கடந்த பதிவு எனது ஐம்பதாவது பதிவு(சில மீள்வுகளும் அடக்கம்).ஐம்பதாவது பதிவு பிற பதிவுகளைக் காட்டிலும் கடந்த பதிவு எனக்கு பேருவகையை அளித்தது.காரணங்கள் பல.
முதலில் நான் எழுதுவதை(யும்) வாசித்து வரும் நண்பர்களுக்கும்,பின்தொடரும் அன்பர்களுக்கும்,கருத்துகள் கூறி என்னை மெருகேற்றுபவர்களுக்கும்(ஆமா!இவுரு பத்தரை மாத்து தங்கம்)வாக்களிக்கும் வாக்காளர் பெருமக்களுக்கும்(காசு வாங்காமலே ஒட்டு போடுறிங்களே!இம்புட்டு நல்லவங்களா இருக்கிங்களே?) அவ்வப்போது ஆலோசனை தந்து வழிகாட்டும் ஆலோசகர்களுக்கும்(கன்சல்டேசன் பீஸ் இல்லாமலே)
என்னை எழுத தூண்டிய நண்பர்களுக்கும்,முக்கியமாக,பையன் ஏதோ பண்ணிக்கிட்டு இருக்கான்(உருப்படியாவா இல்லையான்னு கூட தெரியாமல்)நான் எழுதுகையில் தொந்தரவு செய்யாமலிருக்கும் எனது பெற்றோர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்!
என்னடா இவன் யார் பேரையும் சொல்லாமல் பொத்தம் பொதுவா நன்றி சொல்றான்னு பாக்குறிங்களா?எதுக்குங்க?யாரையாவது விட்டுட்டு அப்பறமா அவங்க வந்து குமுறவா?(உசாரய்யா உசாரு!)அப்படி யாரும் செய்யமாட்டிங்கன்னு தெரியும்.இருந்தாலும் யாரையாவது விட்டுட்டேன்னா எனக்கு கொஞ்சம் கஷ்டமாகிடும் அதான்!(சமாளிபிகேஷன்)
கடந்த பதிவு மகிழ்வளித்ததற்க்கானகாரணங்கள்,முதலில் அணுஉலை எதிர்ப்புக்கான எனது பங்கை வழங்கியதில்,அப்பறம் பல பதிவுலக நண்பர்கள் அந்த பதிவிற்கான லிங்கை தங்கள் தளங்களில் வெளியிட்டிருந்தது.ஒரு விசயத்திற்காக போராடும் போது நமது நண்பர்களின் ஆதரவுக்கரங்கள் உடனடியாக நீள்வது மகிழ்வளிக்கிறது.இந்த ஒரே காரணதிற்க்காகவே நானும் வலைப்பூவில் எழுதுவதில் பெருமைப்படுகிறேன்.
அப்பறம் கடந்த பதிவுக்கு மாற்றுக்கருத்துடன் ஒரு நண்பர் வந்திருந்தார்.இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது.ஏன்னா எல்லோரும் ஒரு விஷயத்தை ஆதரித்துதான் ஆகணும்ம்னு இல்ல.மாற்றுக்கருத்து இருந்தாதான் நாம ஆதரிக்குற விசயங்களிலும் உள்ள குறைகள் நமக்கு தெரியும்.ஆனா மாற்றுக்கருத்துடன் வந்த நண்பர் தனது ID-ஐ மறைத்து ANNONYMAS-ஆக கருத்தளித்ததுதான் வருத்தமளிக்கிறது.ஒரு வேளை மாற்று கறுத்து கூறுவதால் நான் தவறாக நினைத்து விடுவேன் என நினைத்துவிட்டாரோ என்னவோ?
நண்பர்களே!மாற்றுக்கருத்துகளுடன் வாதம் செய்தால் மட்டுமே நாம் ஒரு விஷயத்தைப்பற்றி கூறுகையில் அதில் உள்ள முழுமையான நிறை குறைகளை அறிந்து கொள்ளமுடியும்.நிறைய வாதம் எதிர்வாதங்கள் வந்தால்தான் நாம் எழுதுவதற்கு உற்சாக டானிக்கா இருக்கும்.சும்மா ஏனோ தானோன்னு எழுதிடலாம்னு நினைக்க தோணாது.
கடந்த பதிவர் சந்திப்பில் இப்போது எல்லாம் வாதம்,எதிர்வாதங்கள் குறைந்துவிட்டது என லக்கி யுவகிருஷ்ணாவும்,கே.ஆர்.பி.செந்தில்,கேபிள் சங்கர்,போன்றோர் ஆதங்கப்பட்டனர்.இப்படியெல்லாம் நடந்தால் தான் ஆரோக்கியமான பதிவுலக சூழல் இருக்கும் என்பது அவர்களுடைய,என்னுடைய விருப்பமும் கூட.
எனவே நண்பர்களே!என் பதிவுகளில் மட்டுமல்ல எல்லோருடைய பதிவுகளிலும் சொல்லப்பட்ட கருத்துகளில் மாற்றுக்கருத்து இருப்பின் தயக்கமில்லாமல் எடுத்துச்சொல்லுவோம்.யாரும் தவறா நினைக்கமாட்டாங்க.நானும் தான்!நம்வீட்டிலேயே ஒரு முடிவு எடுக்கும் போது எத்தனை விதமான கருத்துகள் ஆனால் யாரும் யாரையும் மாற்றானாக பார்ப்பதில்லையே!அது போல பதிவுலகமும் நமக்கு ஒரு வீடுதான்.நாமெல்லாம் ஒரு கூட்டுப்பறவைகள் தான்.
என்ன நண்பர்களே!கிளம்பிவிட்டீர்களா வாதம் எதிர்வாதங்களுடன்?நடக்கும் விவாதங்களில் மடிக்கணினிகள் மடிந்து தொங்கட்டும்,மேசைக்கணினிகள் மேசையை விட்டு ஓடட்டும்,மொபைல்கள் மிரண்டு திணரட்டும்.ம்ம்ம் கிளப்புங்கள்!
நான் உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறேன்!
இன்னும் தல பாணியில சொல்லனும்னா...
அடப்பாவி!நல்லாருந்த கூட்டில குண்டு வச்சுட்டியேடா ன்னு கேக்குறது தெரியுது.ஏதோ நம்மால முடிஞ்சது நாராயண! நாராயண!
__________________________________________________________________________________
கடந்த பதிவில் விவாதம் நடத்திய நண்பர்களுக்கு நன்றி!
__________________________________________________________________________________
__________________________________________________________________________________
Tweet | ||||||
32 comments:
இதற்கு எதிர்பதிவு விரைவில்...
@தமிழ்வாசி - Prakash
ம்.ஆரமபிச்சிடீங்க போல.கிளப்புங்கள்!
வாழ்த்துக்கள் கோகுல் இன்னும் 500 5000 , 50000 என்று பெருக
@ஜ.ரா.ரமேஷ் பாபு
எல்லாம் உங்கள் ஆதரவால் தான் .நன்றி!
பட்டய கிளப்புவோம்..
@suryajeevaநடத்துங்க!
ஆமா முந்தைய பதிவில் பெயரில்லாமல் வந்து கருத்து சொன்னர் அதிக தகவல் தெரிந்த விஷயக்காரர்.. ஆனா சிலபேர் வேண்டுமென்றே பெயர் மறைத்து விஷமம் செய்வார்கள்...
அரை சதத்திற்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் கோகுல்!
கிளம்பிட்டீங்க போல. விவாதங்கள் தொடங்கட்டும். விவேகமான சிந்தனைகளுடன் வரும் பின்னூட்டங்களை ஏற்பதோ, மறுப்பதோ சிறப்பாக நிகழட்டும்.
வாழ்த்துக்கள் மீண்டும்.
கருத்துக்கள் - மாற்றுக்கருத்துக்கள் தொடர்பாக நீங்க சொன்னது சரி!
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மாப்பிள..
கடந்த பதிவு 50வது பதிவா வாழ்த்துக்கள் மச்சி.
வாழ்த்துக்கள் நண்பரே!
வாழ்த்துக்கள் நண்பா, ஐம்பது ஐந்நூறாக தொடருக ....
வாழ்த்துக்கள் பதிவு 50 தொடர்ந்து லட்சங்களை எட்டட்டும்!
மாற்றுக்கருத்து விடயத்தையும் நானும் வழிமொழிகின்றேன்!
கோகுல் என் மனதில் உறுத்தும் ஒரு விடயம் பற்றி பேசியுள்ளீர் மகிழ்ச்சி. ஏன் இந்த ஆக்கம் சரியில்லை, இதை இப்படி எழுதினால் என்ன என்று ஏன் ஒருவரும் கூறுகிறார்களில்லை. சூப்பர்! அது இது வென சரியில்லாத ஆக்கத்திற்கும் கொப்பில தூக்கி வைக்கிறாங்களே ? நெகட்டிவ்வாகக் கூறப் பயமா? இது ஏன்? என்று எனக்கும் குடைகிறது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்... வலையுலகில் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகள்..
பேஸ் புக்- தளத்தில் இது போன்ற விவாதங்கள் தொடர்ந்து நடப்பதாக தெரிகிறது. ஆனால் அதில் சில வரம்பு மீறி போய் விடுகிறார்கள், அது தான் வருத்ததினை ஏற்படுத்துகிறது.
அருமைப் பதிவு
வாழ்த்துக்கள் நண்பரே....
வாழ்த்துகள் கோகுல்..
வாழ்த்துகள் கோகுல்..
நீங்க கலக்குங்க
50 -வது பதிவை தாண்டி வெற்றி நடை போடும் நண்பர் கோகுல்
வாழ்த்துக்கள்
மேலும் வளருங்கள் அனைவரின் ஆசிகளோடு
த.ம 12
வாழ்த்துக்கள்.ஜால்ரா போடாமல் குறைகளை சுட்டி காட்டுவோர்தான் நம்மை வழி நடத்துபவர்கள்.நன்றி.
என்னுடைய வலையிலும் இப்படி தான் ANNONYMAS-ஆக கருத்தளிக்கிறார் ஒரு நண்பர்
இதை காண இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
இன்று கூடல் பாலாவின் வலையில்
வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்
பதிவுலகமும் நமக்கு ஒரு வீடுதான்.நாமெல்லாம் ஒரு கூட்டுப்பறவைகள் தான்.
ஒரு கூட்டுப்பறவைக்கு ---
50 வது பதிவு வாழ்த்துக்கள்.
எனவே நண்பர்களே!என் பதிவுகளில் மட்டுமல்ல எல்லோருடைய பதிவுகளிலும் சொல்லப்பட்ட கருத்துகளில் மாற்றுக்கருத்து இருப்பின் தயக்கமில்லாமல் எடுத்துச்சொல்லுவோம்.யாரும் தவறா நினைக்கமாட்டாங்க.நானும் தான்!நம்வீட்டிலேயே ஒரு முடிவு எடுக்கும் போது எத்தனை விதமான கருத்துகள் ஆனால் யாரும் யாரையும் மாற்றானாக பார்ப்பதில்லையே!அது போல பதிவுலகமும் நமக்கு ஒரு வீடுதான்.நாமெல்லாம் ஒரு கூட்டுப்பறவைகள் தான்.//
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்... நண்பா...
வணக்கம் மச்சி,
வாழ்த்துக்களை முதலில் பிடித்துக் கொள்ளுங்கள்.
உங்களின் பதிவுலக வெற்றிக்கான முதற் படியான மாற்றுக் கருத்துக்களுக்கான வாசலைத் திறந்து விட்டிருக்கிறீங்க.
தொடர்ந்தும் கலக்குங்க தல
தெளிவான உளம் கொண்டவராக காத்திரமான பதிவுகளுக்கு எது அவசியம் என்பதனை எடுத்துரைத்திருக்கிறீங்க.
மீண்டும் வாழ்த்துக்கள் நண்பா.
Post a Comment