Friday, March 7, 2014

போடப்போறேன் ஓட்டு


 



தமிழ்நாட்டிலிருந்து இந்த ஜனவரில தான் புதுவை வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தோம்.தமிழ்நாட்டு டாஸ்மாக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒரு நபர் ஒரு பாட்டில் திட்டம் இங்கே செல்லுபடியாகாது என்பது இங்கே கூடுதல் தகவல்.


                   



கடந்த தேர்தலில் வாக்களித்த போது எனக்கு அடையாள அட்டை கிடையாது,இப்போ விண்ணப்பிக்கும் போது அது எப்படிங்க இல்லாம இருக்கும் அதான் அப்பப்போ முகாம் போட்டு குடுக்குறாங்களேனு குறுக்கு விசாரணை நடத்தி ,கவர்மெண்ட் எவ்வளவுதான் செஞ்சாலும் மக்கள் அலட்சியமாக இருக்குறாங்க என அங்கலாய்த்துக்கொள்ள ,குற்ற உணர்வு உறுத்தியது நாம தான் கொஞ்சம் அசட்டையா இருந்துட்டமோ?சரி இந்த முறை அந்த இழிச்சொல் பழிச்சொல்லுக்கு ஆளாகக்கூடாது என முடிவெடுத்து வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்ததை அறிந்தவுடன் அதற்கான முஸ்தீபுகளை துவக்கினேன்.

அடையாள அட்டை முதலில் வாக்களிக்கும் மையத்திலே கிடைக்கும் என்றார்கள்,அங்கே போய் விசாரித்ததில் தாலுகா அலுவகத்தில் இயங்கும் தேர்தல் துறை அலுவலகத்தை அணுக சொன்னார்கள்,அம்மாவும் அப்பாவும் போய் வாங்கி வந்தார்கள்,எனக்கும் என் மனைவிக்கும் கேட்டதற்கு நாங்க எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ஸ்
அவர்களே வர வேண்டும் என் சொன்னார்களாம்.


நான் இன்று போய் இருவரின் ஒப்புகை சீட்டை கொடுத்து தலா ரூ25 செலுத்தி ரசீது  தந்தார்கள் வாங்கிக்கொண்டேன்.அப்பறமா சொன்னாங்க மிஷின் ரிப்பேர்ல இருக்கு போயிட்டு அடுத்த வாரமா வாங்க அப்படின்னு.அடுத்த வாரம் நான் மட்டும் தான் வர முடியும் (இன்னைக்கும் நான் மட்டும் தான் போயிருந்தேன்),ரெண்டு பேரோட அடையாள அட்டையும் என்கிட்டயே தருவீங்களான்னு கேட்டேன்,.அவங்க சிம்பிளா சொன்னாங்க

"ம்ம்ம்.no problem"

அப்போ  ஆரம்பித்து வீடு வரும் வரை ஒலித்தது எனது காதுகளில் நாங்க ரொம்ப
ஸ்ட்ரிக்டு....,ஸ்ட்ரிக்டு.......,ஸ்ட்ரிக்டு................,ஸ்ட்ரிக்டு


# அட அப்பரசண்டிகளா இத முன்னமே அப்பா அம்மா வந்தப்போ குடுத்திருந்தா எனக்கு ரெண்டு நாள் அலைச்சல் ,அரை லிட்டர் பெட்ரோல், ரெண்டு மணிநேரம் மிச்சமாகியிருக்குமே.



     [அடுத்த முறை இவங்களுக்கு எந்த தொகுதில ஓட்டு இருக்குன்னு விசாரிக்கணும்]

இப்போ  மேலே இருக்கும் சிவப்பு வண்ண எழுத்துகளை மீண்டும் வாசிக்க.
என்ன  நடந்தாலும் சரி நான் போடப்போறேன் ஓட்டு.
என்ன போட்றுவமா?

நட்புடன்,

ம.கோகுல்


மேலும் வாசிக்க "போடப்போறேன் ஓட்டு "