Tuesday, March 13, 2012

பல"சரக்கு"கடை-4(13/03/12)





ஏன் எரியுது

 
கோடையில் காட்டுத்தீ அடிக்கடி பரவுமே அது போல இப்போது பெரிய்ய,முக்கிய கட்டிடங்களில் தீ பற்றுகிறது,கொஞ்ச நாளைக்கு முன்ன கொல்கத்தா மருத்துவமனை,போன மாசம்,சென்னை எழிலகம்,போன வாரத்துல பாரிஸ் கார்னர்ல இருக்குற ஒரு எல்.ஐ.சி. பில்டிங்.சொல்லி வைத்தார் போல மின்கசிவு தான் நிச்சயமாக காரணமாக இருக்கும்.இது மாதிரி இடங்களில் fire extingusher  போன்ற தீத்தடுப்பு சாதனங்கள் இருந்தாலும் அவை இருக்கும் இடம் அவசரத்தில் தொடர்பு கொள்ளும் எல்லையில் இருப்பதில்லை,அங்கே இருப்பவர்களுக்கு அவற்றை கையாள போதிய பயிற்சியும் இருப்பதில்லை.இது போன்ற சில விசயங்களை செய்ததால் தீப்பற்றியது ஆரம்பத்திலே கண்டுபிடிக்கப்பட்டால் நிலைமை மோசமாகாமல் தடுக்கலாம்.fire alarm,smoke detector போன்றவற்றை பொருத்தலாம்.இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும் தான் ம்ம்ம்.என்ன பண்றது?

மூணு சீட்டு

இது அந்த மூணு சீட்டு இல்ல.பஸ்ல மூணு சீட்ல உக்காந்துட்டு போற அனுபவம் இருக்கே ஸ்ஸ்ஸ்ஸ்பா.இதுக்கு மேல உடம்ப என்னால குறைக்க முடியாதுபா.முதல்ல உக்கார்றவருக்கு அந்த சீட்டு ஏகபோக உரிமம்தான்.ஏதோ போனா போகுதுன்னு அடுத்தவங்கள உட்கார வைக்குற மாதிரி ஒரு லுக்,அவங்களே பத்தி சீட்டை வலுக்கட்டாயமா ஆக்கிரமிப்பு பண்ணிக்குறாங்க.அம்மா போட்ட சட்டம்இந்த ஆக்கிரமிப்புக்கெல்லாம் செல்லாதா?கடைசியா உக்கார்ரவரு பாடு கூட பரவால்ல,கால வெளியில வைச்சுக்கலாம்,நடுவில இருக்கறவர் மத்தளம் தான்,


சுவர் இல்லாத சித்திரம்

    
டிராவிட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தது இன்னும் கூட நம்ப முடியவில்லை.டெஸ்ட் அணியில் அவர் இடத்துக்கு நெருக்கடி இல்லாத நிலையில்,அதுவும் நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் போது இப்படி அறிவித்தது அதிர்ச்சிதான்.இன்னும் வருத்தம் என்னன்னா ஒரு போட்டியிலாவது விளையாடி ஓய்வு பெற்றிருக்கலாம்.பல போட்டிகளில் பெருமை தேடித்தந்த இவர் ஒரு போட்டியில் கவுரப்படுத்தப்பட்டு வழியனுப்பப்பட்டிருக்கலாம்.சச்சினும் ஆசிய கோப்பை முடிந்து அறிவிக்கலாம் (அ)இந்தியாவில் ஒரு தொடர் விளாடிவிட்டு) ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பார் என பட்சி சொல்கிறது.


ஒலிஇல்லா யூடியூப்

ட்விட்டரில் ஏற்கனவே இணைந்திருக்கும் பிரதமர் அலுவலகம் இப்போது யூடியூபிலும் இணைந்திருக்கிறதாம்.பார்க்கும் எல்லோரும் வீடியோ வெறும் மௌனமாக ஓடுவதால் தங்களது ஸ்பீக்கர்களையும்,காதுகளையும் ஆராய்ந்து வருவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது.


ஒகேனக்கல்-பைசா வசூல்



ரெண்டு நாளைக்கு முன்னால ஒகேனக்கல் போயிருந்தேன்.கையில பைசா பாக்கி வைக்காம வசூல் பண்ணிப்புட்டாங்க வசூல்.பரிசல்ல போக நிர்ணய கட்டணம் இல்ல.ஒருவருக்கு 100-160 வசூலிக்கிறார்கள்.life jacket படகுபயனங்களில் கட்டாயம் கொடுக்க வேண்டும் ஆனால் அஞ்சு ரூபா குடுத்தா(மட்டும்) தான் குடுக்குறாங்க.தொட்டதுக்கெல்லாம் காசுன்னு சொல்லுவாங்களே(பழமொழிங்க) அதை எங்காவது சுற்றுலா தலங்களுக்கு போகும் போது உணர முடியுது.எல்லா பொருட்களும் எல்லா கடைகளிலும் அதிக விலைக்கே விற்கப்படுகின்றன.வேறு வழியில்லாமல் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.


மாங்கல்யம் தந்துனானே



என் பேச்சிலர் விரதம் கலையும் நாள் முடிவாகி விட்டது.ஜூன் 7.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்.வரவேற்பு புதுவையில்,தயாராக இருங்கள்,விபரங்களுடன் விரைவில் அழைக்கிறேன். விஷயம் அறிந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.




