Monday, October 31, 2011

நம்பலாமா?


முன்பொரு காலத்தில் ஒருவர் கடவுளின் மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார்.கடவுளின் புகழையும் பெருமைகளையும் உலகெங்கும் பரப்பி வந்தார்.கடவுளின் நாமத்தையே எந்நேரமும் நினைத்தும்,ஜபித்தும் வந்தார்.இருந்தாலும் அவர் வாழ்க்கையில் சில கஷ்டங்களை அனுபவித்தார்.இது அவருக்கு பெரும் சந்தேகத்தையும் வருத்தத்தையும் தந்தது.எப்பவும் கடவுளை நினைத்துக்கொண்டிருந்தும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள்?என அலுத்துக்கொண்டார்.

இப்படியிருக்க அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.மனிதனாய்ப்பிறந்தால் இது இயல்புதானே!இறந்தவுடன் அவரது ஆன்மா(?)கடவுள் இருக்கும் இடத்துக்கு சென்றது.அங்கே கடவுள் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.அவரிடம் போன நமது மதபோதகர் அவரை வணங்கிவிட்டு தனது நீண்ட நாள் ஆதங்கத்தை அவரிடம் உடைத்தார்.

கடவுளே!நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே தான் இருந்தேன்.எப்போதும் உனது பெயரை சொல்லிக்கொண்டுதான் இருந்தேன்.இருந்தாலும் எனது வாழ்வில் சில தருணங்கள் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன்.சில கடினமான நேரங்களை கடந்திருக்கிறேன்.ஏனிப்படி?உன்னையே நினைத்திருந்தவனுக்கு நீ கொடுக்கும் பரிசு இது தானா?என்றார்.

கடவுள் மெல்லிய புன்னகையுடன் டி.வியைப்பார் என்றார்.டி.வியில் ஒரு பாதையும் நான்கு காலடிகளும் வரிசையாக தெரிந்தது.அதைக்காட்டி இதுதான் உனது வாழ்க்கைப்பாதை அதில் முன்னாலிருக்கும் இரு காலடிகள் உன்னுடையது பின் வரும் காலடிகள் என்னுடையது.நான் எப்போதும் உன்னை தொடர்ந்து தான் வந்திருக்கிறேன் என்றார்!

அந்த நேரம் பார்த்து கடவுளின் உதவியாளர் வந்து கோகுல் அடுத்த போஸ்ட் போட்டுட்டார்னு சொல்ல கடவுள் நம்மவரை டி.வி.பார்த்துக்கொண்டிருக்கச்சொல்லிவிட்டு நம்ம பிளாக் பக்கம் வந்துட்டார்.தனியா இப்ப தனியா டி.வி பாத்துக்கிட்டு இருந்த நம்மவர் சில இடங்களைப்பார்த்து அதிர்ச்சி ஆனார்.ஏனெனில்அவர் காட்சிகளில் சில இடங்களில் இரு காலடிகள் மட்டுமே இருந்தது.தனது நினைவாற்றலால் அந்த காலங்களை நினைவு கூர்ந்தார்.அந்த காலங்களே இவர் கஷ்டப்பட்டகாலங்களாய் இருந்தன.இதைக்கண்டு அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார், கடவுள் நாம் கஷ்டம் வரும் காலங்களில் நம்மைப்பின் தொடராமல் போனதால் தான் நாம் துயரை அனுபவித்தோம் என கோபம் கொண்டார்.

