Friday, September 30, 2011

வேகத்தடையா?பயணத்தடையா???



_________________________________________________________________________________
நான் நேத்து வேலைக்கு(?) பைக்கில் போகும் போது திடீரென்று இரு இடங்களில் வேகத்தடைகள் புதிதாக முளைத்திருந்தன.மிதமான வேகத்தில் சென்றதால் ப்ரேக் பிடித்து சமாளித்து விட்டேன்.இந்த நிகழ்வு நான் பதிவெழுத வந்த புதிதில் எழுதிய ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்துச்சு.புதிய folloewrs-க்காக மீண்டும் இங்கே.அப்போது வாசித்தவர்கள் பொறுத்தருள்க!
__________________________________________________________________________________


என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் திடீரென்று கையில் கட்டுடன் நிறுவனத்துக்கு வந்தார்.என்னங்க நேத்து கூட நல்லாத்தான இருந்தீங்க என வழக்கமான கேள்வியை கேட்டேன்.அதுக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த பதிவுக்கு மேட்டர்.
வண்டில போய்கிட்டு இருக்கும் போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது தெரியாமவேகமா போய் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னார்.ஏங்க நீங்க தினமும் போற ரோடுதான ஸ்பீட் பிரேக்கர் இருக்கறது           தெரியாதா ன்னேன் நான் விவரமா?

அடப்போடா?நான் மதியம் வரும் போது ஸ்பீட் பிரேக்கர் இல்லடா.திரும்பி நைட் போகும்போது ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்காங்கடா னார்.
அப்போது தான் எனக்கு உரைத்தது நம்ம ஊரில் நிறைய வேகத்தடைகள் இருப்பதே தெரிவதில்லை.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தொலைவில் வரும் போதே தெரிவதற்காக வெள்ளை, மஞ்சள் நிறத்தில்,வேகத்தடை இருப்பது தெரியும்படி அடையாளமிட்டிருப்பார்கள்.அது போக எச்சரிக்கை பலகையும் வைத்திருப்பார்கள்.

ஆனால் பெரும்பாலானமாநகரச்சாலைகளிலும்.ஊரக, கிராமப்புறச்சாலைகளிலும் உள்ள வேகதடைகளில் இது போல இருப்பதில்லை.

தினமும் ஒரே சாலையில் பயணிப்போரே புதிதாய்ப்போட்ட வேகத்தடை தெரியாமல் விபத்துக்குள்ளாகும் போது புதிதாய் அந்த சாலையில் பயணிப்போரின் கதி???


ஹெல்மட்டை போடுங்க,சீட் பெல்ட போடுங்க,ட்ராபிக் ரூல்ஸ பாலோ பண்ணுங்க அப்படின்னுல்லாம் சொல்லுரவங்க,இதெல்லாம் பாலோ பண்ணியும் இப்படி விபத்து ஏற்படாம தடுக்க,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.

நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!




மேலும் வாசிக்க "வேகத்தடையா?பயணத்தடையா???"

Wednesday, September 28, 2011

ஒரு டீ கூட குடிக்க முடியல!!!




அட இதுக்குப்போய் ஏங்க பீல் பண்றீங்க?வாங்க நான் வாங்கித்தரேன்’நீங்க கூப்பிடறது புரியுது.உங்க அன்புக்கு நன்றி.ஆனா இத சொன்னது நான் இல்லைங்க நம்ம நாட்டு தேசிய விளையாட்டான ஹாக்கி(அடிக்கடி ஞாபகப்படுதுங்கப்பா!)அணியின் முன்னால் கேப்டனும் அதிரடி வீரருமான தன்ராஜ்பிள்ளை மனம் நொந்து சொன்னதுதான் இது.

