இப்படி கை விரிச்சுட்டிங்களே அம்மா!
ஊர் கூடி தேர் இழுக்கும் போது சக்கரத்தையே உடைச்சது போல இருக்குது என்னால முடியாது ன்னு நீங்க சொல்றது.ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்து சட்டசவையில் தீர்மானம் நிறைவேற்றிய போது ,ஓஹோ! ஈழம் பற்றிய தன் பழைய நிலையிலிருந்து விடுபட்டு விட்டாரென எண்ணிஇருந்தபோது பழைய குருடி கதவை திறடி என்ற கதையாகஆகிவிட்டதே!.
பிரியங்கா காந்தி சிறையிலிருந்த நளினியை பார்க்கச்சென்றபோது எதிர்த்து அறிக்கை விட்ட இவர் சொன்னது
“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.”
இவர் இன்றைக்கு சொன்னது
அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது.
இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்த நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.
எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.”
சும்மா பேச்சுக்காவது முந்தய ஆட்சியில் கலைஞர் செய்தது போல மைய அரசுக்கு கடிதம் எழுதுகிறோம் என அறிக்கை.விட்டிருக்கவேண்டியதுதானே? எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்ற விளக்கங்கள் தேவையா?.இவர் சொல்கிறார் கலைஞர் ஒன்று தெரியாததுபோல ரெட்டை வேடம் போடுகிராரென்று!ஒன்று புரிகிறது அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாகத்தான் பார்க்கிறார்கள்!
இன்னொருவிசயம்!
உணர்வின் வெளிப்பாடும் கோபமும் வெளிப்படும்போது சிந்தனை கண்ணை மறைத்து,ஆதங்கம் இயலாமை,ஆற்றாமை மனதை செலுத்தியதன் விளைவாக உணர்வுத்தீயை உடலில் ஊற்றி கருகியிருக்கிறது ஒரு தளிர்!!
இதை நியாப்படுத்தவில்லை.தயவுசெய்து யாரும் நியாயப்படுத்தவும் வேண்டாம்!
இந்த காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் ஒரே ஒரு வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன்!தயவுசெய்து செங்கொடி யார் ?என்று மட்டும் கேட்டு விடாதிர்கள்!இதை ஏன் சொல்கிறேன் என்றால்?முத்துக்குமார் யார் என்று கேட்டவர்தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
செங்கொடி செய்ததை தியாகமென்று கூற வரவில்லை என்ன செய்வது உயிர் பலி வேண்டாமென்று கூறவே இங்கு உயிர் விட வேண்டியுள்ளது!அந்த உயிருக்கு விலையாகவாது கழுத்தை இருக்கியிருக்கும் கயிற்றைத் தளர்த்த குரல் கொடுப்போம்!
நமது சகோ மதி.சுதாவின் வேண்டுகோள்!
டிஸ்கி-இப்போது கிடைத்த செய்தி .அம்மா சட்டசபையில் தூக்கு தண்டனையை எதிர்த்து தீர்மானம்!(ஆண்டவா!அம்மா மனசு கடைசி வரை மாறாம பாத்துக்க)&நீதிமன்றம் எட்டு வாரம் தடை!(நிரந்தர தடையா மாறனும்)
Tweet | ||||||
31 comments:
ஜெயா ...மு க லாம் சோனியாவை பகைப்பது கஷ்டம்...
ஜெயா முடிவு ஏற்க்கனவே எதிர்பார்த்தது தான் (
// அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாகத்தான் பார்க்கிறார்கள் //
ஆமாம்... இப்போது சில அரசியல்வாதிகள் தூக்குதண்டனையை நிறுத்தக்கோரி குரல் கொடுப்பதும் கூட அரசியல் வேஷம்தான்... ஆனால் நமக்கு நியாயம் கிடைத்தால் சரி...
நன்றி நன்றி நான் நினைக்கவில்லை இப்படி பதிவுகளையும் நீங்கள் போடுவீர்கள் என்று..
ஜெயலலிதாவின் முடிவு இப்படித்தான் இருக்கும்
என்று எதிர்பார்த்த ஒன்று தான்.
நியாயம் நமக்கு கிடைக்கவேண்டும்.
யாராவது ஒருத்தர் அதை செய்தால் சரி தான்....
தமிழ்மணம் 5
உயிர் பலி வேண்டாமென்று கூறவே இங்கு உயிர் விட வேண்டியுள்ளது!
நமக்கு நியாயம் கிடைத்தால் சரி...
விடுங்க பாஸ்.ஜெயலலிதா மேடத்தின் செயற்பாடுகள் ஒன்றும் புதுசு இல்லையே.அவங்க அப்படித்தான்.இன்னுமா இந்த உலகம் அவங்களை நம்புது.
அப்பறம் உங்களிடம் இருந்து நான் படிக்கும் முதலாவது வித்தியாசமான பதிவு இது.நல்லா இருக்கு பாஸ்.எல்லா பகுதிகளிலும் அடித்து விளையாடுங்க முழுமையான கமர்சியல் பதிவரா வரலாம்.வாழ்த்துக்கள்
Tamilmanam 7
அம்மா இது மாதிரி பண்ணுவாங்கன்னு எதிர்ப பாக்கல..
