_________________________________________________________________________________
நான் நேத்து வேலைக்கு(?) பைக்கில் போகும் போது திடீரென்று இரு இடங்களில் வேகத்தடைகள் புதிதாக முளைத்திருந்தன.மிதமான வேகத்தில் சென்றதால் ப்ரேக் பிடித்து சமாளித்து விட்டேன்.இந்த நிகழ்வு நான் பதிவெழுத வந்த புதிதில் எழுதிய ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்துச்சு.புதிய folloewrs-க்காக மீண்டும் இங்கே.அப்போது வாசித்தவர்கள் பொறுத்தருள்க!
__________________________________________________________________________________
என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் திடீரென்று கையில் கட்டுடன் நிறுவனத்துக்கு வந்தார்.என்னங்க நேத்து கூட நல்லாத்தான இருந்தீங்க என வழக்கமான கேள்வியை கேட்டேன்.அதுக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த பதிவுக்கு மேட்டர்.
வண்டில போய்கிட்டு இருக்கும் போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது தெரியாமவேகமா போய் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னார்.ஏங்க நீங்க தினமும் போற ரோடுதான ஸ்பீட் பிரேக்கர் இருக்கறது தெரியாதா ன்னேன் நான் விவரமா?
அடப்போடா?நான் மதியம் வரும் போது ஸ்பீட் பிரேக்கர் இல்லடா.திரும்பி நைட் போகும்போது ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்காங்கடா னார்.
அப்போது தான் எனக்கு உரைத்தது நம்ம ஊரில் நிறைய வேகத்தடைகள் இருப்பதே தெரிவதில்லை.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தொலைவில் வரும் போதே தெரிவதற்காக வெள்ளை, மஞ்சள் நிறத்தில்,வேகத்தடை இருப்பது தெரியும்படி அடையாளமிட்டிருப்பார்கள்.அது போக எச்சரிக்கை பலகையும் வைத்திருப்பார்கள்.
ஆனால் பெரும்பாலானமாநகரச்சாலைகளிலும்.ஊரக, கிராமப்புறச்சாலைகளிலும் உள்ள வேகதடைகளில் இது போல இருப்பதில்லை.
தினமும் ஒரே சாலையில் பயணிப்போரே புதிதாய்ப்போட்ட வேகத்தடை தெரியாமல் விபத்துக்குள்ளாகும் போது புதிதாய் அந்த சாலையில் பயணிப்போரின் கதி???
ஹெல்மட்டை போடுங்க,சீட் பெல்ட போடுங்க,ட்ராபிக் ரூல்ஸ பாலோ பண்ணுங்க அப்படின்னுல்லாம் சொல்லுரவங்க,இதெல்லாம் பாலோ பண்ணியும் இப்படி விபத்து ஏற்படாம தடுக்க,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.
நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!Tweet | ||||||
34 comments:
நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!
பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வு .நன்றி சகோ .என் தளத்தில் ஒரு பெண்ணின் சோகம் கவிதை
ஆறாய் ஓடுது நீங்களும் ஓடிப்போய்ப் பாருங்க .ஓட்டுப் பட்டை கவனம் !..........
அட முதல்த் தேங்கா...அரோகரா ஓட்டுப் பட்டை நிறையட்டும்
சாமியோய்...........வாழ்த்துக்கள் சகோ ..
என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.//
அறிவுரைக்கு நன்றி மாப்ள..
மாப்ள நல்ல விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் பதிவு....ஆனா இந்த ஊர்லயும் பல வேகத்தடை..கொய்யால அதுகள பாத்துட்டு போனா நேரா எருமைனாயக்கன் பட்டிதான் போகணும்...நான் இந்தூரு பொண்ணுங்கள சொன்னேன் sorry ஹிஹி!
//ஹெல்மட்டை போடுங்க,சீட் பெல்ட போடுங்க,ட்ராபிக் ரூல்ஸ பாலோ பண்ணுங்க அப்படின்னுல்லாம் சொல்லுரவங்க,இதெல்லாம் பாலோ பண்ணியும் இப்படி விபத்து ஏற்படாம தடுக்க,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.//
திடீரென்று முளைத்த வேகத்தடையினால் விழுந்து எழுந்த அனுபவம் எனக்கும்தான்
வேகத்தடை போடுபவர்கள் இனியாவது வர்ணமடிக்கட்டும்
நன்றியுடன்
சம்பத்குமார்
///நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!///
அதிவேகம் ஆபத்தைத் தரும் என்பதை அருமையா உணர்த்தியிருக்கீங்க நண்பா. வேகமா போனால் நம்ம ஊர் வேகத்தடையெல்லாம் பயணத்தடை ஆக்கிடும் என்பதை நச்சுன்னு வலியுறுத்திருக்கிறீர்கள்.விழிப்புணர்வு பதிவு.
மாப்பிள புதுசா வாறவங்களுக்கு கண்ணு ரோட்ல.. பாதை பழகினவங்க கண்ணு ஊர் மேயுமையா அதுதான் பிரச்சனையே..!!!)))
@காட்டான்
ஆமா மாம்ஸ்!கண்ண ரோட்டுல இருந்து எடுத்தா பிரச்சினைதான்!
சரியாச் சொன்னீங்க,
வேகம் தேவைதான், அதுவே எமனாக போய்விடக்கூடாது.
வேகத்தடைகளை வேகத்தை குறைக்க பயன்படுத்த வேண்டுமே தவிர சாகசம் காண்பிக்க பயன்படுத்தக்கூடாது.
நல்ல பதிவு நண்பரே.
நல்ல கேள்வி
இது எந்த மாதிரி ரோட்ன்னு சொல்லல
ஆனா கீழே விழுகுற வேகத்தில வண்டி ஓட்டுனது யார் தப்பு?
இதுவே யாரவது இல்லை குழந்தைங்க குறுக்கே வந்து இருந்தா?
நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பா
இப்படி தான் ஒரு வேக தடையில் நான் brake அடித்து மெதுவாய் ஏறினேன், அடுத்த நிமிடம் நான் தரையில் கிடந்தேன்... என் பின்னால் வந்த வந்டிகாரருக்கு வேக தடை அங்கு இருந்தது தெரியவில்லையாம்...
நண்பரே முதல் இந்தப்பதிவை நான் வாசிக்கவில்லை இப்ப மீள் பதிவில் வாசிக்க முடிந்தது நல்ல விடயம் சொல்லியிருக்கீங்க
அப்பறம் இப்ப என்ன மீள்பதிவு வாரமோ..ஹி.ஹி.ஹி.ஹி...
சாரதிகள் வண்டி ஓட்டும் போது தம் உயிர் தம் கைகளில் தான் என்பதை உணர்ந்தாலே பாதிக்கும் அதிகமான விபத்துக்கள் தவிர்க்கப்படும் !
உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி .
கண்டிப்பாக வாகன ஓட்டிகள் மனதில் நிருத்த வேண்டும்...
வாழ்த்துக்கள்...
உண்மை தான் நண்பா...
நிறைய இடத்துல முன்எச்சரிக்கை பலகை இல்லாமல் உள்ளது...
மீள் பதிவா பாஸ்
நான் இப்போதுதான் படிக்குறேன்.... நல்ல எச்சரிக்கை பதிவு
நல்ல பதிவு.
சில நேரம் இரவோடு இரவாக போட்டு விடுகிறார்கள்.
விழிப்புணர்வு படைப்புக்களா எழுதித் தள்ளுறீங்களே கோகுல். பட்டைய கிளப்புங்க.
நம்ம ஆளுங்க ரோட்ட பார்த்தே வண்டி ஓட்டுறது இல்லையே. தலை சரிச்சிகிட்டு எமனோடு ( அதாங்க மொபைலோட ) பேசிகிட்டு போய் டமார்ன்னு விழுந்திட்டு, வேக தடையை போட்டுடான்யா என கதறுவது ... என்ன சொல்ல , கோகுல் ... உங்க பதிவ எல்லா காலேஜ் பசங்களும் பார்க்கணும் ...
நல்ல பதிவு . நன்றி
நீங்கசொல்றதபோல ஒளிரும் விளக்குபோட்டுடலாமே. அது சரியா இருக்குமே.
யோவ்...புது Follower னா...பழைய பதிவ படிக்கமாட்டாங்களா? ...-:)
சூர்யா விழுந்தது சரி...அவர் மேல யார் விழுந்தான்னு சென்சார் பண்ணிட்டாரே...
எனக்கு உங்க பதிவுகளை விட நீங்க மத்தவங்க பதிவுக்கு போடற கமெண்ட்ஸ் ரொம்ப பிடிக்கும்...கோகுல்..
திட்டாதீங்க அது உண்மை...:)
மீள் பதிவு போடறதுக்கு என்னமா பில்டுப் குடுக்கறாங்க, நல்ல கருத்து நல்ல பதிவு..
ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீங்க.
தாங்கள் சொன்னது முற்றிலும்
உண்மை நண்பரே!
வேகம் விவேகமல்ல!
புலவர் சா இராமாநுசம்
வழக்கமா போகின்ற பாதை தானே என்று இல்லாமல். சற்றே கவனத்தோட சென்றால் நமக்குதானே நல்லது. . . நல்ல கருத்து சகா. . .
மீள்பதிவா... ம்ம்ம்...
விழிப்புணர்வு பதிவு
அட ஆமாம் நண்பரே சில தடைகள் கிட்ட போனாதான் தெரியுது ,சட்டுன்னு ப்ரேக் போட்டா பின்னாடி உட்கார்ந்து வருபவர் நம்ம முதுகு மேலே ஏறிக்கொள்கிறார்.
பயனுள்ள எச்சரிக்கை நண்பா...
மச்சி, இதனை நான் ஏலவே படித்துப் பின்னூட்டியிருந்தேன்.
ஆனாலும் பலருக்கு விழிப்புணர்வாக அமையும் நல்லதோர் பதிவு.
Post a Comment