இன்னைக்கு ஒரு சில புகழ் பெற்ற பிரபலங்களைப்பற்றி சொல்லப்போறேன்.
இவங்க எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.படிக்கும் போது உங்களுக்கே புரியும். சொல்றேன்.
ஐன்ஸ்டீன் – இந்த இருபதாம் நூற்றாண்டின் ஒப்பில்லா அறிவியலாளர்.
நோபல் நாயகன்.தனது மூன்று வயது வரை பேச முடியாமலும்,எட்டுவயது வரை கற்றல் குறைபாடும் கொண்டிருந்தவர்.
பீத்தோவன் – தனது இளம் வயதில் (28)காது கேட்க்கும் தன்மையை இழந்தவர்.தனது இசைக்குரிப்புகளால் இன்று வரை சிலாகிக்கப்படுபவர்.
தாமஸ் ஆல்வா எடிசன் – நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்.பனிரெண்டு வயது வரை எழுத்துக்கூட்டி கூட படிக்க முடியாத குறைபாடு கொண்டவர்.பிற்காலத்தில் காது கேளாமையாலும் பாதிக்கப்பட்டார்.
சுதா சந்திரன் – பிரபல இந்திய நாட்டியநங்கை.வெள்ளித்திரை,சின்னத்திரையில் இன்று வரை கலக்கிக்கொண்டிருப்பவர்.இவர் ஒரு கால் இழந்து செயற்க்கைக்காலோடு நடனமாடி,நடித்து வருகிறார்.
ஃப்ரான்க்ளின் ரூஸ்வெல்ட் –அமெரிக்காவின் அதிபராக நான்கு முறை மகுடம் சூட்டியவர்.போலியோவால் பாதிக்கப்பட்டவர்.
டானி க்ரே – உடல் குறைபாடுடைய விளையாட்டு வீரர்.பாரா ஒலிம்பிக்கில் பல சாதனைகள் புரிந்தவர்.சக்கர நாற்காலியில் தனது பயணத்தை ,வாழ்க்கையை தொடர்பவர்,முப்பதுக்கு மேற்பட்ட உலக சாதனைகளையும் பதினாறு பதகக்கங்களையும் வென்றுள்ளார்.
ஸ்டீபன் ஹாக்கிங் – ஐன்ஸ்டீனுக்குபிறகு இந்த நூற்றாண்டின் சிறந்த அறிஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பவர்.21 வயதிலே ஒரு வகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால் செயலிழந்து கணினி வழியாக மற்றவர்களை தொடர்பு கொண்டு வருகிறார்.
ஜான் மில்டன் – புகழ் பெற்ற பாரடைஸ் லாஸ்ட் எழுதியவர்.பல கவிகள் போற்றும் கவி.வாழும் போது பார்வைஇழந்தவர்.
என்ன நண்பர்களே!இவர்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையை கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம். இவர்கள் யாவரும் தங்களது உடல்,மன குறைபாட்டை தங்களது விடாமுயற்சியால்,தன்னம்பிக்கையால் வென்று வேர் விட்டவர்கள்.இவர்கள் மட்டுமல்ல இவர்களைப்போல பலர் தங்களது தன்னம்பிக்கையால் வேரூன்றி வாழ்ந்து வருகிறார்கள்.
ஆம்.
மாற்றுத்திறனாளிகள்
இவர்கள் தன்னம்பிக்கையின் வேர்கள்
அந்த வேர்களுக்கு நீர் விட்டு
வளர்க்காவிடிலும்
நம் சொல்லாலும்,செயலாலும்
கருக்கிவிட வேண்டாம்
சின்ன பரிதாப பார்வை கூட
உடைத்துவிடும் அந்த நெஞ்சங்களை
இயல்பாய் இணைந்திருப்போம்.
பின்குறிப்பு - இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்(03.12.2011)
Tweet | ||||||
25 comments:
அசத்தல்.
வணக்கம் பாஸ்,
இன்றைய நாளுக்கு ஏற்ற மாதிரி தன்னம்பிக்கை ஊடாக வாழ்வில் முன்னேறிய மாற்றுத் தொழிலாளிகளைப் பற்றிப் பதிவிட்டு அனைத்து மனிதர்களும் தம் வசமிருக்கும் திறமைகளைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனும் உண்மையினை இப் பதிவினூடாக உரைத்திருக்கிறீங்க!
நல்லதோர் பதிவு!
நாளுக்கு நாள் உங்களின் கருத்துக்களும், நம்பிக்கை ஊட்டும் பதிவுகளும் மனதில் அப்படியே பதிகின்றன...
தொடர்ந்து நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள் பாஸ்.
பல அறிய தகவல்கள்....
சிறந்த பதிவு கோகுல்....சிலபேர் இதைப்படிக்கனும்
ஆம்.
மாற்றுத்திறனாளிகள்
இவர்கள் தன்னம்பிக்கையின் வேர்கள்
அந்த வேர்களுக்கு நீர் விட்டு
வளர்க்காவிடிலும்
நம் சொல்லாலும்,செயலாலும்
கருக்கிவிட வேண்டாம்
சின்ன பரிதாப பார்வை கூட
உடைத்துவிடும் அந்த நெஞ்சங்களை
இயல்பாய் இணைந்திருப்போம்.
Very good post. Pl. continue.
தங்களது உடல்,மன குறைபாட்டை தங்களது விடாமுயற்சியால்,தன்னம்பிக்கையால் வென்று வேர் விட்டவர்கள்.இவர்கள் மட்டுமல்ல இவர்களைப்போல பலர் தங்களது தன்னம்பிக்கையால் வேரூன்றி வாழ்ந்து வருகிறார்கள்
very nice post...
அற்புதமான தகவல்கள் கோகுல்.... !
தன்னம்பிக்கையுடன் வாழ்பவர்களை காலம் கண்டிப்பாக கைவிடாது...
அற்புதமான பதிவு...
வாழ்த்துக்கள் கோகுல்
salute...
தன்னம்பிக்கையளிக்கும் பகிர்வு அருமை நண்பா..
புதிய தலைமுறை, மாற்று திறநாளிகள் நாளில், பிரைலி முறையில் மாதாந்திர இதழை வெளியிட்டதாக செய்தி குறிப்புகள் சொல்கின்றன
நல்ல மிக அருமையான பதிவு... நண்பா...
மாற்றுத் திறனாளிகளுக்கு இப் பதிவின்மூலம் மணிமகுடம் சூட்டியுள்ளீர் சகோ!
நன்று நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நல்ல உரம் கொண்ட வரிகள் நண்பா ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா
தங்களின் வெளிபாடு மிக அசத்தல்.... பாராட்டுக்கள்
தன்னம்பிக்கையை வளர்க்கும் அருமையான பகிர்வு சகோ .
வாழ்த்துக்கள் ம,இக்க நன்றி பகிர்வுக்கு .
எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ .
தன்னம்பிக்கையூட்டும் பதிவு.
மாப்ள அருமையான பதிவு...குறைபாடுகளை தூக்கிப்போட்டு ஜெயிப்பவனே உண்மையான வீரன்...பாராட்டுக்கள்!
இன்றிலிருந்தாவது தினங்களை விடுத்து மனிதங்களை கொண்டாடுவோம்...
கோகுல்...பதிவு மனதில் வேதனையாயிருந்தாலும் நம்பிக்கையோடு பதிந்தது.அருமை !
உண்மையில் பல கோழைகளுக்கான வீரப் பதிவு நன்றிகள்...
Post a Comment