இசைன்னா என்னங்க.ஹி.ஹி.இசைன்னா... ங்க..,க..ம,ப,இசைன்னா இசை.அம்புட்டுதாங்க நமக்கு தெரியும்.உங்களுக்கெப்படி?இசை கேட்டால் புவி அசைந்தாடும்...என்ன?அந்த இனிமையான பாட்டு நினைவுக்குவருதா?எப்பவாவது டென்ஷனானா ஏதாவது சில இளையராஜா ,பழைய எம்.எஸ்.வி பாட்டு ஏதாவது கேட்டா மனசு லேசான மாதிரி இருக்கும்னு பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.உணர்ந்தும் இருக்கேன்.ஆமா,இசை சில மனஉபாதைகளுக்கு சிறந்த மருந்து தான்.
ஆனா நமக்கு(முக்கியமா எனக்கு) தெரியாத ஒரு விசயத்த சமீபத்துல தெரிஞ்சுக்கிட்டேன்.இசை மனஉபாதைகளுக்கு மட்டுமில்லை,சில உடல் சார்ந்த சில குறைபாடுகளைக்களையும் மகத்துவம் இசைக்கு இருக்கிறதாம்.அப்ப லாஜிக் படி இசைஅமைப்பாளர்களுக்கு தான டாக்டர் பட்டம் குடுக்கணும்.சரி விடுங்க அதைப்பத்தி இங்கே பேச வேணாம்.
அப்படியென்ன செய்கிறது இசை?இசை மருத்துவம் என்ற ஒரு மருத்துவ முறையே இருக்கிறது.முடிந்த அளவுக்கு நாமே ஏதாவது இசைக்கருவியை வாசித்தாலோ,அல்லது பாடினாலோ உன்னதம் என்கிறது இந்த மருத்துவ முறை.என்ன ரிஸ்க் எடுக்காம ரஸ்க் சாப்பிடனுமா?அப்ப இசையை கேளுங்க அதுவே போதும்.
ஹிஸ்டீரியா அறிகுறிகளுக்கு நரம்பிசைக்கருவிகளின் இசையை கேட்க நல்ல பலன் தரும்.முக்கியமாக நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு இசை மருத்துவம் நல்ல பலன் தருகிறது.நரம்பு மண்டலத்தை செம்மைப்படுத்துவதில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.
தலைவலி வரும் சமயங்களில் விளம்பரங்கள்ள வர்ற மாதிரி மாத்திரைகளை போட்டா அதுவே பின்னால பெரிய தலைவலியை குடுக்கும்.ஒற்றை வயலின் இசையை தொடர்ந்து கேட்டால் தலைவலியின் தாக்குதலை சமாளித்துவிடலாம்.அமெரிக்காவுல ஒரு பல்டாக்டர் பல பேரோட சொத்தை(பேஷன்ட் சொத்தை அல்ல)பல்லை மயக்க மருந்தோ,வழி குறைப்பு மருந்தோ இல்லாமல் மயக்கும் இசையை வைத்தே பிடுங்கி அசத்தியுள்ளாராம்.
நாம மட்டும் சளைத்தவர்களா?நம்ம பசு நேசர் பாட்டு பாடியே பால் கறக்கலையா?அதுவும் உண்மைதாங்க,இசைக்கு மயங்கும் பசுக்கள் அதிக பால் கொடுக்குதாம்,செடிகள் மற்ற செடிகளை செழித்து வளருதாம்.பாஸ்டன் நகரத்துல அறுவை சிகிச்சையே பண்றாங்களாம்.
என்ன இசை மருத்துவத்தை அனுபவிப்போமா?ஆனா சில கொலைவெறி இசை இருக்கும் ஆரோக்கியத்தை குலைத்து விடும்.(ஐயோ நான் ஏதும் பொடி வைச்சு பேசலைங்க).நல்ல இசை கேட்போம்.நல்ல மன,உடல் ஆரோக்கியத்தோட இருப்போம்.இனி இசை கேட்டால்......... நோய் பறந்தோடும்!
நட்புடன்.
ம.கோகுல்.
Tweet | ||||||
40 comments:
கலக்குங்க தலைவரே...
insomnia என்னும் நோயை விரட்டும் இசை என்பது மட்டும் தான் எனக்கு தெரியும்
உண்மைதான் இசை ஒரு அழகான இதமான மருத்துவம்
இசை பற்றி சொல்லி அசத்திபுட்டீங்க!
என்னங்க திடீருன்னு இசை,அது,இதுங்கிறீங்க,ஒங்களுக்கு ஒண்ணும் ஆவலியே?
வேலை முடிஞ்சதும் ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பிச்சுருவேன் [[நமக்கும் தெரியுமுல்ல]] மனசெல்லாம் லேசாகிரும், அருமையான பதிவு,உண்மையும் கூட நான் அனுபவிச்சிருக்கேன்...!!!
////நாம மட்டும் சளைத்தவர்களா?நம்ம பசு நேசர் பாட்டு பாடியே பால் கறக்கலையா?////
ஹா.ஹா.ஹா.ஹா...Why this கொலைவெறி.......
இசை பற்றி அழகான தகவல்கள் பாஸ் இசை என்பது மனதின் கஸ்டங்களை போக்கும் இனிய மருந்துதான் அருமை
//அப்ப லாஜிக் படி இசையமைப்பாளர்களுக்கு தான டாக்டர் பட்டம் குடுக்கணும்.//
அட, ஆமால்ல!
இசை மருத்துவம் மகத்துவமானது தான்.
அழகு அருமை
பதிவு
வாழ்த்தக்கள்
அன்புடன்
யானைக்குட்டி
அழகு அருமை
பதிவு
வாழ்த்தக்கள்
அன்புடன்
யானைக்குட்டி
இசையின் மகத்துவம் பற்றி நிறைய சொல்லிருக்கீங்க அருமை ..
கோகுல் நல்லா இருக்கு.... நல்ல தேடல் பகிர்வு
வணக்கம் கோகுல் பாஸ்,
இசையால் நோய்களை குணமாக்கலாம் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
தூக்கத்தை வர வைப்பதற்கு மென்மையான இசை எப்போதுமே உகந்தது. இது என் அனுபவமும் கூட.
நல்தொரு பதிவு...
எனக்கும் எல்லா இசைகருவிகளும் வாசிக்க தெரியும்...
யாராவது எழுதிக்கொடுத்தா...
இசையால் மருத்துவம் புதிய செய்திதான்...
வாழ்த்துக்கள்..
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து
இன்பம் சேர்க்க மாட்டாயா!?
உண்மை சகோ!
எனக்கே அந்த அனுபவம் உண்டு!
நல்ல பதிவு பாராட்டுக்கள்!
புலவர் சா இராமாநுசம்
அருமையான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
இசை உலகையே ஆட்டிப்படைக்கும் தலையாய போதைப்பொருள் தானே...
பாஸ் இசைக்கு கிறங்கா மனம் உண்டோ???
இசையை அதிகம் எல்லோரும் நேசிக்கிறார்கள்.
இசை மருந்தாவது புது தகவல் பாஸ்
தேங்க்ஸ்
இசை ஞானின்னா எனக்கு உயிர்...என்னதான் பீதோவன்..மொஜார்ட் கேட்டாலும்...நமக்கு அவர் மாதிரி வராது...
தலப்பாக்கட்டு பிரியாணி மாதிரி...
கொஞ்சம் ஓவராயுட்டோ...
இசை பற்றி தொகுப்பு அருமை... நண்பா
இசைகேட்டால் புவி அசைந்தாடும்.
அருமையான தொகுப்பு
உண்மைதான் நண்பா
இசை அந்த மகத்துவம் பெற்றதுதான்
உயிர் உள்ள அனைத்தும் இசையால் மயங்கும்
உண்மைதான் நண்பா.. இசை ஒரு மருத்துவம் தான்..
Arumai. Isaiyum oru marunthu than.
TM 12.
அதுவும் நம்ம இளையராஜாவின் பாடல்கள் மெய்மறக்க செய்யும்...
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment
எனக்கும் எல்லா இசைகருவிகளும் வாசிக்க தெரியும்...
யாராவது எழுதிக்கொடுத்தா...///எனக்கும் கூட!எங்கை வாசியுங்க:வயலின்,மிருதங்கம்,சிதார்,புல்லாங்குழல்,கடம்.ஹி!ஹி!ஹி!
புவியையே அசைய வைக்கும் இசை...
நின்றது நடக்கவும்..
நடந்தது பறக்கவும்,
பறந்தது ஓடவும்...
வைக்கக் கூடியது இசை...
இசையின் மருத்துவ முகம் பற்றி அழகாக
எடுத்துரைத்தீர்கள் நண்பரே..
அருமை...
வணக்கம் நண்பரே..
கலக்கிடீங்க போங்க..
இசையால் வசமாகா இதயமேது.. ?
இணைத்த இணைப்பின் இசை மனதை மயிலிறகால் வருடிவிட்டது போல்..
சூப்பர் தேர்வு..
இசை பல பரிமாணத்துல திரியுது. மூனை தொட்டது யாரு?
அருமையான விளக்கம்
அருமையான இசைக் காணொளி
பதிவாக்கித்தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 14
நம் மனதுக்கு இதமே இசை மட்டுமே.. அருமையானதொரு பகிர்வு
@கவிதை வீதி... // சௌந்தர் //
ஹா... ஹா...
// இசைஅமைப்பாளர்களுக்கு தான டாக்டர் பட்டம் குடுக்கணும்//
நூறு சதம் உண்மை. சமூக அமைதிக்கான மருத்துவர்கள். நல்ல பதிவு நண்பரே...
அருமையான பகிர்வு. நான் மிகவும் ரசித்த அமோதித்த இப்பதிவை வலைச்சரத்தில் இன்று கோர்த்திருக்கிறேன். மிக்க நன்றி!
கீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் இடுகையை
நான் பகிர்ந்த பதிவு.
http://blogintamil.blogspot.com/2011/12/gigo-theory.html
Post a Comment