கடவுள் திரும்ப வந்தவுடன் அவரிடம் கடிந்து கொண்டார்.இதுதான் உங்கள் நீதியா?கஷ்டப்படும் காலங்களில் பின் தொடராமல் விலகி நிற்பது தான் உங்களை வணங்கி நினைத்துக்கிடப்போர்க்கு நீங்கள் பரிசா?என பொங்கித்தள்ளினார்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கடவுள் பதிலுரைத்தார்.நீ உனது கஷ்ட காலங்களில் கண்ட இரு காலடிகள் உன்னுடையது அல்ல அவையிரண்டும் என்னுடையது.அப்போது உன்னை நான் எனது தோளில் சுமந்து துயர காலத்தைக்கடக்க வைத்தேன்.இல்லையென்றால் நீ அந்த நேரங்களில் தாங்க முடியா துயரை சந்தித்திருப்பாய் என்றார்.இன்பமும் துன்பமும் இணைந்து வருவதே வாழ்க்கை.துன்ப நேரங்களில் மட்டும் இறைவனை நினைப்பது சில மனிதர்களின் இயல்பு எனவும் துன்பம் என்று ஒன்று வாழ்வில் இல்லாவிடிலும் மனிதனது முயற்சிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என வாழ்வியல் அர்த்தத்தை உணர்த்தினார்.

இதிலிருந்து பெறப்படும் நீதி என்னவெனில் ஒரு விசயத்தில் நம்பிக்கை வைத்தால் எந்த நிலையிலும் அதன் மீதுள்ள நம்பிக்கை இழக்கக்கூடாது.அதேபோல நம்பிக்கை இல்லாவிடிலும் அது கடவுளின் மீதுள்ள நம்பிக்கையாக இருந்தாலும்.(குழப்பமா இருக்கா நம்பின விசயத்த சந்தேகப்படாதிங்க,சந்தேகமான விசயத்த நம்பாதிங்க அவ்வளவுதான்) 


(இது ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னது,தமிழ்ப்படுத்தி ஒரு நீதியை வைத்து தந்திருக்கிறேன்)
மேலும் வாசிக்க "நம்பலாமா?"

Saturday, October 29, 2011

நெருப்பு!!!


நெருப்பு

பெண்ணே!
உன்னை கண்ணகியோடு
சீதையோடு
ஒப்பிட்டால்
ஒப்புக்கொள்ளாதே!


நீ கண்ணகியாயிருந்தால்
ஒரு ஊரையே எரிக்கவேண்டியிருக்கும்

நீ சீதையாயிருந்தால்
நீயே எரிய வேண்டியிருக்கும்
நீ நீயாயிரு!
நீயே நெருப்பாயிரு!
நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!
எது உன்னை நெருங்கும்?

நெருப்பென்றால் எப்படி?
நல்லன ஆக்கவும்
தீயவை அழிக்கவும்
தெரிந்த நெருப்பாய்! 



மேலும் வாசிக்க "நெருப்பு!!!"

Thursday, October 27, 2011

IF BLOGGER CLOSED!!!


ஒரு வாரத்துக்கு முன்னால கூகுள் பஸ்ஸ (BUZZ)மூடப்போறதா தகவல் வந்தது அந்த நேரத்துல twitter-ள் உலாவிக்கிட்டு இருந்தப்ப iftwitterclosed அப்படின்னு # போட்டு ட்விடிக்கிட்டு இருந்தாங்க.அப்பா அங்கே வந்த நிருபன் கூட அடப்பாவிகளா பிக்குல தான் ரணகளமா ஓடிட்டு இருக்குன்னு இங்கே வந்தா இங்கே அதுக்கு மேல க்ளோஸ் பண்ற அளவுக்கு போட்டு தாக்குராங்களே என்று நொந்தார்!
அந்த நேரத்தில் என் கபாலத்தில் உதித்தது தான் இந்த எண்ணம் .IF BLOGGER CLOSED.என்ன நண்பர்களே அதிர்ச்சியா இருக்கா?சும்மா ஒரு கற்பனை என்ன நடக்கும் பாக்கலாம் வாங்க!
.



J எதை எழுதறது,என்னாத்த எழுதறதுன்னு மண்டைய போட்டு உடைச்சுக்க வேணாம்.அதே மாதிரி எதை வேணும்னாலும் எழுத தோணாது!

