Friday, December 23, 2011

மனசாட்சியுடன் ஒரு பயணம்.......



திரும்பிப்பார்த்தல் என்பது ஒரு சுகானுபவம்.இந்த வருடம் நான் கடந்து 
வந்தவற்றை திரும்பிப்பார்க்க எண்ணிய போது எனது மனசாட்சி நானும் 
கூட வருவேன் என்றது,சற்றே பயத்துடன் சரி வா போலாம்னு கூட்டிக்கிட்டு கிளம்புறேன்.

இனி நானும் எனது மனசாட்சியும்.
                        ( நன்றி -http://www.kalachuvadu.com/ )
முதலில் இந்த திரும்பிப்பார்த்தலுக்கு வாய்ப்பளித்து என்னை எழுத அழைத்த நண்பர் மயிலிறகு மயிலன் அவர்களுக்கு நன்றி(திரும்பிப்பார்க்க வாய்பளிச்சதுக்கா இல்ல ஒரு பதிவு தேத்த வாய்ப்பளிச்சதுக்கா?) போன வருஷ கடைசில புது கம்பெனிக்கு மாறினதுனால இந்த வருஷ முதல் நாள் முன்பு இருந்த இடத்துக்கு (காரைக்கால்) போய் நண்பர்கள் வீட்டுக்கு,அப்புறம்,தங்கிருந்த வீட்டுக்கு போய் ஓனருக்கு ஸ்வீட் கொடுத்து, (ஸ்வீட்டுன்னு மொட்டையா சொன்னா எப்படி அல்வா குடுத்தேன்னு தெளிவா சொல்லு,அப்புறம் கொஞ்சூண்டு ஸ்வீட் கொடுத்துட்டு நீ முழுங்கிட்டு வந்ததையும் சொல்லு)  நண்பர்களோட மன்மதன் அம்பு படம் பாத்து(ஓசியில)ஆரம்பமானது இந்த வருஷம்.

அப்புறம் கொஞ்ச நாள்ல பொங்கல்(அது யாருக்கும் தெரியாது பாரு)சொந்த ஊர்ல செம கொண்டாட்டம்(ஆமா இவரு பொங்க வைச்சு,அஞ்சாறு மாடு புடிச்சு கிழிச்சாரு).பிறகு நண்பர்களோட ஒரு நாள் மகாபலிபுரம் ஜாலி பயணம்(எந்த அளவுக்கு ஜாலின்னு சொல்லு.)

இந்த வருஷம் இன்னொரு சந்தோஷ நிகழ்ச்சி.என் மடியில அக்கா பொண்ண உக்கார வைச்சு மொட்டையடிச்சு காது குத்தினது.(டேய் பாவம் அந்த பச்ச புள்ள அந்த கத்து கத்தி அவஸ்தைபட்டது உனக்கு சந்தோசமா? அதுக்கப்புறம் வீட்டுக்கு போனப்போ பயந்துக்கிட்டு உன்கிட்ட வரவேயில்லையே அத சொல்லு).

மனசை ரொம்ப பாதிச்ச விஷயம் என் சித்தி ஒருத்தவங்க உடல் நலம் சரியில்லாம இறந்துட்டாங்க.ரொம்ப வயசும் கிடையாது.எங்க மேல ரொம்ப ப்ரியமா இருப்பாங்க.(கவலைப்படாதடா,காலம் மனக்காயங்களுக்கு நல்ல தீர்வு தரும்)
                                            நன்றி-http://www.kalachuvadu.com/

இந்த வருஷம் வாங்கினதுல மறக்க முடியாதது கணினி.(இருக்காதா பின்னே அதுக்கப்புறம் தானே பிளாக் எழுத ஆரம்பிச்சு என்னை தூங்க விடாம தொந்தரவு பண்ண ஆரம்பிச்ச).அப்புறம் கொஞ்சம் புத்தகங்கள்(வாங்கி மட்டும் தான் இருக்கேன்னு தெளிவா சொல்லிடு.பெரிய படிப்பாளின்னு சீன போடாதே).ரொம்ப நாளா படிக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்த பொன்னியின் செல்வன் இப்போதான் வாங்கியிருக்கேன்(இனிமேலும் நினைச்சுக்கிட்டு இருக்காம படி).



இந்த வருஷம் நிறைய நண்பர்களோட ,உறவினர்களோட திருமணங்கள்ல கலந்துக்க நிறைய பயணம் காரைக்கால்,நாகர்கோவில்,முசிறி,ஆத்தூர்,நாமக்கல்,திண்டிவனம் இப்படி நிறைய ஊர்.அப்புறம் சுற்றுலாவா வயநாடு,கொச்சின்,அதரப்பள்ளி அருவி இங்கெல்லாம் நண்பர்களோட..( நல்லா கம்பெனியில பொய் சொல்லிட்டு ஊர் ஊரா சுத்தறத்துக்கு பேரு தான் பயணமா?அவ்வ்வ்வ்).