அவர் இப்படி சொன்னதுக்கு காரணம் இருக்குங்க.ஒரு மேட்ச் ஆட இந்திய தேசிய ஹாக்கி சம்மேளனம் இவங்களுக்கு கொடுக்கும் அலவன்சே 900 ரூபாதானாம்!ஆனா ரூம் மட்டும் ஏதாவது நட்சத்திர ஹோட்டல்கள்ல போட்டு கொடுத்துடுவாங்கலாம்.
யாராவது நண்பர்கள்,உறவினர்கள் ஹோட்டல்ல பாக்க வந்தா ஒரு டீ கூட வாங்கி கொடுக்க முடியாத நிலையில் தான் நாங்கள் இருந்திருக்கிறோம் என நொந்திருக்கிறார் இவர்.
இன்னொரு கொடுமை கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய போட்டியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை 25,000 ஆயிரமாம்.அடேங்கப்பா!எவ்வளவு தாராள மனசு!

இப்ப நடந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் CLT20 –ல் சாம்பியனாகப்போகும் அணிக்கு கிடைக்கப்போகும் தொகை ரூ.28 கோடியாம்!(ஏன் இவ்வளவு கஞ்சத்தனம் இன்னும் கொஞ்சம் கொடுக்கலாம்).இது கூடப்பரவால்ல.ஐந்திளுருந்து பத்தாவது இடம் வரையுள்ள அணிகளுக்கு தலா ரூ.95 லட்சம் வரை வழங்கப்படுமாம்.(அடங்கோ!மொத்தமே பத்து அணிகள்தான்)

அவங்களச்சொல்லி என்னங்க பண்றது ஒரே நேரத்துல ஒரு கிரிக்கெட் மேட்சும்,ஒரு ஹாக்கி மேட்சும் நேரடி ஒளிபரப்பானா நாம என்ன பண்ணுவோம்?நான் நாம நாம’ன்னு சொல்றது என்னையும் சேர்த்துதான்.கிர்ரிக்கேட்டைபாத்துட்டு பிடிச்ச அணி ஜெயிச்சா நாம யாருன்னு காட்டிடோம்ல’ன்னும்,தோத்துட்டா இவங்க எப்பவுமே இப்படித்தான்’ன்னு நொந்துக்கிட்டு சரி ஹாக்கியில நம்மாளுங்க என்ன பண்ணியிருக்காங்கன்னு ஏதாவது செய்தி சானல் பாத்துட்டு இருப்போம் ஜெயிச்சுருந்தா நம்ம தேசிய விளையாட்டுனா சும்மாவான்னு மார் தட்டிக்கறோம்.அதுலயும் தோத்துடுசுன்னா இவங்களையும் நம்ப முடியலப்பா’ன்னு சொல்லிட்டு அடுத்த கிரிக்கெட் மேட்ச் என்னைக்குன்னு பாக்க ஆரம்பிச்சுடுவோம்!

அதனால நான் என்ன சொல்ல வரன்னா நாம என்ன பண்ணனும்னா மொதல்ல நாம நம்மள மாத்திக்கணும்,இப்பவும் நாம’ல நானும் இருக்கேன்.கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட்டையும் சேர்த்து பிற விளையாட்டுகளுக்கும் ஆதரவு கொடுக்கணும்.அப்பறமா அரசாங்கத்த ஆதரவு கொடுக்க வைக்கணும்.எதுவும் செய்யாம, ம்ம்க்கூம்!நூத்தி பத்து கோடி பேர் இருந்துட்டு ஒலிம்பிக்க்ல ஒரு பதக்கம் வாங்கவே முக்குறோம்னு வியாக்யானம் பேசிட்டு இருந்தா கடைசி வரைக்கு பேசிட்டே இருக்க வேண்டியதுதான்!


மேலும் வாசிக்க "ஒரு டீ கூட குடிக்க முடியல!!!"

Monday, September 26, 2011

பிறந்தநாள் பரிசாகவா?




முன்குறிப்பு- முழுசா படிக்காம போய்டாதிங்க!

ரொம்பநாளாய் உன்னை கேட்கிறேன்
நீயும் இப்போது அப்போது என
நீக்கு போக்கு சொல்லி
மறுத்து வருகிறாய்!

