இந்தியா!
பலர் வண்ணமிட்டும்
இன்னும் விழி திறக்கா
ஓவியமாகவே உள்ளது!
காந்தியடிகள் தீட்டிய
அகிம்சை வண்ணம்
அழிந்து விட்டது இன்று!
காமராஜர் இட்ட
நேர்மை வண்ணம்
நெறி கேட்டு விட்டது!
பாரதி வரைந்த
புதுமைப்பெண் வண்ணம்
புலனற்று விட்டது!
விவேகானந்தர் உருவாக்கிய
உழைப்பு வண்ணம்
உறங்கிக்கிடக்கிறது!
அம்பேத்கர் செய்த
தீண்டாமை வண்ணம்
திக்குமுக்காடுகிறது!
தியாக வண்ணம்
தீக்கிறையாகிவிட்டது!
அறிவியலார் செய்த
அறிவியல் வண்ணம்
ஆரோக்கியமற்று விட்டது!
அரசியலார் செய்யும்
ஊழல் வண்ணமோ
ஓவியதையே பாழாக்குகிறது!
அப்துல்கலாம் காணும்
கனவு வண்ணம்
கனவாகவே உள்ளது!
இந்தியா!
பலர் வண்ணமிட்டும்
இன்னும் விழி திறக்கா
ஓவியமாகவே உள்ளது!
விரைவில் விழிதிறக்கும்
என்ற நம்பிக்கையுடன்...........
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ் மற்றும் இணையங்கள்
Tweet | ||||||
27 comments:
ஊழலின் முகத்திரை கிழியும் காலம் வரும் நண்பா....
வெகுதூரம் இல்லை ...
தமிழ்மணம் 2
எளிய நடையில் அழகிய உணர்வுள்ள கவிதை.
@மகேந்திரன்முதல் வருகைக்கு நன்றி!
உயர்வு தளரவேண்டாம் .
அழகிய கவிதை...
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
உணர்வுகளின் கொந்தளிப்பு
அருமை நண்பா,
அத்தனையும் நியாமான ஆதங்கமே..
aruputhamaaka ullathu kavithai.. vaalththukkal..
விழி திறவா ஓவியம்..ஆஹா அருமையான வரிகள்!
காந்தியத்திற்கு இப்பவும் கொஞ்சம் மதிப்பு இருக்கு மாப்பிள.. கண்ணு முன்னால வெற்றி பெற்றிருக்கிறாரே அன்னா.. நல்ல காலம் அவர் போராட்டம் முடிஞ்சது.. இனியாவுதல் சிந்திப்போமா அந்த மூன்று உயிர்களையும்..
சொற்களில் கஞ்சத்தனமும் கவிப்பொருளில் குபேரனாகவும் சமைத்துள்ளீர்கள் உங்கள் கவிதையை.. வாழ்த்துக்கள்..
காட்டான் குழ போட்டான்..
தல... என்னுடைய இன்றைய பதிவில் உங்களைப் பற்றி சில வரிகள் குறிப்பிட்டுள்ளேன்...
நல்ல தோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ ... வீணைய துடைத்து வாசிக்க முயல்வோம் நம்பிக்கையுடன்...நன்றி நண்பா
தமிழ் மணம் 8
//காந்தியடிகள் தீட்டிய
அகிம்சை வண்ணம்
அழிந்து விட்டது இன்று!//
அருமையான வரிகள் பாஸ்
மாப்ள கவிதை நல்லா இருக்கு...அதே நேரத்தில் எத்தனை கை மறைத்தாலும் ஆதவன் மறையப்போவது இல்லை...ஓர் நாள் விடியும்!
டைட்டிலிலேயே கவிதை
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
உயர்வு தளரவேண்டாம் .
//
ரெவெரி said...
அழகிய கவிதை...
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
//
துஷ்யந்தன் said...
உணர்வுகளின் கொந்தளிப்பு
அருமை நண்பா,
அத்தனையும் நியாமான ஆதங்கமே..
மதுரை சரவணன் said...
aruputhamaaka ullathu kavithai.. vaalththukkal..
//
செங்கோவி said...
விழி திறவா ஓவியம்..ஆஹா அருமையான வரிகள்!
//
காட்டான் said...
காந்தியத்திற்கு இப்பவும் கொஞ்சம் மதிப்பு இருக்கு மாப்பிள.. கண்ணு முன்னால வெற்றி பெற்றிருக்கிறாரே அன்னா.. நல்ல காலம் அவர் போராட்டம் முடிஞ்சது.. இனியாவுதல் சிந்திப்போமா அந்த மூன்று உயிர்களையும்..
சொற்களில் கஞ்சத்தனமும் கவிப்பொருளில் குபேரனாகவும் சமைத்துள்ளீர்கள் உங்கள் கவிதையை.. வாழ்த்துக்கள்..
காட்டான் குழ போட்டான்..
//
//தல... என்னுடைய இன்றைய பதிவில் உங்களைப் பற்றி சில வரிகள் குறிப்பிட்டுள்ளேன்...
//
மாய உலகம் said...
நல்ல தோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ ... வீணைய துடைத்து வாசிக்க முயல்வோம் நம்பிக்கையுடன்...நன்றி நண்பா
//
மாய உலகம் said...
தமிழ் மணம் 8
//
K.s.s.Rajh said...
//காந்தியடிகள் தீட்டிய
அகிம்சை வண்ணம்
அழிந்து விட்டது இன்று!//
அருமையான வரிகள் பாஸ்
//
விக்கியுலகம் said...
மாப்ள கவிதை நல்லா இருக்கு...அதே நேரத்தில் எத்தனை கை மறைத்தாலும் ஆதவன் மறையப்போவது இல்லை...ஓர் நாள் விடியும்!
//
சி.பி.செந்தில்குமார் said...
டைட்டிலிலேயே கவிதை
///
அனைவரின் வருகைக்கும் மேலான கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
எளிமையான வார்த்தைகளால், வலிமையான கவிதை தந்திருக்கிறீர்கள்.
நல்லவர்களின் உழைப்பும், எண்ணமும், கனவும் வீணாக போகிறதே என்கின்ற உங்கள் கவலையை புரிந்து கொள்ள முடிகிறது.
வாவ் ........சூப்பரு ...
ஊழல் என்ற வழி அடைக்கபட்டால் உயர்வு என்ற வழி திறக்கும் ....விரைவில் திறக்கும் ..
எல்லாம் ஊழலால் வந்த வினை சகோ .ஊழலுக்கு எதிராக ஒரு கவிதைக் காவியமே வடித்த உங்களுக்கு
எனது அன்புப் பரிசாக தமிழ்மணம் 13
வணக்கம் நண்பரே,
சமீப நாட்களாக வலைப் பதிவிற்கு வர முடியவில்லை, காரணம் டுவிட்டர் பேஸ்புக்கில் தூக்குத் தண்டனையை நிறுத்தச் சொல்லிய பிரச்சாரங்களோடு ஐக்கியமாகி விட்டேன்.
கிடைத்த குறுகிய நேரத்திலும் ஒரு சில பதிவுகளைத் தான் படிக்க முடிந்தது.
மன்னிக்கவும்,
இந்தியா இன்னமும் ஊழலிலிருந்து மீளவில்லை, அபிவிருத்திப் பாதையில் பின் தங்கியே செல்கின்றது என்பதனை வண்ணமிட்டு விழி திறக்கா ஓவியம் எனும் தலைப்பினூடாக கவிதையாய் வடித்திருக்கிறீங்க.
வெகு விரைவில் இந்தியா முன்னேறும், ஊழலற்ற பாரதம் உருவாகும் என்பது தான் என அவா.
இக் கவிதை எம் நாட்டிற்கும் மிக நன்றாகப் பொருந்தும்.
வசந்தம் வரும் காத்திருப்போம்....
அழகிய ஆதங்க படைப்பு...
கவிதை அசத்தல் நண்பா
மிக அருமையான கவிதை.. நண்பா..
வாழ்த்துகள்..
அருமையான கவிதை சகா, நிச்சயம் ஒளி பிறக்கும். . .
உணர்மிக்க கவிதை வரிகள்..!
பகிர்வுக்கு மிக்க நன்றி..! இதையும் ஒருதடவைப் பாருங்களேன்..! இனி தடைகள் இல்லை உனக்கு..!
Post a Comment