விலையேத்தறதுன்னு முடிவு பண்ணியாச்சு.ஆக்கப்பொறுத்து ஆறப்பொறுக்க
முடியாதது போல அறிவிச்ச உடனே எதுக்கு அமுல் படுத்தணும்?ஒரு வாரம்
அட ஒரு ரெண்டு நாளாவது இடைவெளி விட்டு இருக்கலாமில்ல?இந்த
கேப்புல நஷ்டத்துல இயங்குற நிறுவனங்கள் தலை தூக்கிடுமா?
பெட்ரோல் விலையெல்லாம் சொல்லிட்டு அன்னைக்கு நள்ளிரவே ஏத்திடறாங்களே?ஆமாங்க.பெட்ரோல் போடப்போகும் போது விலை ஏறி இருந்தா சரி ஒரு பத்து ரூபாய்க்கு கம்மியா போட்டுக்கலாம்.பஸ் பஸ் கட்டணத்தை ஒரே நாள்ல ஏத்திட்டா சாமி பட திரிசா மாதிரி கரெக்டா காசு எடுத்துட்டு வர்றவங்க நிலைமை?அவருக்காவது விக்ரம் ஆட்டோ பிடிச்சு அனுப்பினாரு நாம ஒரு பத்து கிலோமீட்டர் முன்னாடியே எறக்கி விட்டுடுப்பான்னு சொல்ல முடியுமா?கண்டக்டர் பாடு கொஞ்ச நாளைக்கு சொல்லி மாளாதுங்க.
எத்தனை பேரு டெய்லி நாட்டுல என்ன நடக்குதுன்னு முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிஞ்சுக்குறாங்க?நாட்டு நடப்பு ஏதும்தெரியாம தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்குற மக்கள் இந்த ஊருக்கு இவ்வளவுதான் டிக்கேட்டுன்னு நினைச்சுக்கிட்டு காசு எடுத்துட்டு போவாங்களே?என்ன பண்ணுவாங்க?செய்திகளை பாக்காம பால் வாங்கப்போய் எத்தனை பேர் திரும்பி வந்தார்களோ?
உங்களை விட்டா வேற எனக்கு வேற யாரு இருக்கா? எங்கே நான் போய் இருக்கற கஷ்டத்த எல்லாம் எறக்கி வைப்பேன்னு சொன்னிங்க சரி.வடிவேல் ஒரு படத்துல சொல்லுற மாதிரி சித்தெரும்பு சொரண்டற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா எறக்கி வைக்கலாமே?இப்படி யானை நெஞ்சுல மிதிச்ச மாதிரி ஒரேடியா தூக்கி அடிச்சுட்டிங்களே?
மின் கட்டண உயர்வுக்கு பரிந்துரை செய்தது பத்தி யாருக்கும் கவலை இல்லை.பாதி நேரம் இல்லாத ஒன்னுக்கு விலை ஏத்தினா என்ன,ஏறக்குனா என்ன?
இவங்களுக்கும் நிறைய ஏத்தி கொஞ்சம் இருக்குற விளையாட்ட விளையாட நினைக்குறாங்களோ?
மத்திய&மாநில அரசு-ரெண்டு பேரும் விலையை ஏத்தி இறக்கி விளையாடுவோமா?
மக்கள்-???????????????????????????????
(பாத்து காசு எடுத்துட்டு போங்க)
Tweet | ||||||
32 comments:
//மின் கட்டண உயர்வுக்கு பரிந்துரை செய்தது பத்தி யாருக்கும் கவலை இல்லை.பாதி நேரம் இல்லாத ஒன்னுக்கு விலை ஏத்தினா என்ன,ஏறக்குனா என்ன? //
இல்லாத கரண்டுக்கு விலை ஏற்றம்.தமிழக வரலாற்றில் ஓர் சாதனைன்னு லிம்கா புக்ல வரப்போகுதாம்..
இன்றைய சூழ்நிலையை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்..
இந்த விலையேற்றம் மேல்தட்டு மக்களுக்கும் பாதிப்பில்லை.கீழ்தட்டு மக்களுக்கும் பாதிப்பில்லை.
நடுத்தர மக்களின் பாடு படு திண்டாட்டம் தான்.
ஏற்கனவே டிராவல்ஸ் காரங்க பொங்கல்னா வெடி வெடிப்பாங்க..அவங்களுக்கு இது தீபாவளி மாதிரி சும்மாவா இருக்கப் போராங்க..
தேவையான நேரத்தில் அவசியமான பதிவு..
//இப்படி யானை நெஞ்சுல மிதிச்ச மாதிரி ஒரேடியா தூக்கி அடிச்சுட்டிங்களே? //
மாதிரி அப்படின்னு சொல்ல கூடாது... அவங்களுக்கு கோபம் வரும்...
:-)
அசத்தலான பதிவு.
nandu veliye varum
சனி?!வணக்கம்!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!
திண்டாட்டம் தான்...
அம்மாவின் அதிரடி எப்போதும் அமைதிகாக்காது...
