Friday, October 7, 2011

ஹெட் லைட்டால் வரும் இருட்டு!!!

நான் வேலை செய்யும் நிறுவனத்தில் எனக்கு ஷிப்ட் முறையில் 

பணி.காலையில் ஆறிலிருந்து இரண்டு.மதியம் இரண்டிலிருந்து பத்து.(ஐயோ 

ஓடிடாதிங்க இது சுய புராண பதிவல்ல).நான் பைக்கில் தான் போய் 

வருவது வழக்கம்.காலையில் ஐந்தேகாலுக்கு கிளம்புவேன்.2nd ஷிப்ட் –

ன்னா கிளம்ப பத்தரை ஆகிடும்.எப்படியும் வாரத்துல ஆறு நாள் ஒரு 

முக்கா மணி நேரம் இருட்டில் பயணம்.என் பாடு பரவால்ல.ரெண்டு 

மணிநேரம் போய்வரவங்க எல்லாம் இருக்காங்க.

விஷயம் என்னன்னா இப்படி விடியற்காலை நேரங்களிலும்,இரவு 

நேரங்களிலும் நம்மள மாதிரி பைக் ஓட்டிட்டு போறவங்க படற அவஸ்த 

எதிர்ல வர்ற பெரிய வண்டிங்க ஹெட்லைட் வெளிச்சம் தான்.கவுண்டமணி 

ஒரு படத்துல சொல்ற மாதிரி பளீர்னு எரியும்.அந்த வெளிச்சம் 

கண்ணைக்கூச வைச்சு ரோட்டையே மறைக்குற அளவுக்கு இருக்குங்க

.
நாம எவ்ளோதான் மெதுவா போனாலும் அவ்ளோ வேகத்தோட வர்ற 

வண்டி பளிச்சுனு வெளிச்சத்தோட நம்ம கிராஸ் பண்ணும்போது 

நிலைதடுமாற வேண்டி இருக்கு.ரோட்டில இருக்கற பள்ளம்,குழி(பள்ளம் 

வந்தா மேடு தான் வரணுமா?ஹிஹி)எதுவுமே தெரிய 

மாட்டேங்குது.கொஞ்சம் அசந்தா மண்ணைக்கவ்வ வேண்டியதுதான்.

நாம லைட்ட டிம் பண்ணச்சொல்லி சிக்னல் பண்ணாலும் எளக்காரமா டிம் 

பண்ணாமலே போயிடுறாங்க.அதிலும் சில கார்,பஸ்ஸுல குறிப்பா ஆம்னி 

பஸ்ஸுங்கள்ல நாலைஞ்சு லைட்டு போட்டுக்கிட்டு கண்ணையே 

பஸ்பமாக்கிடறாங்க.இருட்டுல ரோடு தெரியத்தான் ஹெட்லைட்டே ஆனா 

இது மாதிரி சில பேருங்க டிசைன்,பேஷன் –ன்னு பல லைட்டுங்கள 

போட்டு நம்மள டார்ச்சர் பண்றாங்க!

அதுலயும் மழை பேய்ஞ்சு இருந்தா இருந்தா நம்ம லைட் வெளிச்சமே ரோட்ட 

டல்லாத்தான் காட்டும்.இது மாதிரி சமயங்கள்ல எதிர்ல வர்ற வண்டிங்க 

ஹெட்லைட் ரொம்ப டேஞ்சர் ஆகிடுது.அதுவும் அகலம் குறைவான 

ரோடுங்கள்லசின்ன வண்டி,பெரிய வண்டின்னு பாகுபாடு இல்லாம திணற 

வேண்டியிருக்கு.

எல்லா வாகன ஒட்டுனர்களுக்கும் இந்த பதிவு மூலமாக ஒரு 

வேண்டுகோள்,இரவுப்பயணங்களின் போது எதிரில் வாகனங்கள் 

வரும்போது கொஞ்சம் மனசு வச்சு லைட்ட டிம் பண்ணி போனிங்கன்னா 

புண்ணியமாப்போகும்.நம்ம போக்குவரத்துத் துறையினரும் பாதுகாப்பு வார 

விழா சமயங்களில் மட்டும் ஹெட்லைட்டில் கருப்பு ஸ்டிக்கர்கள் 

ஒட்டிவிட்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கிறார்கள்.அப்பறம் 

கண்டுகொள்வதில்லை.சரி விடுங்க,ஏதோ நம்மாள முடிஞ்சது நம்ம 

வண்டிங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி வைப்போம்.

எங்கேயும் எப்போதும் படம் பாத்தவங்களுக்கு தெரியும் ஒரு சின்ன 

விஷயம் கூட நம்ம கைய மீறி ஒரு பெரிய விபத்தை 

ஏற்படுத்திவிடும்’ங்கறத காட்டியிருப்பாங்க.அதனால,முடிஞ்சா வரைக்கும் 

விஷயம் நம்ம கையை மீறாம பாத்துக்குவோம்.ஹெட்லைட் “டெட்”லைட் 

ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில் 

இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!

பாதுகாப்பான பயணம் என்பது நாம ஒழுங்கா வண்டி ஒட்டுனா மட்டும் 

போதாது.எதிரில் ஓட்டி வருபவர்களும் ஒழுங்கா ஓட்டினால் தான் 

என்பதை மனதில் வைத்து பயணிப்போம்.நம்ம உயிர் மட்டும் நம்ம 

கையில் இல்ல.ரோட்டில் வரும் எல்லார் கையிலும்!

முடிந்தவரை இந்த பதிவை எல்லோருக்கு கொண்டு செல்லலாமே!

59 comments:

Anonymous said... Reply to comment

ஹெட்லைட் “டெட்”லைட் ..
இது தான் பதிவின் "ஹைலைட்"..
கோகுல்...

எல்லாம் உங்கள்ட்ட படிச்சதுதான்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

பயனுள்ள பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி

பிலஹரி:) ) அதிரா said... Reply to comment

ஹையோ... ஓடிவருவதற்குள்... 3ம் இடம்தானே கிடைச்சிருக்கு:)))

ஜோசப் இஸ்ரேல் said... Reply to comment

எல்லாருக்கும் பயனுள்ள பதிவு. இதில கொடுமை என்னன்னா நிறைய பேருக்கு டிம் எதற்கு உபயோகிக்க வேண்டும் என்றே தெரியாது. இனியாவது திருந்துவார்களா என் பார்ப்போம்.

பிலஹரி:) ) அதிரா said... Reply to comment

உண்மையேதான், ரூல்ஸ்ஸ் இருந்தும் ஆரும் அதை பின்பற்றுவதில்லை.

எதிரே வாகனம் வரும்போது ஹெட் லைட்டை ஓவ் பண்ணி, பின் ஓன் பண்ண வேண்டும். இங்கு பெரும்பாலும் அதை ஃபலோ பண்ணுகிறார்கள்.

M.R said... Reply to comment

பாதுகாப்பான பயணம் என்பது நாம ஒழுங்கா வண்டி ஒட்டுனா மட்டும்

போதாது.எதிரில் ஓட்டி வருபவர்களும் ஒழுங்கா ஓட்டினால் தான்

என்பதை மனதில் வைத்து பயணிப்போம்.நம்ம உயிர் மட்டும் நம்ம

கையில் இல்ல.ரோட்டில் வரும் எல்லார் கையிலும்!

இது தான் முக்கியம் நண்பரே

நாம ஒழுங்கா போனா போதாது
எதிர்ல வரவன் நம்ம எமனா மாறாம இருந்தால் போதும் !

செங்கோவி said... Reply to comment

//
விஷயம் நம்ம கையை மீறாம பாத்துக்குவோம்.ஹெட்லைட் “டெட்”லைட்

ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில்

இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!//

சூப்பர்யா.

♔ℜockzs ℜajesℌ♔™ said... Reply to comment

வாவ் நல்ல விஷியம் கோகுல் . . .
சரி ஒரு டவுட் , இந்த ஹெட் லைட் வெளிச்சத்தினாலதான் கருப்பு கண்ணாடி போட்டு போட்டோவுக்கு போஸ் குடுத்து இருக்கிங்களா? ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said... Reply to comment

சரி இந்த பிரச்சனைக்கு எனக்கு தெரிஞ்ச சில எளிய தீர்வுகளை சொல்லுறேன். இந்த மாதிரி எதிரில் பெரிய வண்டிகள் அதிக ஹெட் லைட் வெளிச்சத்தில் வந்தால் , நாம் நேரடியாக ஹெட் லைட் வெளிச்சத்தை பார்க்க கூடாது , அப்படி பார்த்தால் கண்ணு கூசும் , சிறிது நேரத்துக்கு கண் சரிவர தெரியாது நிலை தடுமாற அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் ஹெட் லைட் வெளிச்சத்தை நம் கண்களால் தவிர்த்து விட்டு சற்று வெளிச்சத்தில் இருந்து விலகி பார்க்க வேண்டும். அப்போது எதிரில் வரும் வண்டியும் தெரியும் நாம் நிதானமாகவும் இருக்கலாம்.

