நியூட்டனின் மூன்றாம் விதி எல்லோருக்கும் நல்லா தெரிந்திருக்கும்,ஒவ்வொரு வினைக்கும்(செயலுக்கும்)அதற்கு சமமான எதிர்வினை இருக்கும் என்பதுதான்.நாம ஒரு இடத்துல ஏ.சி போட்டுக்கிட்டு சிலு சிலு ன்னு அனுபவிச்சிக்கிட்டு இருக்கும் அதே நேரத்துல எங்கேயோ நாம் அனுபவிக்கும் குளுமைக்கு ஏற்ப அதே அளவு வெப்பம் உருவாகிக்கிட்டு இருக்கும்.
இது மாதிரி பல விசயங்களை சொல்லலாம்.இன்றைய தேதியில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவில் பெருமளவில் பணம் செலவளிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.இவ்வாறு செய்வது அவரவர் தனிப்பட்ட விஷயம்.ஆனால் இது போன்ற விழாக்களில் விருந்தின் போது வீணாக்கப்படும் உணவு? எந்த அளவுக்கு உணவு வீணாக்கப்படுகிறதோ,அந்த அளவுக்கு உணவு தேவைப்படும் மக்களுக்கு உணவு மறுக்கப்படுகிறது.என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற மாதிரி இருக்கா?கொஞ்சம் யோசிச்சு பாருங்க சுத்தி வளைச்சு உண்மை இந்த இடத்தில வந்து நிற்கும்.
பல நிகழ்ச்சிகளின் இன்றைக்கு காணும் சூழல்,விருந்து துவங்கும் முன்பாகவே இலையில் எல்லா பதார்த்தங்களும் வைக்கப்பட்டு விடுகின்றன.அந்த உணவு வகைகள் பிடித்தாலும் சரி,பிடிக்காவிட்டாலும் சரி.அதே போல சில உணவுகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது,ஆனால் அவையும் பரிமாறப்பட்டிருக்கும்.குழந்தைகள் அமரும் இலைகளில் கூட பெரியவர் சாப்பிடும் அளவிற்கு உணவு.
இது எல்லாம் முதல் பந்தியில் தான் அடுத்தடுத்த பந்திகளில் காத்திருந்து தான் உட்காரமுடிகிறது என்று சொன்னாலும்,என்ன பரிமாறப்படுகிறது என பார்ப்பதற்குள் இலையில் வைத்துவிடுவார்கள்.பெரும்பாலான விருந்துகளில் கணிசமான அளவில் நிச்சயமாக உணவுப்பொருட்கள் வீணாகிறது.விருந்துகளில் தான் என்று மட்டுமல்ல ஹோட்டல்களில் சாப்பிடும் போதும் அளவுக்கதிகமாக ஆர்டர் செய்தது விட்டு பாதி சாப்பிட்ட்ப்போவது அல்லது சிலர் வேண்டுமென்றே சாப்பிடாமல் பாதி வைத்துவிட்டு போவதும் நடக்கிறது.தெரியாத உணவு வகைகளை ஆர்டர் பண்ணிட்டு சுவை பிடிக்காம சாப்பிட முடியாமலும்,சில சமயம் ஆர்டர் செய்த உணவு அளவு அதிகமா இருப்பதும் வீணாவதற்கு காரணமாகுது.
தீர்வு தான் என்ன? புதுடெல்லியில் இது போன்ற விழாக்களில் வீணாகும் உணவுப்பொருட்களை சேகரித்து உணவில்லாதவர்களுக்கு வழங்கும் வங்கி ஒன்றை துவக்குவதற்கான ஏற்பாடுகள் கடந்த செப்டம்பரில் துவக்கப்பட்டுள்ளது.இது எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்று தெரியவில்லை. நாம் அரசை எதிர்பாராமல் அந்தந்த ஊர்களில் இருக்கும் ஏதாவது சேவை நிறுவனங்களை அணுகி பரிமாறப்படாமல் மீதியான உணவுகளை அந்தந்த பகுதிகளில் இயங்கும் ஏதாவது இல்லங்களுக்கு வழங்குமாறு ஏற்பாடு செய்யலாமே!ஹோட்டல்களிலும் தெரியாத உணவுகளை ஆர்டர் செய்யும் போது அதைப்பற்றி தெரிந்துகொண்டு ஆர்டர் செய்தால் நலம்,அது மட்டுமல்லாமல் சும்மா பேருக்கு சாப்பிட உக்காந்து ஸ்டைலுக்கு கொஞ்சமா கொறிச்சுட்டு போகும் பழக்கம் யாருக்காவது இருந்தால் தயவு செய்து அதை மறந்துட சொல்லி சொல்லுங்கள்.
பின்குறிப்பு – மீதமான உணவுகளை உரியவர்களுக்கு சேர்க்கும் உங்களுக்கு தெரிந்த வழிகளையும் ,கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
| Tweet | ||||||


