இன்னைக்கு இந்த செய்திய பாத்துட்டு ரொம்ப ஷாக் ஆகிட்டேன்!நாம எந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லாம இருக்கோம்னு தெரியுது. நாமளும் சிகரெட் பிடிக்கலைன்னாலும் அதோட விளைவுகளை தெரிஞ்சோ தெரியாமலோ அனுபவிச்சிட்டு வருகிறோம்.
இனி யாரும் எனக்கு சிகரெட் பழக்கம் இல்லேன்னு சொல்லமுடியாது போலிருக்கு.அந்த செய்தி இதோ!
ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டசெஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார்.
மேலும் புதுடில்லியை சேர்ந்த பத்ரா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது இந்தியாவில் காற்றினால் ஒலியினால், மாசுவால் மனித உடல் நலத்திற்கு விளையும் கேடு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார்.
ஒலி மாசுபாட்டால் ஆண்டு தோறும் ஒரு லட்சம் இந்திய குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், மரபியல் குறைபாடு உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
செய்தி-தினமலரில் வந்தது.
இந்த கொசுவர்த்தி பண்ற பாட்டுக்கு கொசு படுத்தற பாடு பரவால்ல போலிருக்கே!
இதுக்கு தீர்வு என்னன்னா வலைக்குள்ள போறதுதான்.என்னோட வலைய சொல்லலைங்க கொசுவலை.(கொசுவுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்னு குசும்புக்கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது!)
Tweet | ||||||
35 comments:
பகல் முழுவதும் வலையினுள் தான் காலம் கழிகிறது. இரவிலுமா???
கே. ஆர்.விஜயன் said...
பகல் முழுவதும் வலையினுள் தான் காலம் கழிகிறது. இரவிலுமா???//
ஹா!ஹா!என்ன பண்றது?
//பின்குறிப்பு-நீங்க பிளாஷ்பேக் நினைவுகளுக்கு போகும்போது வரும் கொசுவர்த்திச்சுருள் ஆபத்தானது அல்ல//
நல்லவேளை அது இல்லாம எப்பிடி என்னால எழுத முடியும்! :-)
என்ன கொடும சரவணன்...
கொசுவத்தியைவிட கொசு பரவாஇல்லையே......இனி யாரும் சொல்ல முடியாது தம் அடிக்கலைனு.ஹி.ஹி.ஹி.ஹி..அப்படினா நீங்க எத்தனை தம் அடிச்சு இருக்கீங்க கோகுல் சாரி சாரி எத்தனை தரம் கொசுவத்தை கொலுத்தி வைச்சு இருக்கீங்க?
இன்று என் கடையில்(பகுதி-7)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாதபாடசாலைநாட்கள்+சரண்யா புள்ள மீதான உத்தியோக பூர்வ காதல் அறிவிப்பும் அஞ்சலியிடம் இருந்து விலகலும்
http://cricketnanparkal.blogspot.com/2011/09/7.html
கொசுக்கு உங்க வீட்டு முகவரி தராம இருந்தா வராது ..
பூச்சி மருந்த குடிங்க .. உங்க ரத்தத்தை குடித்த கொசு செத்துடும்
தமிழ் மணம் நாலு
நல்ல கருத்துள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி
"என் ராஜபாட்டை"- ராஜா said...
கொசுக்கு உங்க வீட்டு முகவரி தராம இருந்தா வராது ..
//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
பூச்சி மருந்த குடிங்க .. உங்க ரத்தத்தை குடித்த கொசு செத்துடும்
//
அடப்பாவிகளா!முடியல!
கொசு தான் கொல்லும்ன்னு பார்த்தா இங்கே கொசுவர்த்தி கூட கொல்லுதே!!
தம் அடிக்கறவங்களை பாத்தா காத தூரம் ஓடிட்டு கொசுவத்திய பொழுதன்னிக்கும் யூஸ் பண்ணிட்டு இருந்தேன்.நாசமா போச்சு போங்க..!!இனி வலைதான்..! :)
தமிழ்மணம் 6
கொசுக்கடிக்கு இப்படியெல்லாம் தீர்வு இருக்கா???????
சரிதான் ......
பின்குறிப்புக்கு நன்றி..நானே பய்ந்துட்டேன்!
சுற்று சூழல் பதிவுக்கு வாழ்த்துக்கள் கோகுல் !
