Sunday, November 6, 2011

எல்லா கலர் மாக்கான்(ர்)களுக்கும் ஒரு வேண்டுகோள்!




இந்த உலகத்துல எத்தனையோ கலர் இருக்குங்க ஆனா ஆனா மஞ்ச கலருக்கும் மாக்கானுக்கும் என்னங்க சம்பந்தம்?ஆமாங்க எல்லாரும் மஞ்ச மக்கான்னு தான சொல்றாங்க.அது ஏன்னு யாருக்காவது தெரியுமா?சரி அந்த ஆராய்ச்சியெல்லாம் விட்டுடுவோம் விசயத்துக்கு வருவோம்.இப்படி ஒரு மாக்கனால் எனக்கு ஏற்பட்ட அனுபவம்,

இன்னைக்கு நானும் எங்கப்பாவும் வண்டியில போய்க்கிட்டு இருந்தோம்.(ஆமாங்க உங்க மைன்ட் வாய்ஸ்ல ஓடுறது கரக்ட் தான் இது ஒரு சாலை விழிப்புணர்வுப்பதிவுதான்).மழையில் பயணமா கவனம் தேவை அப்படின்னு சொல்லிட்டு நாமளே பின்பற்றலேன்னா எப்படி?ன்னு நினைச்சுக்கிட்டு,கூட அப்பாவும் வந்ததால மிதமான வேகத்தை விட கொஞ்சம் கம்மியான வேகத்தில போய்க்கிட்டு இருந்தேன்.

(இது நான் இல்லைங்க)

அப்ப அப்ப ரோட்டோரமா ஒரு மஞ்சமாக்கான் இல்ல இல்ல சிவப்பு மாக்கான் சிவப்பு சட்டை போட்டிருந்தாரு (சிவப்பு மாக்கார்- வயசு அதிகம்) நின்னுக்கிட்டு போன் பேசிட்டு இருந்தாரு.நல்ல விசயம் தான  
போய்க்கிட்டே பேசாம ஓரமா நின்னு பேசுராறேன்னு நான் கூட ஒரு நொடி மனசுக்குள்ளே பாராட்டுனேன்.அப்பறம் ஏன் மாக்கார் சொல்றேன்னா போன பாக்கெட்ல போட்டுக்கிட்டு அப்படியே அந்த மாக்கார் பின்னால திரும்பிப்பாக்காம சிக்னல் எதுவும் போடாம அப்படியே யூ டர்ன் அடிச்சார்.
எனக்கு பகீர்ன்னுச்சு,எங்கப்பா டோய் டோய்ங்குறார்.அந்த நொடி ரைட்டு,எத்தனைப்பல்லுவிழப்போகுதோ?மண்ணைக்கவ்விட்டோம்னு என்னென்னவோ கற்பனை ஓடிடுச்சு.சிரமப்பட்டு ஒதுக்கி ஓட்டியதில் மயிரிழையில் தப்பிசோம்னு சொல்வாங்கல்ல அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அனுபவிச்சேன்.
                                                      (இதுதாங்க narrow escape -பாருங்க)
  
அந்த மாக்கார் வண்டியில ஒரு சின்ன பையன் வேற இருந்தான்.வண்டியை நிறுத்தி ஏங்க பாத்து ஓட்டக்கூடாதான்னு வழக்கமான கேள்விய கேட்டேன்.அவரும் வழக்கமான இல்லைங்க ஏதோ ஒரு சிந்தனையில் திரும்பிட்டேன் ங்கற பதிலை சொன்னார்.உங்க சிந்தனையில் ஊர்ர்ல இருக்குறவங்கள உலையில போட்டுராதிங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.இது மாதிரி ஆட்களை மாக்கான்னு சொல்றது தப்பா?


அந்த படப்பிடிப்பு,ச்சே படபடப்பு நிக்க ரொம்ப நேரம் ஆச்சு. இதனால் சகல மாக்கார்(ன்)களுக்கும் சொல்வது என்னான்னா வண்டி ஓட்டும் போது எந்த சிந்தனைய சிதற விடாம,கவனத்த சாலையில மட்டும் வைச்சி ஓட்டுங்க.எதிர் முனையில தெரிஞ்சவங்க வர்றாங்கன்னு டபக்குன்னு திரும்பறது,திடீர்ர்னு பிரேக் போடுறது,சிக்னல் செய்யாம திரும்பறது இப்படியெல்லாம் பண்ணாதிங்க .இது தான் இந்த சக மாக்கானின் வேண்டுகோள்.