இந்த வருஷம் மறக்க முடியாத நிகழ்வுன்னா நான் பிளாக் எழுத ஆரம்பிச்சதுதான்.தற்செயலா நண்பன் மூலமா பதிவுலக அறிமுகம் கிடைச்சு இப்போ நூறு பதிவுகளை கடந்து, நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தியது இந்த வருஷம் தான்.யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு நானும் யூத் பதிவர் என காட்டியாச்சு.ஈரோடு சந்திப்பில் கலந்து கொள்ள முடிய வில்லை என்ற வருத்தமிருக்கிறது(ம்.போயிருக்கலாமில்ல அன்னைக்கு என்னத்த வெட்டி முறிச்ச?அதுவுமில்லாம ரெண்டு மூணு பதிவு தேத்தியிருக்கலாமில்ல(ஹி ஹி)).நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்பை இழந்தாச்சு.( ஃப்ரீயா விடு அடுத்த வருஷம் ஜமாச்சுடலாம்)




அப்புறம் புது வருசத்துல என்ன பண்ணனும்னா( டேய் இரு இரு இந்த வருஷம் என்ன கிழிச்சிருக்க).அட இரப்பா ஊடால ஊடால கரைச்சல கொடுத்துக்கிட்டு அதைத்தான் சொல்ல வந்தேன்.இந்த வருஷம் என்னென்ன பண்ணனும்மு எதுவும் முடிவு பண்ணல.செய்யவும் இல்ல.புது வருஷம் ஏதாவது நடக்குதான்னு பாப்போம்.அனைவருக்கும் வாழ்த்து சொல்லி(டேய் இரு இரு நான் இன்னும் நிறைய பேசணும்) விடை பெறுகிறேன்( நான் இன்னும் சொல்ல வேண்டியது...........................)வணக்கம்.

ஸ்ஸ்ஸ்பா இந்த மனசாட்சியை இதுக்கு தான் பேசவே விடுறதில்ல.எவ்வளவு டிஸ்டபென்ஸ் பண்றான் ராஸ்கல்...


நட்புடன்,
ம.கோகுல்.

34 comments:

Anonymous said... Reply to comment

இனி வரும் வருடமும் நன்றாக அமைய வாழ்த்துக்கள் .....

துரைடேனியல் said... Reply to comment

Sago. Kadantha unguludaiya 3 pathivugalilum vote potten. Ana commen panna mudiyala. Just for your information. Inraiya pathivu arumai .Malarum Ninaivugal. ARUMAI.

துரைடேனியல் said... Reply to comment

Tamilmanam vote 1.

Yoga.S. said... Reply to comment

வணக்கம்,கோகுல்!இந்த வருஷத்த வெற்றிகரமா?!கடந்ததுக்கு வாழ்த்துக்கள்.இனி வரும் வருடங்களையும் இதே மாதிரி வெற்றிகரமா?!கடப்பீங்க என்கிற நம்பிக்கையோட புது வருட வாழ்த்துக்கள்!(நிறைய எழுத்துப்பிழை இருக்கு.இந்த வருஷம் கரெக்ட்(பிகர இல்ல)பண்ணுவீங்கன்னு நம்புறேன்!)

Cute Parents said... Reply to comment

வணக்கம் கோகுல்..

நலமா..?

//ஈரோடு சந்திப்பில் கலந்து கொள்ள முடிய வில்லை என்ற வருத்தமிருக்கிறது//

வரும் வருடம் ஒரு கலக்கு கலக்கிட்டா போச்சு..(எப்படின்ற சூட்சமத்த நம்ம நக்கீரர் சொல்லித்தருவாரு சரியா)

புதுவருடம் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் ஈடேற மனமார்ந்த வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

மனசாட்சிக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

மனசாட்சிக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

Unknown said... Reply to comment

அழகான மீட்டல்...!!

ராஜி said... Reply to comment

உங்க அக்கா பொண்ணு அழகு மனசை அள்ளிக்கிட்டு போகுது. போட்டோ ஓரத்துல நரைச்ச தலை ஒண்ணு தெரியுதே அது நீங்கதானா தம்பி?

ad said... Reply to comment

@ராஜி said...
உங்க அக்கா பொண்ணு அழகு மனசை அள்ளிக்கிட்டு போகுது. போட்டோ ஓரத்துல நரைச்ச தலை ஒண்ணு தெரியுதே அது நீங்கதானா தம்பி?///

ஹிஹிஹி.
இதெல்லாம் ...இப்புடி பொது எடத்துல வச்சா கேக்கிறது?தனியா கூப்பிட்டு கேக்கிறதில்ல???

சுதா SJ said... Reply to comment

கோகுல் செம கலக்கல்.... வித்தியாசமான பதிவு.... உங்க மனச்சாட்சிக்கு குறும்பு அதிகம் போல ஹா ஹா ..... இப்போ பாருங்கோ என் மனச்சாட்சியும் என் கூட பேசுது.... இந்த வருஷம் என்ன கிழிச்ச என்று... அவ்வ்

சத்ரியன் said... Reply to comment

யோவ்! நாங்க கொல்வோம்னு தெரிஞ்சே, மனசாட்சிய கூட்டிக்கிட்டு வந்துட்டியா?

ஃப்ரியா விடு சாமீய்!

மகேந்திரன் said... Reply to comment

கோகுல் பதிவுன்னா ஒரு வித்தியாசம் இருக்கும்
சரிதான்...
இந்த வருட நினைவுகளை மனசாட்சியை கூட்டிகிட்டு
நம்மோடு பகிர்ந்து கொண்டது.. அழகு அழகு...

சசிகுமார் said... Reply to comment

வித்தியாசமான கற்பனை சூப்பர் மாப்ள...

நிரூபன் said... Reply to comment

வணக்கம் மச்சி,
வித்தியாசமான முறையில் மனச் சாட்சியுடன் உரையாடி உங்கள் வாழ்வில் 2011 எவ்வாறு கழிந்திருக்கிறது என்பதனை எடை போட்டிருக்கிறீங்க.

வரும் வருடமும் வசந்தமாக அமைய வாழ்த்துக்கள்.

Unknown said... Reply to comment

மனசாட்சியோட இன்னோரு மைன்ட்வாய்ஸ்...சுவாரஸ்யமா இருக்கு...இந்த வருடம் 200...500...1000...பதிவு எழுத வாழ்த்துக்கள்.....

Yaathoramani.blogspot.com said... Reply to comment

எழு மாதத்தில் 104 பதிவுகள் என்பது
ஒரு சாதனைதான்
இவ்வாண்டு இந்த சாதனையை நீங்களே
முறியடிக்க மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
த.ம 12

SURYAJEEVA said... Reply to comment

உங்கள் நினைவலைகள் அருமை

Unknown said... Reply to comment

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கடந்த ஆண்டின் அனுபவம்,
அதைப் பகிர்ந்த பான்மை அருமை!

புலவர் சா இராமாநுசம்

arasan said... Reply to comment

நீங்க சொன்னத விட உங்க மனசாட்சி தான் சரியா சொல்லுச்சு ..
வாழ்த்துக்கள் நண்பரே ... வாழ்க வளமுடன்..

சக்தி கல்வி மையம் said... Reply to comment

வித்தியாசமான சிந்தனை..
நினைவுகள் சுகம்..
வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

ஹா ஹா ஹா ஹா தனியா வந்தா போட்டு தள்ளிருவாங்கன்னு மனசாட்சியை கூட்டிட்டு வந்துட்டாரு வழி விடுங்கப்பா...!!!

Admin said... Reply to comment

மனசாட்சியின் பயணம்..நன்று..

வரும் வருடம் இனிதாட் அமைய வாழ்த்துகள்..

வாக்கு (TM 15-TT 10)
அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

shanmugavel said... Reply to comment

திரும்பிப் பார்த்தல் அருமை,வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கோகுல் - மலரும் நினைவுகள் - ஆண்டின் நிகழ்வுகளை நினைத்து - அசை போட்டு - மகிழ்ந்து - பதிவாக இட்டமை நன்று. புத்தாண்டு புதுப் பொலிவுடன் - அனைத்து வளங்களுடன் - மகிழ்வாகச் செல்ல நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said... Reply to comment

பின் தொடர்வதர்க்காக

vetha (kovaikkavi) said... Reply to comment

புதிய ஆண்டும் சிறப்பாக மலரட்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

என்றும் இனியவன் said... Reply to comment

இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

அம்பலத்தார் said... Reply to comment

வெற்றிகரமாக மற்றுமொரு வருடத்தைக் கடந்து வந்திட்டிங்க. இனிவரும் 2012 ஆண்டும் உங்களிற்கு மனமகிழ்வும் நிறைவும் தருவதாக அமைய வாழ்த்துக்கள்.

M.R said... Reply to comment

அருமையான மனப் பயணம் அருமை நண்பா

அம்பாளடியாள் said... Reply to comment

மன சாட்சியின் பயணம் அருமை!..இனி வரும் புத்தாண்டும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ .

முத்தரசு said... Reply to comment

மனசாட்சியுடன் பயணம் தெளிவான பயணம்.

வரும் வருஷம் வளமாக அமைய மனசாட்சியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அனுஷ்யா said... Reply to comment

உங்களுக்கே உரிய பாணியில் எழுதியுள்ளீர்கள்...அருமை..பதிவை தொடர்ந்தமைக்கு நன்றி கோகுல்..தாமதித்த பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். ..

அனுஷ்யா said... Reply to comment

அப்படியே இந்த கொடுமைய வந்து வாசிச்சுட்டு போங்க..கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்..