கொசுவர்த்தி ஏற்ப்படுத்தும் பாதிப்பை பற்றி சொல்லியிருக்கீங்க,,ஆனா என்ன செய்ய ஒரு இரவு முழுமையான தூக்கத்தை பெற கொசுவர்த்தியை தான் நாடவேண்டி இருக்கு, கொசுவலைக்குள்ள கொசு புகுந்த அது வேற கரைச்சல் ஹிஹி
விழிப்புணர்வு பதிவு .வாழ்த்துக்கள் .
பயன் மிக்க பதிவு பாஸ்.. ஆமா இனி யாரும் சொல்லபடாது தம் அடிக்கல என்னு....
இம்புட்டு பிரச்சன இருக்கா அம்மாடி...நன்றி மாப்ள!
நல்ல பகிர்வு நண்பரே! கொசுவர்த்திச் சுருள் குறித்த தகவலை நேற்று NDTV-யின் வலைத்தளத்தில் பார்க்க நேரிட்டது. அதை இவ்வளவு விபரமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
அடபாவிங்களா.?? கொசுவத்தியில் இம்புட்டு மேட்டர் இருக்கா,
இத பார்க்கே சீக்ரெட்டே குடிச்சுட்டு போய்ரலாம் போல இருக்கே
அவ்வவ்
பயன் உள்ள தகவல்தான் பகிர்ந்து இருக்கீங்க மச்சி.
//பின்குறிப்பு-நீங்க பிளாஷ்பேக் நினைவுகளுக்கு போகும்போது வரும் கொசுவர்த்திச்சுருள் ஆபத்தானது அல்ல//
ஹீ ஹீ,
நல்ல வேளை, நிறைய பேர் தப்பிச்சாங்க
கொசாவது ஒரு சொட்டு ரத்தம் எடுக்கின்றது ஆனால் இந்த கொசுவத்தி உயிரையல்லவா எடுக்கின்றது.
இதற்கு தீர்வாக என்ன செய்யலாம்?
தமிழ் மணம்..போட்டாச்சு பாஸ்.
இந்தவலை போதாதின்னு அந்தவலை அப்படியே வெளிஉலகமே தெரியாம உட்கார்ந்திடவேண்டியதுதான். அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு
என்ன கொடுமை கோகுல் இது!!
//ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் //
சும்மா சொல்லாதீங்க பாஸ்.. நீங்க இப்பிடி சொன்னதால நான் வீட்டில இருந்த ஒரு கொசுவர்த்திய எடுத்திட்டுப் போய் கடைக்காரனிட்ட குடுத்து 100 சிகரட் குடுப்பா இரண்டும் சமன் என்று கோகுல் அண்ணாச்சி சொல்லியிருக்கிறார் எண்டு சொன்னன். அவன் அடிச்சு கலைச்சிட்டான் பாஸ்
ஹா ஹா
உண்மையிலே அருமையான எச்சரிக்கை தகவல் பாஸ்.. எனிமேல் கொசுவர்த்திய கொஞ்சம் தள்ளியே வைப்பம்
என்னோட வலைய சொல்லலைங்க ---
என் வலையத் தானே சொன்னீங்க...
அட கடவுளே கொசுவத்திலயும் இவ்வளவு
வில்லங்கம் இருக்கா. கொசுக்கடியே தாங்கிக்கலாம் போல இருக்கே.
கொசுவர்த்தி பற்றி நல்ல விழிப்புணர்வு பதிவு...வாழ்த்துக்கள் நண்பரே!
தமிழ் மணம் 18
தமிமணம் 20.
இண்ட்லி,
உலவு, தமிழ் 10
ஆச்சரியமான தகவல்கள் பாஸ்..
நாம் புகைப் பிடிக்காவிட்டாலும் வீதிக் கழிவுகள். எம் சுவாசக் குழாய் மூலம் சென்று நுரையீரலை அடைகிறது பாஸ்...
நல்லதோர் தகவல் விளக்கப் பகிர்வு நன்றி நண்பா.
முள்ளை முள்ளால தான் எடுக்கனும்-ன்றாங்களே, இதுக்கும் அதுமாதிரி எதுனா உண்டுங்களா பாஸ்?
அவசியமான் விழிப்புணர்வு பதிவு.
நான் கூட 3 நாள் முன் ட்விட்டரில் இந்த மேட்டர் பற்றி ஒரு ட்வீட் போட்டேன்
Post a Comment