Monday, October 31, 2011

நம்பலாமா?


முன்பொரு காலத்தில் ஒருவர் கடவுளின் மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார்.கடவுளின் புகழையும் பெருமைகளையும் உலகெங்கும் பரப்பி வந்தார்.கடவுளின் நாமத்தையே எந்நேரமும் நினைத்தும்,ஜபித்தும் வந்தார்.இருந்தாலும் அவர் வாழ்க்கையில் சில கஷ்டங்களை அனுபவித்தார்.இது அவருக்கு பெரும் சந்தேகத்தையும் வருத்தத்தையும் தந்தது.எப்பவும் கடவுளை நினைத்துக்கொண்டிருந்தும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள்?என அலுத்துக்கொண்டார்.

இப்படியிருக்க அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.மனிதனாய்ப்பிறந்தால் இது இயல்புதானே!இறந்தவுடன் அவரது ஆன்மா(?)கடவுள் இருக்கும் இடத்துக்கு சென்றது.அங்கே கடவுள் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.அவரிடம் போன நமது மதபோதகர் அவரை வணங்கிவிட்டு தனது நீண்ட நாள் ஆதங்கத்தை அவரிடம் உடைத்தார்.

கடவுளே!நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே தான் இருந்தேன்.எப்போதும் உனது பெயரை சொல்லிக்கொண்டுதான் இருந்தேன்.இருந்தாலும் எனது வாழ்வில் சில தருணங்கள் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன்.சில கடினமான நேரங்களை கடந்திருக்கிறேன்.ஏனிப்படி?உன்னையே நினைத்திருந்தவனுக்கு நீ கொடுக்கும் பரிசு இது தானா?என்றார்.

கடவுள் மெல்லிய புன்னகையுடன் டி.வியைப்பார் என்றார்.டி.வியில் ஒரு பாதையும் நான்கு காலடிகளும் வரிசையாக தெரிந்தது.அதைக்காட்டி இதுதான் உனது வாழ்க்கைப்பாதை அதில் முன்னாலிருக்கும் இரு காலடிகள் உன்னுடையது பின் வரும் காலடிகள் என்னுடையது.நான் எப்போதும் உன்னை தொடர்ந்து தான் வந்திருக்கிறேன் என்றார்!

அந்த நேரம் பார்த்து கடவுளின் உதவியாளர் வந்து கோகுல் அடுத்த போஸ்ட் போட்டுட்டார்னு சொல்ல கடவுள் நம்மவரை டி.வி.பார்த்துக்கொண்டிருக்கச்சொல்லிவிட்டு நம்ம பிளாக் பக்கம் வந்துட்டார்.தனியா இப்ப தனியா டி.வி பாத்துக்கிட்டு இருந்த நம்மவர் சில இடங்களைப்பார்த்து அதிர்ச்சி ஆனார்.ஏனெனில்அவர் காட்சிகளில் சில இடங்களில் இரு காலடிகள் மட்டுமே இருந்தது.தனது நினைவாற்றலால் அந்த காலங்களை நினைவு கூர்ந்தார்.அந்த காலங்களே இவர் கஷ்டப்பட்டகாலங்களாய் இருந்தன.இதைக்கண்டு அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார், கடவுள் நாம் கஷ்டம் வரும் காலங்களில் நம்மைப்பின் தொடராமல் போனதால் தான் நாம் துயரை அனுபவித்தோம் என கோபம் கொண்டார்.

கடவுள் திரும்ப வந்தவுடன் அவரிடம் கடிந்து கொண்டார்.இதுதான் உங்கள் நீதியா?கஷ்டப்படும் காலங்களில் பின் தொடராமல் விலகி நிற்பது தான் உங்களை வணங்கி நினைத்துக்கிடப்போர்க்கு நீங்கள் பரிசா?என பொங்கித்தள்ளினார்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கடவுள் பதிலுரைத்தார்.நீ உனது கஷ்ட காலங்களில் கண்ட இரு காலடிகள் உன்னுடையது அல்ல அவையிரண்டும் என்னுடையது.அப்போது உன்னை நான் எனது தோளில் சுமந்து துயர காலத்தைக்கடக்க வைத்தேன்.இல்லையென்றால் நீ அந்த நேரங்களில் தாங்க முடியா துயரை சந்தித்திருப்பாய் என்றார்.இன்பமும் துன்பமும் இணைந்து வருவதே வாழ்க்கை.துன்ப நேரங்களில் மட்டும் இறைவனை நினைப்பது சில மனிதர்களின் இயல்பு எனவும் துன்பம் என்று ஒன்று வாழ்வில் இல்லாவிடிலும் மனிதனது முயற்சிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என வாழ்வியல் அர்த்தத்தை உணர்த்தினார்.