Jபதிவைப்போட்டுட்டு கமெண்ட்ஸ் வந்ததான்னு சும்மா சும்மா பேஜ்-refresh பண்ண தேவையில்ல.

Jசினிமா விமர்சனம் எழுத மொக்க படத்துக்கெல்லாம் போய் சொந்த செலவில சூனியம் வைச்சுக்க வேணாம்!

Jஎந்தெந்த திரட்டிகள்ள இணைக்கலாம் எதெதுல இணைக்கக்கூடாதுன்னு ரூம் போட்டு யோசிக்க அவசியம் இருக்காது!

Jயாராரேல்லாம் மொய் வெச்சிருக்காங்கன்னு பாத்து பாத்து போய் மறு மொய் வைக்க வேணாம்!

Jவீட்டுல இருக்கவங்க அப்படி என்னாதான் அந்த கம்பியூட்டர்ல ஒக்காந்து நோண்டிக்கிட்டு இருக்கியோன்னு கயிவி கயிவி ஊத்துறது நின்னுடும்!

Jநாம ஏதோ எழுதப்போய்நீ எப்படி அப்படி எழுதலாம்னு யார்க்கிட்டையும் வாங்கிக்கட்டிக்க தேவை இருக்காது!

Jஇதப்பத்தி எழுதுனா அவங்க கோச்சுப்பாங்களோ?அதப்பத்தி எழுதுனா இவுங்க கோச்சுப்பாங்களோ அப்படின்னு எல்லாம் நினைக்க தேவையில்லை!

Jராத்திரி பேய் வரவரைக்கும் உக்காந்து கமென்ட் போடத்தேவையில்லை!

Jடாகுடர் படங்களுக்கு விளம்பரம் கொறையும்!

Jஅரசியல் கூத்துக்களை கண்டும் காணாம இருக்க வேண்டிய நிலைமை வரும். ஒருத்தர் காத பொத்திக்கிட்டு இருக்கற மாதிரி.

Jஆபீசுல பிளாக் பாக்குறது கொறைஞ்சு கொஞ்சம் வேலை நடக்கும்.

Jகையில மொபைல வைச்சுக்கிட்டு post super-அப்படின்னு சொல்லத்தேவையில்ல!

Jநம் எண்ணங்களை,சிந்தனைகளை தூண்டும் நட்புகள்,தொலைதூர,கடல்கடந்த நேசமிகு உறவுகள் கிடைக்காமல் போகும்!

Jயாரோ கொடுக்குற ரேங்கிங் க்கு நட்புகளுக்குள் பனிப்போர் தேவை இருக்காது

Jநேர்ப்பதிவு,எதிர்ப்பதிவு,தொடர்ப்பதிவு,சைடு பதிவுக்கேல்லாம் வாய்ப்பிருக்காது!

Jகலைஞர்,அம்மா,ராசா,கனிமொழி இவங்களைப்பத்தின நையாண்டிகள் கொறையும்.

Jஹன்சிகாவுக்கு © யாருன்னு சண்டை வராது.

Jஒரு பதிவர் சந்திப்பு அதுக்கு நாலைஞ்சு பதிவு போடத்தேவையில்ல.

JLast but not least இந்த பதிவே போட்டிருக்கத்தேவையில்ல!


டிஸ்கி1 - இந்த பதிவு ஒரு கற்பனையே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல(இப்பல்லாம் இப்படி போட்டாலும் பிரச்சினையாகுது பாவங்க நாங்க எப்படிங்க கற்பனை பண்றது!)


டிஸ்கி2- உங்க கற்பனைகளையும் பின்னூட்டத்துல சொல்லுங்க!





படங்கள்-இணையங்களில் சுட்டது!
மேலும் வாசிக்க "IF BLOGGER CLOSED!!!"

Tuesday, October 25, 2011

சந்தோஷத் தீபாவளி!!!



வெடிக்கும் பட்டாசுகளையும்
பொறியும் மத்தாப்புகளையும்
பார்த்து நாம் மகிழ்கிறோம்
நம்மை மகிழச்செய்த
பட்டாசுதொழிலாளர்கள்?

பட்டாடை மினுமினுக்க
புத்தாடை ஜொலிஜொலிக்க
நாமுடுத்தி மகிழ
உருவாக்கி தந்த
மில் தொழிலாளர்கள்?


வீட்டில் நுழைந்தவுடன்
வாலாட்டி குலைந்து கொண்டு
நன்றியுடன் காவல் காத்து
நடைப்பயிற்சிக்கு உடன் வரும்
செல்லப்பிராணிகளுக்கு?


எல்லையின்றி திரிந்து
சிறகு விரித்துப்பறந்து
கீச்சுக்குரலில் பாடி
நம் மனதை மயக்கும்
பறவையினங்களுக்கு?


உறவுகளைப் பாக்கணும்
ஊர்ப்போய்ச் சேரனும்
நட்புக்களுடன் நகைக்கணும்
கொண்டு சேர்க்கும்
போக்குவரத்துத்துறையினருக்கு?


பட்டாசின் மிச்சம்
புதுத்துணிகளில் சுற்றப்பட்ட
இனிப்பு காரம் செய்ய வாங்கிய
பிளாஸ்டிக் குப்பைகளை
அடுத்த நாள் சுத்தம் செய்யும்
துப்புரவாளர்களுக்கு?


இந்த நன்னாளில்
எந்த வித அசம்பாவிதங்களும்
நிகழக்கூடாது என
தங்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டி
தயார் நிலையில் இருக்கும்
தீயனைப்புப்படையினருக்கு?


This diwali will enlighten us with sweets and crackers

இது போல ஒரு பண்டிகையை
நம்மை கொண்டாட வைக்கும்
இவர்களைப் போன்றவர்களுக்கு
இது சந்தோசத்தீபாவளியா என்றால்
என்னைப்பொருத்த வரை கேள்விக்குறியே
நம்மால் இயன்ற வரை இந்நாளில்
இவர்களைப்பார்க்க நேரிடுகையில்
வாழ்த்து சொல்லி கை கொடுப்போம்.
நிச்சயம் சந்தோஷத்தீபாவளியாய் உணர்வார்கள்!


அனைத்து நண்பர்களுக்கும்,குடும்பத்தார்க்கும்
பாதுகாப்பான இனிய,தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்!
மேலும் வாசிக்க "சந்தோஷத் தீபாவளி!!!"

Saturday, October 22, 2011

மழையில் பயணமா?


வணக்கம் நண்பர்களே,
                      கடந்த மூன்று நாட்களாக பதிவுலகப்பக்கம் வர 

முடியவில்லை.காரணம் கடைசியில் சொல்றேன்!

நம்ம ஊருல இப்ப அப்பப்ப மழைபேயுது.ரமணன் பேச்ச எல்லாம் 

கேக்குறது கிடையாது.ஸ்கூல் லீவு விட்டா மழை விட்டுடும்.ஸ்கூல் 

வைக்குற அன்னைக்கு மழை கொட்டும்.அத விடுங்க.எதுக்கு 

இந்தப்பதிவுன்னா இந்த மழைநேரங்களில் நாம வண்டில போகும் போது 

வரும் பிரச்சினைகளைப்பத்தியது.


சாதாரணமாகவே சாலைப்பயணத்தில் இப்போதெல்லாம் பாதுகாப்பு 

கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மழைக்காலத்தில் பயணம் செய்யும் 

போது நாம் இன்னும் சற்று கூடுதல் கவனம் கொள்வது 

அவசியம்.குறிப்பாக வேகம்,மழை நேரங்களில் சாதாரணமாக நாம் 

செல்லும் வேகத்தை விட குறைந்த வேகத்தில் வண்டி ஓட்டுவது மிக 

அவசியம்.


பிரேக் பிடிக்கும் போது கூடுதல் கவனம் தேவை.ஈரச்சாலைகள் நிச்சயம் 

பிரேக்குக்கு பிடிந்து கொடுக்காது.பிரேக் நாம சொன்ன பேச்ச கேக்காது.டூ 

வீலர்ல கூடுமான வரைக்கும் இரண்டு பிரக்குகளையும் பிடிச்சு வண்டியை 

நிறுத்த முயற்சி செய்யணும்.முடிஞ்சா வரைக்கும் சடன் பிரேக் பிடிக்கறத 

தவிர்க்கணும்.



ரோட்டுல தண்ணி ஓடும் போது வண்டி ஓட்டுறத கண்டிப்பா தவிர்க்குறது 

நல்லது.ரோட்டுல பள்ளம் இருந்தா தெரியாது.அப்பறம் டரியல் தான்.நம்ம 

ஊரு மழைக்கால ரோடுங்களைப்பத்தி உங்களுக்கு தெரியும் தானே?சில 

நேரங்கள்ல ரோட்டோரமா இருக்குற சாக்கடைங்க தண்ணியில 

மறைஞ்சுடும்.கொஞ்சம் அசந்தா சாக்கடையில் ஐக்கியமாக 

வேண்டியதுதான்.நாம கால் அளவு தண்ணிதான் இருக்குன்னு நினைச்சு 

போனா இடுப்பளவு தண்ணி இருக்கும்.வண்டிக்குள்ள தண்ணி போய் 

வண்டிக்கும் பிரச்சினை நமக்கும் தான்!








அப்பறம் இன்னொரு பிரச்சினை சேறு.நீரும் செம்புலச்சேறும் கலந்தது 

போல,பாட்ட கேக்க நல்லா நல்லா இருந்தாலும் வண்டி ஓட்ட ஆபத்தானது 

தான்.டூ வீலர்ல பேலன்ஸ் பண்ண முடியாது.4 வீலர்ல சக்கரங்கள் 

சேத்துல மாட்டிக்கும்.சோ அவாய்ட் பண்றது நல்லது.சில இடங்களில் மண் 

சரிவு அபாயங்களும் இருக்கிறது.



மழை கொட்டிக்கிட்டு இருக்கும் போது வண்டியில போறது ஒரு 

சுகமான,ரசனையான அனுபவம் தான்,ஆனா அதுல நிறைய ஆபத்துக்களும் 

இருக்குங்க.அதனால நமது மழைக்கான பயணங்கள் பாதுகாப்பானதாக 

இருக்க முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்.அதிலையும் நம்மாளுங்க 

ஒத்த கையில குடைய பிடிச்சுக்கிட்டு இன்னொரு கையில ரிஸ்க்கையும் 

எடுத்துக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போறாங்க!






அப்பறம் பிளாக் பக்கம் வராததுக்கு காரணம் என் வயதொத்த கூட வேலை 

பாக்கும் நண்பன் ஒருவன் டூ வீலர்ல கம்பெனிக்கு வரும் போது இது 
மாதிரி மழை நேரத்துல பிரேக் புடிச்சு ஸ்லிப்பாகி விழுந்து கையிலும் 
கழுத்திலும் கொஞ்சம் அடி.இப்ப பரவால்ல.மருத்துவமனைக்கு போய் வர 
நேரிட்டதால் நேரமில்ல.இது போல விபத்துகளை தவிர்க்க கொஞ்சம் 
விழிப்புடன் இருப்போம் நண்பர்களே! இருப்போமா?நமது நண்பர்களுக்கும் 
விழிப்பை ஏற்படுத்துங்கள்!நன்றி!




தொடர்புடைய பதிவுகள்


ஹெட் லைட்டால் வரும் இருட்டு!!!


வேகத்தடையா?பயணத்தடையா???



மேலும் வாசிக்க "மழையில் பயணமா?"

Wednesday, October 19, 2011

கொள்கை எனப்படுவது யாது?