ஒரு நாள் முடியுமா முடியாதா என
அதட்டிக்கேட்டபோது
அலட்டிக்கொள்ளாமல் சொன்னாய்
முடியாதென்று!

நான் முடங்கிப்போய்
முனகிக்கேட்டதால்
முடிவைச்சொன்னாய்
பிறந்த நாளன்று பரிசாகத் தருவேனென்று!

ஏனென்று
ஏக்கத்துடன் கேட்டதற்கு
பிறந்தநாளன்று கொடுப்பதுதான்
இந்த பரிசுக்கு மதிப்பும் சிறப்பும் என சொன்னாய்!

எதிர்பார்த்துக்காத்திருந்தேன்
பிறந்தநாள் தேதியை
தேதியும் வந்தது
உனை நெருங்கிக்கேட்டேன்

இன்றுதான் என் பிறந்தநாள்
இப்போதாவது தருவாயா?என்று
கையைக்காட்டு என்றாய்
நான் மறுத்து
உதட்டைக்காட்டினேன்!

உதட்டைதவிர்த்து
முகம் முழுக்க
!
   !
   !
   !
   !
   !
கேக்கைப்பூசி
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எனக்கூறி இதுக்குப்போய்
இப்படி அவசரப்பட்டாயே! என
கடிந்து கொண்டாய்!

____________________________________________________________________________________________________________
என் பிறந்தநாளை முன்னிட்டு எனது கற்பனைக்குதிரை கட்டுக்கடங்காமல் ஓடியதால் வந்த விளைவு.திட்டாதிங்க!வாழ்த்திக்கொண்டிருப்பவர்களுக்கும்,வாழ்த்தப்போகும் அன்பர்களுக்கும் நன்றி!
_____________________________________________________________________________________________________________



மேலும் வாசிக்க "பிறந்தநாள் பரிசாகவா?"

Sunday, September 25, 2011

sunday-ன்னா ரெண்டு!!!



இயலாமை


அற்புதமாக சொற்பொழிவாற்றினார்
ஆன்மீகவாதி ஒருவர்
அனாவசியமாக
அற்பஉயிரையும்
அழிக்கக்கூடாதென
அவரால்கூட காப்பாற்றமுடியவில்லை
அவர் காலடியில் கிடந்த
எறும்பை!

_________________________________________________________________________
எது உண்மை?


கோவில் கட்ட
கோடிகோடியாய்
கொட்டிக்கொடுக்கும் சிலர்
பள்ளிக்கூடங்களையும்
ஆதரவு ஏற்போர் அமைப்புகளையும்
கண்டுகொள்வதில்லை

முடிந்தவரை
முடியாதவர்களுக்கு உதவுவதே
உண்மையான இறைத்தொண்டு என்பதை
யார் இவர்களுக்கு புரிய வைப்பது?


 புகைப்படம் உதவி-இணையம்&my friend madesh(2&3)



மேலும் வாசிக்க "sunday-ன்னா ரெண்டு!!!"

Saturday, September 24, 2011

இவங்க இப்படித்தான் சொல்வாங்க பாஸ்!!




டீ மாஸ்டர்-இப்ப போட்ட வடை சார் (எப்ப கேட்டாலும்)


மெடிக்கல் ஷாப் ஓனர்- அதே மருந்து தான் சார்,கம்பெனி தான் வேற
(டாக்டர்ட காட்டினா நான் போக சொன்ன மெடிக்கல்தான் ஆனா மருந்துதான் வேறங்கறார்)

ஸ்கூல் பையன் –அம்மா இன்னைக்கு வயிறு வலிக்குதும்மா (நீ கொழந்தையா இருக்கச்ச இததான் சொல்லுவன்னு அம்மா சொன்னாங்க)

ரியல் எஸ்டேட் காரர்- சைட்டுல இருந்து பத்து நிமிஷத்துல மெயின் ரோடு வந்துடும் (இந்த சைட்டுல இருந்துன்னு’ன்னு சொன்னமா?)

