Showing posts with label காவிரி. Show all posts
Showing posts with label காவிரி. Show all posts

Thursday, December 8, 2011

நேற்று காவிரி, இன்று முல்லைப்பெரியாறு, நாளை ???


வான் பொய்ப்பினும்
தான் பொய்யாக்காவிரி-இன்று
வானும்பொய்த்து
தானும் பொய்த்து
வறண்டு கிடக்கிறது!




கரிகால்வளவன் கட்டிய
கல்லணையிலோ –இன்று
கால் நனைக்க தண்ணியில்லை
கண்ணீர்கூட மிச்சமில்லை!


திருச்சியில் இருகரை தொட்டோடிய காவிரி
தீர்த்தமாய் தேங்கி நிற்கிறது
தெளிவாய் இருந்தாலாவது தீர்த்தமெனலாம்
தேங்கிக்கிடப்பதென்னவோ கழிவுகள் தாம்!


யானைகட்டி போரடித்த தஞ்சையில்-இன்று
பானை பொங்க வழியில்லை
கூட்டணி குழப்பத்தில் அரசு
பட்டினி மயக்கத்தில் மக்கள்!




வறண்டு கிடக்குது வயல்கள்
வட்டிக்கடையில் வளையல்கள்
பாளம்பாளமாய் வெடித்து நிற்குது கழனி
பார்த்து பார்த்து வெடிக்குது விவசாயியின் தமனி!


பால் கறந்த பசுவெல்லாம்
பாழாய்ப்போன கந்துக்கு இரையாக 
ஏர் உழுத எருதெல்லாம் –அடுத்தவேளை
சோற்றுக்காக விற்கப்படுகின்றன!


பட்டம் பார்த்து விதை விதைத்தோம்
பருவம் பார்த்து அறுவடை செய்தோம்
சட்டம் ஏதோ போட்டார்களென்று
புருவம் உயர்த்தி காத்திருக்கிறோம்!
விடை தெரியும் நாள் தெரியாமல்..... 











கல்லூரிக்காலத்தில்(2005)காவிரிப்பிரச்சினை தலைவிரித்தாடியபோது 



எழுதியது.அன்று காவிரிக்கு வந்தது இன்று முல்லைப்பெரியாருக்கு 


வந்திருக்கிறது.பெயர் தான் மாறியிருக்கிறது நிலைமை????????



மேலும் வாசிக்க "நேற்று காவிரி, இன்று முல்லைப்பெரியாறு, நாளை ???"