Thursday, December 8, 2011

நேற்று காவிரி, இன்று முல்லைப்பெரியாறு, நாளை ???


வான் பொய்ப்பினும்
தான் பொய்யாக்காவிரி-இன்று
வானும்பொய்த்து
தானும் பொய்த்து
வறண்டு கிடக்கிறது!
கரிகால்வளவன் கட்டிய
கல்லணையிலோ –இன்று
கால் நனைக்க தண்ணியில்லை
கண்ணீர்கூட மிச்சமில்லை!


திருச்சியில் இருகரை தொட்டோடிய காவிரி
தீர்த்தமாய் தேங்கி நிற்கிறது
தெளிவாய் இருந்தாலாவது தீர்த்தமெனலாம்
தேங்கிக்கிடப்பதென்னவோ கழிவுகள் தாம்!


யானைகட்டி போரடித்த தஞ்சையில்-இன்று
பானை பொங்க வழியில்லை
கூட்டணி குழப்பத்தில் அரசு
பட்டினி மயக்கத்தில் மக்கள்!
வறண்டு கிடக்குது வயல்கள்
வட்டிக்கடையில் வளையல்கள்
பாளம்பாளமாய் வெடித்து நிற்குது கழனி
பார்த்து பார்த்து வெடிக்குது விவசாயியின் தமனி!


பால் கறந்த பசுவெல்லாம்
பாழாய்ப்போன கந்துக்கு இரையாக 
ஏர் உழுத எருதெல்லாம் –அடுத்தவேளை
சோற்றுக்காக விற்கப்படுகின்றன!


பட்டம் பார்த்து விதை விதைத்தோம்
பருவம் பார்த்து அறுவடை செய்தோம்
சட்டம் ஏதோ போட்டார்களென்று
புருவம் உயர்த்தி காத்திருக்கிறோம்!
விடை தெரியும் நாள் தெரியாமல்..... கல்லூரிக்காலத்தில்(2005)காவிரிப்பிரச்சினை தலைவிரித்தாடியபோது எழுதியது.அன்று காவிரிக்கு வந்தது இன்று முல்லைப்பெரியாருக்கு 


வந்திருக்கிறது.பெயர் தான் மாறியிருக்கிறது நிலைமை????????42 comments:

அனுஷ்யா said... Reply to comment

//பால் கறந்த பசுவெல்லாம்
பாழாய்ப்போன கந்துக்கு இரையாக
ஏர் உழுத எருதெல்லாம் –அடுத்தவேளை
சோற்றுக்காக விற்கப்படுகின்றன!//

கண்கள் கொஞ்சம் ஈரமாயிடுச்சு...

அனுஷ்யா said... Reply to comment

//பானை போங்க //

கவனிக்க மறந்த சிறு எழுத்து பிழையை சரி செய்யுங்களேன் ...
அழகிய ஓர் ஒப்பாரி...
பகிர்விற்கு நன்றி...

அனுஷ்யா said... Reply to comment

நாதான் முதல் டிக்கெட்டா?....சூப்பரு...
இன்று என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!

கோகுல் said... Reply to comment

@மயிலன்உடன் வரவிற்கும் கருத்துக்கும் நன்றி.பிழை சுட்டியமைக்கும் நன்றி.திருத்தி விட்டேன்

மகேந்திரன் said... Reply to comment

அன்று அமராவதி அணையைக் கட்டி
காவிரித் தண்ணீரை தடுத்தவர்கள்..
இன்று முல்லைப் பெரியாறை தடுக்கிறார்கள்..
புகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எல்லாம் எங்கே போயிற்று !!!
விளங்கவில்லை.....

அம்பலத்தார் said... Reply to comment

//யானைகட்டி போரடித்த தஞ்சையில்-இன்று
பானை பொங்க வழியில்லை//
என்னகொடுமையிது. யதார்த்தத்தை நல்லபடி சொல்லியிருக்கிறிங்க.

Philosophy Prabhakaran said... Reply to comment

ஃபீல் பண்ண வச்சிட்டீங்க...

