Tuesday, July 12, 2011

அம்மாவே போதும்!

எப்போதும் என்னைப்பற்றி எண்ணியிருப்பாள்
இப்போதாவது நான் அவளைப்பற்றி

ஒன்றுமே இல்லாத எனக்கு
உரு கொடுத்தவள்

ஒன்றும் புரியாமலிருந்த எனக்கு
உலகம் புரிய வைத்தவள்

நான் காயப்பட்டால்
தான் அழுபவள்

வறட்சியை தான் ஏற்றுக்கொண்டு
வசந்தத்தை எனக்கு தருபவள்

புயலை எதிர் கொண்டு தென்றலாய்
என் மீது வீசுபவள்

புறப்படும்போது
புன்னகைத்திருப்பாள்

திரும்பி வரும் வரை
துடித்திருப்பாள்

முள்ளை தாங்கிக்கொண்டு
என் பாதையில் பூ தூவுபவள்

நான் தோல்வியுறும் போது
தோள் கொடுப்பவள்

எனது வெற்றியில்
என்னை விட புளங்காகிதம் கொள்பவள்


இன்னும் என்ன சொன்னாலும் தகும்
உன்னைப்பற்றி என்றால்

அடப்போடா!அம்மா என்று சொல்
அதுவே போதும் என்கிறாய்!



5 comments:

Anonymous said... Reply to comment

அருமை..தொடர்ந்து எழுதுங்கள்..

நேரம் கிடைத்தால் என் வலைப்பக்கம் வந்து போகவும்..

Reverie
http://reverienreality.blogspot.com/
இனி தமிழ் மெல்ல வாழும்

மதுரை சரவணன் said... Reply to comment

//ஒன்றும் புரியாமலிருந்த எனக்கு
உலகம் புரிய வைத்தவள்

நான் காயப்பட்டால்
தான் அழுபவள்

வறட்சியை தான் ஏற்றுக்கொண்டு
வசந்தத்தை எனக்கு தருபவள்//

super..vaalththukkal

Mathuran said... Reply to comment

கவிதை அருமையாக உள்ளது நன்பரே.. தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்

கூதற்காற்று

மாய உலகம் said... Reply to comment

அடப்போடா அம்மா என்று சொல் அதுவே போதும்...சரி தான் அம்மா என்ற சொல்லைவிடவா ஒரு உயர்வான ஒரு வார்த்தை இருந்து விட போகிறது... வாழ்த்துக்கள் நண்பரே

Admin said... Reply to comment

தங்களின் இந்த கவிதையினை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_08.html