Sunday, August 21, 2011

அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்! பாகம்-2


( பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இறங்க தயாரானேன்.கீழே பார்க்க கொஞ்சம் கால் நடுங்கியது.ஒரு பேக்கை வைத்துக்கொண்டே இறங்க பயமா இருக்கு நமக்கு,சுமை ஏற்றி இறக்குபவர்களை எண்ணி மரியாதையுடன் வியந்தேன்.ஒரு வழியா கீழ இறங்கியாச்சு.)


வணக்கம்!நண்பர்களே!என்ன ரொம்ப நேரமா விழுப்புரத்திலேயே காக்க வைச்சிட்டனா?சரி வாங்க பயணத்தை தொடருவோம்.

சனிக்கிழமை (14.08.11) இரவு 11.30.விழுப்புரம் பேருந்து நிலையமே தீபாவளி நேர ரெங்கநாதன் தெரு போல இருந்தது.இன்னைக்கு இங்கயே விடிஞ்சுடும் போல ன்னு நினைச்சுக்கிட்டேன்.நான் நாமக்கல் போகனும்ன்கரதுனால சேலம் இல்லேன்னா திருச்சிக்கு போற எந்த பேருந்துன்னாலும் பரவால்லன்னு கும்பலோடு கும்பலா ஐக்கியமானேன்.
13 ம் தேதி பௌர்ணமிங்கறதுனால அண்ணாமலையார் அழைப்பின் பேரில் விழுப்புரம் பணிமனையிலிருந்த பேருந்துகள் திருவண்ணாமலைக்கு திருப்பி விடப்பட்டிருந்தன.அதனால சென்னையிருந்து வரும் பேருந்துதான் கதி.பேருந்து நிலையத்தை சுத்தி சுத்தி ஒரு ரெண்டு மணிநேரம் மூச்சு திணற திணற(வேறன்ன அதான் சொன்னனே!மூத்திரவாசனை(?)).நடந்தேன்.திருவண்ணாமலை போகாமலே கிரிவலம்.அன்னாமலையாருக்கு அரோகரா!


ஒரு வழியாக நுழைவாயிலிலேய காத்திருந்து ஒரு கள்ளக்குறிச்சி பேருந்து வந்தது.சரி அங்கிருந்து மாறிக்கொள்ளலாம் என்று ஏறிக்கொண்டேன்(நள்ளிரவு 1.45).இருவர் சீட்டில் ஒருவர் சுருட்டி மடக்கி தூங்கிக்கொண்டிருந்தார்.அந்த ஒரு இருக்கை மட்டும் இருந்ததால் அவர எழுப்பிவிட்டு உக்காந்துகிட்டேன்.நிச்சயமா மனசுக்குள்ள திட்டியிருப்பார்.என்ன  பண்றது?

டிக்கெட் வாங்கியவுடன் பஸ்ஸ்டாண்ட் வலம் வந்த களைப்பில் கண்ணயர்ந்தேன்.கனவு! ஊரில் இறங்கியதும் கேரளா கெண்டை மேளமுழங்க வரவேற்பது போல்.விழித்தேன் சாமி ஊர்வலம்(உனக்கு இது தேவையாடா).ஆனா செம தாள நயம் அதுக்கப்பறம் தூக்கம் வரல.கள்ளக்குறிச்சியை 3.45க்கு சென்றேன்.பஸ்ஸ்டாண்டிலிருந்த டீக்கடையில் விசாரித்தேன்.நாமக்கலுக்கே நாலேகாலுக்கு பஸ்சாம்.ஒரு டீ சொன்னேன்.அருமையான டீங்க!இஞ்சி போட்டு அந்த காலை வேளையில்.ஐந்தே ரூபாய்தானாம்.ஆச்சர்யம்!இதில் முக்கியமான விஷயம் காகித கப்பில் கொடுத்தார்கள்.குடித்துவிட்டு காத்திருந்தேன்.

பேருந்து வந்தது பணிமனையிலே காத்திருந்து எல்லாரும் ஏறிக்கொண்டனராம்.நொந்து கொண்டே ஏறி நின்று கொண்டேன்.வழியில் அப்போதுதான் சூடிய குண்டுமல்லியோடு ஒரு பெண் ஏறினாள்.பேருந்து முழுக்க வாசனை.சிரித்தாள்!(என்னைப்பார்த்து அல்ல)தெற்றுப்பல்!அழகு!அதற்க்கு மேல் ரசிக்கமுடியவில்லை அலுப்பில்.ஒரு வழியாக ஆத்தூர் வந்ததும் உட்கார இடம்கிடைதது.ஆத்தூரை கடக்கையில் நம்ம மாயஉலகம்ராஜேஷ் நினைவுக்கு வந்தார்.சொந்த ஊர் என சொல்லிருந்தார்.அதற்க்கு மேல் வலுக்கட்டாயமாக தூக்கம்துரத்தியது.


