இப்போ சொல்லப்போற சில விஷயங்கள்,அந்நியன் படத்துல விக்ரம் (ஷங்கர்,சுஜாதா மூலமா)சொன்னது போல இருக்கும்.நம்ம ஒவ்வொருதருக்குள்ளும் ஒரு அந்நியன் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான்.ஆனா எப்பவும் தூங்கிக்கிட்டே இருப்பான்.அவன அப்பப்ப சோடாவோ,பச்சைத்தண்ணியோ எது கிடைக்குதோ அதை தெளிச்சு எழுப்பலாம்னு ஒரு முயற்சி.ஆனா ஒரு சின்ன மாற்றம் அன்னியன் மாதிரி நினைக்கணும் அம்பி மாதிரி செயல்படனும்.
விசயத்துக்கு வருவோம். பல நேரங்கள்ல சாப்பிட போகும் போதோ,இல்ல மத்த நேரங்கள்ல கை கழுவுற சமயங்கள்ல என்ன பண்றோம்,தண்ணியை தொறந்து விட்டுட்டு கைய நனைச்சிட்டு சோப்பு போட்டு தேய்க்குறவரைக்கும் தண்ணி அது வாக்குல போய்க்கிட்டே இருக்கும்.கையை நனைச்சிட்டு சோப்பு போடுறவரைக்கும் தண்ணியை நிறுத்தலாமே!ஒரு அரை லிட்டர் தண்ணி மிச்சமானாலும்.............
இதே மாதிரி தண்ணி கசிவு இருக்குற பைப் ஏதாவது இருந்தா உடனடியா சரிசெய்வதும் பல லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தும்(யோவ் மெட்ராஸ் மாதிரி ஊருல தண்ணி கிடைக்குறதே கஷ்டமா இருக்கு இதுல நாங்க ஏங்க வீணாக்க போறோம்னு கொஞ்சம் பேரு கேக்குறாங்க போல)
இது ஒரு சின்ன உதாரணம் இதைப்போல பல தருணங்களில்(காய்கறி கழுவுகையில்,பிரஷ் பண்ணும் போது), பல அரை லிட்டர்கள் வீணாவதை தவிர்க்கமுடியும்.முடியுமா?
அப்புறம் மின்சாரம்.இல்லாத விசயத்த பத்தி என்ன பேச்சு அப்படிங்கறீங்களா? அது தெரிஞ்ச விஷயம் தானே.சரி இருக்கறப்போ என்ன பண்ணலாம்.முக்கியமா வீட்டுல ஏதாவது குண்டு பல்ப் இருந்தா அதுக்கு குட்பை சொல்லுவோம்.இது மின்சார சிக்கனத்துக்கு மட்டுமில்ல உலக வெப்பமாதல் குறையவும் நிறைய உதவும்.பிளான் பண்ணி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பயன்படுத்தினாலே இன்னும் கொஞ்சம் மின்சார செலவு கொறையும்.(இன்னும் கொஞ்ச நாள்ல கரண்ட் சார்ஜ் உயர்த்தப்படும் போது ஆட்டோமேட்டிக்கா கொறையும்னு நினைக்கிறேன்)முக்கியமா ஏ.சியை சில்லுன்னு வைச்சு யூஸ் பண்ணாம 27-29 டிகிரி செல்சியஸ்ல பயன்படுத்துறது நல்லது(உடம்புக்கும்).
இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் பெட்ரோலியபொருட்கள், பெட்ரோல்,டீசல்,சமையல் கேஸ் தவிர நாம தினமும் பயன்படுத்துற நிறைய பொருட்கள் பெட்ரோலியத்தோட வழித்தோன்றல்கள் தான்( by products)கிட்டத்தட்ட 5000 க்கும் மேல. http://www.ranken-energy.com/Products%20from%20Petroleum.htm (இந்த லின்க்ல பாத்தா தெரியும்).இந்த எல்லா பொருட்களையும் தேர்ந்தெடுத்து யூஸ் பண்றத குறைப்பது கஷ்டமான விஷயம்,நேரடியா நம்மால முடிஞ்சா அளவு சிக்னல்ல நிக்கும் போது என்ஜின் ஆஃப் பண்றது,தேவையில்லாம வண்டி எடுத்துக்கிட்டு சுத்துறத தவிர்க்கறது,திட்டமிட்ட பயணம்,குழுவா பயணிக்கறது,இது போல செய்யலாம்.இதே மாதிரி சமையல் கியாஸ் பயன்படுத்தும் போதும் திட்டமிட்டு செஞ்சா நிறைய மிச்சப்படுத்தலாம்.கியாஸ் மிச்சப்படுத்த சில டிப்ஸ்(கிளிக்கவும்)
இப்படியெல்லாம் பண்ணா எனக்கு என்ன பயன் அப்படின்னு கேக்குறவங்களுக்கு-இந்த உலகத்தின் கடைசி துளி தண்ணீர் ,கடைசி சொட்டு பெட்ரோல்,கடைசி மணித்துளி மின்சாரம் நீங்க மிச்சப்படுத்தியதா இருக்கும்.அந்த பெருமை உங்களுக்குத்தான்.புது வருஷம் வேற பொறக்கப்போகுது,இந்த வருசத்துல இத செஞ்சு பாக்கலாமா?
Tweet | ||||||
22 comments:
ஓக்கே செஞ்சு பார்த்துடலாமே
நல்லா சொல்லியிருக்கிங்க. யோசிக்க வேண்டிய விஷயம்.. ஹோட்டல் ல கை கழுவும் போது அநேகமா நாம எல்லாரும் அந்த தப்ப பன்றோம். திருந்தனும். மின்சார சிக்கனம் தேவை இக்கணம்.
இப்போ பசங்க பக்கத்துல இருக்கற கடைக்கு போகணும் னா கூட பைக் தான், அதேமாதிரி பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போகும்போது கொஞ்ச தூரம் நடந்து போனா நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
வீட்டுக்கு 4 பேர் இருப்பாங்க 5 கார் இருக்கும். ஒரே இடத்துக்கு போறதுக்கு தனி தனியா போவாங்க. எல்லாரும் ஒரே கார்ல போனா குடும்பதுகுள்ளையும் பேசிட்டே சந்தோசமா போகலாம். இந்த நாட்டையும் கொஞ்சம் மாசுபடுதரதிலிருந்து காப்பாத்தலாம். யோசிப்பாங்களா?
இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..
விழிப்புணர்வு பதிவு.
அருமையா சொன்னீங்க.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க நண்பா
த.ம 2
ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்
ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்
வணக்கம்,கோகுல்!பிறக்கப்போகும் புத்தாண்டு வாழ்த்துக்கள்,முதலில்.அப்புறம் விழிப்புணர்வுப் பகிர்வுக்கு!
பயனுள்ள பதிவு. தொடர வாழ்த்துக்கள்.
ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.
நண்பா.... விழிப்புணர்வு பகிர்வு...
பதிவுக்கு தலைப்பு இல்லையா?
அருமையான ஐடியா செயல்படுத்த போகிறேன் இப்போதிருந்தே, மிக்க நன்றி விழிப்புணர்வுக்கு...!!!
கோகுல்,
நிச்சயம் நமது மிகப் பெரிய பிரச்சனை தண்ணீர்தான்... அதைச் சேமிப்பதில் மட்டுமல்ல அதை பிற சந்ததிக்கும் விட்டுச் செல்வது மிக நல்லதே..
நல்ல விழிப்புணர்வு பதிவு. எனக்கு சாப்பாட்டை கொட்டினால் கூட மனசு வலிக்காது. ஆனால் ஒரு டம்பளர் தண்ணியை யாராவது வேஸ்ட் பணினால் கோவம் வந்து கத்துவேன். என் பிள்ளைங்க கூட திட்டுவாங்க. காசு குடுத்து வாங்குற சாப்பாட்டௌக்கு ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறே. ஆனால், ஃப்ரீயா கிடைகுற தண்ணிக்கு இந்த குதி குதிக்குறியேன்னு.
சபாஷ் கோகுல்..
இதுபோன்ற விஷயங்களைத்தான் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இது நாட்டிற்கும் சமூகத்திற்கும் அவசியமும் கூட...
ஒவ்வொருவறும் இதில் முனைப்பு காட்ட வேண்டும் அப்போதுதான் வளங்களை நீண்டகாலங்களுக்கு கையாளமுடியும். அதுதான் நல்லதும் கூட...
பதிவுக்கு வாழ்த்துக்கள்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பொதுநலத்தோடு கூடிய
அற்புதமான பதிவு இது...
சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல.
இதுபோல யோசனைகளை கடைபிடிக்க வேண்டும்.
பிற்கால சந்ததிக்கு நம்மால் ஒரு துளியேனும் சேமிக்க
முடிந்தால் அது அவர்களுக்கு உதவுமே...
நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பரே.
நன்றிகள் பல.
நல்ல பதிவு வாழ்த்துகள்..
கலக்கல், அடுத்த வருடமும் கலக்குவோம்
என்ன பாஸு...பொசுக்குனு சீரியஸ் ஆய்டீங்க.. நல்லது நடந்தா சரி...பகிர்விற்கு நன்றி..
கோகுல் உங்க பதிவுகள் உங்களை பற்றி சொல்லுது....
நிஜமாய் சொல்லுறேன்..... நீங்க கிரேட் பாஸ்
பல அரை லிட்டர்கள் வீணாவதை தவிர்க்கமுடியும்.முடியுமா?//
உண்மைதான் கோகுல் சிறு துளி பெரு வெள்ளம்,
பிளாஸ்டிக் பைகளுக்கும் டாட்டா சொன்னா நல்லாயிருக்கும் .
பாண்டிச்சேரியில் புயல் கேள்விபட்டேன்
இப்ப நிலைமை நார்மலுக்கு வந்தாச்சா .take care.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே
கோகுல்..உங்க ஊர் அதிகம் பாதிக்கபட்டுருக்கு. நீங்க நலமா?
Post a Comment