விபத்து ஏற்பட எவ்வளவோ வழிகள் இருந்தாலும் கவனக்குறைவு,சிந்தனைசிதறல்களைக் குறைச்சுகிட்டோம்னா விபத்துக்கான வாய்ப்புகள் கொஞ்சமாவது குறையும்.நாம நம்மள நம்பி மட்டும் பயணிப்பதில்லை.சாலையில் வாகனமோட்டும் எல்லோரை நம்பியும் தான்.


46 comments:

Angel said... Reply to comment

நாம நம்மள நம்பி மட்டும் பயணிப்பதில்லை.சாலையில் வாகனமோட்டும் எல்லோரை நம்பியும் தான்.//

சத்தியமான உண்மை .



.//இது மாதிரி ஆட்களை மாக்கான்னு சொல்றது தப்பா//தவறே இல்லை இல்லை இல்லை

செங்கோவி said... Reply to comment

நல்ல பதிவு கோகுல்..ரோட்டுல தான் மட்டுமே போறதாத் தான் பலருக்கும் நினைப்பு!

செங்கோவி said... Reply to comment

//இந்த சக மக்கானின் வேண்டுகோள்.//

இது மக்கானா..மாக்கானா?

கோகுல் said... Reply to comment

@செங்கோவிமாக்கான் தான் திருத்தி விட்டேன் நன்றி!

செங்கோவி said... Reply to comment

கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டேவா வண்டி ஓட்டுனீங்க?

கோகுல் said... Reply to comment

@செங்கோவி
இல்லை ,ஹெல்மெட் தான்!உசாரய்யா உசாரு.கூலிங் கிளாஸ் போட்டோக்கு போஸ் குடுக்கும் போது மட்டும் கடன் வாங்கி போட்டுக்கறது

செங்கோவி said... Reply to comment

//கோகுல் said...
@செங்கோவி
இல்லை ,ஹெல்மெட் தான்!உசாரய்யா உசாரு.கூலிங் கிளாஸ் போட்டோக்கு போஸ் குடுக்கும் போது மட்டும் கடன் வாங்கி போட்டுக்கறது//

அப்பத்தான் ஒரு பரிதாப லுக் வரும்னா?

கோகுல் said... Reply to comment

செங்கோவி said...
//கோகுல் said...
@செங்கோவி
இல்லை ,ஹெல்மெட் தான்!உசாரய்யா உசாரு.கூலிங் கிளாஸ் போட்டோக்கு போஸ் குடுக்கும் போது மட்டும் கடன் வாங்கி போட்டுக்கறது//

அப்பத்தான் ஒரு பரிதாப லுக் வரும்னா?
//
சும்மா ஒரு விளம்பரம்...

சுதா SJ said... Reply to comment

கோகுல் உண்மைதான் ரோட்டில் எங்கை உயிர்கள் மாரவர்களில்ன் கையில் இருக்கு அதே போல் அவர்கள் உயிர் எங்கள் கைகளில்.... :(

சுதா SJ said... Reply to comment

அதுவும் இந்தியா டிவி செய்திகளை பார்த்தால் பெரும்பாலம் விவாத்து செய்திகள்தான்... இந்தியா வர நினைத்தாலே உந்த சாலை விபத்துக்கள் பயமுறுத்துது...

சுதா SJ said... Reply to comment

அம்மா சாலைவிமத்து செய்வோருக்கு ஒரு கடுமையான சட்டத்தை கொண்டுவந்தால் புண்ணியமாய் போகும்... குறிப்பாய் உந்த லாரி காரங்களுக்கு...

சுதா SJ said... Reply to comment

யோவ்...... என் type ங் கொடுமை படுத்துது.. இவ்ளோ எழுத்து பிழையா ?? அவ்வவ்
ஹீ ஹீ

சுதா SJ said... Reply to comment

கோகுல் said...
செங்கோவி said...
//கோகுல் said...
@செங்கோவி
இல்லை ,ஹெல்மெட் தான்!உசாரய்யா உசாரு.கூலிங் கிளாஸ் போட்டோக்கு போஸ் குடுக்கும் போது மட்டும் கடன் வாங்கி போட்டுக்கறது/ஹீ hee

ஹீ ஹீ
நல்லா கேட்டாரய்யா கேள்வி...

சுதா SJ said... Reply to comment

ஆமா... பின் சீட்டில் அப்பா இருந்தாரா?? இல்ல அவங்க இருந்தாங்களா?? LOL

சீனுவாசன்.கு said... Reply to comment

நல்லா ஓட்றிங்க!நான் பைக்க சொன்னேன்!

அம்பலத்தார் said... Reply to comment

ஆமா இந்தியா, இலங்கை செல்லும் ஒவ்வொருதடவையும் பீதியைக் கிளப்புகிறவிடயம் இந்த சாலைவிபத்துக்கள்தான். இந்தப்பதிவை படித்து ஒருசிலபேராவது திருந்தட்டும்.

