நம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிருக்க செந்தில் வருகிறார்.,
செந்தில்- வாங்கண்ணே!எங்கண்ணே ரொம்ப நாளா காணோம் எங்கண்ணே போனீங்க?
கவுண்டர்- அது வந்துடா சப்போட்டா தலையா ஜனாதிபதி தேர்தல் வரப்போகுதில்ல அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ண டெல்லி போயிருந்தேன்,விசயத்த சொல்லுடா வெளக்கெண்ண .,
செந்தில்-டெல்லிக்கு போனிங்களே நாட்டு நடப்பெல்லாம் எப்புடிண்ணே இருக்கு?
கவுண்டர்-ஏண்டா போண்டா வாயா டெல்லி மட்டும் தான் நாடா?ஏன் நாம இருக்கற தமிழ்நாடு எல்லாம் நாடு இல்லையா?டெல்லிக்கு போனாதான் நாட்டு நடப்பு தெரியுமா? டீக்கடைல உக்காந்து தினத்தந்தி படிச்சாலே நாட்டு நடப்ப தெரிஞ்சுக்கலாம்டா.,என்னைக்குத்தான் திருந்தப்போறிங்களோ so sad.,so sad.
செந்தில் – என்னண்ணே சோ சோகமா இருக்காரா?எதுக்குண்ணே?
கவுண்டர் – அடங்கோ,டே,ஆன்ட்ராய்டு மண்டையா இதுக்குத்தான் நான் இங்கிலீஷ் பேசுறது இல்ல.
செந்தில் – சரி விடுங்கண்ணே,பத்தாவது பெயில் ஆனா இப்படித்தான் பேசத்தோணும், ஏதாவது படம் பாத்தீங்கலான்னே,
கவுண்டர் – ஆமாடா மைக்ரோமாக்ஸ் வாயா,இப்பல்லாம் எவனும் பாக்குற மாதிரி படம் எடுக்குறதில்ல,படம் பாத்தாலே நமக்கு டங்ஷன் ஆகிடுது,அதுக்காகவே படமே பாக்குறதில்லனு முடிவு பண்ணியிருந்தேன்,சரி போனா போகுதுன்னு நேத்துதான் மூணு படம் பாத்தேன்.
செந்தில் – பெரிய ஆள்ணே நீங்க.,ரொம்ப நாளா படம் பாக்காம இருந்துட்டு ஒரே நாள்ல மூணு படம் பாத்துட்டீங்க,
கவுண்டர் – அடங்கொன்னியா!அடே,அர ட்ரவுசர் பையா,மூணு படம் பாக்கலடா,ஒரு படம் பாத்ததுக்கே டர்ஸ்சாகிட்டேன்,இன்னும் மூணு படம் பாத்தா வடக்குப்பட்டி ராமசாமிக்கிட்ட குடுத்த பணம் மாதிரி ஊஊ ஊ ஊ.....தான்.
செந்தில் – சரிண்ணே மூணு படத்துலயும் யாரு ஹீரோ,யாரு ஹீரோயின்.
கவுண்டர் – அது வந்துடா ,நம்ம சூப்பர் ஸ்டாரோட மருமகப்பிள்ளை ஹீரோ,நம்ம உலக நாயகனோட புதல்விதான் ஈரோயினி,டைரக்டர் யாருன்னு கேட்டே அசந்தே போயிடுவடா தர்பூஸ் தலையா,நம்ம சூப்பர்ஸ்டாரோட மருமகனோட ஓய்பு தான் இந்த படத்தோட டைரக்டரு.
செந்தில் – அதெல்லாம் சரிண்ணே,மத்த ரெண்டு படத்தோட ஈரோ,ஈரோயின் யாருண்ணே?டைரக்டர் யாரு அவங்க வெவரம் பத்தி சொல்லுங்கண்ணே,
கவுண்டர் – என்னடா கேட்டே?
செந்தில் – வெவரம்,வெவரம்.
கவுண்டர் – டேய்,ஐ பாட் மூக்கா, இன்னிக்கு என்கிட்டே செம மாத்து வாங்காம போக மாட்ட போலிருக்கு,அதுக்குள்ளே ஓடிப்போயிடு.டே,சத்தியமா நான் பாத்தது ஓரே ஒரு படம்தாண்டா.
செந்தில் – அட போங்கண்ணே – இப்படித்தான் ஒரு நாலஞ்சு வருசத்துக்கு முன்னால ரெண்டு படம் பாத்துட்டு ஒரு படம் தான் பாத்தேன்னு என்னை ஏமாத்துணனிங்க,இப்போ மூணு படம் பாத்துட்டு ஒரு படம் தான் பாத்தேன்னு எமாத்துறீங்க,போங்கண்ணே
கவுண்டர்- -ஆமா இவரு பெரிய கன்னிப்பொண்ணு,காதலிச்சுட்டு,கர்ப்பமாக்கிட்டு ஏமாத்துறாங்க,போடா டேய்.
செந்தில் – அந்த ரெண்டு படத்துலயும் ஒரு படத்துல மாதவன்- அனுஷ்கா,இன்னொரு படத்துல மாதவன் – ரீமா சென் நடிச்சாங்கன்னு சொன்னீங்க,இந்த மூணு படத்துல யாறாருனு சொல்லுங்கண்ணே,இல்லேன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடும்ணே.
கவுண்டர் – அடேய்,உன்மண்டைய நானே ஓடச்சுடுவேன்,டே சத்தியமா நான் பாத்தது ஒரே ஒரு படம் தாண்டா.
செந்தில் – அட போங்கண்ணே,நான் அந்த பழம்தான் இந்த பழம்னு சொன்னப்போ உங்களுக்கு எவ்வளவு கோவம் வந்துச்சு,எப்படி டென்சன் ஆனீங்க,இப்போ நீங்க அந்தப்படம் தான் இந்தப்படம்னு சொல்றீங்க.
Tweet | ||||||
20 comments:
செந்தில் கவுண்டமணிக்கும் இந்த மூணு படத்தில இவ்வளவு குழப்படியா
சூப்பர் காமெடி
சிரிச்சிகிட்டே இருக்கேன்
நல்ல கற்பனை !
படைப்பாளிக்கு வேண்டிய கற்பனை திறன் .., அருமை சகோ..!
Super.....
:)
:)
:)
ha..ha..ha...
:-)
ஆமா மூனு படம் பார்த்திங்க எட்டு படம் போஸ்ட்ல போட்டிருக்கிங்க...மீதி அஞ்சு படம் இருக்கு அதை பத்தி சொல்லல......டுயிங்...டுயிங்....
நல்ல கிண்டல்
இன்று
கதம்பம் 19-04-2012
நகைச்சுவை..நகைச்சுவை..நகைச்சுவை..
சூப்பர் காமெடி நல்லா சிரிச்சன்.................
சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம் மத்தவங்களை சந்தோசப்படுத்துவது சொல்வாங்க = ஒரே சிரிப்பு போங்க
nice marvelous fantastic really i appreciate u............. sema thought............
செந்தில் –அண்ணே...ஒரே மூணு மூணா தெரியுதுண்ணே...
கவுண்டர் –டே நாடு ஜாமத்தில மூணு தெரியாம சன்னாடா தெரியும் மம்பட்டி தலையா...
நாங்களும் எழுதுவோம்ல...-:)
///ஆமாடா மைக்ரோமாக்ஸ் வாயா,/////
அடடா கவுண்டரும் நல்ல போன் தான் பாவிக்கிறார் போல... ஹ..ஹ...
திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய
நகைச்சுவை மாமன்னர்களை வைத்து
அழகான ரசம் ததும்பும் பதிவு...
நல்ல காமெடி..
நலமா கோகுல்! கற்பனை உரையாடல் அருமை ஒரே சிரிப்புதான்! புலவர் சா இராமாநுசம்
super
ஸ்டார்ட் மியூசிக்.
super comedy ......koundar fansku
treat.....
Post a Comment