காத்திரமான பதிவு எல்லா அரசியல் தலைவர்களும் அரசியலாகத்தான் பார்க்கின்றார்கள்!
//ஒன்று புரிகிறது அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாகத்தான் பார்க்கிறார்கள்!//
அதுதான் இந்நாட்டு அரசியல் ஏடுகளைப் புரட்டினால் கிடைக்கும் ’பாடம்,பகுத்தறிவு,பயனில்லா அரசியல் தத்துவம்’!
. இந்த நாடு உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து செய்தியை வேறு ஒரு பிரச்சனையால் மறைத்து இப்பெரும் தியாகத்திற்கு அர்த்தம்ற்றதாகி விட்டுவிடும்... பாவிகளின் கையில் அதிகாரம் இருக்கும் வரையில் நாம் மேலும் போராட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது எனவே இனியும் சகோதரர்களே சகோதரிகளே உயிரை மாய்க்க வேண்டாம் ஒற்றுமையுடன் போராடுவோம்....
ரெவெரி said...
ஜெயா ...மு க லாம் சோனியாவை பகைப்பது கஷ்டம்..//
எல்லாவற்றிலும் ஆதாயம் தேடும் இவர்களை என்னவென்று சொல்வது?
Philosophy Prabhakaran said...
// அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாகத்தான் பார்க்கிறார்கள் //
ஆமாம்... இப்போது சில அரசியல்வாதிகள் தூக்குதண்டனையை நிறுத்தக்கோரி குரல் கொடுப்பதும் கூட அரசியல் வேஷம்தான்... ஆனால் நமக்கு நியாயம் கிடைத்தால் சரி...//
நிச்சயமாக!
வணக்கம் நண்பா,
நியாயம் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் உள்ளோரை விட, தம் சுயலாப அரசியல் இருப்பினைத் தக்க் வைக்கப் பாடுபடுவோர் தான் அதிகமாக உள்ளார்கள்.
தூக்குத் தண்டனையினை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தமிழக நண்பர் ஒருவர் சொன்னார். பொறுத்திருந்து பார்ப்போம்,.
நம்பிக் கெட்டவன் தமிழன் எனும் விடயம் இந்தச் சேதியொடாவது இல்லாது போகட்டும்,
ஒரு வேளை ஜெ அவர்கள் காங்கிரஸ் கூட்டணிக்காக காத்திருக்கிறார்களா...
கோகுல் அம்மா நல்லவங்க அம்மா மனசுமாறும்
தண்டணைக்கு உயர்நீதிமன்றம் 8 வார இடைக்கால தடை,மற்றும் தமிழக சட்டசபையில், தூக்கு தண்டனையை ஆயள்தண்டணையாக குறைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?
http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_30.html
டிஸ்கி விஷயம் மனசுக்கு ஆறுதலாக உள்ளது .
தமிழ் மணம் 16
காத்திரமான பதிவு அண்ணா.. எனக்கு அரசியல் அதிகம் புரியாவிட்டாலும் நீங்கள் சொல்வதும் சொல் வாறதும் நன்றாகவே புரிகிறது.
ஆஹா .. ரெம்ப பிந்தி வந்துட்டேனோ..
சரி அதுவும் நல்லாத்தான் போய்ட்டுது
அதான் அம்மா இப்ப நல்ல முடிவு எடுத்துட்டாரே
ஜெயலலிதாவின் முடிவு இப்படித்தான் இருக்கும்என்று எதிர்பார்த்த ஒன்று தான்.
நியாயம் நமக்கு கிடைக்கவேண்டும்.
யாராவது ஒருத்தர் அதை செய்தால் சரி தான்....
உண்மைதான் சகோ அனைவரினது எதிர்பார்ப்பும் ஒன்றே....... .
நேற்று சட்டசபையில் தூக்கு தண்டனயை குறைக்க கோரும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பு பதிவிட்ட பதிவு இது என்று நினைக்கிறேன். இப்போ உங்கள் மன நிலை என்ன? ஜெயலலிதாவை பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்(செய்யும்) கலைஞருக்கு இவங்க பரவாயில்லைனு எனக்கு தோணுது. என்ன சொல்றீங்க நண்பா.
ஒரு வழியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள்.. ஜெயலலிதா விடாப்பிடியாக இல்லாமல், திடீர் மனமாற்றத்திற்குள்ளானது இந்த விஷயத்தில் மட்டும் தான்.. அவரின் மனமாற்றத்திற்கான காரணம் எதுவாக இருப்பினும் நல்லது தான் ..
நீங்கள் அரசியல் கட்டுரை எழுதும் விதம் சிறப்பானதாக இருக்கிறது கோகுல்..
ஜெயலலிதா அம்மா மனம் மாறுவாங்க என்று நேற்று நான் கூறியது உண்மையாகிவிட்டது. மு.க விற்கு அம்மையார் ரொம்ப உசத்தி
// அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே அரசியலாகத்தான் பார்க்கிறார்கள் //
உண்மைதான் சகோ .அதனால்த்தான் மனிதநேயம் செத்துவிட்டது .துயர்தரும்
பகிர்வு .நன்றி சகோ பகிர்வுக்கு .............
Post a Comment