காய்கடைக்காரர்- காலைல வந்ததுதாம்மா (என்னைக்கு காலைலன்னு சொன்னமா?)

சேல்ஸ் மேன்- இந்த ஆபர்(offer) இந்த மாசம் கடைசியோட முடியுது (போன மாசமும் இதயே தான் சொன்னீங்க?)

துணிக்கடைக்காரர்- இந்தத்துணி சாயம் போகவே போகாது (வெள்ளைத்துணியை காட்டினாலும் இதே டயலாக் தான்)

கண்டக்டர்- பஸ் நடுவில எங்கேயும் நிக்காது பாய்ன்ட் டூ பாய்ன்ட் (நடுவில எத்தனை பாய்ன்ட் இருக்குன்னு சொன்னமா?)

பேங்க்ல லோன் தர்றவர்- இருக்கற பேங்க்’லேயே எங்க பேங்க்’லதான் இன்ட்ரஸ்ட் கம்மி (கடன் தர்ரதுல இன்ட்ரஸ்ட் கம்மியா?)

பரிட்சைக்கு போகும் கேர்ள்- எல்லாம் படிச்சாச்சா?ஐயோ!ஒன்னுமே படிக்கலையே! (படிக்காமாலே பாஸாகும் வித்தைய எங்களுக்கும் சொல்லக்கூடாதா?)

இன்சூரன்ஸ்- இந்த பாலிசி எடுத்திங்கன்னா வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும் (யாரு வாழ்க்கைன்னு சொன்னமா/)

அரசியல்வாதி- அந்த ஊழலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல(ஏன்னா என் பேரு சம்பந்தம் இல்லன்னு கிரேசி மோகன் டயலாக் மாதிரி இல்ல இருக்கு)

பரிட்சைக்கு போகும் பையன் – எல்லாம் படிச்சாச்சா?இன்னைக்கு எக்ஸாமா மச்சான்?

கடைசியா சொன்னவரு தான் சரியா சொன்னாருன்னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்குறிங்க?


மேலும் வாசிக்க "இவங்க இப்படித்தான் சொல்வாங்க பாஸ்!!"

Thursday, September 22, 2011

மோட்டலா?ஐயோ!மிரளும் பயணிகள்!!!







 வணக்கம் நண்பர்களே!
முந்தைய பதிவில் இதற்க்கு கூட காசு வாங்கணுமா? என மோட்டல் கழிவறைகளின் கொடுமையை கூறியிருந்தேன்.கழிவறைகள் தான் இப்படி இருக்கின்றன.

சரி!சாப்பிடலாம்னு போனா விலையெல்லாம் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கு.தரமோ கையேந்திபவன விட கேவலம்.ஒரு மூணு வருசத்துக்கு முன்னால ஓசூரில் இருந்து சேலம் வரும்போகும்போது கிளம்பற அவசரத்துல சாப்பிடாம கிளம்பிட்டேன்.செம பசி  வழியில் கிருஷ்னகிரிக்கு அருகில் உள்ள ஒரு மோட்டல்ல பஸ் நின்னுச்சு.

சாப்பிடலாம்னு போய் உக்காந்தேன்.
மெனு கார்ட் கொடுத்தார்கள்.அடங்கோ!இது வேறயான்னு நினைச்சுகிட்டு மெனுவை பார்த்து ஷாக்காகிட்டேன்.டிஷ்சுக்கு ஒரு ரேட்டாம்.சைட் டிஷ் தனி ரேட்டாம்!பரோட்டா முப்பதுரூபா!அதுக்கு சைட் டிஷ் முப்பது ரூபாயாம்!சரி ஒருடீ குடிச்சுட்டு வேளைய முடிசுக்கலாம்னு பாத்தா டீயே எட்டு ரூபாயாம்!நினைவு கொள்ளுங்கள் மூன்று வருடங்களுக்கு முன்!சரி பிஸ்கட் பாக்கெட்டாவது வாங்கலாம்னு பாத்தா எம்.ஆர்.பியை விட மூன்று ரூபாய் அதிகம்!வாட்டர் பாட்டிலும்தான்!


