பேருந்தில் ஊனமுற்றோர் நின்றிருந்தாலும்
பார்காததது போல் அமர்ந்திருக்கும் சிலர்
பாதை கடக்க முடியாமல் திணறும்
பார்வையட்றோரை பார்க்காமல் ஓடும சிலர்
யாருக்கேனும் விபத்து நேரிட்டால் கூட
யாருக்கென்ன என ஓடும் சிலர்
பாதாள சாக்கடை திறந்தே கிடந்தாலும்
பார்த்துக்கொண்டே போகும் சிலர்
பொருட்கள் விற்க வீடு தேடி வருவோரை
பொறுமையின்றி பொறிந்து தள்ளும் சிலர்
பக்கத்துக்கு வீட்டில் கொலை கொள்ளையே நடந்தாலும்
நமக்கென்ன என டி.வீ .பார்க்கும் சிலர்
ஆதரவற்றோருக்கு ஆதரவு கேட்டு வரும்
அன்பு உள்ளங்களை அவமதிக்கும் சிலர்
ஏழை மக்கள் சிறுக சேமிக்கும் பணத்தையும்
ஏப்பம் விடும் சிலர்
என பலர் இவ்வுலகில் உலவிக்கொண்டிருந்தாலும்
கொஞ்சமேனும் மழை பெய்கிறதென்றால்
அது உலகின்எங்கோ ஓர் மூலையில்
மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருப்பதாலே!!
Tweet | ||||||
3 comments:
மனித நேயத்தின் மகத்துவத்தை உங்கள் கவிதைகளில் உணர முடிகிறது. வாழ்த்துக்கள்...
நல்ல கவிதை .. மேலே செல்ல வாழ்த்துக்கள்
குட் ஒன்
Post a Comment