Wednesday, July 27, 2011

வேகத்தடையா பயணத்தடையா?????


என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் திடீரென்று கையில் கட்டுடன் நிறுவனத்துக்கு வந்தார்.என்னங்க நேத்து கூட நல்லாத்தான இருந்தீங்க என வழக்கமான கேள்வியை கேட்டேன்.அதுக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த பதிவுக்கு மேட்டர்.
வண்டில போய்கிட்டு இருக்கும் போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது தெரியாமவேகமா போய் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னார்.ஏங்க நீங்க தினமும் போற ரோடுதான ஸ்பீட் பிரேக்கர் இருக்கறது           தெரியாதா ன்னேன் நான் விவரமா?

அடப்போடா?நான் மதியம் வரும் போது ஸ்பீட் பிரேக்கர் இல்லடா.திரும்பி நைட் போகும்போது ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்காங்கடா னார்.
அப்போது தான் எனக்கு உரைத்தது நம்ம ஊரில் நிறைய வேகத்தடைகள் இருப்பதே தெரிவதில்லை.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தொலைவில் வரும் போதே தெரிவதற்காக வெள்ளை, மஞ்சள் நிறத்தில்,வேகத்தடை இருப்பது தெரியும்படி அடையாளமிட்டிருப்பார்கள்.அது போக எச்சரிக்கை பலகையும் வைத்திருப்பார்கள்.

ஆனால் பெரும்பாலானமாநகரச்சாலைகளிலும்.ஊரக, கிராமப்புறச்சாலைகளிலும் உள்ள வேகதடைகளில் இது போல இருப்பதில்லை.

தினமும் ஒரே சாலையில் பயணிப்போரே புதிதாய்ப்போட்ட வேகத்தடை தெரியாமல் விபத்துக்குள்ளாகும் போது புதிதாய் அந்த சாலையில் பயணிப்போரின் கதி???
ஹெல்மட்டை போடுங்க,சீட் பெல்ட போடுங்க,ட்ராபிக் ரூல்ஸ பாலோ பண்ணுங்க அப்படின்னுல்லாம் சொல்லுரவங்க,இதெல்லாம் பாலோ பண்ணியும் இப்படி விபத்து ஏற்படாம தடுக்க,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.

நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!

8 comments:

நிரூபன் said... Reply to comment

வணக்கம் சகோ, அருமையான விழிப்புணர்வுப் பதிவு, இந்த வேகத் தடை வீதியில் இருக்கின்றது என்பதனை,
குறிப்பிட்ட இடத்திற்குப் போவதற்கு 15மீட்டர் தொலைவிலேயெ அறிந்து கொள்ளும் நோக்கில் வீதியின் இடது புறத்தில் ஒரு பலகை மூலம் அறிவிப்புச் செய்தால், நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள உபாதைகளில் இருந்து தப்பலாம், அல்லது எம்மை நாமே சுய பரிசோதனை செய்து அவதானத்துடன் வண்டியினைச் செலுத்தலாம்.

இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை தான் கருமமே கண் எனக் கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

நிரூபன் said... Reply to comment

பாஸ், உங்கள் பதிவினைத் தமிழ் மணத்திலும் இணைக்கலாமல்லவா, இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேரும் வழியாக இருக்கும்,
http://www.tamilmanam.net/user_blog_submission.php

http://www.tamilmanam.net/user_blog_submission.php

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

Mathuran said... Reply to comment

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு
பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said... Reply to comment

//,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.//

அனைவரும் கவனம் கொள்ள வேண்டிய பதிவு ...பகிர்வுக்கு நன்றி கோகுல்

சக்தி கல்வி மையம் said... Reply to comment

பயனுள்ள பதிவு..
நன்றி சகோ..

KOMATHI JOBS said... Reply to comment

Awareness for Road awareness!
Superb Post!

மாய உலகம் said... Reply to comment

தற்பொழுது உள்ள நிலைமையில் வாகனம் ஓட்டுவது எளிதல்ல முழுக்கவனத்துடன் விவேகம் இருப்பது நல்லது என அழகாக வலியிருத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கூகுல் - அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை. ஆனால் கிராமப்புற, ஊரகச் சாலைகளில் கிராம மக்களே விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர்களே வேகத்தடை எந்த வித் விதிகளுக்கும் கட்டுப்படாமல் ஏற்படுத்தி விடுகிறார்கள். என்ன செய்ய இயலும். சாலைகளில் செல்ப்வர்கள் தான் கவனமாகச் செல்ல வேண்டும். நல்வாழ்த்துகள் கோகுல் - நட்புடன் சீனா