காந்தி பிறந்த மண் –இன்று
கலவரத்திற்கு தத்துக்கொடுக்கப்பட்டது.
மதத்தின் பெயரால்
மனித மிருகங்கள் சில
மதங்கொண்டு
மனிதரையே மாய்க்கின்றன!
இதயமே இல்லாமல்
இரயில் பெட்டிகளை எரித்து
இரக்கமே இல்லாமல்
ஏதுமறியாதோரை கொல்கின்றன!
பதவிக்காக
பணயம் வைக்கப்படுகின்றன-விலை
மதிப்பேயில்லாத
மனித உயிர்கள்!
நாற்காலிக்காக
நசுக்கப்படும்
அப்பிராணிகள்
அப்பாவி மக்கள்!
கடவுளின் பெயரால்
கற்பழிப்பு!
கொலை!!
கொள்ளை!!!
ஆம்!
காந்தி பிறந்த மண்-இன்று
கலவரதிற்க்காக தத்துக்கொடுக்கப்பட்டது.
கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எறிந்த போது ஏன் மனம் எரிந்து எழுதியது.
இப்போது ஏனோ நினைவுக்கு வந்ததால் பதிவிடுகிறேன்! ஏன்னு கேக்காதிங்க சொல்லிப்புட்டேன்!ஆமா!
Tweet | ||||||
32 comments:
//நாற்காலிக்காக
நசுக்கப்படும்
அப்பிராணிகள்
அப்பாவி மக்கள்!//
'நறுக்'தெறித்தாற் போல் கவிதையின் கருவான வார்த்தைகள்.. உள்ளமெங்கும் உடனே வியாபித்திருக்கிறது.. உங்கள் கவிதை..! வாழ்த்துக்கள் கோகுல்..!
ஓட்டும் போட்டாச்சு கோகுல்..!
//மதத்தின் பெயரால்
மனித மிருகங்கள் சில
மதங்கொண்டு
மனிதரையே மாய்க்கின்றன!
இதயமே இல்லாமல்
இரயில் பெட்டிகளை எரித்து
இரக்கமே இல்லாமல்
ஏதுமறியாதோரை கொல்கின்றன!//
மனதை கொள்ளையடித்த வார்த்தைகள் நண்பரே..
அருமையான சமூக விழிப்புணர்வு கவிதை..
நட்புடன்
சம்பத்குமார்
@தங்கம்பழனிகருத்துக்கு நன்றி!
மனதை கொள்ளையடித்த வார்த்தைகள் நண்பரே..
அருமையான சமூக விழிப்புணர்வு கவிதை..
நட்புடன்
சம்பத்குமார்//
வருக நண்பரே! நன்றி!
சாதாரண மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை.நன்று
கவிதை நல்லாயிருக்கையா.. ஆனால் இன்று காந்தி பிறந்த
மண்ணைப்பற்றி வேறு விதமாகவும் கேள்விப்படுகிறோம்.. ஹி ஹி கொலுத்திபோட்டாச்சு...!!!??
காட்டான் said...
கவிதை நல்லாயிருக்கையா.. ஆனால் இன்று காந்தி பிறந்த
மண்ணைப்பற்றி வேறு விதமாகவும் கேள்விப்படுகிறோம்.. ஹி ஹி கொலுத்திபோட்டாச்சு...!!!??//
மாம்ஸ்!அதனால தான் ஏன் நினைவுக்கு வந்ததுன்னு கேக்காதிங்கன்னு சொன்னேன்! இப்படி கொளுத்தி போட்டுடிங்கலே!
shanmugavel said...
சாதாரண மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை.நன்று
//வருகைக்கு நன்றி!
நல்ல கருத்துள்ள கவிதை கோகுல்!
அருமையான அர்த்தமுள்ள கவிதை நண்பா!
கருத்தாளம் சொல்வீரியம்மிக்க கவிதை! இப்போது வேறுவிடயமாகத்தான் அறிகின்றேம் காந்திபிறந்த மண்ணை!
இனிய காலை வணக்கம் நண்பா,
நல்லோர்கள் வாழ்ந்த மண், இன்று நலங் கெட்டுப் போவதும் ஏனோ?
எனும் ஆதங்கத்தினைத் தாங்கி, சமகால வேண்டத்தகாத நிகழ்வுகளைச் சுட்டி நிற்கிறது உங்களின் கவிதை.
காலத்திற்கேற்ற கவிதை பாஸ்..
அனைத்திலும் ஓட்டளித்தாச்சு.
யப்பா நான் காந்தியை பத்தி எதுவும் பேசுறது இல்லைன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்... ஆள விடுங்கடா சாமீ...
கேப்டன் நடிச்ச படத்தை காலாய்கிறீங்கனு வந்தேன்.....ஆனா..அழகான கவிதை சொல்லி இருகீங்க..சூப்பர் நண்பா
எப்ப நினைச்சாலும் பதறும் அந்நிகழ்வு .
ம் ...
Very painful kavithai
நல்ல குடிமகனின் உணர்வு
அசத்தல் கவிதை கோகுல்
ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்ன்னு சொல்லுவாங்க இன்னைக்கு உங்க வார்த்தைங்க எங்க மனச வென்றுடுச்சு
பகிர்வுக்கு நன்றி
இந்த பிரச்சனைக்கு தீர்வு, எந்த ஜாதியவாத அமைப்பும் இப்படி ஊர்வலம் போவதை சட்ட ரீதியாக தடைசெய்யும் ஒரு பொது நல வழக்கை யாராவது போட வேண்டும். . .
அன்புநிறை நண்பரே,
தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த
வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.
இணைப்பு..
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_22.html
ஊர்ல பத்து பதினஞ்சு உண்ணாவிரதம் இருந்தவன் எல்லாம் நிம்மதியா இருக்கான் ஒரே ஒரு உண்ணாவிரதம் இருந்துட்டு நான் படுற பாடு இருக்கே,,, -மோடி
நல்ல அலசல் நண்பா கவிதை சூப்பர்
உணர்வு பூர்வம்!
ஆம்!
காந்தி பிறந்த மண்-இன்று
கலவரதிற்க்காக தத்துக்கொடுக்கப்பட்டது.
ம்ம்ம் என்னத்தச்சொல்றது?
""காந்தி பிறந்த மண்-இன்று
கலவரதிற்க்காக தத்துக்கொடுக்கப்பட்டது.""'
நல்ல சொல்லிருக்கிங்க சகோ....
பாராட்டுக்கள்
எதற்கு இப்போது பதிவாக்கி இருக்கிறீர்கள் என்பதும், அதற்கான உணர்வும் தெளிவாக புரிகிறது கோகுல். கவிதை வெளிப்படும் உணர்ச்சிகள் யதார்த்தம்..
//மதத்தின் பெயரால்
மனித மிருகங்கள் சில
மதங்கொண்டு
மனிதரையே மாய்க்கின்றன//
உரிய நேரத்தில் வந்துள்ள
கவிதை!
தற்போது நடை பெற்று
முடிந்த உண்ணா விரத நாடகம்
அதை மறைக்கத் தான்
அருமை சகோ!நன்றி
புலவர் சா இராமாநுசம்
நல்ல கருத்துள்ள பதிவு நண்பரே
பொய்யை உண்மையாக்கும்
உண்மையை பொய்யாக்கும்
கொலைகார கூட்டத்திற்கு
கொடுக்கப்பட்ட சவுக்கடிதான்
உங்கள் கவிதை.
வாழ்த்துக்கள் கோகுல்.
Post a Comment