அன்று ஒரு பேரணி
நடைபெற்று கொண்டிருந்தது
ஆர்வ மிகுதியால் எட்டிப்பார்த்தேன்
என்ன பேரணி என்று
குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு பேரணியாம்
கோஷம் போட்டார்கள்
குழந்தைகள் வருமானம்
நாட்டிற்கு அவமானம்
பிஞ்சுகளை வெம்ப விடாதிர்
அவை விழுது விட்டு
வேரூன்ற வேண்டியவை என்று
பேரணி முடிந்து
களைத்து அமர்ந்தவர்களுக்கு
குளிர்பானம் விநியோகித்தான்
கந்தன் என்ற பத்து வயது சிறுவன்!!!
மீள்வு!
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்
மீள்வு!
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்
Tweet | ||||||
10 comments:
அருமையான கவிதை...வாழ்த்துக்கள் நண்பரே...
மாப்ள நச்!
குட்
அற்புதம்..
போலி வேதாந்தம் பேசும் சமுதாயத்திற்கு சரியான சாட்டையடி
வாழ்த்துக்கள்..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
சிவ.சி.மா. ஜானகிராமன் said...
அற்புதம்..
போலி வேதாந்தம் பேசும் சமுதாயத்திற்கு சரியான சாட்டையடி
வாழ்த்துக்கள்..\\
வருகைக்கு நன்றி
சி.பி.செந்தில்குமார் said...
குட்\\
நன்றிங்கோ
விக்கியுலகம் said...
மாப்ள நச்!\\
வாங்க.வருகைக்கு நன்றி
Reverie said...
அருமையான கவிதை...வாழ்த்துக்கள் நண்பரே...
நன்றி
சிவயசிவ - வலைத்தளத்தில்
இணைந்தமைக்கு மிக்க நன்றி
நண்பரே..
தொடர்ந்து வருகை தாருங்கள்.
நன்றி.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்லடி கண்ணேம்பார்கள்... ஆனால் இங்கு ஊரே உபதேசம் செய்துவிட்டு உறிஞ்சி குடிக்குதாம் குளிர்பானம்....
இந்த பதிவு ஒரு சம்பவத்தை ஞாபகம் படுத்துகிறது.. நமது இந்தியான்னு குழந்தை தொழிலாள்ர்கள பத்தி குரும்படம் எடுத்துட்டு டப்பிங்கான வேலை நடந்த சமயம் சாப்பிடுவதறக்காக நானும் சக சகாக்களும் ஒரு ஹோட்டலில் சாப்பிடபோனோம்... அங்க ஒரு சின்ன பையன் தான் பரிமாரினான்..அந்த பையன விசாரிச்சா அந்த பையன் ஓட்டல் கார ஓனர் பையந்தான் போல ... ஆனா நாங்க விசாரிச்ச விதம் ..அந்த ஓட்டல் காரர் எங்கள பெரிய ABC ஆஃபிஸர்ன்னு sorry CBI ஆபிஸர்ன்னு நினைச்சுட்டார் போல ...அடுத்த நாளிலிருந்து அந்த பையன் ஹோட்டல் பக்கமே ஆளையே காணோம்.... எங்களுக்குள்ளயே நாங்கள் சிரித்துக்கொண்டோம்..... ஆதங்கமான கவிதை வாழ்த்துக்கள்
Post a Comment