வணக்கம் நண்பர்களே!
முந்தைய பதிவில் இதற்க்கு கூட காசு வாங்கணுமா? என மோட்டல் கழிவறைகளின் கொடுமையை கூறியிருந்தேன்.கழிவறைகள் தான் இப்படி இருக்கின்றன.
சரி!சாப்பிடலாம்னு போனா விலையெல்லாம் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கு.தரமோ கையேந்திபவன விட கேவலம்.ஒரு மூணு வருசத்துக்கு முன்னால ஓசூரில் இருந்து சேலம் வரும்போகும்போது கிளம்பற அவசரத்துல சாப்பிடாம கிளம்பிட்டேன்.செம பசி வழியில் கிருஷ்னகிரிக்கு அருகில் உள்ள ஒரு மோட்டல்ல பஸ் நின்னுச்சு.
சாப்பிடலாம்னு போய் உக்காந்தேன்.
மெனு கார்ட் கொடுத்தார்கள்.அடங்கோ!இது வேறயான்னு நினைச்சுகிட்டு மெனுவை பார்த்து ஷாக்காகிட்டேன்.டிஷ்சுக்கு ஒரு ரேட்டாம்.சைட் டிஷ் தனி ரேட்டாம்!பரோட்டா முப்பதுரூபா!அதுக்கு சைட் டிஷ் முப்பது ரூபாயாம்!சரி ஒருடீ குடிச்சுட்டு வேளைய முடிசுக்கலாம்னு பாத்தா டீயே எட்டு ரூபாயாம்!நினைவு கொள்ளுங்கள் மூன்று வருடங்களுக்கு முன்!சரி பிஸ்கட் பாக்கெட்டாவது வாங்கலாம்னு பாத்தா எம்.ஆர்.பியை விட மூன்று ரூபாய் அதிகம்!வாட்டர் பாட்டிலும்தான்!
வேற வழியில்லாமஅன்னைக்கு ஒரு பிஸ்கட் பாக்கட்டோட அன்னைய பசிய அடக்கிகிட்டேன்!அன்னைக்கு முடிவு பண்ணேன்.கொய்யால இனிமே இந்த மோட்டல்ங்க பக்கமே வரக்கூடாதுன்னு.அதுக்கப்பறம் பஸ்ல போகனும்னா வீட்ல இருந்தே ஒரு பாட்டில்ல தண்ணியும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் எடுத்துட்டு போயிடுறேன்!.இருந்தாலும் தொலைதூரப்பயணங்களில் பசிக்கொடுமைக்கு பயந்து கேக்குற காச கொடுத்து சாப்பிட வேண்டிய கட்டாயம் பலருக்கு இருக்கு.
இருந்தாலும் சும்மாவேனும் பஸ் நிக்கும் மோட்டல்லலாம்போய் நாலைஞ்சு அயிட்டங்களை விலை கேட்பேன்.பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்தது போல அதிக விலைதான்.விலைய கேட்டுட்டு ஏற இறங்க பாத்துட்டு வந்துடுவேன்!.
இப்படி பஸ்சுக்கு பத்து பேர் விலைய மட்டும் கேட்டுட்டு எதையும் வாங்காம திரும்பி வந்தா அவங்களுக்கு கொஞ்சமாவது உரைக்கும்.
இதுல நடக்கும் இன்னொரு கொடுமை என்னன்னா பேருந்து ஓட்டுனர்கள் குறிப்பிட்ட மோட்டல்களில் பஸ்ஸை நிறுத்த மேலிடத்திலிருந்து கட்ட்யாப்படுத்தப்படுகின்றனர்.இதை மக்கள் தொலைக்காட்சி கொஞ்ச நாள்களுக்கு முன் படம் பிடித்துக்காட்டியது.போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளே பேருந்துகளை குறிப்பிட்ட நிறுத்துமாறு திருப்பி விட்டதை காட்டியது அதிர்ச்சி அளித்தது.மேலும் கடந்த பதிவிற்கு நண்பர் சம்பத்குமார்(TAMILPARENTS.COM) அனுப்பிய மெயிலில் மோட்டல் நிர்வாகத்தினரால் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் “நன்கு’’ கவனிக்கப்படுவதாலும்,மக்கள் பிரதிநிதிகள் பேருந்துப்பயணம் மேற்கொள்ளாமல் காரிலேயே வலம் வருவதாலும் இந்த நிலை தொடர்வதாகவும் ஆதங்கப்பட்டார்.
