Friday, February 24, 2012

கியர் வண்டிகியர் வண்டி ஓட்டுவது ஒருகலை அப்படின்னே சொல்லலாம்.ஸ்டார்ட் பண்ணி க்ளர்ட்ச் புடிச்சு முதல் கியர் போட்டு மெதுவா க்ளர்ட்ச் ரிலீஸ் பண்ணி  அதே நேரத்துல ஆக்சிலேட்டர் கொடுத்து வண்டியை கிளப்பனும்.கிளர்ட்ச் விடுரத்துக்கும் ஆக்சிலேட்டர் கொடுக்குறத்துக்கும் டைமிங் ரொம்ப முக்கியம்.ஒண்ணு கிளர்ட்ச் வேகமா விட்டா வண்டி ஆப் ஆகிடும்,ஆக்சிலேட்டர் வேகமா கொடுத்தா வண்டி கவுத்து விட்டுடும்.அது மட்டுமில்லாம வண்டியின் வேகத்துக்கு ஏத்த மாதிரி கியர் குறைக்கனும்,கூட்டணும்.இப்படி பல டெக்னிக்குகள் இருக்கு கியர் வண்டி ஒட்றதுல.

நந்தனுக்கு சின்ன வயசுல இருந்தே கியர் வண்டி என்றாலே அப்படி ஒரு இஷ்டம்.அவங்க வீட்டுப்பக்கத்துல ஏதாவது வண்டி வந்து நின்னாலே போதும் கிட்டப்போய் நின்னு தொட்டுப்பாத்து பரவசமடைவான்.அவனே ஓட்டுவது போல பாவனை செய்து கற்பனை வானில் மிதப்பான்.திப்பி வியாபாரம் செய்யும் பழனிசாமி ஒரு பழைய மாடல் ராஜ்தூத் வைத்திருந்தார்.அதுல ஸ்டார்ட் பண்ணும் ஸ்டையில் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.ரெண்டு மூணு தடவை படக்,படக்குன்னு மிதிச்சு வேகமா உதைச்சா தான் அது ஸ்டார்ட் ஆகும்.சில சமயம் அப்படியும் ஸ்டார்ட் ஆகாது அவர் என்னென்னமோ பண்ணுவார் ஏதேதோ பாகங்களை அமுக்கிவிட்டும்,வயர்களை இழுத்துவிட்டும் எப்படியோ ஸ்டார்ட் செய்து போவதை வியப்புடன் பார்ப்பான்.

சொசைட்டியில வேலை செய்யுற செல்வம் வைச்சிருந்தது டபுள் சைலன்சர்  இருக்கும் ஜாவா பைக்.அதுல ஸ்டார்ட் பண்ற கிக்கர்,கியர் லிவர் ரெண்டும் ஒண்ணுதான்.ஸ்டார்ட் பண்ணுனப்பறம் அந்த கிக்கரையே முன்னால தள்ளிவிட்டு கியர் போடணும்.செல்வம் வண்டியை சீமண்ணை போட்டு தான் வண்டி ஓட்டுவார்.இதுக்காக வண்டியில ஒரு செட் அப் பண்ணியிருப்பார்.வண்டி ஸ்டார்ட் பண்ண மட்டும் பெட்ரோல் அதுக்கப்பறம் இன்னொரு டேப் திறந்து சீமண்ணைல ஓட்ட ஆரமிப்பார்.ஊருக்கு இலவச கொசு மருந்துதான்.தூரத்துல வரும் போதே செல்வம் வரார்னு ஊருக்கே தெரியும்.


இப்படியெல்லாம் பார்த்து பார்த்து நந்தனுக்கு கியர் வண்டிகள் மீதான காதல் பெருகிக்கொண்டே இருந்தது.ஆனா இந்த கனவுகளை நிஜமாக்கும் வாய்ப்பு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடவில்லை.நந்தன் கல்லூரியில் சேர்ந்த போதும் தங்கிய ஹாஸ்டலில்இருந்து கல்லூரி பக்கம் என்பதால் அங்கே யாரும் கியர் வண்டி வைத்திருக்கவில்லை.டே ஸ்காலர்  பசங்க ரெண்டு பேர் வைச்சிருந்தாங்க.ஆனா எப்பவுமே டேஸ்காலர் பசங்க ஹாஸ்டல் பசங்க கூட ஒட்ட மாட்டாங்கஅதனால அவ்வளவு சீக்கிரம் நந்தன் அந்த பசங்ககிட்ட வண்டி ஓட்ட கத்துக்கும் ஆர்வத்தை சொல்லல.கல்லூரிப்பருவத்தில பசங்ககிட்ட இதுபோன்ற வேறுபாடுகள் ரொம்ப நாள் நிலைக்காது.முதலாமாண்டு கடந்ததும் எல்லா பசங்களும் ஒண்ணோட ஒண்ணா பழக தொடங்கிட்டாங்க.

