வணக்கம் நண்பர்களே,
நம்ம உணவுப்பழக்கம் வாழ்க்கைப்பழக்கம் மாறியதன் விளைவாக தொப்பை இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது.முப்பது,நாற்பதை கடந்தால் தான் தொப்பை வரும் என்ற நிலை மாறி டீன் ஏஜிலே தொப்பை பெருகி வருகிறது.
என்னங்க பண்றது வாயைக்கட்ட முடியலை.சரி ஜிம்முக்கு போலாம்னாலும்,வாக்கிங்,ஜாக்கிங் எதுக்கும் டைம் இல்ல.இது தான் உங்க பிரச்சினையா?இந்த வீடியோவை பாருங்க இதுல இருக்கற மாதிரி தினமும் செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.ரொம்ப நேரம் தேவை இல்ல.ஒரு இருபது நிமிஷம் அல்லது அரைமணி நேரம் இருந்தால் போதும்.வெளியே எங்கேயும் போக தேவை இல்லை.வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.எந்த செலவும் கிடையாது.
இதில் உள்ள சில பயிற்சிகள் முதல் ஓரிரு நாட்களுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும்.பிறகு எளிதாகிவிடும்.காலையிலோ மாலையிலோ நேரம் கிடைக்கும் போது வெறும் வயிற்றில் செய்து பாருங்கள் ஓரிரு வாரங்களில் நல்ல மாற்றம் கிடைக்கும்.சிக்ஸ் பேக் இல்லைனாலும் லஞ்ச் பேக் மாதிரி இருக்குற தொப்பையை குறைக்கலாமே.
ஒரு chair அல்லது பெஞ்ச் இருந்தா கூட பயன்படுத்தலாம்.
நட்புடன்,
ம.கோகுல்.
படங்கள் கூகுள் தேடலில்,வீடியோ நண்பன் மொபைலில் பகிர்ந்தது யூட்யூபில் அப்லோட் செய்து தந்திருக்கிறேன்.ஏற்கனவே இருக்கிறதா தெரியவில்லை.
| Tweet | ||||||