நானறிந்தவரை(நீங்களும்தான்) தமிழகத்திலுள்ள பெரும்பாலான மோட்டல்களில் சுகாதாரமான கழிப்பிட வசதிகளும் இல்லை.விற்கப்படும் உணவுப்பொருட்கள் எம்.ஆர்.பி.யை விட மூன்று ரூபாய் முதல் அதிகமாகவே விற்கப்படுகின்றன.மேலும் உணவுப்பொருட்கள் தரமாக இருப்பதாகவும் தெரியவில்லை.
இன்னொரு சந்தேகமும் இருக்கிறது தமிழகம் முழுவதும் உள்ள மோட்டல்களில் எத்தனை முறையான அனுமதி பெற்று இயங்குகின்றன? என்பது தான் அது.ஆனால் “முறையான”அனுமதியுடன் பல மோட்டல்கள் இயங்குவதே உண்மை.
கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததைப்போல் FACEBOOK-ல் ASK கேட்டால் கிடைக்கும் என்ற குழுவின் மூலம் இது போல் அதிக விலைக்கு உணவுப்பொருட்களை விற்ற திருத்தணியில் உள்ள ஒரு மோட்டலைப்பற்றி ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புகார்கள் தொலைபேசி மூலம் அளிக்கப்பட்டன.
இதே போல் ஊரில் உள்ள அணைத்து மோட்டல்களின்`தரத்தையும்,விலையையும் அரசே நிர்ணயித்து அனுமதி வழங்கி,அந்த மோட்டல்களில் மட்டும் பேருந்துகளை நிறுத்த போக்குவரத்து துறையினரை பணிக்கவேண்டும் என ஒரு கோரிக்கையை அரசுக்கு நாம் சமூக வலைத்தளங்களின் வாயிலாக தெரிவிக்க வேண்டும்.இதற்கு என்ன செய்ய வேண்டுமென்று உங்கள் ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!நன்றி!
பின்குறிப்பு-விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் செங்கல்ப்பட்டு அருகில் மாமண்டூர் என நினைக்கிறேன்.அங்கு ஒரு மோட்டல் உள்ளது.இங்கே கழிப்பிடம் இலவசம்,அதுவும் அதி சுத்தமாய்!(அதியசம் ஆனால் உண்மை).பொருட்களும் நியாமான விலையில்.விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் இங்கே நின்று செல்லுமாம்.விழுப்புரம் கோட்ட நிர்வாகம் நடத்துவதாக கேள்விப்பட்டேன்,தெரியவில்லை.இது போல் எல்லா மோட்டல்களும் அமைந்து விட்டால் நமது பயணம் புத்துணர்ச்சியுடன் முடியும் என்பதில் சந்தேகமில்லை.
__________________________________________________________________________________
நண்பர்களே!இந்த பதிவை(கடந்த பதிவையும்) தங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துசெல்லுங்கள்!
__________________________________________________________________________________
Tweet | ||||||
42 comments:
//விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் செங்கல்ப்பட்டு அருகில் மாமண்டூர் என நினைக்கிறேன்.அங்கு ஒரு மோட்டல் உள்ளது.இங்கே கழிப்பிடம் இலவசம்,அதுவும் அதி சுத்தமாய்!(அதியசம் ஆனால் உண்மை).பொருட்களும் நியாமான விலையில்.விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் இங்கே நின்று செல்லுமாம்.விழுப்புரம் கோட்ட நிர்வாகம் நடத்துவதாக கேள்விப்பட்டேன்,//
உண்மையாயிருந்தால் மகிழ்ச்சிதான் நண்பரே..
மோட்டல்களில் சில நல்லனவையும் உள்ளது என்பதை கேள்விபட்டதற்க்கு..
நன்றியுடன்
சம்பத்குமார்
அனுபவம் புதிதா நண்பரே..?
ஒரு மாதமாகவே என் பதிவுகள் ரொம்ப தாமதமாக வருகின்றன நண்பரே...என் டாஸ்போர்டில் எதுவுமே வருவதில்லை...
முடிந்த வரை மெயில் மூலம் எல்லார் பதிவும் subscribe பண்ணி தான் follow பண்ணுகிறேன்...
என் பெயரை தமிழில் மாற்றியதிலிருந்து தான் பிரச்சனையே...
மாப்பிள எல்லாத்தையும் அரசாங்கம் செய்ய வேண்டுமென்றால் சிரமம்தான்.. முறையான அனுமதியும் கடினமான சட்டங்களும் தேவை..
// விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் செங்கல்ப்பட்டு அருகில் மாமண்டூர் என நினைக்கிறேன் //
இது நம்ம ஊரு... அந்த மோட்டலில் இருந்து நடந்துபோகும் தூரத்தில்தான் நான் படித்த கல்லூரி அமைந்திருக்கிறது... ஒன்பது ரூபாய் நோட்டு, புதுப்பேட்டை போன்ற படங்களின் ஷூட்டிங் அந்த மோட்டலில் நடந்திருக்கிறது... கழிவறை இலவசம்தான்... ஆனால் நீங்கள் சொல்வதுபோல ரொம்ப சுத்தமாக ஒன்றும் இருக்காது... ஆனால் அங்கே யாரும் பொதுவெளியில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள்... Comparatively better...
மொட்டல்கள் கொள்ளை அடிப்பதோடு, சுகாதார கேடும் நிறைந்த குப்பை ஹோட்டல்
மனதில் இருக்கும் ஆதங்கத்தையும், கொந்தளிப்பையும் அழகான முறையில் பதிவிடும் நண்பருக்கு வாழ்த்துக்கள் நன்றி
வித்தியாசமான அனுபவம்! தெரியப்படுத்தியமைக்கு நன்றி நண்பா!
நானும் கூடுமானவரையில் பட்டினி கூட
இருந்துவிடுவேன் இந்த மோடல்களில் சாப்பிடுவதில்லை
எல்லோரும் தவிர்க்கத் துவங்கினாலே இந்த அவல நிலை
நிச்சயம் மாறிப் போகும்
நல்ல சமூக விழிப்புணர்வுப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7
உண்ணும் உணவைக்கூட விட்டுவைக்கமாட்டார்களா
இனிய காலை வணக்கம் நண்பா,
மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
அரசாங்கம் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இத்தகைய சீர்கேடுகளை நீக்க முடியும்.
நல்லதோர் பதிவு.
எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்தால் எந்த சீர்கேட்டையும் மாற்ற முடியும். நல்ல விழிப்புணர்வு பதிவு.
உண்மைய புட்டுப்புட்டு வெக்கிறீய்ங்களே கோகுல்.!
எழுதுங்கள். கூடுமானவரையில் சமூகத்தை எழுப்ப முயற்சிக்கலாம்.
அது அரசு மோட்டல் தோழர்... ஆனாலும் அங்கே கடைகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்கள் அதிக விலைக்கு தான் விற்று கொண்டிருந்தார்கள் இப்பொழுது எப்படியோ தெரியவில்லை
மிகவும்..பயனுள்ள பதிவு பலரை சென்று அடையவேண்டும்..
ஆம் நண்பா..
இந்தக் கடைகள் எல்லாம் ஏதோ தீவில் வைத்திருப்பதுபோலத் தான் விலை சொல்கிறார்கள்..
நல்ல பதிவு.
மோட்டல்கள் பொதுவாக பல பொருட்களை கம்பனிகளில் வாங்குவதில்லை....நேரடியாக Whole sellers இடம் வாங்குகிறார்கள்...இதில் அதிகாரிகளுக்கு 20% கமிஷன் உண்டு...அதனால்தான் இப்படி...அதுவும் நீங்கள் குறிப்பிடும் இடத்தில்(mamandor!) அரசு பேருந்துகள் மட்டுமே நிற்கும் என்று நினைக்கிறேன்!
பிஸ்கட் எம் ஆர் பி ஐ விட அதிக விலை என்பதை விட அதோட brand இருக்கிறதே. எல்லாம் டூப்ளிகேட் . அத விட உள்ள போய் சாப்பிட்டு வர்ற டிரைவர் கண்டக்டரை பார்த்தா என்னோமோ நல்ல கல்யாண விருந்த சாப்பிட்ட மாதிரி இருப்பாங்க. எப்படிப்பா இந்த கொடுமைய தெனமும் சமாளிக்கிறீங்க?
முறை படுத்தாத வரை இப்படித்தான்!!,
நாம் கூட தினமும் வருகிறோமா ஒரு நாள் தானே என்று நினைத்து அங்கே வாங்கி சாப்பிடுவதே இன்னொரு காரணம்..
அந்தமாமண்டூர் பக்கம் இருக்கும் மோட்டலைப்போல எல்லா மோட்டலையும் பராமரிக்க முடியாதா?பொது மக்களிடம் காசு வாங்கித்தானே அவங்களுக்கு வியாபாரமே நடக்கிரது. அப்போ அவர்களின் சவுரியத்தை கவனத்தில் கொள்ள வேண்டாமா?
தட்டி கேட்க பட வேண்டிய விஷயம்
நானும் இந்த விஷயத்தில் உங்களைப் போல்தான். உணவகங்களில் எட்டிப் பார்த்துவிட்டு வந்து விடுவேன். பிஸ்கட் மட்டுமே. ஒரு நல்ல மோட்டல் பற்றிச் சொல்லியுள்ளீர்கள். அதுபோல் அனைத்தும் மாறினால்... மகிழலாம். நல்ல பதிவு.
நீங்கள் சொல்லும் மாமண்டுர் மோட்டலில் வாழைப்பழம் 4 ரூபாய்.
நம்மூர் மோட்டல்கள் பல வருடங்களாகவே இப்படித்தான் இருக்கு, அந்த மாமண்டூர் மோட்டல் கொஞ்சம் பரவாயில்லைதான்....
Philosophy Prabhakaran said...
//ஆனால் நீங்கள் சொல்வதுபோல ரொம்ப சுத்தமாக ஒன்றும் இருக்காது... ஆனால் அங்கே யாரும் பொதுவெளியில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள்... Comparatively better...//
ஒருவேள நான் போகும் போது மட்டும் சுத்தமா வைச்சுஇருந்தாங்களோ?
கோகுல் மனதில் ரொம்ப நல்ல நல்ல விசயங்கள்லாம் இருக்கு போலங்க :)
பெரும்பாலான மோட்டல்கள் இப்படித்தான் இருக்கின்றன. பெரும்பாலும் பேருந்து ஓட்டுனர்கள் அங்கேயே கொண்டு நிறுத்துவதற்குக்காரணம் அவுங்களுக்கு தனிப்பட்ட கவனிப்பு இருக்கிறதுதான்.
மொத்தத்துல மனசாட்சிப் படி நடந்துக்கிட்டா ரொம்ப சந்தோசம்.. நீங்க சொல்லுறமாதிரி மாமண்டூர் மோட்டல் மாதிரி இருந்தால் நிச்சயமா சந்தோசம்தான் :)))
//தமிழ்வாசி - Prakash said...
மொட்டல்கள் கொள்ளை அடிப்பதோடு, சுகாதார கேடும் நிறைந்த குப்பை ஹோட்டல்//
//
மாய உலகம் said...
மனதில் இருக்கும் ஆதங்கத்தையும், கொந்தளிப்பையும் அழகான முறையில் பதிவிடும் நண்பருக்கு வாழ்த்துக்கள் நன்றி//
//
Powder Star - Dr. ஐடியாமணி said...
வித்தியாசமான அனுபவம்! தெரியப்படுத்தியமைக்கு நன்றி நண்பா!
//
Ramani said...
நானும் கூடுமானவரையில் பட்டினி கூட
இருந்துவிடுவேன் இந்த மோடல்களில் சாப்பிடுவதில்லை
எல்லோரும் தவிர்க்கத் துவங்கினாலே இந்த அவல நிலை
நிச்சயம் மாறிப் போகும்
நல்ல சமூக விழிப்புணர்வுப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7
//
மதுரன் said...
உண்ணும் உணவைக்கூட விட்டுவைக்கமாட்டார்களா
//
நிரூபன் said...
இனிய காலை வணக்கம் நண்பா,
மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
அரசாங்கம் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இத்தகைய சீர்கேடுகளை நீக்க முடியும்.
நல்லதோர் பதிவு.
//
கடம்பவன குயில் said...
எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்தால் எந்த சீர்கேட்டையும் மாற்ற முடியும். நல்ல விழிப்புணர்வு பதிவு.
//
சத்ரியன் said...
உண்மைய புட்டுப்புட்டு வெக்கிறீய்ங்களே கோகுல்.!
எழுதுங்கள். கூடுமானவரையில் சமூகத்தை எழுப்ப முயற்சிக்கலாம்.//
வருக நண்பர்களே!
நீங்கள் விழித்துக்கொண்டீர்கள்.நன்றி!மற்றவர்களையும் தட்டி எழுப்புங்கள்.கருத்துகளுக்கு நன்றி!
suryajeeva said...
அது அரசு மோட்டல் தோழர்... ஆனாலும் அங்கே கடைகளை வாடகைக்கு எடுத்திருப்பவர்கள் அதிக விலைக்கு தான் விற்று கொண்டிருந்தார்கள் இப்பொழுது எப்படியோ தெரியவில்லை//
ஆம்!தோழரே!பிற மோட்டல்களுக்கு கொஞ்சம் பரவாயில்லை தானே தவிர ரொம்ப சிறப்பு இல்லை.
//விக்கியுலகம் said...
மோட்டல்கள் பொதுவாக பல பொருட்களை கம்பனிகளில் வாங்குவதில்லை....நேரடியாக Whole sellers இடம் வாங்குகிறார்கள்...இதில் அதிகாரிகளுக்கு 20% கமிஷன் உண்டு...அதனால்தான் இப்படி...அதுவும் நீங்கள் குறிப்பிடும் இடத்தில்(mamandor!) அரசு பேருந்துகள் மட்டுமே நிற்கும் என்று நினைக்கிறேன்!
\\
ஆமா மாம்ஸ் இங்க அரசு பேருந்து மட்டும் நிக்கும்///
///
MANASAALI said...
பிஸ்கட் எம் ஆர் பி ஐ விட அதிக விலை என்பதை விட அதோட brand இருக்கிறதே. எல்லாம் டூப்ளிகேட் . அத விட உள்ள போய் சாப்பிட்டு வர்ற டிரைவர் கண்டக்டரை பார்த்தா என்னோமோ நல்ல கல்யாண விருந்த சாப்பிட்ட மாதிரி இருப்பாங்க. எப்படிப்பா இந்த கொடுமைய தெனமும் சமாளிக்கிறீங்க?
///
கஷ்டம தான்.சில டிரைவர் ,கண்டக்டர்களும்,பிடிக்கலன்னாலும் மேலிட உத்தரவுக்கு பயந்து வண்டிய விட வேண்டிருக்கு////
//
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
முறை படுத்தாத வரை இப்படித்தான்!!,
நாம் கூட தினமும் வருகிறோமா ஒரு நாள் தானே என்று நினைத்து அங்கே வாங்கி சாப்பிடுவதே இன்னொரு காரணம்..//
ஆமா!எப்ப போனாலும் வாங்கவே கூடாது!முடிஞ்சா வரை திட்டமிட்டு தயாரா போனா பரவாயில்ல.திடீர் பயணிகள் தான் அவங்களுக்கு இரை!!
//Lakshmi said...
அந்தமாமண்டூர் பக்கம் இருக்கும் மோட்டலைப்போல எல்லா மோட்டலையும் பராமரிக்க முடியாதா?பொது மக்களிடம் காசு வாங்கித்தானே அவங்களுக்கு வியாபாரமே நடக்கிரது. அப்போ அவர்களின் சவுரியத்தை கவனத்தில் கொள்ள வேண்டாமா?
//
நிச்சயம் கொள்ளவேண்டும்!நம் சக வாசிப்பாளர்களுக்கு ஒரு சிறு விழிப்புணர்வு தான் இந்த பதிவு!
சசிகுமார் said...
தட்டி கேட்க பட வேண்டிய விஷயம்
\\
ஆம்!நண்பா!
//
கணேஷ் said...
நானும் இந்த விஷயத்தில் உங்களைப் போல்தான். உணவகங்களில் எட்டிப் பார்த்துவிட்டு வந்து விடுவேன். பிஸ்கட் மட்டுமே. ஒரு நல்ல மோட்டல் பற்றிச் சொல்லியுள்ளீர்கள். அதுபோல் அனைத்தும் மாறினால்... மகிழலாம். நல்ல பதிவு.
//
மாறினால் நல்லாருக்கும் தான்,அதுக்கான சிறிய முயற்சிதான் இந்த பதிவு!
நன்றி நண்பரே!தங்கள் முதல் வரவிற்கு!
September 23, 2011 12:25 PM
Anonymous said...
நீங்கள் சொல்லும் மாமண்டுர் மோட்டலில் வாழைப்பழம் 4 ரூபாய்.//
டீ பத்து ரூபாய்க்கு விக்கும் போது இது பரவால்ல!ஆனா!மத்த மோட்டல்களுக்கு கொஞ்சம் இது பரவால்லன்னுதான் சொன்னேன்!கழிப்பிடமாவது இலவசமா இருக்கே!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்மூர் மோட்டல்கள் பல வருடங்களாகவே இப்படித்தான் இருக்கு, அந்த மாமண்டூர் மோட்டல் கொஞ்சம் பரவாயில்லைதான்....//
வாங்க!வாங்க!வந்து இணைந்ததுக்கு உங்களுக்கு 101 மொய்!
ஆமாங்க!நீங்க தான் 101-வது ஆள்!
நன்றி!
கோமாளி செல்வா said...
கோகுல் மனதில் ரொம்ப நல்ல நல்ல விசயங்கள்லாம் இருக்கு போலங்க :)
பெரும்பாலான மோட்டல்கள் இப்படித்தான் இருக்கின்றன. பெரும்பாலும் பேருந்து ஓட்டுனர்கள் அங்கேயே கொண்டு நிறுத்துவதற்குக்காரணம் அவுங்களுக்கு தனிப்பட்ட கவனிப்பு இருக்கிறதுதான்.
மொத்தத்துல மனசாட்சிப் படி நடந்துக்கிட்டா ரொம்ப சந்தோசம்.. நீங்க சொல்லுறமாதிரி மாமண்டூர் மோட்டல் மாதிரி இருந்தால் நிச்சயமா சந்தோசம்தான் :)))//
ஆம்மா செல்வா!முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நன்றி!நண்பர்களே!தமிழ்மணம் சூடான இடுகைகளில் இப்பதிவு இடம் பிடிக்க வைத்தமைக்கு!
பெரும்பாலானவை அரசியல்வாதி/அல்லக்கைகளால் நடத்தப்படுபவை..அதனால் தான் இந்த ஆட்டம்.
@செங்கோவி
உண்மைதான்!
/////வேற வழியில்லாமஅன்னைக்கு ஒரு பிஸ்கட் பாக்கட்டோட அன்னைய பசிய அடக்கிகிட்டேன்!////
கவனம்பா இதுக்கும் விலையை ஏத்திடப் போறாங்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்
என்னுடைய ப்லோக்க்கு வருகை தந்ததற்கு நன்றி . உங்க வலைபூவிக்கு இதுதான் முதல் முறை வருகிறேன் . மோட்டல் பற்றிய மேட்டர் சூப்பர் . இது என்னுடைய மனதில் உள்ள ஆதங்கத்தை அப்படியே பிரதிபளிக்குது .
வாழ்த்துக்கள் , சூப்பர் அஹ எழுதுறிங்க . தொடர்ந்தது படிக்குறேன்
நன்றி
சமுதாய விழிப்புணர்வு கொண்ட பதிவு இது.
வாழ்த்துக்கள் கோகுல்.
நடப்பதை அப்படியே எழுதியிருக் கிறீர்கள்.எப்போது மாறும் இந்த நிலை?
அன்பின் கோகுல் - இவை எல்லாம் தவிர்க்க இயலாதவை ஆகி விட்டன - பெண்கள் கழிப்பறைக்கு மூன்று ரூபாய் - ஆண்களுக்கு இரண்டு ரூபாய் - மோட்டல்களில் விலையோ அதிகம் - என்ன செய்வது .... நாம் தான் வீடில் இருந்து எடுத்துச் சென்று ஆங்காங்கே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். நால் பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment