Monday, December 19, 2011

அவார்டு வாங்கலியோ அவார்டு...?எதெதுக்கோ என்னென்னவோ அவார்டு கொடுக்கறாங்க ,நாமளும் சில 

அவார்டு கொடுக்கலாம்னு.............


விடா முயற்சி விஸ்வரூப வெற்றி  விருது – ஜாமீன் கணை தொடுத்து 

வெளிவந்த தமிழகத்தின் தாரகைக்கு.


மூட்ரா  கேட்ட ,போட்றா தாப்பாள விருது – தமிழகத்தை சுத்தி 

காம்பௌண்ட் கட்ட சொன்ன கேப்டனுக்கு.


 நான் சரியா பேசுறனா விருது – இணையதளங்களுக்கு தணிக்கை இருக்கு 

ஆனா இல்லைன்னு மாத்தி மாத்தி பேசும் கபில் சிபிலுக்கு.


தீயா வேலை செய்யணும் நல்லத்தம்பி விருது -

ஸ்பெக்ட்ரம் வழக்கு: சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த 

முடிவெடுத்திருக்கும் 2-ஜி நாயகனுக்கு.சோறுன்னா சட்டி திம்போம் சொன்ன பேச்சை கேக்க மாட்டோம் விருது-

முல்லைப் பெரியாறு அணையை ராணுவப் பொறியாளர்களை வைத்து 

ஆராய வேண்டு்ம். எனக்கூறும் சேட்டன்மார்களுக்கு

போன் ஒயறு பிஞ்சு ஒரு வாரம் ஆகுது விருது- கேரளாவில் தொடர்ந்து 

தமிழர்கள் தாக்கப்பட்டால் திமுக முக்கிய முடிவை எடுக்கும் என 

சொல்லியிருக்கும் தமிழினத்தின் தலைவருக்கு.

இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒருஆல்இன் ஆல்அழகு ராஜா 

வேணும்ங்கறது விருது- வரலாற்று குறிப்புகள்தொழில்நுட்ப தகவல்கள் 

மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய அம்மாவுக்கு.  என்ன சைதை தமிழரசி தக்கப்பட்டாரா?விருது- முல்லைப் பெரியாறு 
அணைக்காகப் போராடும் தமிழர்கள் மீது வழக்குப் போடுவதா?- என்று இவ்வளவு நாள் கழித்து பொங்கியிருக்கும் தள்ளு தள்ளு தலைவருக்கு.


இன்னைக்கு மட்டும் வீடு போய் சேந்துட்டேன் ஜெய்ச்சுட்டேன் விருது- தொடர்ந்து பல சிக்கலில் மாட்டித் தவிக்கும் ப.சியாருக்கு.


  

என்னா முக்குனாலும் நடக்காது விருது  - என்ன நடந்தாலும் அசைந்து கொடுக்காத நமது மாண்புமிகு மௌனகுருவுக்கு.
  
ஆடறா ராமா,தாண்டுறா ராமா விருது - ஆடத்தெரியாதவர்களை 

ஆட்டுவிக்கும் தேசத்தின் அன்னை(?)க்கு 
டிஸ்கி-


இவருக்கு பொருத்தமான விருதை வழங்கி சிறப்பிக்குமாறு 

கேட்டுக்கொள்கிறேன்.நன்றி!
31 comments:

மகேந்திரன் said... Reply to comment

அப்பாவி பொதுஜனத்திற்கு..
(அதாவது நமக்கு)
ஏமாளி ஏழுமலை விருது....

மகேந்திரன் said... Reply to comment

அனைத்து விருதுகளும் அற்புதம்
தகுந்த விருதுகள்.. நண்பரே.

K.s.s.Rajh said... Reply to comment

////மூட்ரா கேட்ட ,போட்றா தாப்பாள விருது///

ஹா.ஹா.ஹா.ஹா விருதின் பெயரே வித்தியாசமாக இருக்கே அவ்வ்வ்வ்வ்

அனைத்து விருதுகளும் பொருத்தமாக கொடுத்திருக்கீங்க அருமை பாஸ்

K.s.s.Rajh said... Reply to comment

////
கோகுல் said...
நண்பர்களே உலவு திரட்டி லோட் ஆக மறுப்பதால் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது,தற்காலிகமாக உங்கள் தளங்களில் உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும்,

சரியானவுடன் பிறகு இணைத்துக்கொள்ளலாம்.நன்றி////

அட இதுதானா காரணம் நானும் என் தளம் லோடாக நீண்ட நேரம் பிடிக்க வேறு எதும் ப்ராப்ளம் என்று நினைச்சிட்டேன் தகவலுக்கு நன்றி பாஸ்

நிரூபன் said... Reply to comment

வணக்கம் பாஸ்...
செம காமெடி விருதுகள்.
அதிலும் அனல் பறக்கும் பேச்சாளர் சீமானுக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறீங்க பாருங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜி said... Reply to comment

கொடுக்கப்பட்ட விருதில் எந்த விருதும் தவறா கொடுக்கப்படலை. எல்லா விருதும் சரியானவங்களுக்கே போய் சேர்ந்திருக்கு சகோ

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

சரியாக பொருந்துரமாதியான விருதுகள்...

Mathuran said... Reply to comment

ஹா ஹா பொருத்தமான விருதுகள்தான்..
ஆமா அது ஏன் சீமான் படம் தலைகீழா இருக்கு..

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

அன்னைக்கு குடுத்த விருதுதான் டாப்பு

முத்தரசு said... Reply to comment

எல்லாமே டாப்பு டக்கர் விருதுகள்

முத்தரசு said... Reply to comment

விருதுகள் எல்லாம் செம பொருத்தம்

முத்தரசு said... Reply to comment

உங்களின் கற்பனைக்கு வாழ்த்துக்கள் பாஸ்.

முத்தரசு said... Reply to comment

சீமான் படம் தலைகீழா - செம பொருத்தம் விருதுடன்

சசிகுமார் said... Reply to comment

//ஆடறா ராமா,தாண்டுறா ராமா விருது - ஆடத்தெரியாதவர்களை

ஆட்டுவிக்கும் தேசத்தின் அன்னை(?)க்கு //

ஹா ஹா ஹா எல்லாமே சூப்பர்... அதிலும் இந்த கடைசி விருது சிரிப்ப அடக்க முடியல...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

அருமை...அருமை...

Admin said... Reply to comment

அனைத்து அவார்டும் அருமை..

Anonymous said... Reply to comment

Evvalo adichalum thanguranda ivan viruthu - Ithuthan poruthuthama iruukum namma makkalukku

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

இவருக்கு பொருத்தமான விருதை வழங்கி சிறப்பிக்குமாறு

கேட்டுக்கொள்கிறேன்.நன்றி!//

பிஞ்சி போன டவுசரு விருது - பொது மக்களுக்கு...!!!

பால கணேஷ் said... Reply to comment

அடேங்கப்பா... இவ்வளவு விருதுகளை யோசிச்சதோட மட்டுமில்லாம பொருத்தமான ஆளுங்களுக்கும் குடுத்து அசத்திட்டீங்க தம்பி... கடைசி நபருக்கு கொடுக்கக் கூடிய விருது : எவ்ள அடிச்சாலும் தாங்கறான். இவன் ரொம்ப நல்லவேண்டா!

சக்தி கல்வி மையம் said... Reply to comment

கேப்பனுக்கு குடுத்தீங்க பாரு ஒரு விருது.. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

அனுஷ்யா said... Reply to comment

ஒரு கார்ட்டூனிஸ்ட் போல உங்கள் வரிகளில் நகைப்பு கோபம் தெரிந்தது..அருமை..
.
இன்று என் உளறல்...உன் விழியாலே......:)

Yoga.S. said... Reply to comment

வணக்கம்,கோகுல்!உண்மையிலேயே சரியான பேர்வழிகளுக்கு,சரியான விருது கொடுத்து கௌரவித்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!!!!!பொது ஜனத்துக்கு எதுக்கு விருது?அப்பப்ப,ஓட்டுப் போட்டு,ஒட்டுப்போட்ட சட்டையோட அலையிறவனுக்கு....................!

ராஜா MVS said... Reply to comment

அருமை....

*anishj* said... Reply to comment

கலக்குறீங்க பாஸ்...! விருதுகளை சரியா தேர்ந்தெடுத்து கொடுத்திருக்குற உங்களுக்கு ஒரு பாரத ரத்னா விருதே கொடுக்கலாம்...

சுதா SJ said... Reply to comment

பாஸ் எல்லாம் பொருத்தமான கலக்கல் விருதுகள்தான் :) 

ஆமா சீமான் ஏன் தலைகீழா நின்று விருதுக்கு அடம்புடிக்கிறார்..?? அவ்வ்

Yaathoramani.blogspot.com said... Reply to comment

படங்களும் விருதும் அமர்க்களம்
மனம் கவர்ந்து விட்டீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 10

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

அதிரடியான அமர்க்களமான விருது வழங்கிய விழாவுக்கு வாழ்த்துகள்..

Unknown said... Reply to comment

கோகுல் சரியான விருது கொடுத்திருக்கீங்க அருமை...அருமை....கடைசியா இருக்கிறவர் நம்ம நாய்நக்ஸ் நக்கீரன் அவர்கள் ”யாரும் என்னை பிரபலமாக்கல” விருது நாங்கள் கொடுக்கிறோம்.பதிவர் சந்திப்புல ஆதங்கப்பட்டு சொன்னார் அதனால இந்த வாரம் நாய்நக்ஸ் வாரம்...விபரங்களுக்கு தோத்தவன்டா செந்தில் பிளாக் போகவும்

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!

கோகுல் ஷர்மி said... Reply to comment

நல்ல கற்பனை வளம். கடைசி விருது " யாரு(தமிழன்) பெத்த புள்ளையோ பாவம் , பாவம் இப்புடி அடி வாங்கிகிட்டே இருக்கு "

victor said... Reply to comment

neenga admk appadieenu appadiye theriuthu.... irrunthaalum thaathave ippadi thaaka koodathu boss.... evvalavu than avar thaankuvar.....