Wednesday, August 17, 2011

பலே விவசாயி-பாவம் டாக்டர்!!

எல்லோருக்கும் வணக்கம்,விடுமுறையில் வெளியூர் சென்றுவிட்டதால் ஒரு சின்ன கேப்.கடந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்களுக்கும்,வாக்களித்தவர்களுக்கும் நன்றி.
அப்பறம்,இது நான் ஏற்கனவே பகிர்ந்து கொண்ட பதிவு மீண்டும் உங்களுக்காக(பயணக்களைப்பு!!).நன்றி!




ஒரு விவசாயி ஆபத்தான நிலையிலிருந்த தன்
மனைவியை ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு
அழைத்து சென்றார்.
அவரது தோற்றத்தை பார்த்த மருத்துவர்
அவர் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்தார்.
இதனை அறிந்து கொண்ட அந்த விவசாயி
ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,
சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு
சொன்னார்.


மருத்துவரும் அவர் பேச்சை நம்பி சிகிச்சையை ஆரம்பித்தார்.
அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விவசாயியின் மனைவியை
அவரால் காப்பாற்ற முடியவில்லை.
இடிந்துபோனார் விவசாயி.


சிறிது நேரம் கழித்து விவசாயி தன் மனைவியின் உடலை
எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேற முற்பட்டார்.
அவரை தடுத்த மருத்துவர் எங்கே பணம் என கேட்டார்.
விவசாயியோ நான் ஏன் உங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்றார்.


நீ முன்பு என்ன சொன்னாய் ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,
சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு 
சொல்லிட்டு இப்போ பணம் கொடுக்காம போற என்றார்

அந்த விவசாயி சொன்ன பதிலில் மருத்துவர் வாயடைத்து நின்றார்.
அவர் கேட்டது-நீங்கள் ஏன் மனைவியை காப்பாற்றினிர்களா?
மருத்துவர்;இல்லை!
நீங்கள் ஏன் மனைவியை சாகடிதீர்களா ?
மருத்துவர்:இல்லை!
பிறகு ஏன் நான் பணம் கட்ட வேண்டுமென்று மனைவியின் உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

டாக்டருக்கு பேச வார்தைகள் வரவில்லை.


மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு!!!!!

19 comments:

மாய உலகம் said... Reply to comment

பேச்சை சரியா கவனிக்காம விட்டோமென்றால் இந்த டாக்டர் நிலைமை தான் நமக்கும்... அருமை நண்பா

Anonymous said... Reply to comment

நல்லா ஓய்வெடுங்க...இன்னும் 36 மீள்பதிவு போடலாம்...-:) அதுக்கப்புறமும் நம்ம சகோ யார்ட்டயாவது வாங்கி போடலாம்....ரசித்தேன்...

காட்டான் said... Reply to comment

வணக்கமுங்க நான் காட்டான் வந்திருக்கேன்க...

நீங்க என்னைய பற்றி புத்திசாலின்னு போட்டதுக்கு நன்றீங்க...

காட்டான் குழ போட்டான்.....

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

சரியான தலைப்பு
எதிர்பாராத பதில்!!

மகேந்திரன் said... Reply to comment

பாவம் மருத்துவர்
கதையும் நீங்கள் அதற்கிட்ட தலைப்பும் அருமை.
களைப்பாற்றுங்கள் நண்பரே.

vidivelli said... Reply to comment

கதை அருமை..
டாக்ரர் நிலைதான் மோசமாகிட்டுதே,,
பதிவுக்கு பாராட்டுக்கள்..

rajamelaiyur said... Reply to comment

Always doctor take wrong decision. . . I said doctor Ramadosid doctor Ramados

கோகுல் said... Reply to comment

@மாய உலகம்
வருக நண்பா!

கோகுல் said... Reply to comment

@Reverie

நன்றி சகோ

கோகுல் said... Reply to comment

காட்டான் said...
வணக்கமுங்க நான் காட்டான் வந்திருக்கேன்க...

நீங்க என்னைய பற்றி புத்திசாலின்னு போட்டதுக்கு நன்றீங்க...

உண்மைய சொல்லித்தான ஆகனும்

கோகுல் said... Reply to comment

முனைவர்.இரா.குணசீலன் said...
சரியான தலைப்பு
எதிர்பாராத பதில்!!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோகுல் said... Reply to comment

மகேந்திரன் said...
பாவம் மருத்துவர்
கதையும் நீங்கள் அதற்கிட்ட தலைப்பும் அருமை.
களைப்பாற்றுங்கள் நண்பரே.

வருகைக்கு நன்றி நண்பரே!

கோகுல் said... Reply to comment

vidivelli said...
கதை அருமை..
டாக்ரர் நிலைதான் மோசமாகிட்டுதே,,
பதிவுக்கு பாராட்டுக்கள்..
தங்கள் மேலான கருத்துக்கு நன்றி

கோகுல் said... Reply to comment

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Always doctor take wrong decision. . . I said doctor Ramadosid doctor Ramados//
ஹிஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

ரைட்டு....

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

எதிர்பாராத திருப்பம்.

erodethangadurai said... Reply to comment

நல்ல கதையா போச்சு போங்க

மாலதி said... Reply to comment

தலைப்பு அருமை.

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

செம காமெடி சார்