Tuesday, March 5, 2013

ஜஸ்ட் மிஸ்ஸா?-அலட்சியம் வேண்டாமே


உன் வாழ்க்கை உன் கையில்,இது பாட்ஷா படத்தில் ரஜினி ஓட்டும் ஆட்டோவில் எழுதியிருந்த தத்துவம்,பன்ச் டையலாக் அட ஏதோ ஒண்ணு. விடுங்க விஷயம் என்னன்னா மார்ச் 4 தேசிய பாதுகாப்பு தினம்.நம்ம ஊர்ல தான் காதலர் தினத்தன்னைக்கு மட்டும் காதலை பத்தியும்,மகளிர் தினத்தில் மட்டும் மகளிர் குறித்தும் இன்ன பிற தினங்களில் அந்தந்தவற்றைப்பற்றியும் சிந்திப்பது,எழுதுவது,பொங்குவது ஏனைய பிற உணர்வுகளை காட்டுவதும் வேடிக்கையான வாடிக்கையாகிவிட்டது.ஒரு விதத்தில் யோசித்தால் இது போல அவற்றை(களை)யெல்லாம் அந்தந்த தினங்களிலாவது உணர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியே.


என்ன?சரி,சரி சொல்ல வந்த மேட்டரை சொல்டு இடத்த காலி பண்ணவா?ஓகே விஷயம் மேட்டர் இதாங்க,ரஜினி பட டையலாக் மாதிரி பல சமயம் அவங்கவங்க வாழ்க்கை அவங்க கைல தாங்க இருக்கு.அதென்ன பல சமயம் அப்படின்னு ட்விஸ்ட் வைச்சு சொல்றேன்னு கேட்பவர்களுக்கு,சில சமயம் நமது பாதுகாப்பை பிறர் நிர்ணயிக்கிறார்கள்.உ.தா- டிரைவர்கள்.



நமது பாதுகாப்பு நம்மை மட்டுமல்ல,நம்மை,சார்ந்தவர்கள் சுற்றியுள்ளவர்கள்,சுற்றுப்புறம் எல்லாவற்றிக்கும் நலம் பயக்கும் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.நாம தெரியாம இல்ல அலட்சியமாக செய்யும் ஒரு விஷயம் ஒண்ணு நம்மள பாதிக்கும் இல்லன்னா கண்டிப்பா யாராவது ஒருவர் அல்லது பொருள் பாதிப்புக்குள்ளாவது நிச்சயமே.
ஜஸ்ட் மிஸ்.இந்த வார்த்தையை அலட்சியப்படுதாதீர்கள்.ஒவ்வொரு முறையும் ஜஸ்ட் மிஸ் ஆகாது.விபத்து நடக்க வாய்ப்பிருந்து விபத்தில் சிக்காமல் தப்பித்தால் அது போன்ற வாய்ப்பு மீண்டும் நிகழாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ.அதை உடனே செய்வோம்.ஐந்தில் வளையாதது .........அதே தாங்க.அப்ப பெரியவங்க சொல்றது ஒண்ணு நாம செய்றது ஒண்ணா இருந்ததால இப்பவும் அப்படியே தொடருது பழக்கம்.


ஒரு வேலை செய்ய தொடங்குமுன் அதைப்பற்றி ஓரிரு கணம் யோசித்துவிட்டு நம்மால் செய்ய முடியுமா என முடிவெடுத்து பின் செய்யலாம்.தெரியாத வேலை(சரி வர கற்றுக்கொள்ளாமல்) செய்வதை நிறுத்தினாலே போதுமே.சிலசமயம் மனக்கட்டுப்பாடும் அவசியமாகிறது.எந்த பணி செய்வதாக இருப்பினும் வீட்ல கோவமா கிளம்பியோ,அலுவலகத்தை விட்டு எரிச்சலுடன் கிளம்பும்போதோ ,ஓரிரு வினாடிகள் வண்டி எடுக்குமுன் நிதானித்து அந்த உணர்வுகள் இல்லாமல் பயணத்தை தொடரலாம்.

                         

ஒவ்வொரு வேலைக்கும் அதை செய்வதற்கான சரியான பொருள்(tools) இருக்கிறது,அதே மாதிரி நிச்சயமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பணிகளுக்கு பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்துவது அவசியம்.ரொம்ப சொல்லிட்டே போற மாதிரி இருக்கு,இப்பத்தான் யோசிக்கிறேன் உண்மையிலே நம்ம முன்னோர்கள் அதிபுத்திசாலிகள்,எப்பர்ப்பட்ட விசயத்தையும் சில வரிகளில்,சில வார்த்தைகளில் சொல்லிவிடுவது வியப்பிலும் வியப்பு.இங்கே எனக்கு நினைவுக்கு வந்தது வருமுன் காப்போம்.


நாளை இருப்பது நமக்காகத்தான்,பாதுகாப்போடு வரவேற்போம்.

நட்புடன்,
ம.கோகுல்.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

சான்றோர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்... நாம் புரிந்து கொள்வதில் தான் பிரச்சனையே...

Unknown said... Reply to comment

அலட்சியம் பாஸ் நம்ம ஆளுங்களுக்கு

Philosophy Prabhakaran said... Reply to comment

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்... அப்படித்தானே கோகுல்...

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

நம்மாளுங்களுக்கு வந்தபிறகு குய்யோ முய்யோன்னு கத்துறதே வேலையாப்போச்சு போங்க, அருமையான பதிவு வாழ்த்துக்கள்...!

சீனு said... Reply to comment

அவசியமான சிந்தனைகள் கோகுல்

கோகுல் said... Reply to comment

@திண்டுக்கல் தனபாலன்
ஏதாவது ஆனதுக்கப்பறம் புரிஞ்சும் நோ யூஸ் சார்

கோகுல் said... Reply to comment

@சக்கர கட்டி

நீங்களும் நம்ம ஆளுங்க லிஸ்ட்ல இருக்காதீங்க

கோகுல் said... Reply to comment

@Philosophy Prabhakaran

இது பிளானிங்

கோகுல் said... Reply to comment

@MANO நாஞ்சில் மனோ
நன்றி அண்ணாச்சி

பி.அமல்ராஜ் said... Reply to comment

நல்ல சிந்தனை.... அவசியமானவை..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Reply to comment

ஜஸ்ட் மிஸ் ஒரு தப்பித்தல் உத்தி அதுவும் சில நேரங்களில் நன்மை தரும்

கவியாழி said... Reply to comment

அலட்சியமும் ஆபத்துதான்