புகல் said... Reply to comment

தமிழ் இனம் இந்தியா என்னும் அடிமை நாட்டில் இருக்கும்வரை இது தொடரும்
தமிழன் தன்னை இந்தியன் என்ற அடையாளத்தை அன்று தொலைக்கிறானோ அன்றுதான் தமிழ், தமிழினத்தின் உரிமைகள் திரும்ப கிடைக்கும் அல்லது
இப்படி பிதற்றி கொண்டுதான் அலைய வேண்டும்

*anishj* said... Reply to comment

வரிகள் ஒவ்வொன்றும், எதார்தத்தின் படங்களாய் கண்முன் விரிய, படங்கள் கவிதை பேசுது...!

அருமை நண்பா...!
வாழ்த்துகள்...!!!

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

மனதை சுட்ட உண்மைகள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

உண்மை தான் .

எஸ்.மதி said... Reply to comment

வரிகள் ஒவ்வொன்றும், , கவிதை பேசுது...!

அருமை

Unknown said... Reply to comment

கல்லூரி பருவத்தில் மட்டும் தான் கவிதை பொங்கி வருமா? கவிதை மிக நன்று! மீண்டும் எழுதலாமே! தம5!

சக்தி கல்வி மையம் said... Reply to comment

மனதை நெகிழ வைத்த வரிகள்..

நாளை பாலாறு?!!!!!!!

சம்பத்குமார் said... Reply to comment

//வறண்டு கிடக்குது வயல்கள்
வட்டிக்கடையில் வளையல்கள்
பாளம்பாளமாய் வெடித்து நிற்குது கழனி
பார்த்து பார்த்து வெடிக்குது விவசாயியின் தமனி!//

உண்மை நண்பரே..

இன்று முல்லை பெரியார்.. நாளை அனைத்து தமிழக நதிகள் அனைத்துமே தாரை வார்க்கப்பட உள்ளது..

Anonymous said... Reply to comment

இன்னும் எத்தனை கன்னங்கள் உள்ளன உன்னிடம் தமிழா? உன்னை அடிப்பவரிடம் காண்பிபதற்க்கு..!

சசிகுமார் said... Reply to comment

//வறண்டு கிடக்குது வயல்கள்
வட்டிக்கடையில் வளையல்கள்
பாளம்பாளமாய் வெடித்து நிற்குது கழனி
பார்த்து பார்த்து வெடிக்குது விவசாயியின் தமனி!//

இன்றைய உண்மை நிலை...

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

புருவம் உயர்த்தி காத்திருக்கிறோம்!
விடை தெரியும் நான் தெரியாமல்.....

Anonymous said... Reply to comment

as long as we look for politicians from cinema industry,this will have to continue!the neighboring states believe tamilians are politically IMPOTENT.Do u know who is ur MP and wat he is doing now.....if u hav his e-mail id send him a letter abt the current issue.At least watch him whether he is opening his mouth.Take a look at MPs of kerala, see wat they are doing !

Unknown said... Reply to comment

காலங்கள் மாறினாலும்
கோகுலின் கவிதை
இன்றைக்கும் பொருந்துவது
காலத்தின் கோலம் அல்ல..
சில களவானிகள் செய்த துரோகம்..!
பகிர்வுக்கு நன்றிகள் கோகுல்.

குறையொன்றுமில்லை. said... Reply to comment

ரொம்ப யதார்த்தமான கவிதை இந்தக்காலத்துக்கும் பொருந்திப்போகுதே.

tamilvaasi said... Reply to comment

நண்பா... உன் கவிதை குரல் அரசியல்வாதிகளுக்கு கேட்குமா?


வாசிக்க:
இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை

ராஜா MVS said... Reply to comment

கவிதையின் ஒவ்வொருவரிகளும் மனதை தைக்கிறது...

அருமை... நண்பா...

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

வேதனையான உண்மை, மனதுக்கு கவலையை அள்ளி தெளிக்கிறது கவிதை...!!!

Yoga.S. said... Reply to comment

வணக்கமுங்க!ஆளாளுக்கு அடிச்சுக்குவோம்.நம்ம ஒத்துமை தான் உலகுக்கே தெரியுமே?.

Unknown said... Reply to comment

பகிர்வுக்கு நன்றி கோகுல்.

SURYAJEEVA said... Reply to comment

அருமையான கவிதை; அனைத்து தமிழனின் ஏக்கம்...

தனிமரம் said... Reply to comment

தாரைவார்த்துக் கொடுப்பதிலும் கொள்ளையடிப்பதில் இருக்கும் கவனமும் நம் இயற்கையின் கொடை மீது இல்லாமல் போன முன்நோக்குச் சிந்தனையும் தான் இந்த அவலத்திற்கு காரணம் காத்திரமான கவிதை நண்பா!