23 comments:

MARI The Great said... Reply to comment

தகவலுக்கு நன்றி கோகுல் சார்..!

நாய் நக்ஸ் said... Reply to comment

palasarakku...
nallaa irukku...

Sivakumar said... Reply to comment

உருப்பட்ட நாடுகள் கண்டுகொள்ளாத கிரிக்கெட் விளையாட்டு..அதில் ஆடும் வீரர்கள் இங்கே கடவுளை விட பெரிதாக கொண்டாடப்படுகிறார்கள். கிழிஞ்சது!!

Sivakumar said... Reply to comment

என்ன தம்பி சொல்ற? உனக்கு கல்யாணமா? யோவ்..இது பால்ய விவாகமாச்சே. இதை தட்டி கேப்பார் யாரும் இல்லையா?

Sivakumar said... Reply to comment

சென்னை டு ராசிபுரம் ஏசி ரோல்ஸ் ராய்ஸ் கார் அரேஞ்ச் பண்ணிடு தம்பி. ஏகப்பட்ட பேரு இருக்கோம் இங்க. ஊர் எல்லைல இருந்து மண்டபம் வரை என்ன வாசகம் எழுதி எங்களுக்கு பேனர் வைக்கனும்னு சீக்கிரம் சொல்றோம். எல்லாத்துக்கும் கடைசில 'யே' சேத்துக்க.. For example: தலைநகரின் தங்கமகன்களே. சுனாமியின் பினாமியே...

பால கணேஷ் said... Reply to comment

புதுமாப்பிள்ளைக்கு என்னோட அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said... Reply to comment

புதுமாப்பிள்ளைக்கு என்னோட அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்.

Marc said... Reply to comment

கதம்பக பதிவு அருமை.

கூடல் பாலா said... Reply to comment

எல்லா அயிட்டமும் சூப்பர் ....விரதம் முடியுமுன் உடம்பை பலப்படுத்திக் கொள்ளவும் !?

தனிமரம் said... Reply to comment

பலதகவல் தாங்கிய பதிவு அருமை.மாப்பிள்ளைக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்!

தனிமரம் said... Reply to comment

அப்ப எப்போது கோகுல் பச்சிலர் பிரேக் பார்ட்டி தரப்போறீங்க!ஹீ ஹீ சும்மா விடமாட்டம் மாப்பூ!

தறுதலை said... Reply to comment

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

அட்வான்ஸ் வாழ்த்துகள் கோகுல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

//////ட்விட்டரில் ஏற்கனவே இணைந்திருக்கும் பிரதமர் அலுவலகம் இப்போது யூடியூபிலும் இணைந்திருக்கிறதாம்.பார்க்கும் எல்லோரும் வீடியோ வெறும் மௌனமாக ஓடுவதால் தங்களது ஸ்பீக்கர்களையும்,காதுகளையும் ஆராய்ந்து வருவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது.///////

பிரதமர் எப்படி இருக்காரோ அப்படித்தானே அவர் அலுவலகமும் இருக்கும்?

ராஜி said... Reply to comment

.வரவேற்பு புதுவையில்,தயாராக இருங்கள்
>>>>
புதுவையிலயா வரவேற்பு வச்சிருக்கிங்க? கூட்டம் அலைமோதப் போகுது தம்பி

ராஜி said... Reply to comment

பார்க்கும் எல்லோரும் வீடியோ வெறும் மௌனமாக ஓடுவதால் தங்களது ஸ்பீக்கர்களையும்,காதுகளையும் ஆராய்ந்து வருவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது.///////
அதுவுமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹாலிவுட்ரசிகன் said... Reply to comment

//கடைசியா உக்கார்ரவரு பாடு கூட பரவால்ல,கால வெளியில வைச்சுக்கலாம்,நடுவில இருக்கறவர் மத்தளம் தான்,//
அடக்கடவுளே ... பென்ட் எடுக்கும்போது ஓரத்துல இருக்கிறவர் பாட்டை யோசித்துப் பார்க்கலையா?

ஹாலிவுட்ரசிகன் said... Reply to comment

அட்வான்ஸ் கல்யாண வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said... Reply to comment

மௌன குருவின் அலுவலகமும் மௌனமாகவே இருக்கும் என்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள் பாஸ்.. ஆமா சத்தம் மட்டும் இருந்தா மட்டும் உங்களுக்கு என்ன கேக்கப் போகிறது?

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

மூனு சீட்டு அனுபவம் ரொம்பவே கொடுமை. சிலசமயம் நானும் அனுபவித்திருக்கிறேன்.


முன்கூட்டிய திருமண நல்வாழ்த்துக்கள் கோகுல்...

Anonymous said... Reply to comment

என்னோட அட்வான்ஸ் திருமண நல்வாழ்த்துக்கள் கோகுல்...

BTW பலசரக்கு கடை...அமோக விற்பனை...

Unknown said... Reply to comment

மூனு சீட்டுல நடுவில உக்காருவது ரொம்ம குஸ்டம்...இல்லை கஸ்டம்....புது மாப்பிளை கோகுலுக்கு வாழத்துகள்!

CS. Mohan Kumar said... Reply to comment

Congrats Puthu mappillai.

//இன்னும் வருத்தம் என்னன்னா ஒரு போட்டியிலாவது விளையாடி ஓய்வு பெற்றிருக்கலாம்.//

Exactly. I too felt the same thing