வணக்கம் நண்பர்களே,
நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை கடந்தால் தான் தொப்பை வரும் என்ற நிலை மாறி டீன் ஏஜிலே தொப்பை பெருகி வருகிறது.
என்னங்க பண்றது வாயைக்கட்ட முடியலை.சரி ஜிம்முக்கு போலாம்னாலும்,வாக்கிங்,ஜாக்கிங் எதுக்கும் டைம் இல்ல.இது தான் உங்க பிரச்சினையா?இந்த வீடியோவை பாருங்க இதுல இருக்கற மாதிரி தினமும் செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.ரொம்ப நேரம் தேவை இல்ல.ஒரு இருபது நிமிஷம் அல்லது அரைமணி நேரம் இருந்தால் போதும்.வெளியே எங்கேயும் போக தேவை இல்லை.வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.எந்த செலவும் கிடையாது.
இதில் உள்ள சில பயிற்சிகள் முதல் ஓரிரு நாட்களுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும்.பிறகு எளிதாகிவிடும்.காலையிலோ மாலையிலோ நேரம் கிடைக்கும் போது வெறும் வயிற்றில் செய்து பாருங்கள் ஓரிரு வாரங்களில் நல்ல மாற்றம் கிடைக்கும்.சிக்ஸ் பேக் இல்லைனாலும் லஞ்ச் பேக் மாதிரி இருக்குற தொப்பையை குறைக்கலாமே.
ஒரு chair அல்லது பெஞ்ச் இருந்தா கூட பயன்படுத்தலாம்.
நட்புடன்,
ம.கோகுல்.
படங்கள் கூகுள் தேடலில்,வீடியோ நண்பன் மொபைலில் பகிர்ந்தது யூட்யூபில் அப்லோட் செய்து தந்திருக்கிறேன்.ஏற்கனவே இருக்கிறதா தெரியவில்லை.
Tweet | ||||||
36 comments:
எனக்கு ரொம்ப தேவையான பதிவு மாப்ள.. ஹீ.ஹீ..
கோகுல்! பார்த்த உடனே, கிளம்பிட்டேன்! எக்ஸைஸ் செய்யலாமுனு! அப்புறம் ஹால்ல வந்து பார்த்த பிறகுதான் தெரிஞ்சது, வீட்ல கவுச் இல்லேங்கிறது!
எனக்கு இல்ல.இருக்கற ஆட்களுக்கு பயன்படும்.
மாப்ள கிளாஸ் நல்லா இருக்குய்யா ஹிஹி!
//////
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
எனக்கு ரொம்ப தேவையான பதிவு மாப்ள.. ஹீ.ஹீ..
//////
இப்படியாவது தொப்பையை குறைங்க...
சிக்ஸ் பேக் இல்லைனாலும் லஞ்ச் பேக் மாதிரி இருக்குற தொப்பையை குறைக்கலாமே.
பகிர்வுக்கு நன்றி.
ஒரு வேடிக்கை.நான் சுறுசுறுப்பாகப் பணியில் இருந்த காலத்தில் தொப்பை இருந்தது.இப்போது ஓய்வு பெற்றுச் சும்மா இருக்கையில் தொப்பையே இல்லை!!
எனக்கு ரொம்ப தேவையானது தான் தம்பி பார்ப்போம் :)
கோகுல் உடல் பயிற்சி செய்ததுக்கு பிறகு மட்டன் பிரியாணி சாப்பிட்டா நல்லதா? சிக்கன் பிரியாணி சாப்பிட்டா நல்லதா...?ஹிஹி பயனுள்ள தகவல் ஆனால் வாய கட்டமுடியலையே!!
யோவ் கொஞ்சம் தொப்பை இருந்தால்தான் பெண்களுக்கு பிடிக்குமாம், தெரியுமா..?
காடாறு மாதம்
நாடாறு மாதம் னு
மாறி மாறி போயி
கிடைச்சதை தின்னு
தொப்பை பெருத்துப் போச்சுதான் நண்பரே
உடற்பயிற்சி காணொளிக்கு மிக்க நன்றி நண்பரே...
நல்லது ... முயற்சி செய்து பார்ப்போம்....
@MANO நாஞ்சில் மனோ
இது இந்த வயசில தேவையா...
கலக்கல் பதிவு .
I accept mano statement
ஹா ஹா எங்க போனாலும் எனக்கே சொல்ற மாதிரி பீலிங்....
ஹி ஹி எனக்கு தொப்பை இல்லை நண்பா
நல்ல பதிவு ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
ஆசை இருக்கு. பார்ப்போம்.
தொப்பையா எங்களுக்கா போங்க பாஸ்? எப்புடி சதை போடுறதுன்னு ஒரு பதிவு போடுங்க பாஸ்?
முயற்சி செய்யலாம்தான் ஆனா எனக்கு தொப்பை இல்லையே
அடி வேண்டப்போறீங்க சகோ .ஈசியா ஏதோ சொல்லப் போறீங்க எண்டு வந்தா அம்மாடியோ நம்மால முடியவே
முடியாது சாமி .ஆள விடுங்க ஹா......ஹா ......ஹா. .........
நன்றி சகோ பகிர்வுக்கு .
அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள் சகோ.
Tamilmanam vote 12.
எனக்கு ரொம்ப தேவையானது தான் கோகுல்! முயற்சி செய்து பார்க்கிறேன்:)
எனக்கு இல்லை பாஸ் ... தொப்பையை சொன்னேன்... ஹீ ஹீ
வீடியோ என் கணினியில் தடை... நண்பா...
தெரியவில்லை...
"எவ்வளவோ செய்யறோம். இத செய்ய மாட்டோமா!"
நல்ல பதிவு சார். நன்றி.
நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
அப்ப தொப்பய குறைச்சுடலாம்.
தொப்பையா...எனக்கா...ஹா...ஹா...
வணக்கம் நண்பா,
நல்லதோர் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
காலை மேலே தூக்கி கல்லூரிக் காலத்தில் அடியேனும் செய்து தொப்பையைக் குறைத்திருக்கேன்.
Good one
பயனுள்ள பதிவு
பயனுள்ள பகிர்வு சகா. . .
எனக்கு நல்ல சாப்பிடுடானு தான் சகா அடிவிழும். . .
//தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை கடந்தால் தான் தொப்பை வரும் என்ற நிலை மாறி டீன் ஏஜிலே தொப்பை பெருகி வருகிறது.//
உண்மைதான் நண்பரே..
நல்லதோர் பகிர்வு நண்பரே.
வீடியோ அருமை..வீட்டிலேயே முயற்சிக்கலாம்..
எனக்கு தேவையே இல்ல என்று சொல்ல மாட்டேன்... ஆனால் தேவையில்லை...
நல்ல பதிவு பலருக்கு பரிந்துரைக்கிறேன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record
சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்
ஒரே ஒரு ஸ்கிப்பிங் கயிறு போதும் தோழர்.. ஒரு நாளைக்கு நூறு ஜம்ப் அடித்தால் ஒரே மாதத்தில் தொப்பை இருக்காது
Post a Comment