Wednesday, December 14, 2011

வலைப்பூவின் ( blog ) வரலாறு , இது நூறு

  


நான் தாங்க வலைப்பூ பேசுறேன்.இஸ்கூல்ல  படிக்கும் போது ஆறு தன் 

வரலாறு கூறுதல்,தென்னைமரம் தன் வரலாறு கூறுதல் போன்ற 

வரலாறுகளையும்,கதைகளையும் படிச்சிருப்பீங்க படிக்கலேன்னா 

பாத்தாவது இருப்பீங்க.இன்னைக்கு இணையத்தின் வளர்ச்சியால் சமூக 

வலைத்தளங்களின் பங்கு மிகவும் இன்றியமையாததா 

ஆகிடுச்சு.ஊடகங்கள் மறுக்கும் ,மறைக்கும் விசயங்களை உலகுக்கு 

தெரியப்படுத்துவதில் இது போன்ற சமூக வலைத்தளங்களின் பங்கு 

முக்கியமானதாகும்.நான் எப்படி உருவானேன்?


 Jorn Barger ன்னு ஒருத்தரு 1997- ல weblog அப்படிங்கற பேர்ல முதல் 

முதலாக என்னை துவக்கி வைச்சாரு. அதுக்கப்பறமா 1999 வாக்கில Peter 

Merholz  அப்படிங்கறவர் பேர கொஞ்சம் மாத்தி we blog அப்படின்னு சொல்ல 

ஆரமிச்சு அப்படியே என் பேர் blog அப்படின்னு ஆகிடுச்சு.ஆரம்பத்தில் xanga 

என்ற வலைத்தளம் வலைப்பதிவுகளுக்கு சேவையை வழங்கியது.இப்போ 

பரவலா  உபயோகிக்கப்படும் blogger.com இதே கால கட்டத்தில் சேவை 

வழங்கி வந்தாலும் 2003-ல் google-ல் இந்த தளம் இணைந்த பிறகே அபார 

வளர்ச்சி கண்டது.தமிழில்


          Google-ன் ஓர் அங்கமாக blogger.com மாறிய பின் தமிழிலும் 

வலைப்பூக்கள் மலர ஆரம்பித்தன.தமிழில் வாசிப்புப்பழக்கம் நாளுக்கு நாள் 

அறுகி வருகிறது என தமிழ் ஆர்வலர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்த 

காலகட்டத்தில் தமிழில் நாளுக்கு நாள் இணையத்தில் எழுதுபவர்களின் 

எண்ணிக்கை அதிகரித்தது ,அதை விட வாசிப்பவர்கள் எண்ணிக்கை 

அதிகமானதும் ,ஆரோக்கியமான நிகழ்வாக கருதப்பட்டது.தமிழின் முதல் 

வலைப்பதிவாளராக கார்த்திகேயன் ராமசாமி என்பவர் 

கருத்தப்படுகிறார்.இவரது முதல் பதிவு ஜனவரி முதல் தேதி 2003-ல் என்ன செய்கிறேன்?


                      நான் என்ன செய்கிறேன்.என்னால் என்ன பயன்? 

எந்தவொரு விசயமும் பயன்படுத்தும் விதத்தைப்பொறுத்து அதன் 

விளைவுகள் அமையும்.செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் வெறும் 

தொலைதொடர்பு சாதனமாக மட்டும் பயன்படுத்தப்பட்டதால் வரவேற்பு 

இருந்தது.அஆனால் இன்று அது மனிதனின் ஆறாம் விரலாக 

மாறிப்போனதிலிருந்து எதிர்ப்புக்குரலும் சேர்ந்தே வருகிறது.அது 

போலத்தான் நானும் ஒருவருக்குத்தெரிந்த விசயங்களை 

தெரியாதவர்களுக்கோ அல்லது அந்த விசயத்தின் உண்மை நிலையை 

அறியாதவர்களுக்கோ எடுத்துசெல்கிறேன்.இன்ன துறை என்றில்லை 

எல்லா துறைகளிலும் இன்று எனது பயன்படுத்துபவர்கள் 

இருக்கிறார்கள்.பொழுதுபோக்குக்காக பயன்படுத்துபவர்கள்,என்னை ஒரு 

நண்பனாக,வடிகாலாக,நண்பர்களை அவர்களின் கருத்துக்களை  

இணைக்கும் பாலமாக பயன்படுத்துபவர்கள் பலர். உலகின் பல பகுதிகளில் 

இருப்போரை நண்பர்களாக இணைத்திருப்பதில் பெருமையும் கொள்கிறேன்.

நிறைவாக
         

   என் கதையை,வரலாற்றை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும்  கோகுல் 

மனதில் வலைப்பூவின் நூறாவது பதிவு இது. கடந்த ஜூன் மாதம் 

ஆரம்பித்து கோகுலின் மனதில் தோன்றும் விசயங்களை பகிரத் தொடங்கி 

அப்படி இப்படியென்று நூறு பதிவை எட்டி விட்டது.இந்த வேளையில்  

இந்த வலைப்பூவிற்கு ஆதரவளிக்கும்,பின் தொடரும்,பின்னூட்டமிடும், 

தொடர்ந்து பார்வையிடும் எல்லா நண்பர்களுக்கும்,பதிவுகளை பலருக்கு 

கொண்டு சேர உதவிய திரட்டிகளுக்கும் twitter,facebook இல் இணைந்திருக்கும் 

இதயங்களுக்கும், கோகுலின் சார்பாக,இந்த வலைப்பூவின் சார்பாக 

மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 


இனி நான் (கோகுல்)

தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த 

நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.முக்கியமாக என்னை எழுத 

தூண்டிய எனது நண்பன் ரமேஷ் க்கு(பதிவரல்ல).59 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

நல்லதொரு தகவல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

முதல் பதிவு பார்ப்பதற்க்கு வித்தியாசமாக இருக்கிறது..


அப்புறம் தம்பி... ஒரு சதம் போட்டாச்சி..

என்னைக்கு ட்ரீட்...

ADMIN said... Reply to comment

சதம்.!!!

ADMIN said... Reply to comment

வாழ்த்துகள்!!

பால கணேஷ் said... Reply to comment

ஆஹா... செஞ்சுரி அடிச்சாச்சு. இன்னும் பல செஞ்சுரிகளை வெளுத்துக் கட்ட வாழ்த்துக்கள் கோகுல்! ப்ளாக் ஆரம்பித்த விதம், முதல் பதிவர்ன்னு எனக்குத் தெரியாத பல விஷயங்கள் இப்ப தெரிஞ்சுகிட்டேன். மிக்க நன்றி.

சக்தி கல்வி மையம் said... Reply to comment

வாழ்த்துக்கள் மாப்ள..

ஆச்சி ஸ்ரீதர் said... Reply to comment

நல்ல
தகவல்.இத்தனை விரைவில் 100வது பதிவு சாதாரண விசியமல்ல.வாழ்த்துகள்.

Angel said... Reply to comment

அருமையான பகிர்வு .
நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்

Unknown said... Reply to comment

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் மாப்ளே!

Prabu Krishna said... Reply to comment

நூறுக்கு வாழ்த்துகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

100 வாழ்த்துக்கள் சகோ.

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்களும், சிலபல தகவல்களுக்கு நன்றிகளும்...!!!

கோவி said... Reply to comment

பத்து வருடங்களுக்குள் நிறைய எழுத்தாளர்களை உருவாக்கிய blogகிற்கு நன்றி சொல்வோம்..

Unknown said... Reply to comment

சதமோ சுகமானது! பதிவின் தகவல் நன்று! வாழ்த்துக்கள் பல நூறு!

K.s.s.Rajh said... Reply to comment

நல்ல தகவல்கள் 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ் இன்னும் பலநூறு பதிவுகள் எழுது பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்

சசிகுமார் said... Reply to comment

congrats Gokul

அம்பாளடியாள் said... Reply to comment

நூறாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள் சகோ .
மென்மேலும் சாதனை தொடரட்டும் .