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

அழகான கருத்துள்ள கவிதை. ஏன் Sir இப்போது எழுதுவது இல்லை?
இதையும் படிக்கலாமே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

Yaathoramani.blogspot.com said... Reply to comment

அருமையான கவிதை
இது போன்ற துயரங்களைச் சொல்லும் கவிதைகளை
எப்போதும் பயன்படுத்தக்கூடிய வகையில்
துயர்ங்கள் தொடர்வதுதான் வேதனையாக உள்ளது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 12

santhilal said... Reply to comment

KAAVIRIYAI KADAKKA PADAGU VENDAAM,OTTAGAM POTHUM.[YAARO]Dr.SANTHILAL.

HotlinksIN said... Reply to comment

நிஜம் கவிதை வரிகளில் தெறிக்கிறது...

///விடை தெரியும் நான் தெரியாமல்.....////

விடை தெரியும் நாள் தெரியாமல் அல்லவா வரவேண்டும்....?

--------------------------

உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள். www.hotlinksin.com பதிவுலகில் ஒரு புதிய அனுபவம்.

Unknown said... Reply to comment

எப்படிய்யா மாறும்!...எதிர்த்து போராட வேண்டியவங்கல்லாம் குடும்பத்த மட்டுமே நெனச்சிக்கிட்டு இருக்கோம்...தானே எப்படி சரியாகும்...வெறும் ஓட்டுக்கள் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்து விடாது மாப்ள!

பால கணேஷ் said... Reply to comment

அன்று எழுதிய கவிதை இன்றும் பொருந்தி வருவது வேதனையான நிஜம். என்ன சொல்ல...? பொருமத்தான் முடிகிறது. நன்று!

சாய்ரோஸ் said... Reply to comment

அன்று காவிரி... இன்று முல்லைப்பெரியாறு... நாளை??? வெறென்னவாய் இருக்கமுடியும்?.. கண்டிப்பாய் பாலாறுதான்... அடுத்த மாநிலங்களுடன்தானே கட்சிகள் தேர்தலுக்கு பயன்படுத்திக்கொள்ளும் நதிநீர் பிரச்சினை... நம் சொந்த மண்ணின் ஜீவநதிகள் பல சத்தமில்லாமல் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?.. ம்ம்ம்... என்ன ஏங்கி என்ன பயன்?... உங்கள் கவிதையின் வரிகள் அனைத்துமே அற்புதம்.. ஆதங்கங்களின் மொத்த உருவமாய் இருந்தது... எல்லா வரிகளுமே சிறந்தது என்பதால் எதையும் தனியாக எடுத்துரைக்க மனதில்லை...

அருள் said... Reply to comment

முல்லைப்பெரியாறு அநீதியும் முதுகெலும்பில்லாத தமிழ்நாடும்

http://arulgreen.blogspot.com/2011/12/blog-post_09.html

shanmugavel said... Reply to comment

சமூக அவலத்தை சாடும் சரியான வார்த்தைகள்.

சென்னை பித்தன் said... Reply to comment

காலம் மாறும்,பெயர் மாறும்;கவலைகள் மாறாதோ?
நன்று கோகுல்

நிரூபன் said... Reply to comment

வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கீங்களா?

காவிரி நதியின் இன்றைய நிலையினைக் கவிதையூடாகத் தந்திருக்கிறீங்க.

விரைவில் மழை வளம் பெருகி எம் சொந்தங்களின் தண்ணீர்த் தேவை பூர்த்தியாக வேண்டும் என்பதே என் அவா!

சத்ரியன் said... Reply to comment

தமிழகத்தின் நிலைமை காட்டும் கண்ணாடிக் கவிதை.

மாலதி said... Reply to comment

மிகவும் சிறப்பான செய்தி பாராட்டுகள் நல்ல விழிப்புணர்வு பாராட்டுகள்....

ரசிகன் said... Reply to comment

சராசரி தமிழனின் ஏக்கம். தீரும் நாள் தான் தெரியவில்லை.

முதல் கண்ணி படித்ததும் அட! என தோன்றியது. அதே தரம் கவிதை முழுவதும். வாழ்த்துக்கள் கோகுல்.