வேற வழியில்லாமஅன்னைக்கு ஒரு பிஸ்கட் பாக்கட்டோட அன்னைய பசிய அடக்கிகிட்டேன்!அன்னைக்கு முடிவு பண்ணேன்.கொய்யால இனிமே இந்த மோட்டல்ங்க பக்கமே வரக்கூடாதுன்னு.அதுக்கப்பறம் பஸ்ல போகனும்னா வீட்ல இருந்தே ஒரு பாட்டில்ல தண்ணியும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் எடுத்துட்டு போயிடுறேன்!.இருந்தாலும் தொலைதூரப்பயணங்களில் பசிக்கொடுமைக்கு பயந்து கேக்குற காச கொடுத்து சாப்பிட வேண்டிய கட்டாயம் பலருக்கு இருக்கு.


இருந்தாலும் சும்மாவேனும் பஸ் நிக்கும் மோட்டல்லலாம்போய் நாலைஞ்சு அயிட்டங்களை விலை கேட்பேன்.பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்தது போல அதிக விலைதான்.விலைய கேட்டுட்டு ஏற இறங்க பாத்துட்டு வந்துடுவேன்!.
இப்படி பஸ்சுக்கு பத்து பேர் விலைய மட்டும் கேட்டுட்டு எதையும் வாங்காம திரும்பி வந்தா அவங்களுக்கு கொஞ்சமாவது உரைக்கும்.


இதுல நடக்கும் இன்னொரு கொடுமை என்னன்னா பேருந்து ஓட்டுனர்கள் குறிப்பிட்ட மோட்டல்களில் பஸ்ஸை நிறுத்த மேலிடத்திலிருந்து கட்ட்யாப்படுத்தப்படுகின்றனர்.இதை மக்கள் தொலைக்காட்சி கொஞ்ச நாள்களுக்கு முன் படம் பிடித்துக்காட்டியது.போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளே பேருந்துகளை குறிப்பிட்ட நிறுத்துமாறு திருப்பி விட்டதை காட்டியது அதிர்ச்சி அளித்தது.மேலும் கடந்த பதிவிற்கு நண்பர் சம்பத்குமார்(TAMILPARENTS.COM) அனுப்பிய மெயிலில் மோட்டல் நிர்வாகத்தினரால் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் “நன்கு’’ கவனிக்கப்படுவதாலும்,மக்கள் பிரதிநிதிகள் பேருந்துப்பயணம் மேற்கொள்ளாமல் காரிலேயே வலம் வருவதாலும் இந்த நிலை தொடர்வதாகவும் ஆதங்கப்பட்டார்.

நானறிந்தவரை(நீங்களும்தான்) தமிழகத்திலுள்ள பெரும்பாலான மோட்டல்களில் சுகாதாரமான கழிப்பிட வசதிகளும் இல்லை.விற்கப்படும் உணவுப்பொருட்கள் எம்.ஆர்.பி.யை விட மூன்று ரூபாய் முதல் அதிகமாகவே விற்கப்படுகின்றன.மேலும் உணவுப்பொருட்கள் தரமாக இருப்பதாகவும் தெரியவில்லை.


இன்னொரு சந்தேகமும் இருக்கிறது தமிழகம் முழுவதும் உள்ள மோட்டல்களில் எத்தனை முறையான அனுமதி பெற்று இயங்குகின்றன? என்பது தான் அது.ஆனால் “முறையான”அனுமதியுடன் பல மோட்டல்கள் இயங்குவதே உண்மை.

கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததைப்போல் FACEBOOK-ல் ASK கேட்டால் கிடைக்கும் என்ற குழுவின் மூலம் இது போல் அதிக விலைக்கு உணவுப்பொருட்களை விற்ற திருத்தணியில் உள்ள ஒரு மோட்டலைப்பற்றி ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புகார்கள் தொலைபேசி மூலம் அளிக்கப்பட்டன.