SURYAJEEVA said... Reply to comment

உங்கள் நண்பர் ரமேஷ் வாழ்க..

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

நன்றி

kowsy said... Reply to comment

வாழ்க கோகுல். 1௦௦ ஐத் தட்டிவிட்டீர்கள். இச்சமயத்தில் மிக நல்ல ஆக்கத்தைத் தந்திருக்கின்றீர்கள் முதலில் Peter Merholz க்கு நன்றி சொல்வோம் எம்மை எல்லாம் ஒன்று இணைத்தமைக்கு . பின் கார்த்திகேயன் ராமசாமி அவர்களுக்கு வாழ்த்து சொல்வோம் முதல் தமிழனாய் பதிவுலகி தடம் பதித்தமைக்கு .

சம்பத்குமார் said... Reply to comment

வணக்கம் நண்பரே.

வலைப்பூ பற்றிய தகவல்கள் அருமை..

நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

மேலும் பல சதங்கள் காண விளைகிறேன்

M.R said... Reply to comment

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா

ப்ளாக் பற்றிய தகவலுக்கு நன்றி நண்பா

அனுஷ்யா said... Reply to comment

இதுவரை நின் முதல் 96
பதிவுகளைப் படிக்க வில்லை...வருந்துகிறேன்..வாழ்த்துக்கள் தோழா..

அனுஷ்யா said... Reply to comment

இன்று என் வரிகளில்...முத்தப் பரிசோதனை...

Unknown said... Reply to comment

100க்கு வாழ்த்துக்கள்,
பிளாக் பற்றிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

shanmugavel said... Reply to comment

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.தகவல் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

மேன்மேலும் வளர எனது நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

*anishj* said... Reply to comment

blog பற்றிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி...!!

100-க்கு வாழ்த்துக்கள்...! தொடர்ந்து கலக்குங்க... :)

Yoga.S. said... Reply to comment

வணக்கம்,கோகுல்!முதலில் நூறு(100) கண்டதற்கு வாழ்த்து!அப்புறம்,வரலாற்றுக்கு ஒரு சபாஷ்!ஓ.கே?

சுதா SJ said... Reply to comment

வாழ்த்துக்கள் பாஸ்...

சுதா SJ said... Reply to comment

முதல் ப்ளாக் தகவல் சூப்பர்.... அந்த ப்ளாக் போய் படிச்சோம் இல்ல.... தேங்க்ஸ் கோகுல்

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

இன்னும் பல நூறு படைக்க வாழ்த்துக்கள் நண்பா...

மகேந்திரன் said... Reply to comment

வணக்கம் நண்பரே,
நூறாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வலைப்பூவின் வரலாறு அருமை.
தெரியாத நிறைய செய்திகள் தெரிந்துகொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி.

நட்புக்கு இலக்கணம் உங்கள் நண்பர் ரமேஷ்.
நண்பனை எழுத வைத்து அழகு பார்ப்பது
எவ்வளவு பெரிய விஷயம்...

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

100 vaazththukaL வாழ்த்துகள்

Yaathoramani.blogspot.com said... Reply to comment

100வ்து பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
படைத்தவனுக்கும் பெற்றவர்களுக்கும் நன்றி செலுத்துவது போல
நம்மை எல்லாம் ஒரு குடும்பமாய் இணைத்த பிளாக் குறித்தே
100வது பதிவிட்டிருந்தது மனம் கவர்ந்தது
தொடர்ந்து 1000 வது பதிவு இதே சிறப்போடு தர
மனமார்ந்த வாழ்த்துக்கள் த.ம 17

Ruthra said... Reply to comment

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

நேசமுடன்

ருத்ரா

ராஜா MVS said... Reply to comment

வாழ்த்துகள்... நண்பா...

துரைடேனியல் said... Reply to comment

Century ku VAALTHUKKAL. Arumaiyana pathivu.
TM 18.

ராஜி said... Reply to comment

100க்கு வாழ்த்துக்கள்

கோகுல் said... Reply to comment

@கவிதை வீதி... // சௌந்தர்
@ தங்கம் பழனி ,
@ கணேஷ் .
@ !* வேடந்தாங்கல் - கருன் *!.
@ thirumathi bs sridhar .
@ சம்பத் குமார்,
@ M.R
@ மயிலன்.,

வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

கோகுல் said... Reply to comment

@ veedu
@shanmugavel
@ திண்டுக்கல் தனபாலன்
@*anishj*
@Yoga.S.FR
@துஷ்யந்தன்
@தமிழ்வாசி பிரகாஷ்
@மகேந்திரன்
@சி.பி.செந்தில்குமார்
@Ramani
@Ruthra
@ராஜா MVS
@துரைடேனியல்
@ராஜி
//

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
நட்புடன்,
ம.கோகுல்

பிரணவன் said... Reply to comment

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகா. . .உங்களது படைப்புகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். . .

ம.தி.சுதா said... Reply to comment

முதலில் தங்கள் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் கோகுல்..

ம.தி.சுதா said... Reply to comment

சிறுவயதில் பந்து சொல்லும் கதை வாசித்தது போன்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது...

நன்றி கோகுல்..

Admin said... Reply to comment

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா! முதல் தமிழ் பதிவர் தகவளை தற்போது தான் தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி!

Jackiesekar said... Reply to comment

வாழ்த்துகள் கோகுல்

vetha (kovaikkavi) said... Reply to comment

வாழ்த்துகள் வளரட்டும். பதிவுகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

nila said... Reply to comment

வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் :)

PUTHIYATHENRAL said... Reply to comment

நல்ல பதிவு வாழ்த்துக்கள்!

* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்! எப்படி எல்லாம் வீர வசனம் பேசி தேசபக்தி, ஒருமைப்பாடு என்று கூக்குரல் இட்ட உங்களையே விரக்தி அடைய வைத்து விட்டார்களே. இப்பவாவது உங்கள் தேசபக்தி போதை தெளிந்ததே சந்தோசம்.

rajamelaiyur said... Reply to comment

கலக்கிடிங்க ...

rajamelaiyur said... Reply to comment

இன்று :

மாணவர்களுக்காக கைகோர்க்கலாம் வாருங்கள்.

குறையொன்றுமில்லை. said... Reply to comment

செஞ்சுரி அடிச்சுட்டீங்களா, வலைப்பூ பற்றிய செய்திகள் நல்லா தொகுத்து சொல்லி இருக்கீங்க நன்றி

Unknown said... Reply to comment

ஐயா.... நூறு வாழ்த்துக்கள்...

Admin said... Reply to comment

வாழ்த்துகள்..

ரசிகன் said... Reply to comment

நூறாண்டு காலம் வாழ்க.

Sivakumar said... Reply to comment

Congrats THAMBI!

நிரூபன் said... Reply to comment

வணக்கம் கோகுல் பாஸ்..

உங்களின் ப்ளாக்கின் நூறாவது பதிவிற்கு ஏற்றாற் போல, வலைப் பூவின் வரலாற்றையும் நினைவுபடுத்தியிருக்கிறீங்க.

வாழ்த்துக்கள் பாஸ்.

தொடர்ந்தும் காத்திரமான பதிவுகளாலும், காமெடியான பதிவுகளாலும் பல வாசக உள்ளங்களின் மனதில் இடம் பிடிக்கும் பதிவுகளோடு உங்கள் வலைப் பூ பணி தொடர வாழ்த்துகிறேன்.

முத்தரசு said... Reply to comment

அறிய தகவல் - வாழ்த்துக்கள்

மாய உலகம் said... Reply to comment

பிளாக் பற்றிய வரலாறுக்கு மிக்க நன்றி நண்பா... தங்களது 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா... தொடர்ந்து கலக்குங்க...வாழ்த்துக்கள்.