இதிலிருந்து பெறப்படும் நீதி என்னவெனில் ஒரு விசயத்தில் நம்பிக்கை வைத்தால் எந்த நிலையிலும் அதன் மீதுள்ள நம்பிக்கை இழக்கக்கூடாது.அதேபோல நம்பிக்கை இல்லாவிடிலும் அது கடவுளின் மீதுள்ள நம்பிக்கையாக இருந்தாலும்.(குழப்பமா இருக்கா நம்பின விசயத்த சந்தேகப்படாதிங்க,சந்தேகமான விசயத்த நம்பாதிங்க அவ்வளவுதான்) 


(இது ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னது,தமிழ்ப்படுத்தி ஒரு நீதியை வைத்து தந்திருக்கிறேன்)

31 comments:

சம்பத்குமார் said... Reply to comment

//ஒரு விசயத்தில் நம்பிக்கை வைத்தால் எந்த நிலையிலும் அதன் மீதுள்ள நம்பிக்கை இழக்கக்கூடாது.அதேபோல நம்பிக்கை இல்லாவிடிலும் அது கடவுளின் மீதுள்ள நம்பிக்கையாக இருந்தாலும்.//

மிகச் சரியான வரிகள்..

நம்பிக்கைதான் வாழ்க்கை..

சம்பத்குமார் said... Reply to comment

//அந்த நேரம் பார்த்து கடவுளின் உதவியாளர் வந்து கோகுல் அடுத்த போஸ்ட் போட்டுட்டார்னு சொல்ல கடவுள் நம்மவரை டி.வி.பார்த்துக்கொண்டிருக்கச்சொல்லிவிட்டு நம்ம பிளாக் பக்கம் வந்துட்டார்.//

இதுதான் 100 % நம்பிக்கை..

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

குழப்பமே இல்லை..

மிகத் தெளிவான பதிவு..

நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வோம்..

சக்தி கல்வி மையம் said... Reply to comment

நிதர்சன உண்மை நண்பா..
நம்பிக்கைதான் வாழ்க்கை.,

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

படித்தவுடன் மனதில் பதியும் விதமாக எழுதியுள்ளீர்கள்.


அருமை..

Karthikeyan Rajendran said... Reply to comment

முயற்சி திருவினையாக்கும், நம்பிக்கை நல்ல வழி காட்டும், பதிவுலகில் கோகுல்???? ஒரு கூகுள்!!!!!!!!!!!!

Angel said... Reply to comment

//இதிலிருந்து பெறப்படும் நீதி என்னவெனில் ஒரு விசயத்தில் நம்பிக்கை வைத்தால் எந்த நிலையிலும் அதன் மீதுள்ள நம்பிக்கை இழக்கக்கூடாது.//

அருமையான வரிகள் .நம்பிக்கைதான் வாழ்க்கை

M.R said... Reply to comment

நல்லா தெளிவா சொல்லியிருக்கீங்க நண்பா ,நன்றி

ராஜா MVS said... Reply to comment

நம்பிக்கை என்னும் நீதியை மிக நம்பிக்கையுடன் நம்பவைக்கும் தங்களின் நம்பிக்கையான முயற்சிக்கு வாழ்த்துகள்... கோகுல்...

பதிவு சூப்பர்... நண்பா...

அம்பலத்தார் said... Reply to comment

நல்ல விடயம் நம்பிகையில் நம்பிக்கை வைப்போம்.

குறையொன்றுமில்லை. said... Reply to comment

ரொம்ப சரியா சொன்னீங்க நம்பிக்கைதான் வாழ்க்கை.

Anonymous said... Reply to comment

நம்பிக்கை தான் வாழ்க்கை...

அதெப்படி கோகுல் ...நான் கவிதைக்கு துணையாக சுட்டு வைத்த படங்களை நீங்களும் சுடுகிறீர்கள்...குறிபார்த்து...

Anonymous said... Reply to comment

இரண்டு முறை படித்தேன்...புரியாததால் அல்ல...நல்லா எழுதி இருக்கீங்க...

*anishj* said... Reply to comment

//நம்பின விசயத்த சந்தேகப்படாதிங்க,சந்தேகமான விசயத்த நம்பாதிங்க அவ்வளவுதான்//

சூப்பர் தலிவா !!

மகேந்திரன் said... Reply to comment

நம்பலாமா ... நம்பிக்கையை...
கேள்வியைக்கேட்டு
பதிலையும் கட்டுரையிலேயே
கொடுத்துவிட்டீர்கள்.

நம்புதல் மிக அவசியம்....
நம்பிக்கை வைத்தல் வேண்டும்.

அழகா எழுதி இருக்கீங்க நண்பரே.

Unknown said... Reply to comment

@ரெவெரி

இதுதான் சுட்டலில் சுடலோ?

Unknown said... Reply to comment

நல்ல கருத்து,
கடவுள் நம்பிக்கை இல்லையென்றால், அந்தக் காலடி என் காலடியே என்று நம்ப வேண்டும்.. அப்படித்தானே கோகுல்...

சத்ரியன் said... Reply to comment

நம்பித்தானே ஆகனும், கோகுல்.

rajamelaiyur said... Reply to comment

//
குழப்பமா இருக்கா நம்பின விசயத்த சந்தேகப்படாதிங்க,சந்தேகமான விசயத்த நம்பாதிங்க அவ்வளவுதான்)
//
நல்ல குழபிடிங்க

K.s.s.Rajh said... Reply to comment

////நம்பின விசயத்த சந்தேகப்படாதிங்க,சந்தேகமான விசயத்த நம்பாதிங்க அவ்வளவுதான்) /////

அட இதான் மேட்டரா.....
நச்

K.s.s.Rajh said... Reply to comment

யானையின் பலம் தும்பிக்கை மனிதனின் பலம் நம்பிக்கை

SURYAJEEVA said... Reply to comment

தன்னம்பிக்கை அவசியம் என்பது என் கருத்து, நான் ஒரே வரியில் சொல்லிட்டேன், நீங்க ஒரு பதிவே போட்டு இருக்கீங்க... அடேங்கப்பா

மாய உலகம் said... Reply to comment

நம்பிக்கை வைப்போம்.. நம்பினார் கெடுவதில்லை... நம்பினால் மனபாரம் சிறிதெனினும் குறையும்... முற்றிலும் நம்பினால் முற்றிலும் பாரம் குறையும் என்பது சாத்தியமே... எனவே நம்புவோம்... பகிர்வுக்கு நன்றி நண்பா!

கூடல் பாலா said... Reply to comment

\\\(குழப்பமா இருக்கா நம்பின விசயத்த சந்தேகப்படாதிங்க,சந்தேகமான விசயத்த நம்பாதிங்க அவ்வளவுதான்) \\\ கதை குழப்பமே இல்லை .இதுதான் குழப்புது !

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

அழகான கதை.... இது போல தொடருங்கள்

விச்சு said... Reply to comment

நம்பிக்கைதான் பலம்...

செவிலியன் said... Reply to comment

பழைய கதை...ஆனாலும் நல்ல பதிவு...old is gold...nice one

நிரூபன் said... Reply to comment

இனிய காலை வணக்கம் பாஸ்,
அருமையான நீதி & தத்துவக் கதை,
வாழ்வியலைப் பற்றிய தெளிவினையும், எம்மை நாமே அறிந்து கொள்வதற்கு தடையாக உள்ள விடயத்தினையும் அழகுறச் சொல்லி நிற்கிறது இக் கதை.

சசிகுமார் said... Reply to comment

பதிவு நல்லா இருக்கு... tm 4

சென்னை பித்தன் said... Reply to comment

அருமை கோகுல்.

அம்பாளடியாள் said... Reply to comment

நம்பிக்கைதான் வாழ்க்கை இதில் மாற்றுக் கருத்து இல்லை
(நான் உங்களை நம்புகின்றேன் சகோ ஹி...ஹி ..ஹி .....)
வாழ்த்துக்கள் சகோ அருமையான படைப்பிற்கு .ஒரு சின்ன வேண்டுகோள்
தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )
காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட
என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .