ரயில், மலை,கடல் இம்மூன்றும்
ரசிக்க ரசிக்க அலுக்காதென்பர்
ஆனால் இதை விடுத்து
வெறுக்கத்தக்க இடத்தில்
முதலாவதாய் கடல் வந்து நின்றது ஏனோ?
பொறுமைக்கு உதாரணமாய்
பூமித்தாயே உனைத்தானே சொல்வார்கள்
பூமித்தாயே!நீ கடல்தாயோடு
கைகோர்த்துக்கொண்டு
சுனாமி அலைகளை
எமனின் பினாமியாய் அனுப்பி
அரங்கேற்றிய திருவிளையாடலில்
அழிந்து போனது உன் பிள்ளைகளே!
அதிலும் என்ன பாவம் செய்தன
அலையில் கால் நனைத்து
சிரித்து விளையாடி மகிழ்ந்து திரிந்த
சின்னஞ்சிறு பிஞ்சுகள்?
கோழி மிதித்து குஞ்சு முடமான
கொடுமை நிகழ்ந்தது உன் அரங்கேற்றதால்!
உப்பிட்டவரை உள்ளளவும் நினைஎன்பர்
உப்பிட்ட நீயே
உயிர்க்கொல்லியாக மாறினாய்
உன்னை எப்படி உள்ளளவும் நினைக்க?
உன் நடன அரங்கேற்றத்திற்கு மேடையாக
எங்கள் வாழ்க்கையா கிடைத்தது?
நீ என்ன கோபத்தில் கொப்பளித்தாயோ?
உன் மீது எங்கள் கோபம் கொப்பளிக்க செய்து விட்டாய்
என்ன சொல்லி தேற்றப்போகிறாய்?
ஏதுமறியாமல் என்ன செய்வதென்று புரியாமல்
உறவிழந்து உடமையிழந்து
உருகி நிற்கும் உன் பிள்ளைகளை?
நீ தேற்றுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை
வருங்காலத்தில் உனது ஆட்டம் தொடராமல்
வங்கத்தாய் என சொல்லும் உன் பிள்ளைகளின்
வார்த்தையை காப்பாற்று அதுவே போதும்!
Tweet | ||||||
29 comments:
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறாதா காயமாய் ஆகிவிட்ட சம்பவம்...
// கோழி மித்திது குஞ்சு முடமான
கொடுமை நிகழ்ந்தது உன் அரங்கேற்றதால்!
உப்பிட்டவரை உள்ளளவும் நினைஎன்பர்
உப்பிட்ட நீயே
உயிர்க்கொல்லியாக மாறினாய்
உன்னை எப்படி உள்ளளவும் நினைக்க?
உன் நடன அரங்கேற்றத்திற்கு மேடையாக
எங்கள் வாழ்க்கையா கிடைத்தது?
நீ என்ன கோபத்தில் கொப்பளித்தாயோ?
உன் மீது எங்கள் கோபம் கொப்பளிக்க செய்து விட்டாய் //
வணக்கம் கோகுல்
வரிகளை வாசிக்கையில் கண்ணில் நீர்த்துளிகள்..
சுனாமியால் உறவிழந்து உடமையிழந்து
உருகி நிற்கும் உன் பிள்ளைகளுக்கு என் ஆழ்ந்த் அனுதாபங்கள்..
உயிரிழந்த மாணிக்கங்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்
கவிதை வீதி சௌந்தர் அண்ணா சொன்னது போல வருடங்கள் பல கடந்தாலும் ஆறாத ரணங்கள்..
வலிகளை சொல்லி நிற்கும் வரிகள்
வார்த்தையை காப்பாற்று அதுவே போதும்!
>>>
என் வேண்டுகோளும் அதுவேதான் சகோ
ம் ...
வணக்கம் கோகுல்!கவிதையால் சாகடித்து விட்டீர்கள் சுனாமியை.இனி மீண்டும் வர யோசிக்கும்!
இந்த திகில் இன்று வரை என்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது...நானும் தப்பித்தவன் ஆயிற்றே!
கடைசி படம் மனசை ஏதோ செய்யுது பாஸ் :(
உங்கள் கவிதை படித்தால் இனி சுனாமி கடலை விட்டு வரவே யோசிக்கும். :(.
ரெம்ப வேதனையா இருக்கு. மறக்க முடியுமா அந்த இரக்கமற்ற சுனாமியின் சீற்றம் வந்த நாளை :(
மாறா ரணம் கோகுல்..
சோக சம்பவம்! என்றும் மறக்க முடியாதவை!
த.ம.5
தமிழ்நாட்டில் சுனாமி வந்த செத்துக் கொண்டியுக்கும் போது சன் டிவியில் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் போட்டது நினைவுக்கு வருகிறது
மீடியாக்களுக்கு என்ன ஒரு பொறுப்புணர்ச்சி என்று தலையில் அடித்துக் கொண்டேன்
சுணாமியை அன்றைய நாளை மீள நினைவுப் படுத்தி விட்டீர்கள்
மனதில் என்றுமே வடுவாக , தழும்பாக இருக்கும் நிகழ்வு.....
என்ன சொல்லி ஆற்றுவது சுனாமி தந்த சோகத்தை! இயற்கையே வலியது என்று நினைவுப்படுத்தவே மனித்குலத்திற்கு இத்தகைய நிகழ்வுகள்!
Arumaiyana varigal. Nenjam kanakkirathu Sago.
Tamilmanam 8.
super நன்றி
// கோழி மிதித்து குஞ்சு முடமான
கொடுமை நிகழ்ந்தது உன் அரங்கேற்றதால்!
உப்பிட்டவரை உள்ளளவும் நினைஎன்பர்
உப்பிட்ட நீயே
உயிர்க்கொல்லியாக மாறினாய்//
ஆழிப் பேரலையின் அழிவுச்
செயலை மிகவும் உணர்வுப் பூர்வமாக
வடித்துள்ள கவிதை! நெஞ்சைத்
தொட்டது மட்டுமல்ல சுட்டது என்றே
சொல்ல வேண்டும்!
புலவர் சா இராமாநுசம்
வேதனை.
வருங்காலத்தில் உனது ஆட்டம் தொடராமல்
வங்கத்தாய் என சொல்லும் உன் பிள்ளைகளின்
வார்த்தையை காப்பாற்று அதுவே போதும்!
உப்புக்கடல் இனியாவது வாழ்க்கை காப்பாற்றட்டும்..
மறக்க முடியவில்லை நண்பரே..
அந்தநாள்..
தூத்துக்குடிக் கரையோரம்
கடல் அலை எழுந்துவந்தது இன்னும் என் கண்முன்
நிழலாடுது...
கவிதை மனதை கரைக்கிறது நண்பரே,
இந்த நூற்றாண்டின் கோரச்சம்பவங்களில் முதன்மையானது.
ஆண்டுகள் பல சென்றாலும் மறக்க முடியாத சோகம் இது....
நண்பா இந்த மாதிரி போட்டோக்கள் போட்டு இருப்பன்னு தெரிந்தால் பதிவுக்கு வந்திருக்கவே மாட்டேன்... மீண்டும் பழைய ரணங்களை ஞாபகம் படுதிடீங்க...
உறவிழந்து உடமையிழந்து
உருகி நிற்கும் உன் பிள்ளைகளை?
நீ தேற்றுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை //சுணாமியை நாளை மீள நினைவுப் படுத்தி விட்டீர்கள்
சுனாமி வந்து மூன்றாவது நாள்... எம்.ஜி.ஆர் திட்டு என்ற பரங்கிப்பேட்டைக்கு அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு நிவாரணப் பணிகளுக்காக போயிருந்தோம். அரைக் கால் சட்டை போட்டிருந்த ரத்தினத்தின் தொடை எலும்புகள் சாதாரணமாய் வெளியில் தெரிந்தது. அப்பா, அம்மா, சகோதரி, வீடு என சகலமும் இழந்து அவன் மட்டுமே மீதி இருந்தான். சுனாமி வந்து அவனை தூக்கி பனை மரத்தின் மேல் வீசியதை (தொடை காயம் பனங்கருக்கின் உபயம்) சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தான். ஆற்றமாட்டாமல் அவனிடம் கேட்டேன், "உனக்கு கவலையா இல்லியா?" அவன் சொன்னான், "எதை நினைத்து கவலைப் பட?". பன்னிரண்டு வயதில் ஒரு ஞானி...
மீண்டும் இது போல ஒரு நிகழ்வு உலகில் எங்குமே நிகழாமல் இருக்க இயற்கையை பாதுகாப்போம்.
வலி....மறக்க இயலாத வேதனை.
ஆறாத வடு...... படங்கள் மனதை கொல்லுகிறது...
இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..
Post a Comment