Thursday, March 1, 2012

என்கவுண்டர்,ஒரு கோடி - சில கேள்விகள்

சமீபத்திய நிகழ்வுகள் சில பற்றிய பொதுமக்களின் மனதில் எழும் சில வினாக்கள்.இந்த பொதுமக்கள்ல நானும் ஒருத்தன்.


சென்னையில் இரண்டு வங்கிகளில் கொள்ளையடித்த ஐந்து கொள்ளையர்களை என்கவுண்டர் செய்திருக்கிறது போலிஸ்.இது குறித்து பல சர்ச்சைகளும்,விவாதங்களும்,மனிதஉரிமை தொடர்பாகவும் வாதங்கள்,விசாரணைகள் நடந்து வருகின்றன.முப்பத்து நான்கு லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்களை கொள்ளையர்கள் என அடையாளம் தெரிந்தவுடன்(அவர்கள் சுட்டதால் தான் திருப்பி சுட்டோம் என போலிஸ் சொல்லியிருக்கிறது அது உண்மையாக(வும்) இருக்கலாம்.).பொதுமக்கள் என்ன பேசிக்குறாங்கன்னா ம் , கோடி கோடியா கொள்ளையடிச்சுட்டு,கேசுவலா சுத்திக்கிட்டு இருக்கவங்க பல பேரு இந்த நாட்டுல இருக்காங்களே அவங்கள என்ன பண்ணப்போறீங்க? இவங்க தங்களை தற்காத்துக்கொள்ள உபயோகப்படுத்தும் ஆயுதம் சட்டம்.(சட்டம் ஒரு ஆயுதம் – செம டைட்டில்.எஸ்.ஏ.சி சார் ப்ளீஸ் நோட்)

அடுத்தது மக்களை கோடீஸ்வரன் ஆக்குறேன்னு சொல்லிட்டு விஜய் டி.வி. நடத்துற ஷோ பத்தியது.இது குறித்து  முகநூலில் என் நண்பர் ஒருவர் பகிர்ந்தை நான் இங்கு பகிர்கிறேன்.


//

கேள்வி 1:

இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

கேள்வி 2:

ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?

ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை

-
இந்தக் கேள்வி பதில்களைப் படித்ததும், என்னய்யா கிண்டலா என கடுப்பாக உங்களுக்குள் கேள்வி எழுந்தால்... அதை அப்படியே கேம்ஷோ நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் பக்கம் திருப்பிவிடுங்கள்!.

'
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்' என்று மயிலாசாமியிடம் விவேக் நடத்திய கேம்ஷோவை விட 'மகா அறிவாளித்தனமான' கேள்விகள் கேட்கப்படுவது தான் கோபத்தை வரவழைக்கிறது. மக்களை முன்னேறவே விட மாட்டார்கள் போலிருக்கிறது.

கேள்விகள் கேனத்தனமாக இருக்கிறதே என்று நக்கலடித்தபடி, அடுத்த வேலைக்கு போய்விட்டால், நாம் முட்டாள்கள். அதற்குள் உள்ள மோசடியைப் புரிந்து கொண்டால், இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துபவர்களை முட்டாளாக்க ஒரு வாய்ப்பாவது உண்டாகும்.

இது போன்ற கேள்வி- பதில் நிகழ்ச்சியின் பின்னால் விளையாடுகிறது பல கோடி ரூபாய் மக்கள் பணம்.

எப்படி... எல்லாம் பார்வையாளர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு நேயர்கள் மூலம்தான்.

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.

இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...

ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.

இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?
//


சன் டிவியும் இதே போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்த போவதாக விளம்பரம் வந்த வண்ணம் இருக்கிறது.

அஞ்சு பைசா திருடுனா தப்பா?னு கேக்க தோணுது.உங்க கருத்துகளை சொல்லுங்க .......

17 comments:

கோவை நேரம் said... Reply to comment

நானும் என் பங்குக்கு http://kovaineram.blogspot.in/2012/03/blog-post.html

கோவை நேரம் said... Reply to comment

ஒரு கோடி பத்தி போட்டு இருக்கேன் ..

வெளங்காதவன்™ said... Reply to comment

:-)

ராஜி said... Reply to comment

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?
>>>
அது என்னைக்கும் கலையாது தம்பி.

ராஜி said... Reply to comment

அஞ்சு பைசா திருடுனா தப்பா?னு கேக்க தோணுது.உங்க கருத்துகளை சொல்லுங்க .......
>>>
அஞ்சு பைசா திருடுனா தப்புதான். ஐந்து கோடி திருடுனா தப்பில்லை தம்பி

Unknown said... Reply to comment

ஏமாளிகளாக மக்கள் இருக்கும் வரை
இந்நிலை மாறாது!

புலவர் சா இராமாநுசம்

Ramesh said... Reply to comment

:-)

Yoga.S. said... Reply to comment

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?///"வாள்" போய், "கத்தி" வரும்!அப்போதும் கலையாது,கொர்....!

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

மக்களுக்கு இன்னும் உழைக்காமல் கோடி சேர்க்கும் ஆர்வம் இருப்பதால் இந்தமாதிரி நிகழ்ச்சிகள் குறைய வாய்ப்பே இல்லை.

விழித்துக்கொள் said... Reply to comment

ennadhaan arasaangam nadavadikkai eduththalum makkalukku arivu enge ponadhu

Unknown said... Reply to comment
This comment has been removed by the author.
Unknown said... Reply to comment

மாப்ள முதல் விஷயம் சரியான அனுகுமுறையா இல்லாம இருக்கலாம்(!) ஆனா தப்பான அனுகுமுறையா ஆகிடக்கூடாது எதிர்காலத்தில்!(கமலுக்கு சுத்தி போடவும்!)..

ரெண்டாவது இந்த தனியார் கம்மி#$# தொலைக்காட்சிகளுக்கு சரியான கடிவாளம் போடுறது போல இன்னும் சட்டம் வரல..வராது!..ஏன்னா நடத்துறவங்களும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் மறை முக பார்ட்னர்களே!

Unknown said... Reply to comment

ஏமாளிகளும் கோமாளிகளும் சேர்ந்து விளையாடும் அற்புத வியைாட்டு.......

Sivakumar said... Reply to comment

கையில் ஒரு கோடி. சொல்லி அடியா? ஸ்பாட்டை சொல்லுங்க. தலைக்கு 10 தர்ம அடி சொல்லி அடிக்கறோம்.

சம்பத்குமார் said... Reply to comment

///இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.///

நிதர்சன உண்மை நண்பா...

இதுல மாட்டிட்டு சீரழியப்போறது என்னமோ பொது ஜனம் தான் என எனக்குப் படுகிறது.

Anonymous said... Reply to comment

Nothing but lottery...லூஸ்ல விடுங்க கோகுல்...

மாலதி said... Reply to comment

மிகவும் சரியான வினாவைத்தொடுத்து இருக்கிறீர்கள் உலபூர்வ பாராட்டுகள்