♔ℜockzs ℜajesℌ♔™ said... Reply to comment

இந்த ஹெட் லைட் வெளிச்சத்தின் வீச்சை குறைக்க கூடிய மற்றும் கண் கூசுவதை தவிக்க கூடிய நல்ல தரமான polarized கண் கண்ணாடிகள் கிடைகின்றன . அதை அணிந்து கொண்டு வண்டி ஓட்டலாம்

தனிமரம் said... Reply to comment

உண்மையில் பல சிக்களை இந்த லைட் உருவாக்கின்றது எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் நல்ல பதிவு நண்பா!

Unknown said... Reply to comment

பயனுள்ள பகிர்வு....

நண்பா

சம்பத்குமார் said... Reply to comment

நண்பரே அருமையான ஆழமான பகிர்விற்க்கு மிக்க நன்றி

இரவில் வாகன ஓட்டிகள் எதிரே எந்த வாகனம் வந்தாலும் டிம்/பிரைட் கண்டிப்பாய் செய்யவேண்டும்.

அட்லீஸ்ட்..கறுப்பு ஸ்டிக்கரையாவது ஹெட்லைட்டின் நடுவில் ஓட்ட வேண்டும்.

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பரே

நட்புடன்
சம்பத்குமார்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

ஹெட்லைட் “டெட்”லைட்

ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில்

இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!/

பயனுள்ள பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி

shanmugavel said... Reply to comment

நியாயமான வேண்டுகோள்,பகிர்வுக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

///////ஹெட்லைட் “டெட்”லைட்
ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில்

இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!
/////////

செம பஞ்சுங்கோ.... எல்லாரும் பின்பத்துனா எல்லாருக்குமே நல்லது.......

மனோ சாமிநாதன் said... Reply to comment

//ஹெட்லைட் “டெட்”லைட்
ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில்
இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!//

அருமையான வாசகம்!
சிறந்த விழிப்புணர்வு பதிவு!

அம்பலத்தார் said... Reply to comment

வாகன ஓட்டுனர் அனைவரும் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைப் பதிவிட்டது மிகவும் நல்லது.

அம்பலத்தார் said... Reply to comment

பாதுகாப்பான பயணங்கள் என்பது உங்கள் நாட்டில் அருகிவருகிறது.

Anonymous said... Reply to comment

சாரதிகள் கவனம் அவசியம் (

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Reply to comment

சூப்பர் பதிவு..

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

எனக்கும் இந்த ஹெட்லைட் பிராப்ளம் அடிக்கடி வரும்... என்ன செய்ய வேலை முக்கியம்ல...

செவிலியன் said... Reply to comment

எத்தனையோமுறை நானும் அனுபவிச்சிருக்கேன்....அவசியமான பதிவு...
மக்கள் திருந்தினால் நல்லது....
-----------------------
அதுசரி பள்ளம்ன்னா என்ன??? குழின்னா என்ன???? டவுட்டு...

Unknown said... Reply to comment

நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி...உணர்ந்து செயல்படவேண்டும்!

Thennavan said... Reply to comment

சிலர் பைக்கில் கண்ணை கூசும் ஹெட் லைட் மட்டும் இல்ல , பின் பக்கம் ப்ரேக் லைட்டாக பிளாஷ் LED வைத்திருக்கிறார்கள் .

K.s.s.Rajh said... Reply to comment

நல்ல ஒரு பதிவு பாஸ் எங்க ஊர்ப்பக்கமும் இப்படி நடப்பதுண்டு.சம்மந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்

வெளங்காதவன்™ said... Reply to comment

present sir!

கடம்பவன குயில் said... Reply to comment

எல்லோரையும் சென்று சேரவேண்டிய விழிப்புணர்வு பதிவு சகோ. சின்ன சின்ன அலட்சியம் கூட விலைமதிப்பில்லா உயிரை பறித்திடும். பகிர்வுக்கு நன்றி

settaikkaran said... Reply to comment

இரவில் வாகனம் ஓட்டுவது வரவர மிகவும் அச்சுறுத்தும் அனுபவமாகத் தான் இருக்கிறது. :-(

arasan said... Reply to comment

உண்மையான ஆதங்கம் தான் நண்பா ..
அக்கறையுள்ள பகிர்வுக்கு நன்றி

SURYAJEEVA said... Reply to comment

அநேகமாய் பெரிய வாகன ஓட்டிகள் பதிவர்களாய் இருக்கப் போவது இல்லை... இதை நீங்கள் ஒரு நாளிதழில் அல்லது வார இதழில் பிரசுரித்தால் இன்னும் அருமையாய் இருக்கும் தோழா..

நாவலந்தீவு said... Reply to comment

சாலையில் செல்லும் ஒவ்வொருவரும் உணர வேண்டிய பதிவு. நல்ல தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி.

Yoga.s.FR said... Reply to comment

பயனுள்ள பகிர்வு.விழியுடன் சம்பந்தப்பட்டதால்,சிறந்த விழிப்புணர்வு பதிவு!

காட்டான் said... Reply to comment

வணக்கம் மாப்பிள பயனுள்ள பதிவு.. 
நான் இரவில் பயணம் செய்யும்போது இதை அனுபவித்திருக்கிறேன் எங்கள் நாட்டில்  சாலைகளில் வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணமா..? அடிக்கடி நல்ல விளிப்புணர்வு பதிவுகள் போடுகிறீங்க வாழ்த்துக்கள்..

Yaathoramani.blogspot.com said... Reply to comment

பயனுள்ள பதிவு
அதைப் படத்துடன் புரிந்து கொள்ளும்படி
மிக அழகாக பதிவிட்டிருகிறீர்கள்
நன்றி வாழ்த்துக்கள் த.ம 16

Rathnavel Natarajan said... Reply to comment

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said... Reply to comment

சரியாச் சொன்னீங்க!

ராஜா MVS said... Reply to comment

வாகனம் ஓட்டுவதில் மட்டும் கவனம் இருந்தால் போதாது என்று உணர்த்தியுள்ளீர்கள்.. கோகுல்...

சூப்பர்.... நண்பா...

Unknown said... Reply to comment

இப்பதிவு அனைவரும் அறிய
வேண்டிய ஒன்று!

புலவர் சா இராமாநுசம்

கோகுல் said... Reply to comment

ரெவெரி said...
ஹெட்லைட் “டெட்”லைட் ..
இது தான் பதிவின் "ஹைலைட்"..
கோகுல்...

எல்லாம் உங்கள்ட்ட படிச்சதுதான்...
//
ம்.நடத்துங்க!
//
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி
//
வருகைக்கு நன்றி!
//

athira said...
ஹையோ... ஓடிவருவதற்குள்... 3ம் இடம்தானே கிடைச்சிருக்கு:)))
//

அடுத்த முறை முந்திக்கங்க!
//

உங்கள் நண்பன் said...
எல்லாருக்கும் பயனுள்ள பதிவு. இதில கொடுமை என்னன்னா நிறைய பேருக்கு டிம் எதற்கு உபயோகிக்க வேண்டும் என்றே தெரியாது. இனியாவது திருந்துவார்களா என் பார்ப்போம்.
//
திருந்தனும்//

//
M.R said...
பாதுகாப்பான பயணம் என்பது நாம ஒழுங்கா வண்டி ஒட்டுனா மட்டும்

போதாது.எதிரில் ஓட்டி வருபவர்களும் ஒழுங்கா ஓட்டினால் தான்

என்பதை மனதில் வைத்து பயணிப்போம்.நம்ம உயிர் மட்டும் நம்ம

கையில் இல்ல.ரோட்டில் வரும் எல்லார் கையிலும்!

இது தான் முக்கியம் நண்பரே

நாம ஒழுங்கா போனா போதாது
எதிர்ல வரவன் நம்ம எமனா மாறாம இருந்தால் போதும் !

//
சரியாச் சொன்னீங்க
//

செங்கோவி said...
//
விஷயம் நம்ம கையை மீறாம பாத்துக்குவோம்.ஹெட்லைட் “டெட்”லைட்

ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில்

இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!//

சூப்பர்யா.
//
நன்றிங்க!
//

தனிமரம் said...
உண்மையில் பல சிக்களை இந்த லைட் உருவாக்கின்றது எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் நல்ல பதிவு நண்பா!

//

வைரை சதிஷ் said...
பயனுள்ள பகிர்வு....

நண்பா

//

சம்பத்குமார் said...
நண்பரே அருமையான ஆழமான பகிர்விற்க்கு மிக்க நன்றி

இரவில் வாகன ஓட்டிகள் எதிரே எந்த வாகனம் வந்தாலும் டிம்/பிரைட் கண்டிப்பாய் செய்யவேண்டும்.

அட்லீஸ்ட்..கறுப்பு ஸ்டிக்கரையாவது ஹெட்லைட்டின் நடுவில் ஓட்ட வேண்டும்.

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பரே

நட்புடன்
சம்பத்குமார்

//
நன்றி நண்பர்களே நீங்களும் செய்ங்க
நண்பர்களுக்கும் அறிவுறுத்துங்க!

கோகுல் said... Reply to comment

♔ℜockzs ℜajesℌ♔™ said...
வாவ் நல்ல விஷியம் கோகுல் . . .
சரி ஒரு டவுட் , இந்த ஹெட் லைட் வெளிச்சத்தினாலதான் கருப்பு கண்ணாடி போட்டு போட்டோவுக்கு போஸ் குடுத்து இருக்கிங்களா? ஹி ஹி

October 7, 2011 9:47 PM

♔ℜockzs ℜajesℌ♔™ said...
சரி இந்த பிரச்சனைக்கு எனக்கு தெரிஞ்ச சில எளிய தீர்வுகளை சொல்லுறேன். இந்த மாதிரி எதிரில் பெரிய வண்டிகள் அதிக ஹெட் லைட் வெளிச்சத்தில் வந்தால் , நாம் நேரடியாக ஹெட் லைட் வெளிச்சத்தை பார்க்க கூடாது , அப்படி பார்த்தால் கண்ணு கூசும் , சிறிது நேரத்துக்கு கண் சரிவர தெரியாது நிலை தடுமாற அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் ஹெட் லைட் வெளிச்சத்தை நம் கண்களால் தவிர்த்து விட்டு சற்று வெளிச்சத்தில் இருந்து விலகி பார்க்க வேண்டும். அப்போது எதிரில் வரும் வண்டியும் தெரியும் நாம் நிதானமாகவும் இருக்கலாம்.

October 7, 2011 9:53 PM

♔ℜockzs ℜajesℌ♔™ said...
இந்த ஹெட் லைட் வெளிச்சத்தின் வீச்சை குறைக்க கூடிய மற்றும் கண் கூசுவதை தவிக்க கூடிய நல்ல தரமான polarized கண் கண்ணாடிகள் கிடைகின்றன . அதை அணிந்து கொண்டு வண்டி ஓட்டலாம்
//

வருகைக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி நண்பா!

கோகுல் said... Reply to comment

இராஜராஜேஸ்வரி said...
ஹெட்லைட் “டெட்”லைட்

ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில்

இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!/

பயனுள்ள பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி

//

FOOD said...
நானும் அனுபவித்த அவஸ்தைதான். அழகாச் சொல்லியிருக்கீங்க.

//

shanmugavel said...
நியாயமான வேண்டுகோள்,பகிர்வுக்கு நன்றி

//

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ஹெட்லைட் “டெட்”லைட்
ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில்

இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!
/////////

செம பஞ்சுங்கோ.... எல்லாரும் பின்பத்துனா எல்லாருக்குமே நல்லது.......

///

மனோ சாமிநாதன் said...
//ஹெட்லைட் “டெட்”லைட்
ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில்
இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!//

அருமையான வாசகம்!
சிறந்த விழிப்புணர்வு பதிவு!

///

அம்பலத்தார் said...
வாகன ஓட்டுனர் அனைவரும் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைப் பதிவிட்டது மிகவும் நல்லது.

//

கருத்துரைகளுக்கு நன்றி நண்பர்களே
தெரிந்த எல்லோரிடமும் இவ்வசயதைப்பற்றி சொல்லுங்கள்!

பிரணவன் said... Reply to comment

சகா, எப்படி வண்டி ஓட்டுரதுன்னே தெரியாம பலரும் ஓட்டுராங்க. . .

கோகுல் said... Reply to comment

@suryajeeva
முயற்சிக்கிறேன் தோழர்!

Anonymous said... Reply to comment

பார்த்து கவனமா ஓட்டுங்க நண்பரே... அடிபட்டவன் சொல்றேன், ஜாக்கிரதை...

மாய உலகம் said... Reply to comment

நானே பலமுறை தடுமாறிருக்கேன் நண்பா.. சூப்பரான எச்சரிக்கை ஆதங்க பகிர்வு... இதைப்பார்ப்பவர்கள் ரூல்ஸை கடைப்பிடித்தாலே இந்த பதிவுக்கும் உங்கள ஆதங்கத்திற்கும் கிடைத்த வெற்றி தான்...

குறையொன்றுமில்லை. said... Reply to comment

நல்ல விழிப்புணர்வு பதிவு நானும்கூட இரவு நேரம் ட்ரைவ் போகும் போது இத்தகைய கஷ்ட்டங்களை சந்தித்து இருக்கேன்.

கோகுல் said... Reply to comment

@மொக்கராசு மாமா
கேட்டுக்கங்க!அனுபவஸ்தர் சொல்லிட்டாரு .எச்சரிக்கை!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

நானும் இந்த அநியாயத்தை அனுபவிச்சி இருக்கேன், சூப்பர் பதிவு....!!!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

அடப்பாவி நான் உம்ம பாலோவரா இருக்கேன்னு நினைச்சிகிட்டு இருந்தேன், இப்போ செக் பண்ணும்போது பாலோவரா இல்லைன்னு தெரிஞ்சி உடனே பாலோவர் ஆகிட்டே ஸாரி மக்கா...

K said... Reply to comment

பாதுகாப்பான பயணம் என்பது நாம ஒழுங்கா வண்டி ஒட்டுனா மட்டும்

போதாது.எதிரில் ஓட்டி வருபவர்களும் ஒழுங்கா ஓட்டினால் தான்

என்பதை மனதில் வைத்து பயணிப்போம்.நம்ம உயிர் மட்டும் நம்ம

கையில் இல்ல.ரோட்டில் வரும் எல்லார் கையிலும்!////////

மிக மிக நல்ல கருத்தை சொன்ன பதிவு! வாழ்த்துக்கள் கோகுல்!

நிரூபன் said... Reply to comment

இனிய இரவு வணக்கம் பாஸ்,

வீக்கெண்ட் முடிஞ்சு வர கொஞ்சம் லேட்டாகிடுச்சு.

தாங்கள் நலமா?

நிரூபன் said... Reply to comment

நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு நண்பா,.

நாம் எம் உயிரைப் பற்றிய அக்கறையோடு வண்டி ஓட்டுவதனை விட, மூன்றாம் நபர் பற்றிய கவனத்தோடு வண்டி ஓட்டின் நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை குறையுமென்பதைச் சிறப்புற உதாரண விளக்கத்துடன் சொல்லியிருக்கீறீங்க.

கோகுல் said... Reply to comment

நன்றி!தோழர்களே!
இந்த பதிவை தமிழ்மணம் மகுடம் வரை கொண்டு சென்றமைக்கு!

நிரூபன் said... Reply to comment

வாழ்த்துக்கள் பாஸ்,
நல்ல சமுதாய அக்கறையுள்ள இடுகைகளை எழுதி வருகின்றீர்கள். தொடர்ந்தும் வித்தியாசமான அம்சங்களோடு சமூக அக்கறையுள்ள படைப்புக்களைத் தர வேண்டும் பாஸ்.

கோகுல் said... Reply to comment

@நிரூபன்
நிச்சயம் நண்பா!

Kousalya Raj said... Reply to comment

வாகனத்தில் செல்லும் போது ஹெட் லைட்டால் படும் இன்னல்களை மிக அழகாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள்...

எல்லோரும் புரிந்து செயல்படணும் என்பதை உங்கள் பதிவு ஆழமாக வலியுறுத்துகிறது.

சிறந்த விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.

ஆமினா said... Reply to comment

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கோகுல் - நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு - மக்கள் திருந்த வேண்டும். திருந்துவார்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா