Tuesday, February 14, 2012

எல்லாம் செய்யும் இந்த ________காதல்!!!





ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மறக்கும்
காத்திருக்கச் சொல்லும்

உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்
கனவு காணச் சொல்லும்


ஹார்மோன்களைத்
தூண்டிவிட்டு
ஹார்மோனியம் வாசிக்க விட்டு
வேடிக்கை பார்க்கும்

தனிமை பிடிக்கும்
தானாய்ப் பேச வைக்கும்
சிந்திக்க வைக்கும்
சிறகு முளைக்கும்

எதுவுமே இல்லாமல்
ஏதேதோ எண்ணச்சொல்லும்
ஒன்றுமே இல்லாமல்
ஒரு மணிநேரம் கூட பேசச் சொல்லும்


இவை எல்லாம் செய்யும் இந்த_______________ காதல்

டிஸ்கி-எனக்கு போதிய அனுபவம் இல்லாததால் கோடிட்ட இடத்தை தாங்களே நிரப்பிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.(அப்பா தப்பிச்சுட்டேன்)


(சில நண்பர்கள் இத எங்கயோ பாத்தமாதிரி இருக்குன்னு சொல்லுறது கேக்குது,ஆமாங்க மீள்பதிவு.வந்த புதுசுல போட்டது காதலர்தினதுக்காக திரும்பவும்........)


21 comments:

தினேஷ்குமார் said... Reply to comment

ஹார்மோன்களைத்
தூண்டிவிட்டு
ஹார்மோனியம் வாசிக்க விட்டு
வேடிக்கை பார்க்கும்///

ஹாஹா ....

Unknown said... Reply to comment

காதல் பைத்தியமாக்கும் என்பதை விட்டுட்டீங்களே கோகுல்!?

சம்பத்குமார் said... Reply to comment

//எதுவுமே இல்லாமல்
ஏதேதோ எண்ணச்சொல்லும்
ஒன்றுமே இல்லாமல்
ஒரு மணிநேரம் கூட பேசச் சொல்லும்//

நிஜம்..

காதலர்தின கவிதை அழகு

ADMIN said... Reply to comment

நன்றாக இருக்கிறது காதலைப்பற்றி கவிதை.!

arasan said... Reply to comment

தப்பிச்சாலும் நாங்க விட மாட்டோம்ல ..
உங்க சொந்த அனுபவத்துல எழுதிய அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள்

கூடல் பாலா said... Reply to comment

சூப்பரப்பு !

தனிமரம் said... Reply to comment

நீங்கள் நிரப்புங்கோ என்பதில் நாங்களும் நிரப்பிவிட்டோம் கோகுல் அனுபவித்து ஏழுதிய கவிதை என்று ஹீ ஹீ

சத்ரியன் said... Reply to comment

//டிஸ்கி-எனக்கு போதிய அனுபவம் இல்லாததால் கோடிட்ட இடத்தை தாங்களே நிரப்பிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

உண்மை தான் கோகுல்,

பத்து பேரையாவது கொன்னாதான் ஒரு நல்ல டாக்டராக முடியும்.

ஸோ,

நல்ல காதலனாகனும்னா ஒரு ------- பேரையாவது காதலிச்சாதான் “போதிய” அனுபவம் கெடைக்கும்.

( கோடிட்ட இடத்தை நீயே நிரப்பிக்க கண்ணு)

Unknown said... Reply to comment

பார்ரா...அட போட வச்ச கவி..தை ஹிஹி!

Admin said... Reply to comment

கவிதை சிறப்பு தோழர்..வாழ்த்துகள்.

Yoga.S. said... Reply to comment

வணக்கம் கோகுல்!!!////இவை எல்லாம் செய்யும் இந்தக்________குடைக் காதல்!///கரீக்டா????

Unknown said... Reply to comment

நல்ல ரஸிகனே..நல்ல காதலனாக இருக்க முடியும்!
காதலர் தின வாழ்த்துக்கள்!

Marc said... Reply to comment

அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

Anonymous said... Reply to comment

எனக்கு போதிய அனுபவம் இல்லாததால் கோடிட்ட இடத்தை தாங்களே நிரப்பிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்//

புதுவையின் ஜகஜ்ஜால யூத் நீங்கதான்னு கேள்விப்பட்டோம். யாருகிட்ட ரீல் விடறீங்க கோகுலத்து கண்ணா!!

ரசிகன் said... Reply to comment

காதல் உங்களையும் ஏதேதோ செய்து விட்டது போல....

மாலதி said... Reply to comment

தனிமை பிடிக்கும்
தானாய்ப் பேச வைக்கும்
சிந்திக்க வைக்கும்
சிறகு முளைக்கும்//அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

அனைத்தையும் செய்யக்கூடியது காதல்...


விரைவில் கற்றுக் கொள்ள வாழ்த்துகிறேன்...

Anonymous said... Reply to comment

காதலர் தின கவிதை சிறப்பு...ரசித்தேன்...வாழ்த்துக்கள்...

Unknown said... Reply to comment

மீண்டுப் பதிவிட்டாலும் மிகப் பொருத்தமான பதிவே. வாழ்த்துக்கள்.

Anonymous said... Reply to comment

தப்பிச்சிட்டீங்க என்று தப்ப முடியாது ஒரு நாள மாட்டுப்படாமலா போவீங்க!... நன்றாக உள்ளது. வாழ்த்துகள். வேதா. இலங்காதிலகம்.

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

தம்பி இன்னும் காதல்ல விழலை போல.