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

இது மாதிரி ஆட்களை மாக்கான்னு சொல்றது தப்பா?

எல்லா கலர் மாக்கான்(ர்)களுக்கும் ஒரு வேண்டுகோள்!"

அருமையான அனுபவப் பகிர்வு.

வெளங்காதவன்™ said... Reply to comment

:)

விச்சு said... Reply to comment

தினமும் நியூஸ்பேப்பரில் சாலை விபத்துக்கள் செய்திகள் அதிகம். நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.நன்றி.

சத்ரியன் said... Reply to comment

எவ்வளவு விழிப்புணர்வு விழிப்புணர்வு -ன்னு கூவினாலும், கண்டுக்கவே மாட்டேன்றாங்க கோகுல்!

நேத்தும் கூட பாருங்க ஈரோட்டுல நடந்த ஒரு விபத்தைப் பற்றி சிங்கப்பூர் தொலைகாட்சி வசந்தம் சென்ட்ரல்- இல் “உலகச் செய்தி”யில காட்டுனாங்க.

“எங்கேயும், எப்போதும்” படம் வெளியான வாசம் கூட தியேட்டர்கள விட்டுப் போகல! அதுக்குள்ள எத்தன உயிர்கள சாலை விபத்துக்களால் பலி குடுத்திருக்கோம்!

சக்தி கல்வி மையம் said... Reply to comment

அவர்களால் சாலைகளில் போகும் மற்றவர்களுக்கும் தொல்லையே..
பகிர்வுக்கு நன்றி..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

சாலையில் இதுப்போன்றோர் நிறையபேர் இருக்கிறார்கள்..

இவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை...


சாலையில் உயிரோடு விளையாடு இவர்கள் கண்டிக்க தண்டிக்கத்தக்கவர்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

நம்ம கடையிலும் இது சம்மந்தமாகத்தான் பதிவு...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

தமிழ் மணம் 7

ராஜா MVS said... Reply to comment

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி... நண்பா...

Unknown said... Reply to comment

கோகுல்,
நல்ல பதிவு..
கலைஞரை மனசுல எதுவும் வச்சு எழுதினீர்களா?
மஞ்ச,,,,

சும்மா...........

dr.tj vadivukkarasi said... Reply to comment

எறும்புகளும்,சில வகை பூச்சிகளும் ஒரு விதமான பொது-அறிவில்(collective consciousness) இயங்குவதாக கூறுவர். நமக்கு பொது-புத்தியில் இயங்க தான் தெரிகிறது. சினிமா பார்ப்பது முதல் ஒட்டு போடுவது வரை.. பொது-அறிவு என்பது இன்னும் நுணுக்கமான செயல்பாடு. நீங்கள் சொல்வது மாதிரி செல் போனை மட்டுமல்ல, கொஞ்சம் மைண்டு வாய்சையும் கண்ட்ரோல் பண்ண வேண்டி இருக்கிறது.

K.s.s.Rajh said... Reply to comment

////விபத்து ஏற்பட எவ்வளவோ வழிகள் இருந்தாலும் கவனக்குறைவு,சிந்தனைசிதறல்களைக் குறைச்சுகிட்டோம்னா விபத்துக்கான வாய்ப்புகள் கொஞ்சமாவது குறையும்.நாம நம்மள நம்பி மட்டும் பயணிப்பதில்லை.சாலையில் வாகனமோட்டும் எல்லோரை நம்பியும் தான்.
/////

சரியாகச்சொன்னீர்கள் சாரதிகள் கவனிக்கவேண்டிய விடயம்

SURYAJEEVA said... Reply to comment

என் அனுபவம் கொடுமை, டயர்ல காத்து இருக்கான்னு பாக்க ஓரம் கட்டினேன்னு சொன்னார்... நாடு ரோட்டில் இருந்து ஓரமா வர, ஓரமா வந்த நாங்க லைட் போஸ்ட்ல முட்டி கீழே விழுந்தோம்... நாங்க அப்ப சின்ன பசங்க... அதனால பம்மிகிட்டே வந்துட்டோம்..

Anonymous said... Reply to comment

உண்மை தான் நண்பா.. கவனக்குறைவுனால தான் பெரும்பாலும் விபத்து நடக்க காரணம்... அதே போல் பெரும்பாலும் தண்ணியடித்து ஓட்டுபவரும் பெருகிவிட்டனர்... இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் முறையாக பயணம் செய்வோருக்கும் சேர்த்தல்லவா ஆபத்தை கொடுக்கின்றனர்...மாக்கர்கள்.. இனியாவது யோசிக்கட்டும்... நல்ல விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பரே!

மகேந்திரன் said... Reply to comment

என்ன சொன்னாலும் திருந்தமாட்டார்கள்...
பாருங்க சின்ன குழந்தை கையில பைக்கை ஓட்ட கொடுக்கிறதை..
அதை பெருமையா வேற சொல்வாங்க....
சாலையில் பயணிக்கையில் நாம் சென்று சேரும் இடம்
பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேண்டும்...
இலக்கு விட்டு வேறு இடம் செல்லாக்கூடாது....

அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே.....

ஓசூர் ராஜன் said... Reply to comment

மாக்கார் ரொம்பவே யோசிக்க வச்சுட்டார் போல!

Unknown said... Reply to comment

கோகுல் என்ன ரொம்ப நொந்துட்டிங்களா?

(இது நான் இல்லைங்க)

நீங்க இல்லையினு எங்களுக்கு தெரியும் ஏன்னா இன்னிக்கு பதிவு போட்டிருக்கிங்களே

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

ஆஹா மிகவும் பயனுள்ள சிறப்பு பதிவு, அடுத்த வண்டியில் பயணம் வருபவர்களுக்கும் நாம்தான் உயிருக்கு உத்தரவாதி என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்...!!!

நிரூபன் said... Reply to comment

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?

இறைவன் அருளால் தெய்வாதீனமாக உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
வீதியில் போகும் போது ஒரு நிமிடத்தில் கவனத்தை தவற விடுவோரால் பிறருக்கும் உபாதைகள் என்பதனை உணராமல் இருக்கிறார்களே..

என்ன மனிதர்கள் இவர்கள்?

கும்மாச்சி said... Reply to comment

கரெக்ட் பாஸ், நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக ஓட்டினாலும், நம்ம உயிர் மாத்த மாக்கான்கள் கிட்டதான் இருக்கு.

rajamelaiyur said... Reply to comment

நல்ல விழிப்புணர்வு பதிவு

குறையொன்றுமில்லை. said... Reply to comment

நல்ல விழிப்புணர்வு பதிவு

M.R said... Reply to comment

உண்மை தான் நண்பரே ,வாகனம் ஓட்டும் பொழுது நம் உசிரு நம் கையில் மட்டுமில்லை மற்றவர் கையிலும் உள்ளது

Anonymous said... Reply to comment

நாம நம்மள நம்பி மட்டும் பயணிப்பதில்லை.சாலையில் வாகனமோட்டும் எல்லோரை நம்பியும் தான்//

சரியா சொன்னீங்க கோகுல்...

சென்னை பித்தன் said... Reply to comment

மாக்கானேதான்.
எனவேதான் சொல்கிறார்கள்”be a defensive driver" என்று.

Unknown said... Reply to comment

உங்களுக்கு பரவாயில்லை அந்த ஆள் உண்மையை சொல்லி ஒத்துகிட்டான். ஆனா சில மட மாக்கானுங்க தப்பை செய்துட்டு வியாக்கியாணம் பேசுவானுங்க பாருங்க கையிலே ஒரு துப்பாக்கி இருந்தா இவனுங்களை எல்லாம் சுட்டு தள்ளிடலாமான்னு தோணும். அதுவும் வண்டியிலே போகும் போதே எச்சில் துப்புற மாக்கானுங்களைப் பற்றி என்ன சொல்றது?

Thooral said... Reply to comment

முதலில் தாங்கள்
எனது வலைபதிவில் இணைந்ததற்கு மிக்க நன்றி நண்பரே ..

//"எல்லா கலர் மாக்கான்(ர்)களுக்கும் ஒரு வேண்டுகோள்!"//
அருமையான பகிர்வு நண்பரே ..
விபத்து
எங்கேயும் எப்போதும்
வரலாம் என்பதை புரிந்து நாம் விழிப்புடன் எப்போதும் இருக்க வேண்டும்

shanmugavel said... Reply to comment

தொடர்ந்து சமூக நோக்குள்ள பதிவுகளை தருவதற்கு நன்றி.நல்ல பதிவு.

ப.கந்தசாமி said... Reply to comment

//இது மாதிரி ஆட்களை மாக்கான்னு சொல்றது தப்பா?//

எத்தன நாளைக்குத்தான் மாக்கான்னு சொல்லீட்டே இருக்கிறது. எல்லா மாக்கான்களும் அது ஏதோ அவங்களைப் புகழ்கிறார்களாக்கும்னு நெனச்சிட்டு இருப்பாங்க போல. நல்லா சுரீர்னு குத்தற மாதிரி வேற எதாச்சும் வார்த்தையை கண்டுபிடிங்க மாக்கா இல்ல இல்ல மக்கா!

cheena (சீனா) said... Reply to comment

விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொடர்ச்சியில் இதுவும் நல்ல கட்டுரை. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடப்ன் சீனா