Thursday, September 1, 2011

முதல்ல கைய குடுங்க அம்மா!!


இது எனது முந்தைய பதிவுக்கு நானே எழுதும் எதிர் பதிவு இது(உனக்கெல்லாம் வேற யார் எதிர்பதிவு போடுவாங்க!நீயே போட்டுகிட்டாதான் உண்டு!உங்க மைன்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்!)எனது முந்தைய பதிவில்  இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!(கிளிக்கவும்)என  தூக்கு தண்டனை விசயத்திலும் இந்த வழக்கைப்பற்றியும் மாறி மாறி பேசி வருவதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்த முறையும் மாற்றித்தான் பேசியிருக்கிறார்.ஆனால் இது நல்லமாற்றம்!வரவேற்கத்தக்க மாற்றம்!போராடிய அனைவரும் எதிர்பார்த்த மாற்றம்!மனித நேயம் கொண்ட அனைவரும் முகமலர்ந்து போற்றும் மாற்றம்!மாற்றத்திற்கு காரணம் எதுவாய் இருந்தாலும்(உள்ளாட்சி தேர்தலாய் இருந்தாலும்)அதையெல்லாம் ஆராயாமல் எல்லோரும் அம்மாவுக்கு கை கொடுப்போம்!அம்மாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!



திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்துல ஏறாம இருந்தா சரி!
ஆனால் அம்மா ஒரே ஒரு உறுத்தல் இந்த முடிவ ஒரு ரெண்டு நாள் முன்னாடி எடுத்திருந்தீங்கன்னா செங்கொடி என்ற துடிப்பான தோழரை இந்த தமிழகம் இழந்திருக்காது!பலரும் சொல்லிவிட்டார்கள்.என்பங்குக்கு நானும் சொல்கிறேன் .தோழர்களே!உணர்வுத்தீயை நெஞ்சில் மட்டும் ஊற்றுவோம்!இன்னொரு முத்துக்குமார்,செங்கொடியின் முடிவை யாரும் எடுக்கவேண்டாம்!
இந்த தண்டனையை எதிர்த்து போராடி,உண்ணாவிரதமிருந்தோர்,சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தோர்,பிற நாடுகளில் இருந்து ஆதரவு தந்தோர்,, அரசியல் தலைவர்கள் (அரசியல் நோக்கம் உள்ளே இருந்தாலும்,) அனைவருக்கும் நன்றிகள்!


அப்பறம் போன பதிவில், முத்துக்குமார் யார் என்று  ஈ.வி.கே.எஸ்.ஒரு முறை கேட்டிருந்தார்.அது போல செங்கொடி யார் என காங்கிரஸ் காரர்கள் யாரும் கேட்க்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்திருந்தேன்,ம்ம்ம்ஹூம் இளங்கோவன் இன்னும் திருந்தியிருப்பதாக தெரியவில்லை.புதிய தலைமுறை செய்தி டி.வியில் சொல்றார்.தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருக்கிரதே தவிர நிறுத்தி வைக்கப்படவில்லை.நிச்சயம் தூக்கில் போட்டே ஆகணும் என்று.இவருக்கு தேர்தல்ல போட்டது பத்தாது போல இருக்கு.இவருக்கு இன்னும் நல்லா போடணும்.ஈரோட்டுப்பெரியவருக்கு இருந்ததில் பாதி கூட அவர் பேரனுக்கு  இல்லாமல் போனது தான் வருத்தமளிக்கிறது!
என்ன கேக்குறிங்க கலைஞர் பத்தியா?நோ கமெண்ட்ஸ்!!


இன்னொரு விஷயம்!
பிள்ளையார் சதுர்த்தியை நல்லபடியா கொண்டாடுவோம்!களிமண்ணுல செய்த பிள்ளையாரை மட்டும் வைச்சு வழிபடுவோம்!(என் தலைல இருக்கறதான்னு நீங்க கேக்குறதை வன்மையா கண்டிக்கிறேன்!)பிள்ளையார கடல்ல கரைக்குரேன் பேர்வழின்னு போட்டு டமால் டமால் ன்னு சாத்த வேண்டாம்!பாவம் அவர்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!




புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்(முதல்)&சில இணையங்கள்.



51 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தற்ப்போது வேறு எந்த வேலையும் இல்லை..

அதான் இப்படியாது சொல்லி பிரபலமடையாலாம் என்று சொல்லியிருக்கிறார்...

அவரையெல்லாம் சீரியஸா எடுத்துக்க கூடாது...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

நம் நாடு இன்னும் சர்வாதிகரத்திற்க்கு போகவில்லை...

முறையான போராட்டத்தின் மூலம் இங்கு சரியான தீர்வுகள் பெறலாம்...

இனி தயவு கூர்ந்து தற்கொலை முயற்ச்சிக்கு யாரும் முயவ கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பமும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

அம்மாவில் அடுத்த நடிவடிக்கை என்னவென்று பொருத்திருந்து பார்ப்போம்....

K.s.s.Rajh said... Reply to comment

அம்மானா சும்மா இல்லைடா நண்பா..

எல்லாம் அரசியல்தான் பாஸ்.எப்படியோ அந்த மூன்று உயிர்களும் காப்பாற்றப்படால் சரிதான்..


இன்று என் கடையில்-(பகுதி-6)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்
http://cricketnanparkal.blogspot.com/2011/09/6.html?spref=fb

கோகுல் said... Reply to comment

# கவிதை வீதி # சௌந்தர் said...
அம்மாவில் அடுத்த நடிவடிக்கை என்னவென்று பொருத்திருந்து பார்ப்போம்..//

நிச்சயம் நல்லதா இருக்கணும்!

கோகுல் said... Reply to comment

K.s.s.Rajh said...எல்லாம் அரசியல்தான் பாஸ்.எப்படியோ அந்த மூன்று உயிர்களும் காப்பாற்றப்படால் சரிதான்..//

ம்ம்ம்.எல்லோருடைய விருப்பமும் அதுதான்!

கவி அழகன் said... Reply to comment

வாழ்த்துக்கள் நண்பரே

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

இந்த முடிவ ஒரு ரெண்டு நாள் முன்னாடி எடுத்திருந்தீங்கன்னா செங்கொடி என்ற துடிப்பான தோழரை இந்த தமிழகம் இழந்திருக்காது!பலரும் சொல்லிவிட்டார்கள்.

உண்மைதான் நண்பா.

சக்தி கல்வி மையம் said... Reply to comment

பிள்ளையார் சதுர்த்தியை நல்லபடியா கொண்டாடுவோம்!....

Unknown said... Reply to comment

thappu pannina thandanai kudukka kudatha

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

வெயிட் & சி

Unknown said... Reply to comment

ithu oru manitha urimai meral. eppadi patta padukolai unga vettula nadanthirundha ithey manitha neyathudan than nengal seyalpaduvergala yena yezhum palarathu kelvikalukku ungal pathil

Unknown said... Reply to comment

20 varudam avargal thandai anubavikka villai. thandainail irrunthu thappithu irrunthargal avalavu than

Unknown said... Reply to comment

thanathu uyirai thane maitthu kolvathu koda kuttram than. nam vazhnthu than pirarai vazha vaikka vendum vazha vaikkavum mudium.

கோகுல் said... Reply to comment

@Senthil
செந்தில் அவங்க தப்பு பண்ணி இருக்காங்கன்னு முழுசா நிரூபிக்கபடல!
அப்படியிருக்க அவங்கள தூக்கில் இட துடிப்பதேன்!

கூடல் பாலா said... Reply to comment

அம்மாகிட்ட ஒரு சின்ன மாற்றம் இருப்பதாக தெரிகிறது ......அப்புறமா காங்கிரஸ் ...கட்சியை அழிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க ,வேறென்ன சொல்ல .....

Anonymous said... Reply to comment

நல்லதே நடக்கட்டும்
எனது புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/08/ragging.html

கோகுல் said... Reply to comment

Senthil said...
ithu oru manitha urimai meral. eppadi patta padukolai unga vettula nadanthirundha ithey manitha neyathudan than nengal seyalpaduvergala yena yezhum palarathu kelvikalukku ungal pathil//

http://perarivalan.blogspot.com/
இந்த லிங்கில் சென்று பார்த்து விட்டு வாருங்கள் மனித உரிமை மீறல் பற்றி உங்களுக்குப்புரியும்.அப்பறம் போபாலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாக காரணமாயிருந்த யுனியன் கார்பைட் ஆண்டர்சன் பாதுகாப்பாக தப்பிக்க வைக்கப்படும் போது குற்றம் நிரூபிக்கப்படாதவர்களை தூக்கில் போடுவது தான் மனித நேயமா?
அல்லது தூக்கிலிடும் அளவுக்கு ஆண்டர்சன் குற்றம் செய்யவில்லையா?

rajamelaiyur said... Reply to comment

EVKS number one dubakur

Unknown said... Reply to comment

ஈவி கே எஸ் இளங்கோவனா
யாரவர்..?

நல்ல பதிவு நண்பரே
நானும் இது பற்றி மூன்று கவிதைகள்
எழுதி இருக்கிறேன்.
நீங்கதான் வரவே இல்லையே
நல்லது நடகட்டும்
புலவர் சா இராமாநுசம்

கோகுல் said... Reply to comment

20 varudam avargal thandai anubavikka villai. thandainail irrunthu thappithu irrunthargal avalavu than//

உண்மையான குற்றவாளிகள் தான் தப்பித்து இருக்கிறார்கள்!இவர்கள் இருபது வருடம் அனுபவித்ததே கொடுமை!

கோகுல் said... Reply to comment

புலவர் சா இராமாநுசம் said...
ஈவி கே எஸ் இளங்கோவனா
யாரவர்..?

நல்ல பதிவு நண்பரே
நானும் இது பற்றி மூன்று கவிதைகள்
எழுதி இருக்கிறேன்.
நீங்கதான் வரவே இல்லையே
நல்லது நடகட்டும்
புலவர் சா இராமாநுசம்///

ஐயா!வந்து பார்த்தேன்!பின்னூட்டமிட முடியவில்லை!மன்னிக்கவும்!
இனி தொடர்ந்து வருகிறேன்!தங்கள் வருகைக்கு நன்றி!

கோகுல் said... Reply to comment

Senthil said...
thanathu uyirai thane maitthu kolvathu koda kuttram than. nam vazhnthu than pirarai vazha vaikka vendum vazha vaikkavum mudium. //

நண்பா உங்கள் நிலை என்ன?தெளிவுபடுத்துங்கள்!தன்னுயிரை மாய்ப்பதே குற்றம் என்கிறீர்<பிறகு ஏன் இவங்கள் தண்டனையிலிருந்து தப்பிஇருப்பது பற்றி ஆதங்கப்படுகிறீர்கள்?

தனிமரம் said... Reply to comment

பலதையும் செய்யக்கூடியவர் அம்மா! பிள்ளையார் கரைப்பது இப்போது ஒரு விளையாட்டு நிகழ்வைப்போல் இருப்பது கவலையளிக்கின்றது!

காந்தி பனங்கூர் said... Reply to comment

இளங்கோவனை முதலில் நாடு கடத்த வேண்டும்.

காட்டான் said... Reply to comment

மாப்பிள அம்மாவ நம்பி நீங்க ஒரு பதிவும் போடாதீங்க அவங்க எப்ப எப்பிடி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.. ஏதோ இம்முறை நாங்கெல்லாம் பாராட்டுற மாதிரி செய்திருக்காங்க.. அதை வரவேற்போம்...

காட்டான் குழ போட்டான்..

கோகுல் said... Reply to comment

@காட்டான்இந்த மாற்றம் மாறாம இருந்தால் சரி!

அந்நியன் 2 said... Reply to comment

இளங்கோவனும் சுப்ரமணிய சுவாமியும் பச்சோந்திகள் எப்படி வேணும்னாலும் கலரை மாற்றி கொள்வார்கள்.

விடுங்க பாஸ் ஏழு கோடி தமிழர்கள் இருக்கும் வரை நம்மை ஒரு பயலும் எதுவும் செய்து விடமுடியாது.

அந்நியன் 2 said... Reply to comment

தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.

Anonymous said... Reply to comment

உங்களுக்கு கைய குடுக்கமாட்டாங்க அம்மா...

வேணா இரண்டு விரல காமிப்பாங்க...

எதுக்குனாலும் நீங்க தான் கால்ல விழனும்....

கோகுல் said... Reply to comment

@ரெவெரி
வாங்க!குட் பிளாக்கில் கலக்குறிங்க வாழ்த்துக்கள்!

செங்கோவி said... Reply to comment

தலைப்பே தப்பா இருக்கே...’அம்மா கால்ல விழறேன்மா’ - இது தான் சரியான தலைப்பு.

செங்கோவி said... Reply to comment

அம்மாவின் மனமாற்றம் வரவேற்கத்தக்கது தான்..

கோகுல் said... Reply to comment

செங்கோவி said...

தலைப்பே தப்பா இருக்கே...’அம்மா கால்ல விழறேன்மா’ - இது தான் சரியான தலைப்பு.//

அம்மாவின் மனமாற்றம் வரவேற்கத்தக்கது தான்..//

மனமாற்றம் திரும்பவும் மாறக்கூடாது!

Anonymous said... Reply to comment

நல்ல சேதி நண்பா ...

குறையொன்றுமில்லை. said... Reply to comment

வாழ்த்துக்கள்

kobiraj said... Reply to comment

அனைவரின் எதிர்ப்பாலும் அம்மா பயந்து விட்டார் .உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி

Unknown said... Reply to comment

ஈவிகேஎஸ் இளங்கொவனா? யாரு அது? எந்த கட்சி அடிமை?

நிரூபன் said... Reply to comment

முதல்ல கைய குடுங்க அம்மா!!//

அவ்...நல்ல செய்தியோட வந்திருக்கிறீங்க போல இருக்கு பாஸ்,
இருங்க பாஸ்
படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said... Reply to comment

ஆனால் அம்மா ஒரே ஒரு உறுத்தல் இந்த முடிவ ஒரு ரெண்டு நாள் முன்னாடி எடுத்திருந்தீங்கன்னா செங்கொடி என்ற துடிப்பான தோழரை இந்த தமிழகம் இழந்திருக்காது!//

சரியான வார்த்தைப் பிரயோகம் பாஸ்..
உண்மையில் அம்மாவின் இம் முடிவும் காலங் கடந்த ஞானம் தானே...அநியாயமாக ஒரு அப்பாவி உயிரை அல்லவா நாம் இழந்து விட்டோம்.

நிரூபன் said... Reply to comment

இளங்கோவன் அரசியல் காமெடி பண்றார் போல இருக்கே பாஸ்.

நிரூபன் said... Reply to comment

உங்களுக்கும், உங்களின் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் என் உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மாய உலகம் said... Reply to comment

சல்யூட்டுடன் நன்றி நண்பா வாழ்த்துக்கள்

M.R said... Reply to comment

tamil manam 13

நல்ல கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்

வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Yoga.s.FR said... Reply to comment

பிள்ளையார கடல்ல கரைக்குரேன் பேர்வழின்னு போட்டு டமால் டமால் ன்னு சாத்த வேண்டாம்!///ரைட்டு!

சுதா SJ said... Reply to comment

பாஸ் அம்மா புகழ் பதிவுக்கு தேங்க்ஸ்
( நீ ஏன் தங்கத் சொல்லுற எண்டு கேக்கபடாது lol )

சுதா SJ said... Reply to comment

விநாயகர் கைவிட்டாலும் அம்மா கைவிட மாட்டாங்க, கவலையே விடுங்க பாஸ்

rajamelaiyur said... Reply to comment

அம்மானா சும்மாவா ?

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

அம்மாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!

மகேந்திரன் said... Reply to comment

என்னோட கையையும் சேர்த்துக்கோங்க நண்பரே.....
தமிழ்மணம் 16

Unknown said... Reply to comment

//அம்மாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!//
நிச்சயமா!!