Friday, March 23, 2012

பல"சரக்கு"கடை - 5(23/03/2012)

மௌனம் “கலை”த்”தாயே”
                      

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது தங்கத்தாரகை,தமிழகத்தின்,விடி(!)வெள்ளி இப்படி சொன்னதில் ஆச்சர்யமில்லை.இவர் இப்படித்தான் என்ற எண்ணத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.அது மட்டுமல்லாமல் அதை அவ்வப்ப்போதும் நிரூபித்தும் வருகிறார்.ஆனால் ஒவ்வொன்றையும் சொல்வதற்கு இவருக்கு ஒரு தேர்தல் தேவைப்படுகிறது.பால்,பஸ் கட்டண உயர்வுக்கு உள்ளாட்சி தேர்தல்,இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல்.இடிந்தகரையில் கேரளா போலிஸ் உலவுகிறதாம்.அந்த பகுதியை கேரளாவுடன் இணைத்து விட்டார்களா என்ன?தமிழக மக்களே,இனி நீங்கள் இருளில்,இரவு வெக்கையில் வியர்த்து வழிய தேவையில்லை,இதோ கூடங்குளம் திறந்த உடன் கிடைக்கப்போகிறது தடையில்லா மின்சாரம்,அனுபவியுங்கள்.( இன்னும் என்னென்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கோ).பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவாங்க,தாயே(?),தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விட்டுடீங்க.,நடத்துங்க.




தியாகிகள் தினம்

                  
அரசியல்வாதினாலே தியாகிகள் தானே அப்படின்னு ஆகிடுச்சு இன்றைய நிலைமை.வரும் காலங்களில் தியாகிகள் என்றால் இன்றைய அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டக்கூடும் வரலாறு.நாமறிந்தவரையாவது உண்மை தியாகிகளை நினைவு கூர்வோம்.இன்று தியாகிகள் தினம்(மார்ச் 23)பகத்சிங்,ராஜகுரு சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று.அப்போது பகத்சிங்கிற்கு வயது 24.



காதல் மன்னனுக்கு நினைவஞ்சலிகள்

தமிழ் சினிமாவின் முதல்(!)காதல் மன்னனுக்கு இன்று (22.03.12) ஏழாம் ஆண்டு நினைவுதினம்.பழைய படங்களில் காதலில் கசிந்துருகியிய பல பாடல்கள் இன்றைக்கும் இனிமையானவை.நான் ரொம்ப ரசித்தது வளர்ந்த கலை மறந்துவிட்டாய் கண்ணா ,பாடலின் இறுதியில் ஊடல் முடிந்த கூடல் அழகு. ( அந்த ஊடல் தீர்க்கும் சிறுவன் காதல் இளவரசனா?).அவ்வை சண்முகியில் கமல்,நாகேஷ் கூட்டணியில் ஐக்கியமாகி அசத்தியிருப்பார்.

யாருடா புள்ளப்பூச்சி?

புள்ளப்பூச்சிக்கேல்லாம் கொடுக்கு முளைக்காதுன்னு நினைத்திருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு திடீரென கொடுக்கு இல்லை கொம்பே முளைத்து விட்டது.நானும் ஆசியா காரன் தாண்டா என சிலிர்த்து விளையாடி இந்தியா,இலங்கையை புற முதுகிடச்செய்து பாகிஸ்தானையும் கிட்டத்தட்ட கிலி பிடிக்க செய்து,இறுதிப்போட்டியில் இறுதிப்பந்து வரை வெற்றிக்காகப்போராடி நாங்கள் புள்ளப்பூச்சியோ,கிள்ளுக்கீரைகளோ அல்ல என சொல்லியிருக்கிறார்கள்.



என்னா ஒரு ஒத்தும?

                     
அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல,ஏறக்குறைய எல்லா கட்சிகளும் ஆதரிக்க வேண்டிய விசயத்துக்கு தேவையான நேரத்தில் குரல் கொடுக்காமல் மௌனம் காத்துவிட்டு,ஆதரிக்க யோசிக்கவேண்டிய விசயத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு ஆதரிப்பது என்னே உங்க ஒற்றுமை என புல்லரிக்க வைக்கிறது.ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.கையறு நிலை அப்படின்னு சொல்வாங்களே அந்த நிலைல தான் நாம இருக்கோம்னு நல்லா புரிய வைக்குறாங்க.,(இதை டைப்பும் போது இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு  நினைவுக்கு வந்து தொலையுது)


கவிதை சொல்றாராம்

போற வர பெண்ணைஎல்லாம்
ஏற இறங்க பார்ப்பதால் 
என்னை பெண் பித்தன் எனச்சொல்லி 
பிணங்கிச்சென்றாய்
நான் உன் பித்தனாய் மாறியதால் 
காணும் எல்லா பெண்களும் நீயாய் 
தெரிகிறாய் என எப்படி புரிய வைப்பேன். 
.
.
.

# எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு



இது ட்வீட்டாமாம்

சம்பளம் வந்து விட்டதா என smsகாக காத்திருக்கும் போது forward msgசெய்யும் நண்பனும் எதிரியாகிறான் #மவனே நீ மட்டும் இப்ப என் கையில கெடைச்ச......

போடுங்க வாய்ப்பூட்டு
               

மேல இருக்கறதை யாராவது கீழ இருக்கவர் வாயில யாராவது போட்டு வுடுங்க என்னாமா பேசுது ,ஒருத்தரு பேசாம கொல்றாரு,இவரு அவருக்கும் சேத்து பேசி கொல்றாரு

                
                      

தன்னிலை விளக்கம்

கொஞ்ச நாட்களாக எந்தப்பக்கமும் தலை காட்ட முடியவில்லை.என் பக்கமே தலை காட்ட முடியவில்லை.இப்போ கொஞ்சம் பரவாயில்லை தலைவாழை இலை போட்டு வைங்க வந்துட்டே இருக்கேன். 


4 comments:

Prabu Krishna said... Reply to comment

கூடங்குளம் மிகவும் வருத்தம் தரும் விஷயம்.

ரைட்டர் நட்சத்திரா said... Reply to comment

really many store information in this article .. Your tweet is super.

Anonymous said... Reply to comment

அடக்கி வாசிங்க...பார்டர்ல தான் இருக்கீங்க...-:)

Unknown said... Reply to comment

எதுக்கும் கவனம் .கூடங் குளம் வருந்ததக்கது.