Thursday, December 1, 2011

ஹெல்மெட்டுக்கு விளக்கம் என்ன?தலைக்கவசம் உயிர்க்கவசம்,
தலைக்கவசம் அணிவோம் உயிர்ப்பலி தவிர்ப்போம் 
என பல விழிப்புணர்வு வாசகங்கள் பார்த்திருப்போம்.
ஆனால் போலிஸ் போடும் ஃபைனுக்கு பயந்து 
ஹெல்மெட் போடுவதை தவிர்த்து நமது பாதுகாப்புக்காக 
அணிவதை உணர வேண்டும்.

(பாத்தீங்களா ஹெல்மேட்டோட மகிமையை)இன்னைக்கு HELMET அப்படிங்கற ஆங்கில வார்த்தைக்கான 
புதிய விளக்கம் தெரிய வந்தது.அது என்னன்னா?

 H-Head

 E-Eyes

 L-Lips

     M-Mouth

E-Ear

      T-Tongue & Teeth


நம்ம தலையில் இருக்கும் இந்த எல்லா உறுப்புக்களையும் 
பாதுக்காக்கறதுனால இந்த பேராம்.ரொம்ப பொருத்தம்.
இந்த வீடியோவ பாருங்க.ஹெல்மேட்டோட மகத்துவத்த இதை விட சிறப்பா சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்.
நண்பர்களே!நிச்சயம் டூ வீலர் ஓட்டும் போது ஹேல்மேட்டும்,4-வீலர் ஒட்டுரவங்களா இருந்தா சீட் பெல்ட்டும் போட்டுக்குவோம்னு உறுதி எடுத்துக்குவோம்.பாதுகாப்பா பயணம் தொடர்வோம்.

                                                   
[ இவரு ரொம்ப உசாரு போல]

பின்குறிப்பு- எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு
பதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதான்னு 
எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.அது மாதிரி செய்ய முடியுமா?

நட்புடன்,

ம.கோகுல்.

36 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

ஹெல்மெட் விளக்கம் அருமை... புதிதாக ஹெல்மெட் வாங்குபவர்கள் ISI தர சான்று உள்ள ஹெல்மெட்டாக பார்த்து வாங்கவும். அதிலும் போலிகள் இருகின்றன...


எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

கோகுல் said... Reply to comment

@தமிழ்வாசி பிரகாஷ்ஆமாங்க, உசாரய்யா உசாரு

தினேஷ்குமார் said... Reply to comment

பயனுள்ள பதிவு நண்பா....

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

//எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு
பதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதா?//
சரியா சொன்னீங்க .

ராஜா MVS said... Reply to comment

நல்ல தகவல் நண்பா...
ஹெல்மெட்-ன் விளக்கம் சூப்பர்...

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

சம்பத்குமார் said... Reply to comment

//எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு
பதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதான்னு
எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.அது மாதிரி செய்ய முடியுமா?//

கரெக்டா சொன்னீங்க நண்பரே..

அரசு இத யோசிச்சா நல்லது..

வீடியோ சரியான தேர்வு..சூப்பர்

FARHAN said... Reply to comment

விழிபுனர்வூட்டும் பதிவு ..
அனைவரும் கட்டயம் ஹெல்மெட் அணிவோமாக

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

.ரொம்ப பொருத்தம்.

பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

சக்தி கல்வி மையம் said... Reply to comment

விழிப்புணர்வு பதிவு ...

இலவசமா குடுக்குற யோசனை நால்லவே இருக்கு..

பகிர்வுக்கு நன்றி நண்பா..

குறையொன்றுமில்லை. said... Reply to comment

ஹெல்மெட்டுக்கு புதிய விளக்கம் நல்லா இருக்கே.

SURYAJEEVA said... Reply to comment

http://www.youtube.com/watch?gl=IN&v=w6O4D80qCJQ

இந்த மாதிரி நம்ம மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்கு பதில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று செய்திருக்கும் கூத்தை பாருங்க

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

பின்குறிப்பு- எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு
பதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதான்னு
எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.அது மாதிரி செய்ய முடியுமா?//

உங்க நண்பர் சரியாதான் கேட்டுருக்கார்...!!!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

வெளிநாட்டுல சைக்கிள்ள போறவனே ஹெல்மெட் வச்சிட்டு போராணுக, நம்மாளுங்கதான் சுத்த வேஸ்ட்...!!!

Anonymous said... Reply to comment

முடி இழப்பது தான் முதன்மை காரணமாம் ஹெல்மெட் அணியாததுக்கு...உயிரிழப்பு பற்றி கவலை இல்லாமலே...