இரவோடு இரவாக அமுல் படுத்திவிட்டால் மக்களுக்கு தெரியாது பாருங்கள் அதற்க்காக...
இன்னும் மின்சாரம், மத்திய அரசின் ரயில் கடடணம் உயர்வு வந்துவிட்டால் மக்களின் பாடு..
நான் என்னத்த சொல்ல...
த மாமி ஸாரி மம்மி ரிட்டர்ன்ஸ்....!!!
அம்மா'வின் சாயம் சூப்பரா வெளுத்தாச்சு, கலைஞர் ரூம் போட்டு சிரிப்பதா தகவல் வந்துட்டு இருக்கு ஹி ஹி...!!!
இந்த விலைவாசி ஏற்றம் பற்றி எத்தனைபேரு எத்தனை பதிவு போட்டாலும் யாரும் கண்டுக்கபோவதில்லை அதுதான் நிஜம்
ஒரே இரவில் மனிதனை தவிர எல்லா பொருட்களும் பணக்கார பொருட்களாக மாறி விட்டன. என்ன செய்ய?
நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?
நிறைய ஏத்தி கொஞ்சம் இருக்குற விளையாட்ட விளையாட நினைக்குறாங்களோ?
மத்திய&மாநில அரசு-ரெண்டு பேரும் விலையை ஏத்தி இறக்கி விளையாடுவோமா?
மக்கள்-???????????????????????????????!!!!!!!!
இப்ப ஏத்தினா அடுத்த எலக்சன் வருவதற்கிடையில் ஏத்தினதை ஜனங்க மறந்திடுவாங்கதானே
அடப்பாவிகளா இந்த ஏத்து ஏத்தியிருகான்களே
கோகுல்,
கைய குடுங்க மேன்!
இலவசமா ஆடு, மாடு குடுடக்கறாய்ங்களே. அதுக்கு பதிலா வீட்டுக்கு ரெண்டு கழுதைய குடுத்தா கொஞ்சம் உதவியா இருக்காது...!
( துருப்பிடிச்ச சைக்கிள் எல்லாம் இப்ப வெளியில் வருது ஓய். நல்ல விசயந்தானே!)
மிகவும் சிறப்பான வினாக்கள் பாராட்டுகள் நல்ல சமயத்திளன இடுகை பாராட்டுகள்
சார் இப்படி சொன்னா கூட அம்மா????!!! உங்களை கைது பண்ணி பொடாவில் போட்ட்ருவாங்க ..
நாசமா போச்சு... அந்த கழுதை சரி இல்லைன்னு இந்த குதிரையில ஏறினா இதுக்கு கடிவாலமே இல்லாம கன்னாபின்னு னு கண்டமேனிக்கு போகுது...
அலுவலகத்தில் சாதாரண வேலை செய்வோர் சொல்வதை கேட்டால் பரிதாபமா இருக்கு. விலை வாசி அவர்கள் கழுத்தை நெரிக்கிறது
யானையில்லை கோகுல் டைனேசர்...
இந்த அநியாயத்த தட்டி கேட்க யாருமே இல்லையா?
மத்திய&மாநில அரசு-ரெண்டு பேரும் விலையை ஏத்தி இறக்கி விளையாடுவோமா?
மக்கள்-???????????????????????????????
என்ன விளையாட்டு .இல்ல என்ன விளையாட்டெண்டுகேக்குறோமில்ல?..
விளையாடுறதுக்கு வேற விளையாட்டுக் கிடைக்கல்ல !..சின்னப் புள்ளையள் மாதிரி பூஸ் இந்த எலிகள ஓட ஓட விரட்டுங்கப்பா ......ஹா ..ஹா ,,ஹா .....
அருமையா தாக்கி இருக்கீங்க சகோ பாராட்டுகள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
இவர்களின் விளையாட்டில் மக்கள் விளையாட்டுப் பொருளானதுதான் கொடுமையிலும் கொடுமை நண்பா..
சிந்தனைக்குரிய பதிவு.
அருமை..
என் மனதிலும் இதே கேள்வி தான் நண்பரே
Nalla kelvi.
TM 8.
அனைவரது மன எண்ணங்களையும்
மிகச் சரியாக பிரதிபலித்துப் போகிறது
தங்கள் பதிவு
பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
மிகவும் அவசரப் படறிங்க கோகுல்
இன்னும் எவ்வளவோ இருக்கே!
என் வலைப் பக்கம் வரவில்லையே!
புலவர் சா இராமாநுசம்
சரிதான்
அவங்க விளையாட்டில சிக்கிறது மக்கள்தான்
ஆல்ரெடி பிளான் பண்ணிட்டாங்க போல..
இப்படி யானை நெஞ்சுல மிதிச்ச மாதிரி ஒரேடியா தூக்கி அடிச்சுட்டிங்களே?//
இதுல யார் யானைன்னு புரியும்படி சொல்லுங்க...
நொந்து கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும் நண்பா...
Post a Comment