நான் ரெண்டாங்கிளாசோ,மூணாங்கிளாசோ படிக்கும் போது
(நீ இன்னைக்கு வரைக்கும் அத தான படிச்சிருக்கன்னு சொல்லக்கூடாது)
எங்க ஆசிரியர் சொன்ன கதை. இல்ல,இல்ல,ஒரு சம்பவம் ம்ம்ம்!ஒரு சம்பவம் கலந்த கதை!
(அட ஏதோ ஒண்ணு மேட்டருக்கு வாடா!)ஓகே ஓகே இதோ வரேன்!
ரெண்டாப்பு,மூணாப்புல தான ஓரளவுக்கு தமிழ எழுத்து கூட்டி படிக்க ஆரமிப்போம்.
(இங்கிலிபீசு இன்னைக்கு வரைக்கும் தவிடு திங்குது)
சரியா எழுத்துக்கூட்டி,வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு படிக்கலன்னா
அர்த்தன்கெட்டுப்போயிடும்.அதுவுமில்லாமநடைமுறை வாழ்கையில
பல சிக்கல்களையும் சந்திக்கவேண்டிக்க இருக்கும் ன்னு ஆரம்பிச்சார்.
ஒரு தாத்தா தன் பேரன கூட்டிகிட்டு டவுனுக்கு போனார்..போனாரா போய் என்ன பண்ணுனார்?நல்லா ஊரெல்லாம் சுத்திட்டு வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டார்.நல்லா சுத்துனதுல ரெண்டு பேருக்கும் நல்ல பசி.
நம்ம தாத்தாக்கு எழுத படிக்க தெரியாது.பேரனபாத்து பேராண்டி! இங்க எங்கியாவது சாப்பாட்டு கடை இருக்கான்னு போர்ட பாத்து சொல்லுடான்னார்!
பக்கத்துல ஒரு கடை போர்ட்ல சாப்பாடு போடப்படும் னு போட்டுஇருந்தது.பேராண்டி படிச்சான்! தாத்தா! இங்க சாப்பா டுபப்போ டப்பா டும் னு போட்டுருக்கு தாத்தா!ன்னான்(என் இனமடா நீ!).சரி வாடா வேற கடைக்கு போலாம்ம்னு கூட்டிட்டு போனார்.பாவம் எல்லா கடைலேயும் சாப்பா டுப்போ டப்பா டும் னு தான் இருந்தது!
அடப்போடா! இந்த பட்டணத்துல சப்பாட்டுக்கடையே இல்லன்னு பட்டினியோடு ஊர் திரும்பினர்!
நீதி படிக்கற காலத்துல ஒழுங்கா சரியா படிக்கறது மட்டுமில்ல ஒழுங்கா புரிஞ்சு படிக்கலன்னா வருங்காலத்துல பட்டினிதான் மிஞ்சும்!
“
கற்ககசடறக்கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” தகுக
Tweet | ||||||
35 comments:
தமிழ்மணம் 2
சரியா சொன்னிங்க கோகுல்
படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்க வேண்டுமென.
எத்தனையோ பேர் இந்த வாக்கியத்தை புலம்புறதை
கேட்டிருக்கேன். மனவேதனையுடன் அவர்கள் சொல்லும் போது
படிப்பின் மகத்துவம் புரியும்.
பதிவு நன்று நண்பரே.
ரொம்ப நல்ல பதிவு, கல்வியின் மகத்துவத்தை அழகா எடுத்து காட்டி இருக்கீங்க...
வாசிக்க தெரிந்தால் மட்டும் போதாது அதை சரியான அர்த்தம் கொண்டு புரிஞ்சிகிறது எவ்வளோ முக்கியம் என்பது புரியுது
"ஒழுங்கா படிக்கலேன்னா பட்டினிதான்!!!" தலைப்பு ரொம்ப நல்லா பொருந்துது.
தமிழ்மணம் 2
சரியா சொன்னிங்க கோகுல்
படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்க வேண்டுமென.
எத்தனையோ பேர் இந்த வாக்கியத்தை புலம்புறதை
கேட்டிருக்கேன். மனவேதனையுடன் அவர்கள் சொல்லும் போது
படிப்பின் மகத்துவம் புரியும்.
பதிவு நன்று நண்பரே///
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ரொம்ப நல்ல பதிவு, கல்வியின் மகத்துவத்தை அழகா எடுத்து காட்டி இருக்கீங்க...
வாசிக்க தெரிந்தால் மட்டும் போதாது அதை சரியான அர்த்தம் கொண்டு புரிஞ்சிகிறது எவ்வளோ முக்கியம் என்பது புரியுது
"ஒழுங்கா படிக்கலேன்னா பட்டினிதான்!!!" தலைப்பு ரொம்ப நல்லா பொருந்துது.//
நன்றி நண்பரே!
சரிதான் .
கல்வியே நிரந்தரச் செல்வம்..நல்ல கருத்தைச் சொன்னீங்க கோகுல்!
//
ஒரு தாத்தா தன் பேரன கூட்டிகிட்டு டவுனுக்கு போனார்..போனாரா போய் என்ன பண்ணுனார்?நல்லா ஊரெல்லாம் சுத்திட்டு வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டார்.நல்லா சுத்துனதுல ரெண்டு பேருக்கும் நல்ல பசி.
நம்ம தாத்தாக்கு எழுத படிக்க தெரியாது.பேரனபாத்து பேராண்டி! இங்க எங்கியாவது சாப்பாட்டு கடை இருக்கான்னு போர்ட பாத்து சொல்லுடான்னார்!
பக்கத்துல ஒரு கடை போர்ட்ல சாப்பாடு போடப்படும் னு போட்டுஇருந்தது.பேராண்டி படிச்சான்! தாத்தா! இங்க சாப்பா டுபப்போ டப்பா டும் னு போட்டுருக்கு தாத்தா!ன்னான்(என் இனமடா நீ!).சரி வாடா வேற கடைக்கு போலாம்ம்னு கூட்டிட்டு போனார்.பாவம் எல்லா கடைலேயும் சாப்பா டுப்போ டப்பா டும் னு தான் இருந்தது!
அடப்போடா! இந்த பட்டணத்துல சப்பாட்டுக்கடையே இல்லன்னு பட்டினியோடு ஊர் திரும்பினர்//
சரி பாஸ் இந்த வரிகளுக்கும் நீங்க போட்டு இருக்கும் ஓரு தாத்தா படத்துக்கும் என்ன சம்மந்தம்?ஹி.ஹி.ஹி.ஹி
வணக்கம் பாஸ்,
தமிழ்மணம் 5,
இண்ட்லி 3
தமிழ் 10 8,
உலவு 4
வாசிக்கத் தெரியாத காரணத்தினால் ஏற்படும் பிரச்சினையைக் குட்டிக் கதை மூலம் அழகாக விளக்கியிருக்கிறீங்க.
கூடவே குறள் மூலமும், சிறிய நீதி வரிகள் மூலமும் கல்வியின் மகத்துவத்தினை அனைவரும் உணர்ந்து படிக்க வேண்டும் எனும் உண்மையினை உணர்த்தியிருக்கிறீங்க.
அசத்தீடிங்க சகோதரம்.. (எப்புடீஎல்லாம் அட்வைஸ் பண்றாங்க..)
நல்லாத்தான் சொல்லியிருகிங்க...
தமிழ்மணம் 7
//செங்கோவி said...
கல்வியே நிரந்தரச் செல்வம்..நல்ல கருத்தைச் சொன்னீங்க கோகுல்!//
Repeat!
ரொம்ப நல்ல அருமையான பதிவு, கல்வியின் மகத்துவத்தை அழகா எடுத்து காட்டி இருக்கீங்க..
ஹா ஹா ஹா
இந்தக் கதை எனக்கு எட்டாம் வகுப்புல என் தமிழய்யா சொல்லி உள்ளார்.
நீங்கள் அனுப்பும் NewsLetter லிங்க் வேலை செய்யவில்லை கவனிக்கவும்.
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தானே, நல்ல பதிவு
துள்ளித் திரிகின்ற காலத்தில் என்
துடுக்கடக்கி பள்ளிக்கனுப்பாத
பாதகனே என தன் தந்தையைக்
கேட்டதாக ஒருபாடல்
அதை நினைவுபடுத்தும் பதிவு
நன்றி! அன்பரே!
புலவர் சா இராமாநுசம்
இப்ப தான் புரியுது என்னை இவ்வளவு நாள் பட்டினி போட்டாங்கன்னு...
அதெல்லாம் சரி கோகுல்
இதுல நடுவுல ஒரு தாத்தா வந்திருக்காரே அவருக்கும்
இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு??????????????
அதெல்லாம் சரி கோகுல்
இதுல நடுவுல ஒரு தாத்தா வந்திருக்காரே அவருக்கும்
இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு??????????????
நல்லா தான் சொல்லியிருக்கீங்க கோகுல்
தமிழ் வார்த்தைகள் மாறினால் அர்த்தம் மாறும் என்பது உண்மையே .
பகிர்வுக்கு நன்றி .
thamil manam 10
படிப்பின் அருமையை நல்லா சொன்னீங்க, எங்க பக்கமும் இப்படி
ஒருகதை உண்டு.
சுக்குமி
ளகுதி
ப்பிலி
இப்படி ஒரு பேப்பரில் எழுதிண்டு கடை
யில் போய் சாமான் கேட்டானம் ஒரு
சமத்து.
எழுத்துக்கள் மட்டும் தெரிந்தால் போதாது - எப்படி வாசிக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும் . மேலும் அர்த்தம் புரிந்து பயில வேண்டும் என்று நகைச்சுவையுடன் கதை சொல்லப்பட்டு இருக்கிறது. நல்ல பகிர்வுங்க.
ஹி..ஹி...கதைசொல்ற சாக்குல கலைஞரையும் தயாநிதிமாறனையும் கேவலப்படுத்திட்டீங்க...தப்பு பண்றதையும் கசடற கத்துகிட்டு செஞ்சிருக்கணும்ன்னு சொல்றீங்க... :)
கலக்கிறாய் மாப்பிள நானும் ஓட்டு போட்டன் ஆனா படிக்கிற வயசில படிக்காத்தால எத்தினையாவது ஓட்டென்று மறந்து போச்சையா...
காட்டான் குழ போட்டான்..
பலே பிரபு said...
நீங்கள் அனுப்பும் NewsLetter லிங்க் வேலை செய்யவில்லை கவனிக்கவும்.
ஆமாய்யா நானும் ஏதோ என்ர டெலிபோன்லதான் பிரச்சனையோன்னு பார்தேன் மாப்பிள அத சரி பண்ணுய்யா...
ஆமாம் நண்பா...மாவட்ட கலெக்டர் வருகிறார் என்பதை ஒரு கால் மாறினால் கூட மாவாட்ட கலெக்டர் வருகிறார் என மாறி விடும்...
thamil manam 13
ஏன்யா பயமுறுத்துறா??
nalla pathivu namakkum padippu varala atuthan thanimaram enru irukiram nanba.ithil ullkuthu namba thatthavukku
அருமை!
Post a Comment