Wednesday, February 29, 2012

இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார்?


இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கிடையே இருக்கும் கருத்துவேறுபாடு சமீபமாக தலைதூக்கியிருப்பது ஊடகங்களில் வாயிலாக தெரிகிறது,மேட்சுகளிலும் தெரிகிறது.குறிப்பாக மூத்த வீரர்கள் கேப்டன் தோனிக்கிடையேயும்,சேவாக் தோனிக்கிடையேயும் பிளவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
                  தூக்கிப்பிடிப்பது கீழே போட்டு அமுக்குவதற்க்கே என்று தெரியாமல் சிரிக்கிறார்   

தோனி வேறு ஓய்வெடுப்பதைப்பற்றி பேசி வருகிறார்.(சச்சினை ஓய்வெடுக்க சொல்லி மறைமுகமா சொல்றாரா?) இந்த சூழலில் அடுத்த கேப்டனாக வர வாய்ப்பிருக்கும் வீரர் யாராக இருக்கமுடியும்.நேத்து கட்சி ஆரம்பிச்சு அடுத்த தேர்தல்ல ஆட்சியை நாங்க தான் பிடிப்போம்னு சொல்ற மாதிரி நேத்து டீம்ல சேந்தவங்க எல்லாருக்குமே கேப்டன் கனவு இருக்கும் ஆனா ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க அப்படின்னு பழமொழி சொல்வாங்க. அதனால கேப்டனாகும் அம்சம் யாருக்கு இருக்குன்னு ஒரு அலசல் எனது பார்வையில்.(நாங்க எல்லாம் கடன் வாங்கியா பாக்குரோம்னு கேக்கப்படாது ..ரைட்!).சச்சினை தவிர்த்து.
                               
                                     
சேவாக்-தோனி இல்லாத சமயங்களில் கேப்டன் பொறுப்பு இவர் மீது விழுந்தாலும் அணியில் இடம் பிடிப்பதே இப்போதைய சூழலில் இவருக்கு கேள்விக்குறியாகிறது.அது மட்டுமல்லாமல் வந்தமா நாலு போர் ரெண்டு சிக்ஸ் அடிச்சமா,போனமா இதுதான் இவரது பாலிசி அதனால அந்த வேலைக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டாரு.


                              ( நமக்கு ஊஊ ........தானா?  )      

காம்பிர்- இவரும் சில மேட்சுகளில் காப்டனாக வலம் வந்திருக்கிறார்.கடந்த நியூசிலாந்து தொடரில் அந்த அணிக்கு வெள்ளை பூசி அனுப்பினார்.டெல்லி டேர் டெவில்ஸ் க்கும் கேப்டனாக இருந்து வருகிறார்.ஆனால் தேர்வுக்குழுவின் மனதில் இவர் தற்காலிக கேப்டனாக மட்டுமே நினைவுக்கு வருவார்.
                          
யுவராஜ்சிங்-திறமையான ஆல்ரவுண்டர்.முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கும் இப்போது புனே வாரியர்சுக்கும் கேப்டனாக இருப்பவர்.இந்த இரு அணிகளின் கேப்டனாக ஐ.பி.எல் ல அந்த அளவுக்கு இவரது பொறுப்பு சிறப்பா இல்ல.அதுமட்டுமில்லாம இப்ப நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.திரும்பி வந்து மீண்டு பழைய நிலையை அடைய கொஞ்ச காலம் எடுத்துக்கும்(சீக்கிரம் வாங்க யுவி,மிடில் ஆர்டர்ல ரொம்ப சொதப்புறாங்க நம்மாளுங்க வந்து என்னன்னு பாரருங்க).அதனால இவருக்கும் வாய்ப்பு குறைவுதான்.

இவங்களுக்கு அடுத்த படியா சீனியர்கள் யாரும் ஜாகீர்கான் தவிர டீமில் இல்லை.இவருக்கு கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்பே இல்லைன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.(யார் கண்டா எது வேணும்னாலும் நடக்கலாம்).

சரி,யாருக்குத்தான் அந்த வாய்ப்பு பிரகாசமா இருக்கு அப்படின்னு பாத்தா,ராகுல்டிராவிடின் ஒருநாள் போட்டி ஓய்வுக்கு பின் அவரது இடத்துக்கு விராட்கோக்லி,ரோகித்சர்மா,சுரேஷ் ரெய்னா இவங்கமூணு பேருக்கிடைய பலத்த போட்டியிருப்பதாக தெரிகிறது.(யுவராஜ் இல்லாததால் ரெய்னாவும்,ரோஹித்தும் மாறி மாறி ஆடறாங்க)
                             
ஆனா விராட்கோக்லி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.மேட்சின் தன்மைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றியமைத்து ஆடிவருவது வியப்பளிக்கிறது.இதனால்அணியில் இடம் பெற்றிருந்தாலும் விளையாடும் ப்ளேயிங் லெவனில்  தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.நேற்றைய போட்டி (இந்தியா இலங்கை இடையே 133 runs in just 86 ) இவரது ஆட்டங்களின் மாஸ்டர் பீஸ்னே சொல்லலாம்.ஒவ்வொரு மேட்சுலையும் இவருடைய போராடும் குணம் பாராட்டத்தக்கது. Under 19 அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உலகக்கோப்பையை வாங்கிய சிறப்பும் இவருக்கு உண்டு.ஃபீல்டிங்லயும் கலக்குறார்.அப்பப்போ பவுலிங்லயும் கை கொடுக்குறார்.இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது.
              
தோனிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக யார் வருவது என கேள்வி எழுந்ததால் விராட்கோக்லியின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பும் என்பதில் சந்தேகமில்லை.


22 comments:

கோகுல் said... Reply to comment

@Without Investment Jobs Available
ஏங்க without information எப்ப யார் பதிவு போடுவாங்கன்னு without job பாத்துக்கிட்டே இருந்து மொத கமெண்ட் போடுறீங்களே அது எப்படி?

வெளங்காதவன்™ said... Reply to comment

:-)

arasan said... Reply to comment

உண்மைதாங்க... விராட் க்கு இன்னும் கொஞ்சம் அனுபம் வந்தால் சரியான நபராக இவர் இருப்பார் ..
பார்ப்போம் ..

பால கணேஷ் said... Reply to comment

கோக்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் தற்போது. கேப்டன் பொறுப்பை சுமத்துவதால் இயல்பான ஆட்ட்ம் பாதிக்கப்பட்டு விடுமோன்னு தோணுது கோகுல். பாக்கலாம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

யாருக்கெல்லாம் கேப்டன் பதவி கொடுக்குறோமோ அவங்க சரியா விளையாட மாட்டேங்குறாங்க..

என்ன செய்யுறது...

சச்சின், டிராவிட், கங்குலி இவங்க கேப்டன் பதவி கொடுத்த பிறகு சரியா இல்லாம போயிட்டாங்க...

பார்ப்போம்...

CS. Mohan Kumar said... Reply to comment

ஒருத்தர் நல்லா விளையாடிட கூடாதே. கேப்டன் ஆக்கி ஒழிச்சிடணும் :))

Unknown said... Reply to comment

யாரு கப்டன் ஆனா நமக்கென்ன...

CS. Mohan Kumar said... Reply to comment

Kohli is named VIce captain for Asia cup: Breaking news.

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

கபில் கேப்டனா வந்தா நல்லா இருக்கும்

ராஜி said... Reply to comment

யார் கேப்டனா வந்தாலும் பரவாயில்லை. நல்லா விளையாடி இந்தியாக்கு நல்ல பேர் எடுத்து குடுத்தா போதும்.

சசிகுமார் said... Reply to comment

ஜெயிச்சுட்டு வாங்கப்பா....

Anonymous said... Reply to comment

விராட் கோலின்னு தோணுது கோகுல்...

கோகுல் said... Reply to comment

உண்மைதாங்க... விராட் க்கு இன்னும் கொஞ்சம் அனுபம் வந்தால் சரியான நபராக இவர் இருப்பார் ..
பார்ப்போம் ..
//
அந்த அளவுக்கு வொர்த் ஆனவர் தான் அவர்.
//
கணேஷ் said...
கோக்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் தற்போது. கேப்டன் பொறுப்பை சுமத்துவதால் இயல்பான ஆட்ட்ம் பாதிக்கப்பட்டு விடுமோன்னு தோணுது கோகுல். பாக்கலாம்...
//
எனக்கென்னவோ விராட் அப்படி ஆகமாட்டருன்னு தோணுது.

கோகுல் said... Reply to comment

கவிதை வீதி... // சௌந்தர் // said...
யாருக்கெல்லாம் கேப்டன் பதவி கொடுக்குறோமோ அவங்க சரியா விளையாட மாட்டேங்குறாங்க..

என்ன செய்யுறது...
//
தோனி இந்த விசயத்துல எவர் கூல்.ஆனா சிலசமயம் ஓவர் கூலா இருக்கார்.

கோகுல் said... Reply to comment

மோகன் குமார் said...
ஒருத்தர் நல்லா விளையாடிட கூடாதே. கேப்டன் ஆக்கி ஒழிச்சிடணும் :))

அது தான தொன்னுத்தெட்டு,ச்சே,தொன்று தொட்டு வரும் வழக்கம்.

கோகுல் said... Reply to comment

Esther sabi said...
யாரு கப்டன் ஆனா நமக்கென்ன...//

நீங்க தெளிவாத்தான் இருக்கீங்க.

கோகுல் said... Reply to comment

சி.பி.செந்தில்குமார் said...
கபில் கேப்டனா வந்தா நல்லா இருக்கும்
//
தல நீங்கதான மொழி படத்துல வர்ற புரபசர் ஞானப்பிரகாசம்.

இளையராஜான்னு புதுசா பையன் ஒரு மியூசிக் போடறான்.ரொம்ப நல்லா வருவான்.

கோகுல் said... Reply to comment

சி.பி.செந்தில்குமார் said...
கபில் கேப்டனா வந்தா நல்லா இருக்கும்
//
தல நீங்கதான மொழி படத்துல வர்ற புரபசர் ஞானப்பிரகாசம்.

இளையராஜான்னு புதுசா பையன் ஒரு மியூசிக் போடறான்.ரொம்ப நல்லா வருவான்.

கோகுல் said... Reply to comment

ராஜி said...
யார் கேப்டனா வந்தாலும் பரவாயில்லை. நல்லா விளையாடி இந்தியாக்கு நல்ல பேர் எடுத்து குடுத்தா போதும்.
//
அதுதான எல்லோருடைய விருப்பமும்.

கோகுல் said... Reply to comment

@சசிகுமார்ஜமாய்ச்சுடலாம்.

கோகுல் said... Reply to comment

@ரெவெரிஆசியா கப்ல வைஸ் கேப்டன் வேற ஆகிட்டாரு.

சத்ரியன் said... Reply to comment

//மோகன் குமார் said...
ஒருத்தர் நல்லா விளையாடிட கூடாதே. கேப்டன் ஆக்கி ஒழிச்சிடணும் :))//

கோகுல்,

இதுதான் என் கருத்தும்.