இதே போல் ஊரில் உள்ள அணைத்து மோட்டல்களின்`தரத்தையும்,விலையையும் அரசே நிர்ணயித்து அனுமதி வழங்கி,அந்த மோட்டல்களில் மட்டும் பேருந்துகளை நிறுத்த போக்குவரத்து துறையினரை பணிக்கவேண்டும் என ஒரு கோரிக்கையை அரசுக்கு நாம் சமூக வலைத்தளங்களின் வாயிலாக தெரிவிக்க வேண்டும்.இதற்கு என்ன செய்ய வேண்டுமென்று உங்கள் ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!நன்றி!

பின்குறிப்பு-விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் செங்கல்ப்பட்டு அருகில் மாமண்டூர் என நினைக்கிறேன்.அங்கு ஒரு மோட்டல் உள்ளது.இங்கே கழிப்பிடம் இலவசம்,அதுவும் அதி சுத்தமாய்!(அதியசம் ஆனால் உண்மை).பொருட்களும் நியாமான விலையில்.விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் இங்கே நின்று செல்லுமாம்.விழுப்புரம் கோட்ட நிர்வாகம் நடத்துவதாக கேள்விப்பட்டேன்,தெரியவில்லை.இது போல் எல்லா மோட்டல்களும் அமைந்து விட்டால் நமது பயணம் புத்துணர்ச்சியுடன் முடியும் என்பதில் சந்தேகமில்லை. 
__________________________________________________________________________________

நண்பர்களே!இந்த பதிவை(கடந்த பதிவையும்) தங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துசெல்லுங்கள்!
__________________________________________________________________________________



மேலும் வாசிக்க "மோட்டலா?ஐயோ!மிரளும் பயணிகள்!!!"

Wednesday, September 21, 2011

காந்தி பிறந்த மண்!!!


காந்தி பிறந்த மண் –இன்று
கலவரத்திற்கு தத்துக்கொடுக்கப்பட்டது.


மதத்தின் பெயரால்
மனித மிருகங்கள் சில
மதங்கொண்டு
மனிதரையே மாய்க்கின்றன!

இதயமே இல்லாமல்
இரயில் பெட்டிகளை எரித்து
இரக்கமே இல்லாமல்
ஏதுமறியாதோரை கொல்கின்றன!

பதவிக்காக
பணயம் வைக்கப்படுகின்றன-விலை
மதிப்பேயில்லாத
மனித உயிர்கள்!

நாற்காலிக்காக
நசுக்கப்படும்
அப்பிராணிகள்
அப்பாவி மக்கள்!

கடவுளின் பெயரால்
கற்பழிப்பு!
கொலை!!
கொள்ளை!!!


ஆம்!
காந்தி பிறந்த மண்-இன்று
கலவரதிற்க்காக தத்துக்கொடுக்கப்பட்டது.


கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எறிந்த போது ஏன் மனம் எரிந்து எழுதியது.
இப்போது ஏனோ நினைவுக்கு வந்ததால் பதிவிடுகிறேன்!ஏன்னு கேக்காதிங்க சொல்லிப்புட்டேன்!ஆமா!





மேலும் வாசிக்க "காந்தி பிறந்த மண்!!!"

Monday, September 19, 2011

இதுக்கு கூட காசு வாங்கணுமா?



நாம் ஏதாவது பயணம் மேற்கொள்ளும்போது அது,ரயில் பயணமாக இருந்தா தப்பிச்சோம்.ஏன்னா ரயில் பயணங்களில் சாப்பிடவும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் பிரச்சினை இல்லை.திட்டமிட்ட பேருந்துப்பயணமா இருந்தா சாப்பிட ஏதாவது கட்டுச்சோறாவது எடுத்துட்டுப்போவோம்.ஆனால் இயற்கை உபாதைகளை கழிப்பதில் பிரச்சினைதான்.


திடீர் பயணம் செய்யும் போது(பேருந்துகளில்) எதுவும் எடுத்துட்டு போக முடியாது.அந்த மாதிரி நேரத்துல சாப்பிடவோ இயற்கை உபாதைகளை கழிக்கவோ பேருந்துகள் வழியில் நிற்கும் மோட்டல்களையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் இந்த மோட்டல்கள் பார்த்தாலே மிரள வேண்டியிருக்கிறது.பெரும்பாலான மோட்டல்கள் பயணிகளிடம் பணம் பிடுங்கும் கொள்ளைக்கூட்டமாகவே செயல்படுகிறது.அது கூட பரவால்லைங்க,ஒன்னுக்கு உடுறதுக்கு கூட மூணு ரூவாயில இருந்து ஐஞ்சு ரூவா வரைக்கும் புடுங்கறாங்க.








 சரிடா!காசுதான் வாங்குரிங்களே!கொஞ்சமா சுத்தமா வச்சுக்கப்படாதா?உள்ள போனா 
குடலப்புடுங்குது,நாத்ததோட வயித்தெரிச்சலும் கூட சேர்ந்து ஒண்ணுமே வரமாட்டேங்குது போங்க!
ஆம்பிளைங்க பாடுவது பரவால்ல பஸ் நிக்கற இடத்துல ஏதாவது ரோட்டோரமா வேலைய முடிச்சுட்டு போய்டலாம்.பெண்கள் பாடுதான் திண்டாட்டம்.


எனக்கு ஒரு விஷயம் தான் புரியல,காசு கொடுத்து அரிசி வாங்க முடியாத ஏழைகள் இருக்காங்கன்னு தான ரெண்டு ரூவாய்க்கும்,இலவசமாவும் அரிசி போடுறாங்க.சாப்பிடவே செலவு செய்ய முடியாதவன இதுக்கு செலவு செய்ய வைப்பது என்ன லாஜிக்கோ?


கிரைண்டர்,மிக்சி.பேன்,லாப்டாப் இதெல்லாம் இலவசமா கொடுக்கும் போது பேருந்து நிலையங்களில் இலவச கழிப்பறை நடத்தமுடியாதா ?அத டெண்டர் விட்டு சம்பாதிக்கனுமா?


ஒரு வேளை இவங்க இந்த விசயத்துல மொபைல் நெட்வொர்க் காரர்களின் பாலிசிய பாலோ பண்றாங்களோ?அதாங்க இன்கமிங் ப்ரீ.அவுட்கோயிங்குக்கு காசு!


பேருந்துநிலையங்கள் என்று மட்டுமல்ல சுற்றுலாதளங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் போதுமான அளவில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தருவது அரசின் கடமை இல்லையா?நாமெல்லாம் அடக்கிக்கொண்டு போகத்தான் யாரும் இது பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. அரசின் செவிக்கு கேட்கும் அளவுக்கு குரல் கொடுப்போம்.படிக்கும் நண்பர்கள் இதனை அரசுக்கு கொண்டு செல்ல தேவையான ஆலோசனைகள் தரவும்.


FACEBOOK-ல்கேட்டால் கிடைக்கும்-ASKஎன்ற அமைப்பின் மூலம் இது போன்ற விஷயங்களை கேட்பதற்கான சிறிய விதை போடப்பட்டுள்ளது.இந்த குழுவில் உள்ளவர்களும் இது குறித்து ஆலோசனைகளும் முயற்சிகளும் செய்யவும்!மன்னிக்கவும்!செய்வோம்!
__________________________________________________________________________________


இப்படிப்பட்ட பயணங்களின் போது சாப்பாட்டிக்கு படும் பாடு அடுத்த பதிவில்!
__________________________________________________________________________________


நன்றி-இணையங்கள் for photos&my friend madesh(last photo)

மேலும் வாசிக்க "இதுக்கு கூட காசு வாங்கணுமா?"