Monday, December 5, 2011

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...என் பக்கத்து வீட்டு நண்பர் அவரது செல்லப்பிராணி(நாய்)க்கு ஏதோ தடுப்பூசி போட கால்நடை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகணும் வா அப்படின்னு கூப்பிட்டாரு.சரி நாமளும் வெட்டியா தான இருக்கம்னு போனேன்.போனேனா?அங்கே என்ன நடந்துச்சுன்னா...?
ஓவர் டூ ஹாஸ்பிடல்.

                                              [ நாய் எங்க இருக்கு கண்டுபிடிங்க]

டாக்டர் நாயை செக் பண்ணிட்டு,உதவியாளரை கூப்பிட்டு ஊசி போட்டு விட சொன்னார்.அவரும் ஊசி போட்டு விட்டார்.அப்புறம் தான் அந்த சம்பவம் நடந்தது.உதவியாளர் நண்பரிடம் பேர் என்ன?அப்படின்னு கேட்டார்.அவரு ராமு அப்படின்னார்.சரி அப்பா பேர் என்ன அப்படின்னார்.நண்பர் Mr,Mr னு அதாங்க திரு திரு ன்னு முழிக்க ஆரம்பிச்சுட்டார்.நானும் தான்.ரெண்டு பெரும் குறு குறுன்னு அவரைப்பாக்க ,அப்பறம்தான் தெரிஞ்சுது அவர் கேட்டது நண்பரோட பெயரை ,நண்பர் சொன்னது நாயோட பெயரை.ஐயோ செம சிரிப்பு இப்ப நினைச்சாலும் சிரிப்பா வருது.


எனக்கு என்ன உண்மை தெரிஞ்சாகனும் சாமி.அது என்னன்னா நாய்க்கு ஊசி 


போட எதுக்கு அதோட


ஓனரோட அப்பா பேரு?உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. [ தோகை விரிச்சு ஆடப்போறேன்]                                           [மேட்சிங் எப்பூடி?]

29 comments:

Unknown said... Reply to comment

மாப்ள டவல் நாயா அட...ஒரு வேல மனுசனோட பூர்வீகத்த கேக்குறத மறந்தவங்க செல்லப்பிரானியோட பூர்வீகம் கேட்டு வைக்கறாங்க போல ஹிஹி!

பாட்டு ரசிகன் said... Reply to comment

பதிவுலகில் ஒரு புரட்சி...

தெரிந்துக் கொள்ள இந்த பதிவை வாசியுங்கள்..

http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post.html

tamilvaasi said... Reply to comment

ஹே ஹே சும்மா பேருக்கு கேட்டிருப்பாங்க கோகுல்...


வாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

Yoga.S. said... Reply to comment

அட போங்க சார்!இப்ப எது,எதுக்கு அப்பன் பேரு கேக்கிறாங்கண்ணே புரிய மாட்டேங்குது.இதுல நீங்க வேற!

சசிகுமார் said... Reply to comment

நாய்க்கு தோகையா!!! சூப்பர்...

Unknown said... Reply to comment

வளர்ப்பு பிராணியின் அம்மா,அப்பா யாருன்னு உண்மையிலேயே கேட்பாங்க கோகுல்....நான் அனுபவப்பட்டிருக்கின்றேன் அதுக்கு ஒரு பதிவே போட்டிருக்கின்றேன் லின்ங் மெயில் அனுப்புகின்றேன்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

ம் ...

vetha (kovaikkavi) said... Reply to comment

நல்ல படங்களும், நகைச் சுவையும் மகிழ்வாக உள்ளது வாசிக்க வாழ்த்துகள்! கோகுல்.!...தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

அம்பலத்தார் said... Reply to comment

ஹா ஹா... மறுபடியும் பல்பு வாங்கியாச்சா?

நிரூபன் said... Reply to comment

வணக்கம் பாஸ்,
புது டெம்பிளேட் மாத்தியிருக்கிறீங்க.

கலர் சூப்பரா இருக்கு!

நிரூபன் said... Reply to comment

அடப் பாவி, நல்ல கேள்வி தான், நாய்க்கு ஊசி போட ஏன் அப்பா பேரு? ஹே...ஹே...


நாய்க்கு ஊசி போடும் போது, நாய் ஓனர் தன் பெயரைக் கொடுக்கும் போது இனிஷியல் சேர்த்து கொடுக்கலாம் அல்லவா?

ஹே...ஹே..அதற்காகத் தான் என நினைக்கிறே.

K.s.s.Rajh said... Reply to comment

ஹா.ஹா.ஹா.ஹா.......

ஏன் என்று அந்த ஊசி போட்டவரையே கேட்டு இருக்கலாமே

Rathnavel Natarajan said... Reply to comment

அருமை.

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

நாயோட ஓனர் பேரை ஏன் கேக்குறாங்கன்னா, மிருகவதை தடுப்பு சட்டத்தை ஓனர் மேல போடவா இருக்குமோ ஹி ஹி..

Unknown said... Reply to comment

நாயிக்கு ஒரு ஊசி நாய் கடிச்சா
எத்தனை ஊசி..?
தெரியுமில்ல!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

[மேட்சிங் எப்பூடி?] super!

rajamelaiyur said... Reply to comment

கலக்கல்

rajamelaiyur said... Reply to comment

உங்கள் பார்வைக்கு இன்று

அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?

Angel said... Reply to comment

தடுப்பூசி ரெக்கார்ட்சுக்கு அப்படிதான் கேப்பாங்க கோகுல் .
அப்பதான் அடுத்த தடுப்பூசிக்கு தொடர்பு கொள்ள வசதியா இருக்கும் .

சக்தி கல்வி மையம் said... Reply to comment

கோகுல் எப்படி இப்படியெல்லாம்?

Anonymous said... Reply to comment

மறுபடியும் பல்பு கோகுல்...வாழ்த்துக்கள்...

ராஜா MVS said... Reply to comment

பெட்ஷீட்டுனு யாராவது மேல படுத்துறபோராங்க(1படம்)...

அனுஷ்யா said... Reply to comment

படங்கள் அனைத்தும் அருமை..
குறிப்பாக அந்த தொகை விரித்து ஆடும் படம்..(நம்ம ஏரியா ல...)

கடம்பவன குயில் said... Reply to comment

முதல் படத்தில் நாயெது?டவலெது தெரியல. மற்ற படங்களெல்லாம் சும்மா கலக்குது.

பேரு கேட்டதை வச்சுக்கூட சுவாரஸ்யமா ஒரு பதிவு தேத்தமுடியுமா?? கலக்குங்க தம்பி கலக்குங்க...

சுதா SJ said... Reply to comment

கலக்கல் நண்பா

Admin said... Reply to comment

படங்கள் ரசிக்க வைத்தது..

நம் தளத்தில்'அடிக்க வர்றாங்க MY LORD'

M.R said... Reply to comment

ஹே ஹே ஹே

சூப்பர் நண்பா காமடி ,

கீழே உள்ள படங்கள் கலக்கல்

த.ம 13

கோகுல் said... Reply to comment

வருகை தந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..

ம.தி.சுதா said... Reply to comment

எல்லாம் பரம்பரைப் பெயர் தானே ஏதாவதொன்றை சொல்லிட்டுப் போக வேண்டியது தானே.. ஹ...ஹ..ஹ..