நியூட்டனின் மூன்றாம் விதி எல்லோருக்கும் நல்லா தெரிந்திருக்கும்,ஒவ்வொரு வினைக்கும்(செயலுக்கும்)அதற்கு சமமான எதிர்வினை இருக்கும் என்பதுதான்.நாம ஒரு இடத்துல ஏ.சி போட்டுக்கிட்டு சிலு சிலு ன்னு அனுபவிச்சிக்கிட்டு இருக்கும் அதே நேரத்துல எங்கேயோ நாம் அனுபவிக்கும் குளுமைக்கு ஏற்ப அதே அளவு வெப்பம் உருவாகிக்கிட்டு இருக்கும்.
இது மாதிரி பல விசயங்களை சொல்லலாம்.இன்றைய தேதியில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவில் பெருமளவில் பணம் செலவளிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.இவ்வாறு செய்வது அவரவர் தனிப்பட்ட விஷயம்.ஆனால் இது போன்ற விழாக்களில் விருந்தின் போது வீணாக்கப்படும் உணவு? எந்த அளவுக்கு உணவு வீணாக்கப்படுகிறதோ,அந்த அளவுக்கு உணவு தேவைப்படும் மக்களுக்கு உணவு மறுக்கப்படுகிறது.என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற மாதிரி இருக்கா?கொஞ்சம் யோசிச்சு பாருங்க சுத்தி வளைச்சு உண்மை இந்த இடத்தில வந்து நிற்கும்.
பல நிகழ்ச்சிகளின் இன்றைக்கு காணும் சூழல்,விருந்து துவங்கும் முன்பாகவே இலையில் எல்லா பதார்த்தங்களும் வைக்கப்பட்டு விடுகின்றன.அந்த உணவு வகைகள் பிடித்தாலும் சரி,பிடிக்காவிட்டாலும் சரி.அதே போல சில உணவுகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது,ஆனால் அவையும் பரிமாறப்பட்டிருக்கும்.குழந்தைகள் அமரும் இலைகளில் கூட பெரியவர் சாப்பிடும் அளவிற்கு உணவு.
இது எல்லாம் முதல் பந்தியில் தான் அடுத்தடுத்த பந்திகளில் காத்திருந்து தான் உட்காரமுடிகிறது என்று சொன்னாலும்,என்ன பரிமாறப்படுகிறது என பார்ப்பதற்குள் இலையில் வைத்துவிடுவார்கள்.பெரும்பாலான விருந்துகளில் கணிசமான அளவில் நிச்சயமாக உணவுப்பொருட்கள் வீணாகிறது.விருந்துகளில் தான் என்று மட்டுமல்ல ஹோட்டல்களில் சாப்பிடும் போதும் அளவுக்கதிகமாக ஆர்டர் செய்தது விட்டு பாதி சாப்பிட்ட்ப்போவது அல்லது சிலர் வேண்டுமென்றே சாப்பிடாமல் பாதி வைத்துவிட்டு போவதும் நடக்கிறது.தெரியாத உணவு வகைகளை ஆர்டர் பண்ணிட்டு சுவை பிடிக்காம சாப்பிட முடியாமலும்,சில சமயம் ஆர்டர் செய்த உணவு அளவு அதிகமா இருப்பதும் வீணாவதற்கு காரணமாகுது.
தீர்வு தான் என்ன? புதுடெல்லியில் இது போன்ற விழாக்களில் வீணாகும் உணவுப்பொருட்களை சேகரித்து உணவில்லாதவர்களுக்கு வழங்கும் வங்கி ஒன்றை துவக்குவதற்கான ஏற்பாடுகள் கடந்த செப்டம்பரில் துவக்கப்பட்டுள்ளது.இது எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்று தெரியவில்லை. நாம் அரசை எதிர்பாராமல் அந்தந்த ஊர்களில் இருக்கும் ஏதாவது சேவை நிறுவனங்களை அணுகி பரிமாறப்படாமல் மீதியான உணவுகளை அந்தந்த பகுதிகளில் இயங்கும் ஏதாவது இல்லங்களுக்கு வழங்குமாறு ஏற்பாடு செய்யலாமே!ஹோட்டல்களிலும் தெரியாத உணவுகளை ஆர்டர் செய்யும் போது அதைப்பற்றி தெரிந்துகொண்டு ஆர்டர் செய்தால் நலம்,அது மட்டுமல்லாமல் சும்மா பேருக்கு சாப்பிட உக்காந்து ஸ்டைலுக்கு கொஞ்சமா கொறிச்சுட்டு போகும் பழக்கம் யாருக்காவது இருந்தால் தயவு செய்து அதை மறந்துட சொல்லி சொல்லுங்கள்.
பின்குறிப்பு – மீதமான உணவுகளை உரியவர்களுக்கு சேர்க்கும் உங்களுக்கு தெரிந்த வழிகளையும் ,கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
Tweet | ||||||
34 comments:
சரியா சொன்னீங்க .
பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.
நல்ல தகவல் நண்பா....
சரியா சொன்னிங்க கோகுல்..
வீண் கொண்டாட்டங்களில் பெருமளவில் வீணாக்கப்படும் உணவை இல்லாதவர்களுக்கு கொடுத்தால் புண்ணியமா போகும்
விழிப்புணர்வு பதிவு மாப்ள!
இன்றைய கால கட்டத்தில் அவசிய தேவை நண்பா ,..
பகிர்வுக்கு பெரிய வாழ்த்துகள்
குறைவா சமைக்கிறதத் தவிர, வேற வழி தெரியல!!!
குறைவா சமைக்கிறதத் தவிர, வேற வழி தெரியல!!!
திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதை நான் தவிர்த்து விட்டேன்... ரொம்ப நெருங்கிய நண்பர்களும் என்னை புரிந்து கொள்ளும் பொழுது.. நோ டென்ஷன்... எனக்கு பத்திரிகை வைக்கும் நண்பர்கள், நீ வர மாட்டேன்னு தெரியும்... இருந்தாலும் உன் தகவலுக்கு என்று சொல்லி விடுகிறார்கள்...
நல்ல பகிர்வு கோகுல்....
GOOD...
பசியால் வாடும் மக்களை அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்ககூடாது...
வீணாகும் உணவுப்பொருட்களை மாற்றம் செய்தாலே சிலபேருடைபசி போக்கப்பட்டு விடும்.
உணவு வங்கியும் சரியான வழிதான் இதை அரசு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செய்தால் மட்டுமே சாத்தியப்படும்
வணக்கம்,கோகுல்!அண்மையில் கூட ஒரு பதிவு உணவு சம்பந்தமாக வீடியோ இணைப்புடன் வந்த நினைவு.வியட்நாமா,கொரியாவா தெரியவில்லை!"மக் டொனால்"டில் மீதமாகும் உணவை(கோழிக்கால்,பர்கர்)ஒரு தந்தை சேகரித்து வருவார்.குழந்தைகள் காத்திருப்பார்கள்.என் வயிற்றைப் பிசைந்த,இதயம் பிழிந்த காட்சி அது!வெளி நாடுகளில் உணவு வீணாக்குவது,சொல்லவே வேண்டாம்.பகிர்ந்தமைக்கு நன்றி! நாலு பேரில் ஒருவர் திருந்தினாலே..........
நாங்க சாப்பிட உக்கார்ந்தா இலையில..எதுவும் மிச்சமாகாது...அது வேற விசயம் இன்னமும் எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் விழாவில் 400பேர் வருவார்கள் என்றால் 500பேர்க்கு சமைத்து மீதி 100 பேர் உணவை அன்றைய தினம் ஒரு கருனை இல்லத்திக்கு அனுப்பி வைப்போம்.இது எங்கள் நண்பர்கள் செய்வது நீங்களும்(படிக்கும்)செய்து பாருங்கள் மனசு லேசாகும்.....
உணவுமட்டுமல்ல.அனைத்துவிடயங்களிலும் தேவையற்ற ஆடம்பரங்களில் ஈடுபடுபவர்களால் என்னவோ எல்லாம் வீணாகின்றன.அதேநேரம்,ஒருவாய்க்கஞ்சிக்குக்கூட வழியற்றவர்களாக எத்தனையோபேர் இருக்கிறார்கள்.
தாம் வீணாக்குவதைக்கூட,பிறருக்குக் கொடுக்கக்கூடாது என்ற கொள்கையில் இயங்குபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.நேரடியாக கண்ட ஒரு சம்பவம். - http://shuvadugal.blogspot.com/2010/12/03.html
பசியால் வாடும் எத்தனையோ மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இது மிகுந்த உதவியாக இருக்கும், அருமையான பதிவு மக்கா...!!!
கோகுல்,
நல்ல பதிவு.
வீனக்குதலே தவறு என்பதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
தரமான.... உண(ர்)வு பகிதலுக்கு என் வணக்கம்.
பாராட்டுக்கள்.
வாசிப்பவர்களை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விஷயம் நண்பரே..
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..
தாங்கள் எழுதியுள்ளது முற்றும்
உண்மையே!
இந்த போக்கு மாற வேண்டும்!
புலவர் சா இராமாநுசம்
பயணுள்ளவை :)
வணக்கம் பாஸ்,,
வீண் விரயத்தினைத் தடுத்தால் நன்மை எனும் உண்மையினையும், வீண் விரயமாகும் உணவுகளை எப்படி தடுக்கலாம் என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறீங்க.
1) திட்டமிட்டு சமைக்க வேண்டும்.
2) பெரிய விழாக்களை நடாத்தும் போது அதில் ஒரு பங்கினை தானமாக சிறார் இலங்களுக்கு வழங்கலாம்.
3) எமது விழாக்களின் போதும், நினைவு நாட்களின் போதும் அநாதை இல்லங்களுக்கு விருந்துபசாரம் செய்யலாம்!
//புதுடெல்லியில் இது போன்ற விழாக்களில் வீணாகும் உணவுப் பொருட்களை சேகரித்து உணவில்லாத வர்களுக்கு வழங்கும் வங்கி ஒன்றை துவக்குவதற்கான ஏற்பாடுகள் கடந்த செப்டம்பரில் துவக்கப்பட்டுள்ளது.இது எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்று தெரியவில்லை.//
நிச்சயம் வெற்றி பெறும்.
அருமையான சிந்தனை.. வாழ்த்துகள்..
வாயிலிருப்பதை பிடுங்கிக் கொடுக்கவேண்டாம்..
மீதமெனப்போகும் பொருளை முன்பே அறிந்து
அதை இயலாதவர்களுக்கு செய்யலாமே....
அனைவரும் சிந்திக்கவேண்டிய செய்தி இது நண்பரே.
நல்ல மனசு பாஸ் உங்களுக்கு........
நல்ல பதிவு... இதைப்பார்த்து பலர் இப்படி செய்தால் அந்த பெருமை புண்ணியம் உங்களுக்குத்தான்...
தரமான பதிவுகளே தொடர்ந்து போடுறீங்க... ரியலி குட் பாஸ்
நல்ல விழிப்புணர்வு பதிவு. உணவின் அவசியத்தையும், உணவுப் பொருட்கள் கையிருப்பு பற்றியும் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது. பகிர்வுக்கு நன்றி சகோ
சிறந்த விழிப்புணர்வையும், சமூக பொறுப்பையும் ஊட்டும் பதிவு.
நல்லதொரு பதிவு பகிர்வுக்கு நன்றீ
தங்களை ஓர் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறேன் ...வருகை தரவும்...இந்த வருடத்தில் நான்..
வள்ளுவன் வழியில்...ஒவ்வொரு பருக்கையும் உன்னதமானது..
அனைத்து விசயங்களும் ஆடம்பரம் ஆகிவிட்டது.. அதும் திருமண மண்டபங்களில் நாகரிகம் என்ற பெயரில் உணவை சிறிதளவு கொறித்துவிட்டு வைக்கும் ஆட்களை கண்டாலே கடுப்பாகும்..
விசேசங்களிலும் ஆட்களை முதலில் அமர சொல்லி விட்டு பின் பரிமாறினால் தேவையானதை மட்டும் வைக்கலாம்.
கூடங்களில் மீதியாகும் உணவை அருகில் உள்ள எதாவது விடுதிக்கு கொடுக்கலாம்..
முடிந்தவரை நாம் அனைவரும் பொருட்களை சேதப் படுத்துவதை தவிர்ப்போம் இந்த புது வருடதிலிருந்தாவது..
மிக நல்ல பதிவு நன்றி கோகுல்
உங்கள் சமூக அக்கறைக்கு வாழ்த்துக்கள் கோகுல்.
மிக அவசியமான பகிர்வு... நண்பா...
வாழ்த்துகள்... நண்பா...
விஷேச வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவுசெய்து தயங்காமல் ~1098~ இலக்கத்தில் அழைக்கவும்(இந்தியாவில் மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.
அன்பின் கோகுல் - உண்மை நிலையினை அப்ப்டியே படம் பிடித்துக் காட்டியமை நன்று. சிந்திக்க வேண்டாமா ? மாற வேண்டாமா ? ஆடம்பரம் தவிர்க்க வேண்டாமா ? சிந்திப்போம் - மாறுவோம் - ஆடம்பரம் தவிர்ப்போம் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment