அட இதுக்குப்போய் ஏங்க பீல் பண்றீங்க?வாங்க நான் வாங்கித்தரேன்’நீங்க கூப்பிடறது புரியுது.உங்க அன்புக்கு நன்றி.ஆனா இத சொன்னது நான் இல்லைங்க நம்ம நாட்டு தேசிய விளையாட்டான ஹாக்கி(அடிக்கடி ஞாபகப்படுதுங்கப்பா!)அணியின் முன்னால் கேப்டனும் அதிரடி வீரருமான தன்ராஜ்பிள்ளை மனம் நொந்து சொன்னதுதான் இது.
அவர் இப்படி சொன்னதுக்கு காரணம் இருக்குங்க.ஒரு மேட்ச் ஆட இந்திய தேசிய ஹாக்கி சம்மேளனம் இவங்களுக்கு கொடுக்கும் அலவன்சே 900 ரூபாதானாம்!ஆனா ரூம் மட்டும் ஏதாவது நட்சத்திர ஹோட்டல்கள்ல போட்டு கொடுத்துடுவாங்கலாம்.
யாராவது நண்பர்கள்,உறவினர்கள் ஹோட்டல்ல பாக்க வந்தா ஒரு டீ கூட வாங்கி கொடுக்க முடியாத நிலையில் தான் நாங்கள் இருந்திருக்கிறோம் என நொந்திருக்கிறார் இவர்.
இன்னொரு கொடுமை கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய போட்டியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை 25,000 ஆயிரமாம்.அடேங்கப்பா!எவ்வளவு தாராள மனசு!
இப்ப நடந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் CLT20 –ல் சாம்பியனாகப்போகும் அணிக்கு கிடைக்கப்போகும் தொகை ரூ.28 கோடியாம்!(ஏன் இவ்வளவு கஞ்சத்தனம் இன்னும் கொஞ்சம் கொடுக்கலாம்).இது கூடப்பரவால்ல.ஐந்திளுருந்து பத்தாவது இடம் வரையுள்ள அணிகளுக்கு தலா ரூ.95 லட்சம் வரை வழங்கப்படுமாம்.(அடங்கோ!மொத்தமே பத்து அணிகள்தான்)
அவங்களச்சொல்லி என்னங்க பண்றது ஒரே நேரத்துல ஒரு கிரிக்கெட் மேட்சும்,ஒரு ஹாக்கி மேட்சும் நேரடி ஒளிபரப்பானா நாம என்ன பண்ணுவோம்?நான் நாம நாம’ன்னு சொல்றது என்னையும் சேர்த்துதான்.கிர்ரிக்கேட்டைபாத்துட்டு பிடிச்ச அணி ஜெயிச்சா நாம யாருன்னு காட்டிடோம்ல’ன்னும்,தோத்துட்டா இவங்க எப்பவுமே இப்படித்தான்’ன்னு நொந்துக்கிட்டு சரி ஹாக்கியில நம்மாளுங்க என்ன பண்ணியிருக்காங்கன்னு ஏதாவது செய்தி சானல் பாத்துட்டு இருப்போம் ஜெயிச்சுருந்தா நம்ம தேசிய விளையாட்டுனா சும்மாவான்னு மார் தட்டிக்கறோம்.அதுலயும் தோத்துடுசுன்னா இவங்களையும் நம்ப முடியலப்பா’ன்னு சொல்லிட்டு அடுத்த கிரிக்கெட் மேட்ச் என்னைக்குன்னு பாக்க ஆரம்பிச்சுடுவோம்!
அதனால நான் என்ன சொல்ல வரன்னா நாம என்ன பண்ணனும்னா மொதல்ல நாம நம்மள மாத்திக்கணும்,இப்பவும் நாம’ல நானும் இருக்கேன்.கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட்டையும் சேர்த்து பிற விளையாட்டுகளுக்கும் ஆதரவு கொடுக்கணும்.அப்பறமா அரசாங்கத்த ஆதரவு கொடுக்க வைக்கணும்.எதுவும் செய்யாம, ம்ம்க்கூம்!நூத்தி பத்து கோடி பேர் இருந்துட்டு ஒலிம்பிக்க்ல ஒரு பதக்கம் வாங்கவே முக்குறோம்னு வியாக்யானம் பேசிட்டு இருந்தா கடைசி வரைக்கு பேசிட்டே இருக்க வேண்டியதுதான்!
Tweet | ||||||
37 comments:
பாவம் யாராவது ஒரு டி வாணி கொடுங்கப்பா அந்த பிளேயருக்கு
சரிதான் போங்க... நிலமை அப்படி.. இன்னைக்கு கிரிக்கட்ட விரும்பிற இளைஞர்கள்ள எத்தின பேர் ஹாக்கி விரும்புறாங்க
தேசிய விளையாட்டு க்ளுகோஸ் ஏத்த வேண்டிய நிலையில் இருக்கு..
அதுவும் இல்லாம அதுல வரும்படி கம்மி அதான் இப்பிடி இருக்கு
//கிரிக்கெட்டையும் சேர்த்து பிற விளையாட்டுகளுக்கும் ஆதரவு கொடுக்கணும்.அப்பறமா அரசாங்கத்த ஆதரவு கொடுக்க வைக்கணும்//
உண்மைதான் நண்பரே.இந்தியாவில் கிரிக்கெட்டிற்க்கு இருக்கும் ஆதரவு (அவர்கள் தொடர்ந்து தோற்றாலும் கூட)
பிற விளையாடுக்களுக்கும் கொடுக்கப்படல் வேண்டும்
நல்லதோர் பகிர்விற்க்கு நன்றி
தேசிய விளையாட்டில் பங்குபற்றும் வீரர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை ???
கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு எண்டு நினச்சுகிட்டு இருக்காங்க
இதுக்கு காரணம் அந்நிய நாட்டு சதி...ஏதாவது நம்மால தீக்க முடியாத பிரச்சனைன்னா இப்படித்தான் சொல்லணும்!
அவன் அவன் நம்ம வாழ்க்கையிலேயே விளையாடிகிட்டு இருக்கானுங்க, அதெல்லாம் விட்டுட்டு எந்த விளையாட்டு பெரிசுன்னு கேட்டா... 2g விளையாட்டை விடவா மற்ற விளையாட்டுக்கள் பெரிசு..
இனிய மாலை வணக்கம் பாஸ்,
கிரிக்கட் போற்றப்படும் அளவிற்கு,
கிரிக்கட்டிற்கு வழங்கப்படும் ஆதரவிற்கு இணையாக ஏனைய விளையாட்டுக்களுக்கு ஆதரவு வழங்கப்படாது, அவை வீழ்சியுறும் நிலையினை அருமையான உதாரண விளக்கத்தினூடாகச் சொல்லியிருக்கிறீங்க.
அணைத்து விளையாட்டுக்கும் மதிப்பு அளிக்கவண்டும் என்ற தங்கள் கருத்து வரவேற்க தக்கது...சகோ
ஹாக்கிக்கு எப்போ இந்த நிலை மாற போகுதோ? உங்க பதிவு சுவாரஸ்யமா இருக்கு நண்பா
எல்லா ஓட்டும் போட்டாச்சு.....
தங்கள் ஆதங்கம் சரியே
முதலில் நம்மை சரி செய்வோம்
நல்ல பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 3
சரியான பதிவு ..
வாழ்த்துக்கள்
கிரிக்கெட் மாயை இருக்கும்வரை டீ குடிக்க முடியாது.
இந்தியாவின் தேசிய விளையாட்டுக்கு இவ்வளவு தானா மரியாதை..!!!
நல்ல ஆதங்கம் நண்பரே...அதுவும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வித்தகர் தன்ராஜ் பிள்ளை மூலம்...
அவரைப்பற்றி நான் பதிவுலகில் கால் வைத்த பொழுது எழுதினேன்...
http://reverienreality.blogspot.com/2011/06/blog-post_18.html#more
இன்னும் நன்றாக நினைவிருக்கிறது...கிரிக்கெட் பாட் கட்டி நான் ஹாக்கி கோலியாக நின்றது...பழைய பந்தில் சுண்ணாம்பு அடித்து யுனிவெர்சிட்டி மாட்சில் விளையாட தந்தது...
ஆசிய கோப்பை வென்றதுக்கு இந்திய ஹாக்கி அணிக்கு கிடைத்தது ஒரு ஸ்கூடர்...அன்றைய தினம் 50 ரன் அடித்த ஒருவருக்கு வோல்க்வகன் கார்...இது தான் நம் தேசிய விளையாட்டின் நிலை...
எட்டு முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றும் நமக்கு அதன் மீது ஈடுபாடே வரவில்லையே...
thamil manam 7
சரி மாறிடுவோம்
ஹாக்கி நாம பார்க்கனும்ன்னு நினைச்சாக்கூட டிவியில போடுறதில்லைன்னு நினைக்கிறேன்... DD Sports எங்கேயோ சொறி சொறியா வர்றதா ஞாபகம்...
இந்த நிலமை எப்போ மாறும்னு தெரியல. எப்படியும் 2050 ஒலிம்பிக்ல இந்தியா பத்து தங்கமாவது வாங்கிடும்.
கோகுல்,
இன்னும் 5 வருஷத்துல தேசியக்கொடியவே மறந்திடற நிலைமையில தான் நாடு போய்க்கிட்டிருக்கு.
மிகவும் வருந்தத்தக்க விடயம்...தேசியவிளையாட்டிற்கே இந்த நிலையா?கிரிக்கெட் வீரர்களுக்கு கோடி,கோடியாக பணம் குவியும் போது...ஏன் இந்த பாகுபாடு சம்மந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்
மொதல்ல நாம நம்மள மாத்திக்கணும்,
உண்மைதான் நண்பா..
என்ன கொடுமை இது..
கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா?????????
பழந்தமிழரின் 36வகை விளையாட்டுகளைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..
http://gunathamizh.blogspot.com/2009/06/36.html
பகிர்விற்க்கு நன்றி
மக்கள் மனநிலையும், மீடியாவும் மாறாதவரை ஒன்றும் செய்ய முடியாது.
அதனால நான் என்ன சொல்ல வரன்னா நாம என்ன பண்ணனும்னா மொதல்ல நாம நம்மள மாத்திக்கணும்,இப்பவும் நாம’ல நானும் இருக்கேன்.கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட்டையும் சேர்த்து பிற விளையாட்டுகளுக்கும் ஆதரவு கொடுக்கணும்.அப்பறமா அரசாங்கத்த ஆதரவு கொடுக்க வைக்கணும்.எதுவும் செய்யாம, ம்ம்க்கூம்!நூத்தி பத்து கோடி பேர் இருந்துட்டு ஒலிம்பிக்க்ல ஒரு பதக்கம் வாங்கவே முக்குறோம்னு வியாக்யானம் பேசிட்டு இருந்தா கடைசி வரைக்கு பேசிட்டே இருக்க வேண்டியதுதான்!
விளைடாட்டு வீரரே அதிகம் சூடாவாதீங்க அப்புறம் வி பி ஏறிடும் ......ஹி ..ஹி ..ஹி ...
வாழ்த்துக்கள் சகோ உங்கள் எண்ணம் ஈடேறட்டும் .........மிக்க நன்றி பகிர்வுக்கு .ஓட்டெல்லாம் போட்டாச்சு .
நாம நம்மள மாத்திக்கணும்,
சரியா சொன்னீங்க நண்பா...
சரிதான் போங்க......
ஹாக்கி விளையாட்டுக்கு(தேசிய விளையாட்டுக்கு) மரியாதையே இல்லை
எல்லாம் வணிகமயமாகிட்ட சூழல்ல அரசாங்கம்தான் ஏதாவது செய்யனும்....
பாவம்ய கொக்கி விளையாட்டு வீரர்கள்
உண்மை தான்... தேசிய விளையாட்டை பெரும்பாலும் தெரிந்துகொள்ள கூட ஹாக்கிக்கு குடுப்பதில்லை.. கிரிக்கெட்டை ரசிப்பதில் பாதி இதற்கும் குடுக்கலாமே.. உங்கள் ஆதங்கம் சரியானதே... புடிங்க ஒரு டீ
ஆத்துப்போனவர்களின் கையில் ஆட்சியையும் அதிகாரமும் இருக்கும் போது....
இன்னும் என்னென்னமோ நடக்கும்...
இளைய பாரதம் ஈயடுச்சுக்கிட்டு இருக்கு இல்லைன்னா?
டாஸ்மார்க்கில தள்ளாடிக்கிட்டு இருக்கு...
அதை முதல்ல தொலைச்சா..
கனவு மெய்ப்படும்.
தேசிய உணர்விற்கு பாராட்டுக்கள் நண்பரே!
ஹாக்கி ஹாக்கின்னு ஒரு விளையாட்டு இருக்கதையே ஒங்க பதிவ படிச்சிதான் தெரிஞ்சிகிட்டேன்!! பகிர்வுக்கு நன்றி!!
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
விளையாட்டுவீரர்களிற்குப் போதிய ஊக்குவிப்பும் கௌரவமும் கொடுக்கப்பட்டமையினால்தான் மனிதசக்தி நிறைந்த இந்திய நாட்டில் விளையாட்டுத்துறை வலுவிழந்து காணப்படுகிறது.
Post a Comment