அம்பாளடியாள் said... Reply to comment

விளக்கம் நல்லாவே இருக்கு சகோ .பாராட்டுகளும் வாழ்த்துக்களும் .கவிதை காத்திருக்கு முடிந்தால்
வாருங்கள் .....

அம்பாளடியாள் said... Reply to comment

எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு .வாழ்த்துக்கள் சகோ .

சுதா SJ said... Reply to comment

பொறுப்பான பதிவு.... ஒரு பொறுப்பான பையனாலேயே இப்படி ஒரு பொறுப்பான பதிவு போட முடியும்..... ஹா ஹா...
ரியலி குட் பதிவு பாஸ்...

Yaathoramani.blogspot.com said... Reply to comment

அருமையான விளக்கம்
அருமையான காணொளி
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7

K.s.s.Rajh said... Reply to comment

ஹெல்மெட் அவசியம் அணிந்து வண்டி ஓட்ட வேண்டும் அது எங்கள் பாதுக்காப்புக்கானது..சிறப்பான பதிவு பாஸ் பாராட்டுக்கள்

சத்ரியன் said... Reply to comment

கோகுல்,

கூடிய விரைவில் “ட்ராஃபிக் கண்ட்ரோல் ஆஃபிஸர்” வேலையில சேர இருக்கறீங்களா?

தொடர்ந்து இது சம்மந்தமான பதிவுகளே நிறய எழுதறீங்க. அதான் ஒரு டவுட்டு!

உங்க பின்குறிப்பு ஐடியா அடுத்த தேர்தலுக்கு உதவலாம்.

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

சிந்திக்கவைக்கும் பதிவு..

அருமை நண்பா.

மாய உலகம் said... Reply to comment

ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா!

வவ்வால் said... Reply to comment

//எதை எதையோ இலவசமா மானியமா கொடுக்குறதுக்கு
பதிலா வண்டி இருக்கவங்களுக்கு ஹெல்மெட் கொடுக்கக்கூடாதான்னு
எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.அது மாதிரி செய்ய முடியுமா?//

தலைக்கவசம் அவசியம் தான், ஆனால் எனக்கு தெரிஞ்சு டிராபிக் போலீசார் பெரும்பாலும் தலைக்கவசம் போடுறதே இல்லை, அவங்களுக்கு நாம ஃபைன் போட முடியுமா?

ஹி ..ஹி இந்த காலத்தில பெட்ரோல் போட்டு வண்டி ஓட்டுற ஆளுனா அவர் எம்மாம் பெரிய பணக்காரராக இருப்பார் , அவங்களுக்கு கூட ஓசில தான் ஹெல்மெட் தரணுமா? :-))

நான் எல்லாம் பஸ் டிக்கட் வாங்கவே லோன் கிடைக்குமானு தேடுகிட்டி இருக்கேன் :-((

ரசிகன் said... Reply to comment

நல்ல பதிவு, ஆமாம் நீங்க ஹெல்மெட்டை தொடர்ந்து பயன்படுத்தறீங்களா?

Unknown said... Reply to comment

பலருக்கு புரிய வேண்டிய விஷயம்...நன்றி மாப்ளே!

ராஜி said... Reply to comment

ஹெல்மெட் என்ற வார்த்தைக்கு விளக்கம் அருமை

rajamelaiyur said... Reply to comment

நியாயமான பின்குறிப்பு

rajamelaiyur said... Reply to comment

இன்று

நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

ஹெல்மெட் விளக்கம் சூப்பரப்பு.....

Unknown said... Reply to comment

நல்ல குறிப்பு. நன்றி...
முடி உதிரும் அப்புறம்
ஹெல்மெட் போட்டா காது கேட்காதுன்னு பரவலா ஒரு பேச்சு இருக்கு.
ஆளே போனதுக்கப்புறம் அப்புறம் எதுக்கு காதுன்னு கேட்குறீங்களா..

நிரூபன் said... Reply to comment

வணக்கம் பாஸ்,

தலைக் கவசத்தின் முக்கியத்துவத்தினையும், அதற்கான விளக்கத்தினையும் எளிமையாக அனைவரும் உணர்ந்து தெளியும் வண்ணம் சொல்லியிருக்கிறீங்க.

மிக்க நன்றி!
என் வாழ் நாளில் இன்று தான் ஹெல்மட்டிற்கு இப்படி அர்த்தம் இருக்கா என்பதை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

www.ChiCha.in said... Reply to comment

hii.. Nice Post

For latest stills videos visit ..

www.chicha.in

www.chicha.in

Mahan.Thamesh said... Reply to comment

நல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கோகுல் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - விழிப்புணர்வு தொடரட்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Sri said... Reply to comment

nice post