக்கு அம்மா பாணியில் பழைய பேருந்து கட்டணத்தை கழிந்து புதுக்கட்டணம் புகுத்தி போகி கொண்டாடியிருக்கிறார்.
பல்லுக்கு வந்தது .....
புதிதாக பல் மருத்துவக்கல்லூரி துவக்க (தனியாருக்கு) அகில இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்திருக்கிறதாம்,ஏன்னா படிச்சு முடிச்சுட்டு சரியான வேளை வாய்ப்பில்லாம கஷ்டப்படுறாங்கலாம்.எம்.பி.பி.எஸ் முடிச்சவங்க அளவுக்கு இவங்களுக்கு வருமானம் வருவதில்லையாம்.மூவாயிரம் மாத வருமானம் சராசரியாக கிடைப்பதில்லையாம்.என கேள்வி என்னன்னா- பல்மருத்துவத்துறைக்கு மட்டும் தான் இந்த நிலை இருக்கிறதா?தமிழ் எம்.ஏ (மன்னிக்க கற்றது தமிழ்)படத்தில் பிரபாகர்(ஜீவா)கேட்கும் சில கேள்விகள் எனக்குள்ளும் எழுகிறது.
முன்பதிவு -its e miracle
பண்டிகைக்கால ரயில்களுக்கு முன்பதிவு தொடக்கம் என்று சொல்லி முடிப்பதற்குள் முன்பதிவு முடிந்து விட்டது என்ற அறிவிப்பு வந்து விடுகிறது.முன்பதிவில் டிக்கெட் கிடைத்தால் its a miracle.
ஸ்டாரா நானா?
இனி வரும் காலங்களில் பண்டிகைக்காலங்களில் மட்டும் “ஸ்டார்”வேல்யூ உள்ளவர்களில் திரைப்படங்களை வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவேடுத்துள்ளதாம்.சின்ன பட்ஜெட்டில் வரும் படங்களுக்கு முக்கியத்துவம் பெறவைக்க இந்த முயற்சி.
அப்போ எல்லோரும் என்னது நான் ஸ்டாரா?யார் சொன்னது அது வெறும் வதந்தி என பேட்டி கொடுப்பாங்களோ?
சூப்பர் சுருளியின் ஐடியா-இந்தியா டீமுக்கு
முதலையின் பலம் நீரில்,யானையின் பலம் நிலத்தில் அப்படின்னு சொல்லுவாங்களே அதி போல இருக்கு கிரிக்கெட் அணிகளின் நிலைமை(குறிப்பா இந்திய அணி) கொஞ்ச நாளாவே இங்க விளையாண்டா எதிரணியை மண்ணை கவ்வ வைக்குறதும் ,வெளிநாடு போனா மண்ணைக்’கவ்வுறதும் வாடிக்கையாகிடுச்சு
( பாஸ் நெக்ஸ்ட் எங்கே?-நெக்ஸ்டு ரெஸ்டு தான்) .
இதுக்கு என்ன தீர்வுன்னா நாம வெளிநாடு விளையாட போகும் போது ஆஞ்சநேயர் மலையை தூக்கிட்டு போன மாதிரி இங்க இருக்குற பிட்சையும் அலேக்கா தூக்கிட்டு போய் அங்கே வைச்சு விளையாண்டா ஒரு பயலும் நம்மள அசச்சுக்க முடியாது (ஐடியா உபயம் –சூப்பர் சுருளி)
Jடூ வீலர்ல யாருக்காவது லிப்ட் கொடுத்துட்டு அவங்க இறங்கினபறம் பாக்கெட்ட தொட்டு பர்ஸ் இருக்கான்னு பாக்குற பழக்கம் யாருக்காவது இருக்கா?
Jதமிழ் புத்தாண்டு வாழ்த்தா?பொங்கல் வாழ்த்தா? #ஐயோ பாவம் நீங்களே கன்ஃபியூஸ் ஆகிட்டிங்க
Jசின்ன வயசுல அடிபட்டவுடன் அழாமல் அம்மாவைப்பார்த்தவுடன் அழுவோம்.இப்போது அடிபட்டால் அங்கேயே புலம்பிவிட்டு அம்மாவிடம் மறைக்கிறோம்#பரிணாமம்?
Jஇப்பல்லாம் கொல வெறி அப்படிங்கற வார்த்தையை கேட்டாலே கொலைவெறி வருது! எனக்கு மட்டும் தானா?
நானும் போட்டோகிராபர்தான்..ஹி ஹி
விற்பவர்க்கு வாழ்க்கைச்சக்கரம்
தன்னிலை விளக்கம்.
வாழ்த்துகள்
தமிழர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்.நான் கிராமத்து பொங்கல் கொண்டாட எனது கிராமத்துக்கு செல்கிறேன்(யார் கண்டா எத்தனை பதிவு தேறுதோ?மனசை திடமா வைச்சுக்கங்க).ஓகே
நட்புடன்,
ம.கோகுல்
Tweet | ||||||
10 comments:
வணக்கம் கோகுல் அண்ணே,
பல விஷயங்கள் கலந்த திரட்டிப் பதிவு கலக்கல். நல்லாத்தானே இருக்கு.. எதுக்கு இவ்வளவு பயம். கண்டினியூ பாஸ்..
நல்லா இருக்கு கோகுல். எல்லாமே நல்லாவே இருக்கு.
தை திருநாள் வாழ்த்துக்கள் கோகுல்
நல்லாயிருக்கு..வாரத்தில ஒரு நாள் ஓகே.....
பழசையும் புதுசையும் பக்காவா
கலந்துகட்டிய பதிவு.
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
கிராமியப் பொங்கல் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே.
நிறைய நல்ல புகைப்படங்கள் எடுத்து வாருங்கள்.
தலைவா..u r great..:))
நல்லா இருக்கு கோகுல்...
வணக்கம் கோகுல்,
முதலில் முயற்சிக்கும், தேடலுக்கும் வாழ்த்துக்கள்!
உண்மையிலே பலசரக்கு கடை சூப்பராத் தான் இருக்கு!
அதே நேரம் சுவாரஸ்யமாகவும் இருக்கு.
நம்ம ஊர்களில் சரக்கு என்று பிகரைச் சொல்லுவோம். ஆதலால் அந்த பிகர் எவரையும் இங்கே காண முடியலையே.
அவ்வ்வ்வ்வ்வ்
எல்லா விடயங்களையும் கலந்து கட்டி நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீங்க. தொடருங்கள் கோகுல்! இன்னும் கொஞ்சம் புதிதாக ஏதாவது விடயங்களை பலசரக்கு கடையினுள் சேர்க்கலாமா என்று யோசித்து ட்ரை பண்ணுங்க.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்ப பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
பாஸ்...நான் கொஞ்சம் பிசி பாஸ்..அதால உடனுக்குடன் வரமுடியலை!
மன்னிக்கவும்.
பல்சுவை விருந்து!பலே!
தொடரலாம்!
புலவர் சா இராமாநுசம்
பல்சுவை விருந்து தொடர வாழ்த்துக்கள்! நன்றி!
அன்பின் கோகுல் - பல சரக்குக் கடை - பல்சுவை விருந்து அருமை - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment