இந்தியனின் அடையாளமாக எதை எதையோ சொல்லுகிறோம்(கிறார்கள்).
வீரம்,ஜனநாயகம்,கலாசாரம்,வேற்றுமையில் ஒற்றுமை இன்னும் என்னென்னவோ.ஆனால் எல்லோருக்கும் தெரிந்த ஆனால் தெரியாத அடையாளம் இருக்கிறது.அது புலம்பலும்,மறதியும்.ஆமா!ஏதாவது நடந்துட்டா உடனே அப்படி பண்ணியிருக்கலாம்,இப்படி இருந்துருக்கணும் அப்படின்னு புலம்பறது அப்புறம் சேவாக் உலக சாதனை பண்ணியவுடன் அதை மறப்பது நமது போது அடையாளமாகவே மாறிவிட்டது.(என்னையும் சேர்த்துதான் நான் மட்டும் விதிவிலக்கா?ஜோதியில ஐக்கியம் ஆகிட வேண்டியது தான்)
இப்ப கொல்கத்தாவில பிரபல மருத்துவமனையில தீ விபத்து ஏற்பட்டு எண்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.எல்லாம் நிகழ்ந்த பிறகு இப்போது விதிகளுக்குப்புரம்பாக மருத்துவமனை கட்டப்பட்டிருந்தது,மருத்துவக்களிவுகள் கார் பார்க்கிங்கில் வைத்திருந்தார்கள்.அதில் தீ பரவி அணைக்க நேரமாகிவிட்டது என பல காரணங்களை கண்டுபிடித்து,எல்லா மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் எத்தனை நாள் இந்த ஆய்வுகள் நடைபெறும்?கொஞ்சநாள் கழித்து வர வர மாமியா கழுதை போல ஆனா கதை தான்(இந்த பழமொழி பொருந்துதா?)இங்கே கும்பகோணத்தில் இளந்தளிர்கள் மொட்டு விடுமுன்னே கருகியபோதும் இப்படித்தான் பள்ளிகளுக்கு சட்ட திட்டங்கள் வகுத்தார்கள்.இன்றளவில் கடைபிடிக்கப்படுகிறதா?விளையாட்டு மைதானங்கள் இல்லாத பள்ளிகள் எத்தனையோ இன்றளவும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.அதே போல ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீ விபத்தின் போது வகுக்கப்பட்ட மண்டபங்களுக்கான சட்டதிட்டங்கள் என்ன செய்கிறதென்று தெரியவில்லை.
தேக்கடி படகு விபத்து,ஆம்னிபேருந்துகளின் தொடர்விபத்து,போன்ற விபத்துகளாக இருந்தாலும் சரி அரசியல் சூழ்ச்சி காரணமாக தூண்டிவிடப்படும் ஒருமைப்பாட்டை குலைக்கும் நிகழ்வுகளானாலும்(குஜராத் கலவரம்,ராஜஸ்தான் போராட்டம்,பரமக்குடி) சரி ஊடங்களுக்கு செய்திகளை வாரி வழங்கிவிட்டு ,ஹோட்டல்ல தோசை சாப்பிட்டுட்டு அடுத்தது என்னப்பா?அப்படின்னு போய்க்கிட்டே இருக்கிறோம்.
சரி என்ன தான் செய்ய?ஒவ்வொரு வகை கட்டிடங்களுக்கும் விதிமுறைகள் இருக்கிறது என்றால் அந்த விதிமுறைகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் முகப்பில் ஒட்டி வைத்தால் ஏதேனும் குளறுபடி இருந்தால் யார் வேண்டுமானாலும் சம்பந்தப்பட்டவர்களை அணுகி புகார் செய்யலாம் அல்லவா?இதே போல எல்லா பொதுமக்கள் கூடும் இடங்களிலும் அதற்கான விதிமுறைகளை பின்பற்றினால்(கடுமையாக) வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள தவிர்க்க முடியும் தானே?
Tweet | ||||||
31 comments:
ம் ...
இதுவும் ஒரு புலம்பலா. OK.OK. புரிகிறது.
என்ன செய்ய கோகுல்.. முடிஞ்சவரை புலம்பிட்டு, அப்புறம் மறந்துட வேண்டியதுதான்.
கொல்கத்தாவில் இப்ப இருக்கும் குழப்பம் என்ன தெரியுமா? புற்று நோய் தீர்க்க வைத்திருந்த கதிர்வீச்சு பொருட்கள் என்ன ஆகின என்பது தான்.. இதையும் குழி தோண்டி புதைத்து விடுவார்கள்
அப்புறம் இந்த பதிவை படித்துவிட்டு புலம்பிவிட்டு மறந்துவிடவும்.//
இதுதான் இந்தியாவின் மாறாத சாபக்கேடு, பாம் வெடிப்பதும், தீவிரவாதிகளின் தாக்குதல்களும் அப்படியே புலம்பி மறுக்கப்படுகின்றன...!!!
கோகுல்! நல்ல விழிப்புணர்வு பதிவு! சுயநல மிக்க சமுதாயத்தில் புலம்பத்தான் முடியும்! தீர்வு யார் கையில்? vote 2
ஏதோ மக்களால் முடிஞ்சது அவ்வளவுதான்...
மாப்ள இன்னும் நீங்க நம்ம நாட்ட புரிஞ்சிக்கலியே...அதாவது முதாலாளித்துவ கொள்கையுடைய ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் நாடு...வேறு ஏதாவது மாற்றம் வேண்டும்னா மக்கள் இறங்கி அடிக்கணும் இல்லன்னா ஒன்னியும் பண்ண முடியாது!
எதுவும் உச்சத்தை எட்டும்வரை நிலமை இப்டிதான்...
யாரையும் கை நீட்டி இவர்கள் தான் தவறு பண்ணுகிறார்கள் என்று கூற முடியவில்லையே ..
அனைவரும் அப்படி தான் ... நல்ல பதிவுக்கு நன்றிங்க
//விக்கியுலகம் said...
மாப்ள இன்னும் நீங்க நம்ம நாட்ட புரிஞ்சிக்கலியே...அதாவது முதாலாளித்துவ கொள்கையுடைய ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் நாடு...வேறு ஏதாவது மாற்றம் வேண்டும்னா மக்கள் இறங்கி அடிக்கணும் இல்லன்னா ஒன்னியும் பண்ண முடியாது!///
:-)
Very good.........
Keep rocking.....
எல்லாம் அலச்சியம் தான் (மக்களும் , அதிகாரிகளும் )
கோகுல்,
அண்ணன் விக்கியோட பின்னூட்டக் கருத்தை வழிமொழியறேன்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
நீங்கள் சொல்வதே இன்றைய நடை
முறை! ஐயமில்லை!
மக்கள் மனவளம் பெறும்வரை
மாற்றம் ஏதும் நிகழாது!
புலவர் சா இராமாநுசம்
அப்புறம் இந்த பதிவை படித்துவிட்டு புலம்பிவிட்டு மறந்துவிடவும்.///பதிவா,எங்க?????
சரி என்ன தான் செய்ய?ஒவ்வொரு வகை கட்டிடங்களுக்கும் விதிமுறைகள் இருக்கிறது என்றால் அந்த விதிமுறைகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் முகப்பில் ஒட்டி வைத்தால் ஏதேனும் குளறுபடி இருந்தால் யார் வேண்டுமானாலும் சம்பந்தப்பட்டவர்களை அணுகி புகார் செய்யலாம் அல்லவா?இதே போல எல்லா பொதுமக்கள் கூடும் இடங்களிலும் அதற்கான விதிமுறைகளை பின்பற்றினால்(கடுமையாக) வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள தவிர்க்க முடியும் தானே?
சரியான கேளிவிதானே? பதில் எங்கே இருக்கு?
ரங்க நாதன் தெருவில பிசினஸ் டல்லாயிருக்குன்னு.......................................!?
அருமை தோழா....பகிர்விற்கு நன்றி...
புலம்புவதன் மூலம் நெஞ்சின் ஈரம் காயாமல்
மீண்டும் ஒருமுறை மனதை மனிதத் தன்மையால்
நனைத்துக் கொள்கிறோம்
பின்னாளில் அது முடிகிற உதவியைச் செய்ய
உதவும்தானே /
ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது
த.ம 5
படித்து... புலம்ப முடிந்தது... ஆனால் ஜீரணிக்கத்தான் முடியவில்லை...
நானும் புலம்பிட்டு போறேன் பாஸ்... இதுதானே நம்ம நிலை.
தொடர்ந்து பொறுப்பு மிக்க பதிவுகள் போடுறீங்க.. வாழ்த்துக்கள் கோகுல்.
வீதி விபத்துக்கள்...... உண்மையில் மனசை விபத்துகுள்ளாக்குது பாஸ் :(
சட்டங்கள் தீவிரமாய் அமல்படுத்தப்படாமல் தீர்வே இல்லை.
Therthal moolamum ivargalai thirutha mudiyavillai. Enna than seivathu?
Arumaiyana pakirvu.
மனிதனின் சமூக வாழ்வியலின் நிதர்சனம்.
உண்மைதான் இன்று புலம்பிவிட்டு நாளை மறந்துவிட்ட விஷயங்கள் ஏராளம்தான்..
கிட்டத்தட்ட 150 உயிர்களை பழிவாங்கிய அப்துல் கஷாப்-ஐ சிறைபிடித்தனர்.இன்னும் தீர்வு வந்தபாடில்லை.ஆனால் ஆன செலவு தொகை.........?
நீண்டுகொண்டேதான் போகிறது..
பாராளுமன்றத்தில் என்று இளைய ரத்தம் பாய்கிறதோ அன்றிலிருந்து இதற்கோர் விடிவு ஏற்படும்
அண்ணே இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல. கீழைத்தேய நாடுகள் பலவற்றில் இதேநிலைதான்
//இந்த பதிவை படித்துவிட்டு புலம்பிவிட்டு மறந்துவிடவும்.//
மறந்துவிட்டு மீண்டும் புலம்பி விட்டு படித்துவிட்டு மறப்போம். ஜெய் ஹிந்த்!!
(அ)நியாயத்துக்கு சமூகப்பதிவா எழுதி கெட்டுப்போய்ட்ட தம்பி நீ! சீனியர் பதிவர்கள் எல்லாம் இன்னும் கவர்ச்சி கன்னிங்க பத்தி எழுதி அசத்தறாங்க. நீ என்னடான்னா..எங்கே செல்லும் இந்தப்பாதை!!
மனக்குமறல் ,எனக்குள்ளும்
நல்லதோர் பதிவு பாஸ்..
ஒவ்வோர் சம்பவங்களிலும் இருந்து பெற்றுக் கொள்ளும் வாழ்க்கைப் பாடங்களைக் கடைப் பிடிக்கத் தவறுவதால் தான் நாம் மீண்டும் மீண்டும் இவ்வாறான இழி நிலைக்குள் புதைந்து போய் விடுகின்றோம்!
நீங்கள் சொல்வது போல அனுபவங்களை மறப்பதை விட, அதன் மூலம் பறக்க நினைக்க எம் சமூகம் தவறி விடுகின்றது.
Post a Comment