ரொம்ப நேரம் கழித்து விழித்தேன்.அது காளப்பநாயக்கன்பட்டிஎனும் ஊர்.கொல்லிமலை அடிவாரம்.கொல்லிமலையின் அழகை தூரத்திலிருந்தபடி ரசித்தேன்.நாமக்கல்லை காலை ஒன்பது மணிக்கு அடைந்தேன்.சாதாரணமாக ஆறு மணி நேரத்தில் முடியும் பயணம் பத்து மணி நேரம் ஆனது.ஸ்அப்பா! முடியல!

அக்க வீட்டுக்கு போனதும் ஒன்றரை வயது அக்கா பொண்ணு மம்மா! என்றாள் என்ன ஆச்சர்யம்!அலுப்பும் களைப்பும் தொலைந்தே போனது.சும்மாவா சொன்னார் வள்ளுவர்
   
    “”குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
       மழலைச்சொல் கேளா தவர் “” என்று.


கூடவே பயணித்ததற்க்கு நன்றி நண்பர்களே!!



41 comments:

தமிழ்விருது said... Reply to comment

இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்

Unknown said... Reply to comment

கொல்லி மலை அப்பிடி அழகு!!!

rajamelaiyur said... Reply to comment

Next part unda?

M.R said... Reply to comment

அருமை பயணக் கட்டுரையும் ,மழலையின் சிரிப்பும் .

பட்டுன்னு முடிச்சிட்டீங்க

பேருந்த ஆத்தூரில் பிரேக் டவுன் ஆக்கி இன்னொரு எபிசோடு குடுத்திருக்கலாமே

நிரூபன் said... Reply to comment

ஏன் பாஸ்,
உலவு திரட்டியில் இணைக்கலையா?

நிரூபன் said... Reply to comment

அடடா.,,
பஸ் நெரிசலில் நொந்து நூலாகி,
மலையேறும் போது அழகுப் பெண்ணை ரசித்து,
பின்னர் மழலையின் உணர்வில் மனதைப் பறிகொடுத்த இனிய அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

ஆகுலன் said... Reply to comment

இரவு இரவா பயணம் நல்லா தான் இருக்குது.........கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு வாங்கோ...

நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

மாலதி said... Reply to comment

பயணக் கட்டுரையும் ,மழலையின் சிரிப்பும்அருமை .

நெல்லி. மூர்த்தி said... Reply to comment

"வழியில் அப்போதுதான் சூடிய குண்டுமல்லியோடு ஒரு பெண் ஏறினாள்.பேருந்து முழுக்க வாசனை.சிரித்தாள்!(என்னைப்பார்த்து அல்ல)"

நீர் நியாயஸ்தர் என்பது இவ்வரிகள் சாட்சி! ஹா ஹா. உங்களோட நாங்களும் பயணிச்ச அனுபவத்தினைக் கொடுத்திட்டீங்க..

மகேந்திரன் said... Reply to comment

தமிழ்மணம் 4

மகேந்திரன் said... Reply to comment

பயணம் ஜோரா இருந்துச்சுங்க

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

உங்க கூடவே பயனிச்ச பீலிங்கு....!!!

குணசேகரன்... said... Reply to comment

very nice travel post..stills are so cooled..

Unknown said... Reply to comment

பயணம் முடிந்திட பதிவும்
முடிந்தது.
மறுபடி எப்போது..?

புலவர் சா இராமாநுசம்

அஹ்ஸன் said... Reply to comment

பயணம் முடிந்தது சூப்பர்.. கடைசில அக்கா குழந்தையை கண்டதும் எனக்கும் களைப்பு தீர்ந்து போச்சு .. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

அப்பறம் கமலகாசனை எதிர்பார்த்தேன் வரவில்லை.. ஓகே ஓகே (திட்டாதீங்க!)

ஆச்சி ஸ்ரீதர் said... Reply to comment

rasiththen

மாய உலகம் said... Reply to comment

ஆத்தூரை கடக்கையில் நம்ம மாயஉலகம்ராஜேஷ் நினைவுக்கு வந்தார்.//

ஆஹா அதான் பொறையேறுனுச்சா ஹா ஹா ஹா

மாய உலகம் said... Reply to comment

ஆத்தூர் முன்பே வர்ரேன்னு சொல்லியிருந்தா... ஓடிப்போய் ஒளிஞ்சிருப்பேன்ல்ல நண்பரே சும்மா லூலாயி ஹி ஹி ஹி

மாய உலகம் said... Reply to comment

கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டேண்டுல மேக்ஸிமம் சீட் கிடைக்குறது கஷ்டந்தான் நண்பரே...அய்ய்யோ நான் பல முறை கஷ்ட பட்டுருக்கேன்....

மாய உலகம் said... Reply to comment

ஒரு வழியாக ஆத்தூர் வந்ததும் உட்கார இடம்கிடைதது.//

நீங்க என்னை நினச்சீங்கல்ல அதான் சீட்டு கிடைச்சது... எம்பேர சொல்லியிருந்தீங்க டிரைவரே அவருடைய சீட்ட உங்களுக்கு கொடுத்திருப்பார் அவ்வ்வ்வ்

மாய உலகம் said... Reply to comment

வழியில் அப்போதுதான் சூடிய குண்டுமல்லியோடு ஒரு பெண் ஏறினாள்.பேருந்து முழுக்க வாசனை.சிரித்தாள்!(என்னைப்பார்த்து அல்ல)தெற்றுப்பல்!அழகு!அதற்க்கு மேல் ரசிக்கமுடியவில்லை அலுப்பில்.//

ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது

மாய உலகம் said... Reply to comment

“”குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் “” //

இங்க நின்னுட்டீங்க கோகுல்...

கோகுல் said... Reply to comment

@மாய உலகம்
ஹிஹி!

Rathnavel Natarajan said... Reply to comment

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

K.s.s.Rajh said... Reply to comment

அட்டகாசமான கட்டுரை(பதிவு)நண்பா
வாசிக்க வாசிக்க
சுவாரஸ்யம் கூடுது

கவி அழகன் said... Reply to comment

ரசனையோடு அழகு தமிழில் உணர்வுசெர்த்து எழுதிய பயணம்

Unknown said... Reply to comment

7th vote mine!

சுதா SJ said... Reply to comment

பயணமே இனிமைதான் அதிலும் இரவுப்பயணம் இன்பமோ இன்பம் அல்லவா???அழகான பயணக்கட்டுரை போலவே இயற்கைக்காட்சி புகைப்படமும் அந்த குழந்தையின் புகைப்படமும் மனசுபுள்ளா நிறைந்து இருக்கு பாஸ்,

உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணம் ஆனது போலவே ஒரு பிரமை

கோகுல் said... Reply to comment

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
அந்த குழந்தை அக்கா பொண்ணுதான்-பவ்யா!

Anonymous said... Reply to comment

பயணக் கட்டுரை அருமை ...

கோகுல் said... Reply to comment

@ரெவெரி
பேரை தமிழில் மாத்திட்டீங்க!நல்லாருக்கு!

சேலம் தேவா said... Reply to comment

பைனல் டச் சூப்பர்..!! :)

கோகுல் said... Reply to comment

சேலம் தேவா said...
பைனல் டச் சூப்பர்..!! :)//

வாங்க!வருகைக்கு நன்றி!

பிரணவன் said... Reply to comment

பயணம் அருமை. . .

சென்னை பித்தன் said... Reply to comment

நகைச்சுவையுடன் கூடிய பயணக் கட்டுரை.மலை அழகு;மழலையும் அழகு!

கோகுல் said... Reply to comment

@சென்னை பித்தன்
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஐயா!

செங்கோவி said... Reply to comment

அழகான பயணம் சட்டுனு முடிஞ்சிடுச்சே..

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

கண்ணயர்ந்தேன்.கனவு! ஊரில் இறங்கியதும் கேரளா கெண்டை மேளமுழங்க வரவேற்பது போல்.விழித்தேன் சாமி ஊர்வலம்/

நல்ல கனவு!!

vidivelli said... Reply to comment

பயண அனுபவங்கள் ...
ரசித்து படித்தேன்,,
பாராட்டுக்கள்..

K said... Reply to comment

சார்! நீங்க சொல்லியிருக்கிறது நிஜம்! குழந்தைகளோட சிரிப்புல நாம இந்த உலகத்தையே மறந்துடுறோம்!

Mathuran said... Reply to comment

அருமையான பயணப்பதிவு.. அடுத்த பகுதியும் உண்டா? எப்போது?