அறிவுத்திருட்டு

புத்தகங்களை தொலைப்பதில்


எனக்கு மகிழ்ச்சியே


அவை


எடைக்கு


போடப்படாதவரை!



சிரிப்பு



கசகசத்த


பேருந்துப்பயணத்தை


கவித்துவமாக்கியது


ஒரு மழலையின்


சிரிப்பு






காக்கை எங்கே?



பிண்டம் வைத்தாயிற்று


எந்தக்காக்கை


எடுக்கும்


சிங்கப்பூரில்!





கொள்கை

புரியாதது


கேட்பவர்களுக்கு


கொஞ்சமாய்


சொல்பவர்களுக்கு

சுத்தமாய்






மேலும் வாசிக்க "கொள்கை எனப்படுவது யாது?"

Monday, October 17, 2011

சிங்கமா?அசிங்கமா?




டி.வி.யில் மேடைப்பேச்சு நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் மைக் இல்லாமலே பேசலாம் போல! டி.வி.சவுண்ட கொறச்சாலும் அவங்க சவுண்டு கொறைய மாட்டேங்குது!


(அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல மைக்குன்னதும் இவரு ஞாபகம் வந்துடுச்சு)

இப்ப தப்பா தெரியறது கொஞ்ச நாள் கழிச்சு பாடம்!ரொம்ப நாளைக்கப்புறம் வரலாறோ!சரித்திரமோ!


கோயில்ல பிரசினைன்னாலும் மனுசன தேடித்தான் வரவேண்டியிருக்கு #periyar.பெரியார் சொன்னது உண்மைதான்.சமீபத்திய உதாரணம்.பத்மனாமபுரம்


தங்கள் அணைகள் உடைந்து விடாமலிருக்க கர்நாடகம் வைத்துள்ள வடிகால் வாரியம் தான் தமிழகம்!ஏன்னா நாமதான புன்னைகைமன்னர்கள்!(இதுக்கு வேற அர்த்தம்)


78-வயதிலும் மன்மோகன்சிங் திறமையாக செயல்படுகிறர்#தங்கபாலு ##உங்கள இன்னும் தலைவரா வச்சிருக்கரதுல இருந்தே தெரியுது லட்சணம்!



4 மாதங்களில் காலாவதியாகிறது ரேஷன் அட்டை; போலிகளைக் களைய ஸ்மார்ட் கார்டு முறை: ஜெயலலிதா #நிஜத்துல தான் இல்ல,கார்டுலயாவது ஸ்மார்ட்டாவோம்.

                     



கலகலப்பான ஆண்கள் பெண்களை முதலில் கவர்ந்தாலும் கடைசியில் ஜெயிப்பது என்னவோ மூடி டைப் ஆண்கள் தான்#மௌனராகம் எஃபக்ட்


மரடொனா இந்தியாவில்-எனக்குபுட்பால் பத்திநல்லாதெரியும்.சந்தேகம்னாகேளுங்க கேள்வி-புட்பால்லஓவருக்குஎத்தனைபால்? மரடொனா-போங்கடாங்கொய்யாங்கோ
           

               (ராஜ்கிரண் மன்னிக்க)

ங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டு-இது சிங்கம்,.வேலை வெட்டிக்குப்போகாம சும்மா உக்காந்து ஒன்ற குண்டான் சோறு தின்னா -இது அசிங்கம்!

  


தமன்னா ஏதோ மிக்ஸியில் செஞ்சுகிட்டு இருக்க அவரது அசிஸ்டெண்ட் மேடம் ஜூஸ் போடுறிங்களா?தமன்னா - இல்ல துணி தொவைக்கிறேன்


 


கவுண்ட(மணி)ருக்கு எந்தப் பட்டங்களும் பிடிக்காது. சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!என்பார்.#டாகுடர்கள் கவனத்திற்கு.



படங்கள் வழங்கிய இணையங்களுக்கு நன்றி!


மேலும் வாசிக்க "சிங்கமா?அசிங்கமா?"