Monday, November 28, 2011

வெயிட்டான பாத்திரங்கள் ( கதா ,கதா )



வெயிட்டான பாத்திரம் என்றதும் பெரிய அண்டா ன்னு நினைக்காதீங்க. நாடகங்கள்,நாவல்கள்,சினிமாக்கள்,காமிக்ஸ்களில் புனையப்பெற்ற,அன்று முதல் இன்று வரை காலச்சுவட்டில் நீங்கா இடம் பெற்றுள்ள சில கற்பனை கதாபாதிரங்களைத்தான் அப்படி சொன்னேன்! அவற்றுள் சில இங்கே!



1.ஹாம்லெட்(HAMLET) - சேக்ஸ்பியரின் “ஹாம்லெட்” நாடக கதைத் தலைவன் .ஹாம்லெட் டென்மார்க் நாட்டின் இளவரசன். ஹாம்லெட்டின் சித்தப்பா கிளாடியஸ் ஹாம்லெட்டின் தந்தையைக் கொன்று, ஹாம்லெட்டின் தாயை மறுமணம் புரிந்துகொண்டு, நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான். இதனால் தவிக்கும் ஹாம்லெட்டின் துடிக்கும் உணர்வுகளும் செயல்களுமே, இந்த நாடகத்தின் உயிரோட்டம்!.

2.சின்ட்ரெல்லா(Cinrerellaa)- ஒரு தேவதைக்கதையில் வரும் தேவதைகளால் துன்ப வாழ்விலிருந்து ராஜகுமாரியாகும் சின்ட்ரேல்லா பாத்திரம் க்ரீம் சகோதரர்களால் உருவாக்கப்பட்டது.அழகிய சின்ட்ரெல்லா, சின்ட்ரெல்லா......



3.டின் டின் (Tintin) – இது ஒரு துப்பறியும் பத்திரிகையாளர் கதாபாத்திரம்.பெல்ஜியத்தை சேர்ந்த ஹெர்ஜினின் என்பரால் உருவாக்கப்பட்டு இன்று வரை சக்கைப்போடு போடுகிறது. டின் டின் டி டின்...


4.டார்ஜான்(Tarzan) – இவரைப்பத்தி கேள்விப்பட்டிருப்பிங்க.எட்கார் பரோஸ் என்பவரால் “டார்ஜான் ஆஃப் த ஏப்ஸ் “ல் ஒரு வாலில்லாக்குரங்கால் வளர்க்கப்படும் ஒரு செல்வந்தனின் மகனாக புனையப்பட்டு பெரும் புகழ் அடைந்த கதாபாத்திரம்.


5.சாம்வெல்லர் (SamWeller) – சார்லஸ் டிக்கின்ஸ் எழுதிய “The Pickwick Papers” என்ற நாவலில் தனது முதலாளிக்கு விசுவாசமும் அன்பும் மட்டுமே காட்டிய ஒரு கதாபாத்திரம்.இன்றைக்கும் இருக்கிறார்கள் பல சொம்பு(சோப்பு)வெல்லர்கள் பல அலுவலகங்களில்.



6.பிராங்கேன்ஸ்டீன்(Frankenstein) – இயற்கையைப் பற்றி ஆராயும் ஒரு மாணவன் உருவாக்கிய ஒரு ஜீவராசி எல்லாவற்றையும் அழித்து விட்டு கடைசியில் உருவாக்கியாரையும் அழித்துவிடுகிறது.உருவாக்கியவரையே அழிக்கும் தன்மை என்பது இதற்க்கு அர்த்தம்.கிட்டதட்ட சிட்டி ரோபோ போல.


7.ஷைலோக் (Shailock) – இவரும் சேக்ஸ்பியரின் கைவண்ணம் தான்.’மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்’ –ல் புனையப்பட்ட அதிக வட்டி வாங்கி மக்களை நசுக்கும் கொடூரன் .இன்றைய ஷைலோக்குகள் நாகரீக தோற்றத்தில் உலவுகிறார்கள் பேங்கின் பிரதிநிதி என்ற பெயரில்.


8.ஜேம்ஸ்பாண்ட் (JamesBond) – இவரப்பத்தி அறிமுகம் தேவை இல்ல இயான் பிளம்மிங் நாவலில் உருவாக்கப்பட்ட வீர தீர,யாராலும் செய்ய முடியாத சாகசங்கள் செய்யும் துப்பறியும் கதாபாத்திரம்.முதலில் தோன்றியது 1953-ல் கேசினோ ராயலில்.கார்களும் பெண்களும் இவருக்கு இஷ்டம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?



9.ஹாரி பாட்டர் (Horry Potter) – இந்தப் பையனை தெரியாதவர்கள் ரொம்பக்கம்மியாதான் இருப்பாங்க.தமிழ்நாடு TNPSC தேர்வில் ஹாரி பாட்டரை எழுதியது யார் என கேள்வி கேக்கும் அளவுக்கு பிரபலம்.கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை(ஜே.கே.ரௌலிங்)உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வைத்த பெருமை இவரை சேரும்.



10. ஃபாகின்(Fagin) – இவர்(ன்) சார்லஸ் டிக்கின்சின் ‘’ஆலிவர் ட்விஸ்ட்’’ நாவலில் வரும் ஜகஜாலத்திருடன்,பிக்பாக்கெட்,ஜேப்படி வேலைகள் செய்யும் மாயக்காரன்.
சிறுவர்களுக்கு உலகின் கருப்புப்பக்கங்களை கற்றுக்கொடுக்கும் கயவன்.இந்த நாவல் நான் +1 படிக்கும் போது பாடப்பகுதியாக இருந்தது.இப்போது இருக்கிறதா தெரியவில்லை.


என்ன?உண்மையிலே இவையெல்லாம் வெயிட்டான பாத்திரங்களா? இன்னும் சில இந்திய பாத்திரங்களையும்(கதா,கதா) சேர்த்து இன்னுமோர் பதிவில் சொல்கிறேன்.


நட்புடன்.
ம.கோகுல்

21 comments:

சுதா SJ said... Reply to comment

அட நான் ரசித்த கதாபாத்திரங்களின் தொகுப்பு.... ரெம்ப நல்லா இருக்கு பாஸ்

சுதா SJ said... Reply to comment

டார்ஜான்(Tarzan)

எனக்கு இவரைத்தான் ரெம்ப புடிக்கும் :)

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

இவைகள் காலத்தால் அழியாத கதாப்பாத்திரங்கள்...

சக்தி கல்வி மையம் said... Reply to comment

எனக்கு ரொம்ப பிடித்தது ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் தான்..

அசத்தல் பதிவு..

SURYAJEEVA said... Reply to comment

asterix & obelix

spartacus

my favourite character comrade

Anonymous said... Reply to comment

எல்லாம் என் மகளுக்கு பிடித்தாய் பட்டியல்....அடுத்த பதிவிலாவது நமக்கு பிடித்த ஏதாவது இருக்கான்னு பார்ப்போம் கோகுல்..

ரைட்டர் நட்சத்திரா said... Reply to comment

எனக்கு இதில் நான்கு பாத்திரங்கள் . மற்ற பாத்திரங்களும் நன்று . interesting article

M.R said... Reply to comment

எனக்கு இதில் மூன்று கேரக்டர் பிடிக்கும்

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

ரைட்டு... நினைத்து பார்க்க வேண்டிய பத்திரங்கள்... கதாபாத்திரங்கள்.


நம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

அருமையான தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Unknown said... Reply to comment

ஹாரி பாட்டர் தாங்க நமக்கு
தெரியும். அதுவும் என் பேரனாலே!


புலவர் சா இராமாநுசம்

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

சின்ன வயசில் டார்ஜான் கதையை படிப்பதற்கு ரெண்டு மைல் நடந்து செல்வதுன்னு பதிப்பகத்துக்கு, சின்ன வயசை நியாபக படுத்திட்டீங்க...!!!

Philosophy Prabhakaran said... Reply to comment

அம்புட்டு படிப்பாளியா யா நீயி... எனக்கு இதுல டார்ஜான் தவிர வேற யாரையும் தெரியாது...

சசிகுமார் said... Reply to comment

சின்ட்ட்றேல்லா... படிச்சு இருக்கேன்...

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

அடேங்கப்பா, பெரிய ஆள்தான்யா நீர்

ராஜா MVS said... Reply to comment

தங்களின் தகுப்பு அருமை... நண்பா...

சம்பத்குமார் said... Reply to comment

அருமையான தொகுப்பு நண்பரே..

ஹாரி பாட்டர் எத்தனை பாகம் வந்தாலும் மற(று)க்க முடியாத கதாபாத்திரம்தான்

சென்னை பித்தன் said... Reply to comment

"to be or not to be" :
"the quality of mercy is not strained”
இவற்றை மறக்க முடியுமா?

Unknown said... Reply to comment

இன்றைக்கும் இருக்கிறார்கள் பல சொம்பு(சோப்பு)வெல்லர்கள் பல அலுவலகங்களில்./////////

நல்ல தகவல்...

உங்களுக்கு ஞாபக சக்தி ஜாஸ்திங்க

Unknown said... Reply to comment

தெரிந்த கதாபாத்திரங்கள் தெரியாத பல செய்திகள் அருமையாக தொகுத்திருக்கீங்க...
ஏன் நம்ம பீர்பால்,தெனாலிராமன் பிடிக்காதா?

நிரூபன் said... Reply to comment

நல்ல தொகுப்பு பொஸ், எனக்கு நீங்கள் தொகுத்த பத்தில் ஜேம்ஸ் பொண்ட், ஹரிபொட்டர், டின் டின், சிண்ட்ரெல்லா ஆகிய பாத்திரங்கள் மாத்திரம் தான் அறிமுகம்.

மற்றையவை பற்றி இதுவரை அறிந்ததில்லை.

உங்கள் பதிவு விளக்கத்தின் மூலம் ஏனைய அறியாத கதா பாத்திரங்களைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.
நன்றி பாஸ்.