அதான் எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாகியாச்சே இப்ப நம்ம ஆசையை நிறைவேத்திக்கலாம்னு ஸ்ப்லண்டர் வைச்சிருந்த கிருஷ்ணாகிட்ட சொன்னான்.கிருஷ்ணா “அதுக்கென்ன மச்சி தாராளமா கத்துக்கோ அப்படின்னு கத்துக்கொடுத்தான்.தன் வாழ்நாள் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியை அடைந்தான் நந்தன்.


எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போல ரெண்டு நாள் ஒட்டியது அவனுக்குள்ளிருந்த கியர் பைக் தாகத்தை அதிகமாக்கியது.கிருஷ்ணா வண்டியை வைச்சே டூ வீலர் லைசன்சும் வாங்கிட்டான்.அந்த வண்டியைத்தவிர வேறு வண்டி ஓட்ட வாய்ப்பும் கிடைக்கவில்லை.வீட்டில் பைக் வாங்கித்தர சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தான்.வீட்டில் படிப்பு முடிந்ததும் வாங்கித்தருவதாக அப்பா ஆசைக்கு அணை போட்டதும் காவிரிக்காக,முல்லைப்பெரியாருக்காக ஏங்கும் தமிழகம் போல படிப்பு முடியக்காத்திருந்தான்.

கதையை ஒரே பதிவில் முடிக்கலாம் என்றிருந்தேன் கொஞ்சம் நீளமாக செல்வதால் அடுத்த பதிவில் முடிக்கலாம் கதையின் போக்கை கொஞ்சம் கற்பனை செய்து காத்திருங்கள்.


படங்கள்-கூகுள் இமேஜ்.

14 comments:

தனிமரம் said... Reply to comment

வணக்கம் பாஸ்!
காத்திருப்புக்கு நீங்க கொடுத்த உவமை சிலிர்க்குது காவிரி,முல்லைப்பெரியார் .
மறுபாதிக்காக கியர் போட காத்திருக்கின்றேன்.

மகேந்திரன் said... Reply to comment

ஒரு குறிப்பிட்ட வயதில் வரும் தாகத்தை
ஆசையை அழகாக சொல்லியிருகீங்க நண்பரே.
ஜாவா,ராஜ்தூத்.. எல்லாம் கண்ணுக்குள் நிற்கிறது..

Yoga.S.FR said... Reply to comment

Bonjour,Mr.NESAN!!!

Yoga.S.FR said... Reply to comment

வணக்கம் கோகுல்!அருமையாக ஆரம்பித்து,கியர் மாற்றிப் போட்டுக்கொண்டே செல்கிறீர்கள்.இப்போது இரண்டாவது கியரில் தானே வண்டி செல்கிறது?பொறுத்தார் பூமி ஆழ்வாராம்!(பெரியவங்க சொல்லியிருக்காங்க!)

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

ரைட்டு

விச்சு said... Reply to comment

பைக் வாங்கிருவானா?

ராஜி said... Reply to comment

பண்ணி க்ளர்ட்ச் புடிச்சு முதல் கியர் போட்டு மெதுவா க்ளர்ட்ச் ரிலீஸ் பண்ணி அதே நேரத்துல ஆக்சிலேட்டர் கொடுத்து வண்டியை கிளப்பனும்.கிளர்ட்ச் விடுரத்துக்கும் ஆக்சிலேட்டர் கொடுக்குறத்துக்கும் டைமிங் ரொம்ப
>>>
கியர் வண்டியை அக்குவேற ஆணி வேறன்னு மெக்கானிக் போல புட்டு புட்டு வச்சுட்டிங்க.

Anonymous said... Reply to comment

நமக்கு எப்பவும் Kinetic Honda தான்...

தொடருங்கள்...

athira said... Reply to comment

அவர் வண்டிக்காகக் கத்திருக்கிறார், எம்மைக் கதையின் முடிவுக்காக காத்திருக்க வைத்திட்டீங்க:)... அழகாகப் போகுது...

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

வித்தியாசமான கதை ! தொடருங்கள் !

மதுமதி said... Reply to comment

வணக்கம் தோழர்..தங்களுக்கு விருது ஒன்று காத்திருக்கிறது.தளத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தங்களை அன்போடு அழைக்கிறேன்.

துரைடேனியல் said... Reply to comment

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன். நான் முதல் தடவை வண்டிய கிளப்பும் போது கொஞ்சம் சீறிவிட்டது. மோதி நின்ன இடம் அரசு பஸ் பம்பர் கம்பி. தம்பி ஓடி வந்துட்டான். இல்லன்னா இன்னிக்கு போட்டால தான் இருப்பேன்.

துரைடேனியல் said... Reply to comment

tha ma 7.

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said... Reply to comment

அழகிய கதை கோகுல்! வண்டி ஓட்டப் பழகிய பழைய நினைவுகள் வந்து போகுது! கடைசியாகச் சொன்ன உவமை வேதனை கலந்த அழகு! அடுத்த பாகம் எப்போ?