Sunday, April 5, 2020

மாஸ்க் மட்டுமே போதுமா?

நிறைய இடத்தில இப்ப போலீஸ்காரங்க என்ன பண்றாங்கன்னா வண்டியில்  வர்றவங்கள நிறுத்தி மாஸ்க் எங்க மாஸ்க் எங்கன்னு தான் கேக்குறாங்க.

 இதனால நிறைய மக்கள் என்ன மாஸ்க் போட்டுட்டு போனாலே போதும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிச்சுக்கலாம், அப்படின்னு நெனச்சுக்கிட்டு விதவிதமா மாஸ்க் போட்டுக்கிட்டு சுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

 வைரஸ் தொற்று இருக்கிறவங்க மாஸ்க் போட்டு இருந்தா  அவங்ககிட்ட இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் பரவாது அப்படிங்கறது என்னமோ உண்மைதான். ஆனா நம்மில் பல பேருக்கு  இந்த மாஸ்க்கை இப்படி பயன்படுதுவதென  தெரியிறதில்ல.

 நிறைய மாஸ்க் வகைகள் இருக்கு.
 ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கெப்பாசிட்டி இருக்கு. அதாவது சில மணிநேரங்கள் மட்டுமே வைரஸ் கடத்தலை இந்த மாஸ்க்குகள் தவிர்க்கும்.


 இப்போ பல பேர் என்ன பண்ணிட்டு இருக்காங்க? ஒரே மாஸ்க்கை நாள் பூரா பயன்படுத்திட்டு இருக்காங்க. கிராமங்கள்ல நிலைமை இன்னும் மோசம் ஒரே மாஸ்க்கை நாலஞ்சு நாளைக்கு எல்லாம் பயன்படுத்திக்கொண்டே இருக்காங்க

மாஸ்க்கை கையால் வெளிப்பக்கம் தொடுவதே ஆபத்து ,நிறைய பேர் மாஸ்க்கை கழட்டி கழட்டி மறுபடியும் மறுபடியும் பயன்படுத்திக்கொண்டே இருக்காங்க.

 So மாஸ்க் மட்டும் மாட்டிகிட்டு வெளியில போயிட்டு வர்றது, மாஸ்க் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் அதை பயன்படுத்துவது ரொம்ப ஆபத்தானது.

  அத்தியாவசிய தேவைகளுக்காக  வெளியே போகும் போது இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்க இருக்கும் வழிகள்
 சோசியல் டிஸ்டன்ஸ் அப்புறம் கை கழுவுதல், குறிப்பா வெளியே சுத்துற நேரங்கள்ல கை கழுவுவதற்கு முன்னால் முகத்தை தொடாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

 போலீஸ்காரர்களும்  தனியாக நடந்து வர்றவங்க அப்புறம் வண்டியில் வர்றவங்க இவங்களையெல்லாம் மாஸ்க் எங்கே என்று கேட்க அவன் கறிக்கடையில், காய் கடையில, சூப்பர் மார்க்கெட்டில், மளிகை கடையில இந்த மாதிரி இடங்கள்ல கூட்டங்கூட்டமாக நிக்கிற மக்கள்கிட்ட சோசியல் டிஸ்டன்ஸிங் பற்றி விழிப்புணர்வு கொடுத்து அனுப்பவும்.ரோட்ல தனியே நடந்து வர்றவங்க வண்டில வர்றவங்கள விட இந்த மாதிரி கூட்டமா நிக்கிறவங்க தான் ரொம்ப ஆபத்தானவங்க.

 எச்சரிக்கை மக்களே மாஸ்க் மட்டுமே  உங்களை பாதுகாக்காது.
Keep distance and Wash hands frequently. This is the only way to protect ourselves.

#social_distance
#hand_wash
மேலும் வாசிக்க "மாஸ்க் மட்டுமே போதுமா?"